KeetruLiteraturePoem
கவிதை
உன்னை நினைப்பது...: நச்சிம் இக்மத்
தமிழாக்கம்: புதுவை ஞானம்.

Lady உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது
சாவுச்செய்திகளுக்கும்
வெற்றிச்செய்திகளுக்கும்
மத்தியில் சிறையிலிருந்து கொண்டு
நாற்பது அகவை கடக்கையில்.

உன்னை நினைப்பது
எவ்வளவு அழகாயிருக்கிறது
உனது கைகள் நீலத்துணியில்
சாய்ந்திருக்க
உனது கேசம் வளமும்
மென்மையுமான வனப்பில்
எனது நேசமிகு இஸ்தான்புல் போலிருக்க
உன்னை நேசிக்கும் இன்பம்
இரண்டாம் மனிதன் போலிருக்கிறது.

மூலம்: Nazim Hikmath

புதுவை ஞானம் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்