Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

பூமித்தாய் தந்த புகார் !!
தொ. சூசைமிக்கேல்


பூமிப்பந்(து) அன்றொரு நாள் – என்னிடம்
     புகாருடன் வந்து நின்றாள்!
நாமிங்(கு) அவட்(கு) இழைக்கும் – தீமைகளை
     நன்கு விளக்கி நின்றாள்!

“என்ன நடந்ததம்மா? – பூமாதேவி
     என்னிடம் கூறிடம்மா!”
என்றதும், என்னிடம் தன் – கவலைகள்
     எடுத்துச் சொல்லலுற்றாள்:

“காடு கழனியெல்லாம் – என்னுடைய
     கட்டிள மேனியெல்லாம்,
கேடு மிக விளைக்கும் – ஆயுதக்
     கிடங்குகள் ஆனது பார்!”

“கார்மேகம் ஒன்றினையே – இதுவரை
     கண்டிருந்த எனையே
போர்மேகப் பேரிடிகள் – வந்துவந்து
     புண்படத் தாக்குது பார்!”

“தொட்டாற் சிணுங்கிகளும் – கொல்லுதற்குத்
     துப்பாக்கி தூக்குது பார்!
கட்டாந் தரைகளிலும் – கண்ணிவெடி
     காவல் கிடக்குது பார்!”

war

“நாளும் குருதியிலே – நனைகின்ற
     நாடுகள் கூடுது பார்!
வாழும் நிலைகளெலாம் – வன்முறைக்கு
     வட்டி கறக்குது பார்!”

“வேதமும் சாதிகளும் – வெறிமிகு
     வெங்களம் காணுது பார்!
பேதம் வகுப்பதனால் – மானுடம்
     பிழைபட்டுப் போனது பார்!”

“மண்வெளி யாவதெல்லாம் – பிணங்கட்கு
     மட்டும் புகலிடமா?
மண்ணின் புதல்வர்க் கெல்லாம் – உரிமை
     மறுப்பது நின்றிடுமா?”

“வாழப் பிறந்தவர்முன் – எந்தவொரு
     வஞ்சமும் அஞ்சுமன்றோ?
வாழப் பிறந்தவர்க்கே – என்றுமிந்த
     வையகம் சொந்தமன்றோ?”

இன்னபிற நவின்றாள் – பூமியன்னை
     என்னைக் கலங்கவைத்தாள்:
கண்ணீர்தனைத் துடைத்தாள் – வணங்கினேன்
     கன்னியவள் மலர்த் தாள்!”

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.