KeetruLiteraturePoem
கவிதை

செல்லமே...
லஷ்மி சாஹம்பரி

Kid உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குள்ளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும்

வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !

- லஷ்மி சாஹம்பரி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்