Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

எரிகணையில் தப்பிய நான்கு கவிதைகள்
என். டி. ராஜ்குமார், நாகர்கோவில்

Children ward in eelam 1

துண்டிக்கப்பட்ட உறுப்புகள்
அசோகச் சக்கரத்தின் நடுவே
சுழன்றுகொண்டிருக்கின்றது
ரணச்சூடுபட்டு வாய் பிளந்து கிடக்கும்
மூவர்ணக் கொடிக்கு வாய்க்கரிசிபோட்டபடி
குமுறிக்கொண்டிருக்கின்றது முழங்கு தீ

2

செத்த பிணத்தைக்கூட காட்டிக்கொடுத்த
கருணாவிற்கு எதிராக
வதைபட்டுச்செத்த
லட்சக்கணக்கானவர்களின் ஆவிகள்
சுற்றிலும் கொலைவாளாய் எழுந்துநிற்க
மண்டைஓடுகளின் மீது சிம்மாசனமிட்டிருக்கும்
பிணந்தின்னியும் தனது குறியினை
தீ¢ட்டிக்கொண்டிருக்கின்றது மறைமுகமாய்
பச்சைத்துரோகிக்கு
நல்லமரணம் கிடையாதென்பது நிச்சயம்

3

நாங்கள் இந்தியனில்லை என்று சொல்லிக்கொண்டு
அருவருப்பாய் ஓடுகின்றோம்
ஓடாதே நில் திருப்பி அடியென்று
பதுங்கிப்பாயச் சொல்கிறது புலிக்கொடி
முப்படைகளில் ரவைகளை நிரப்பிக் கொண்டிருக்கும்
தமிழ்த்துவக்குகளே
ஆயுதங்களை உங்கள்
தேரோட்டிக்கு எதிராக திருப்பிப்பிடியுங்கள்

4

கோட்டையிலே தமிழ்க்கொடி உயர்ந்துபறக்கும்
எங்கள் குடிசைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம்
நாங்கள்
பாடல்களுக்குப் பதில்
கதைகளை சொல்லிக் கொடுக்கின்றோம்
அந்தநாட்டில் சிங்கம் நானே பெரியவனென்று
தற்பெருமை பேசிக்கொண்டே
எல்லா உயிர்களையும் பிடித்துத் தின்று கொண்டிருந்தது
முயலைப் பார்த்து சிங்கம்
தனக்கு நல்ல இரை கிடைத்து விட்டதென்று நினைக்க
முயல் சொன்னது
“சிங்கராஜா சிங்கராஜா
உன்னைவிட ஒரு மாவீரன்
இந்த மண்ணில் இருக்கிறான்”
ஆத்திரமுற்ற சிங்கம் எங்கே அதை காட்டிதா என்றது
பாழடைந்த கிணற்றைக்காட்டி
அதோ தண்ணீரில் தெரியுதுபார்
அவர்தான் உன்னைவிட பெரிய ராஜா என்றதும்
சிங்கம் தண்ணீரில் தெரிந்த
மாவீரனின் உருவத்தைப் பார்த்து
கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது
இப்போது எங்கள் ஊரில் பிறக்கும்
குழந்தைகளுக்கெல்லாம் நாங்கள்
முயல்குட்டி என்று பெயர்சூட்டுகின்றோம்.

- என். டி. ராஜ்குமார், நாகர்கோவில்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.