KeetruLiteraturePoem
கவிதை

மிச்சமிருக்கும் வார்த்தைகள்
லக்கி ஷாஜஹான்

பிரியங்கள் நிறைத்த
வார்த்தைகள் கொண்டு
ஒரு கவிதை வேண்டும்
என்றாய்...

பொய்யும் புகழும்
வார்த்தைகள்
பயணப்படுகின்றன
என்னிடமிருந்து...

விஷம் தோய்த்தும்
விஷமம் தோய்த்தும்
பேசிய நாட்களைத்தவிர
விடுபட்ட எல்லா
நாட்களிலும் எழுதப்பட்ட
உனக்கான கவிதைகளை
தர ஆசைதான்..

கவிதைக்கு பொய்யழகு
என்பதாலேயே
விலகி ஓடுகின்றன
விடுபட்ட நாட்களின்
வார்த்தைகளின் நிஜங்கள்

- லக்கி ஷாஜஹான் ([email protected])