KeetruLiteraturePoem
கவிதை

கசந்த முத்தம்
மதன்


ant ஊருக்குச் சென்று விட்டுக்
கிளம்புகையில்
வழக்கம் போல்
அம்மாவைக் கட்டிக் கொடுத்த
முத்தம் கசந்தது
முதன்முறையாக.
பின்னால் நின்றிருந்த
பக்கத்து வீட்டு அக்காள்
பிள்ளையில்லாதவள்.

- மதன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்