Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
அவனுடன் இணைந்து ....................
புதுவை ஞானம்

che எவனொருவன் இடர் பட்டிருக்கின்றானோ
சித்திரவதைக்கு ளாகி இருக்கின்றானோ
எவனொருவன் யுத்த களத்தில்
இழப்புகளை ஏற்படுத்தியும்
இழப்புகளை ஏற்றுக்கொண்டும்
அடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ
எவெனொருவன் தனது காலடிகளை
அளந்து வைத்திருக்கின்றானோ
எவனொருவன்
தனது திட்டங்கள்
தவறாகிப்போகும்போது குழம்பாமலும்
தோல்வியுறும்போது கூச்சப்படாமலும் இருக்கின்றானோ
எவனொருவன் ஒரு பெரியமனிதனைப் போல்
தனது தோல்விகளை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றானோ
சீறி வரும் யிரக்கணக்கணக்கான ஈட்டிகளை
மார்பிலேந்தி விழுப்புண்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றானோ

தனது கண்ணீரைப் பற்றி அவமானப்படாமல்
நெஞ்சினை நிமிர்த்தி விண்ணுலகத் தாரகைகளை சந்தித்து இருக்கின்றானோ
அவனுடன் இணைந்து நடக்க விரும்புகிறேன் நான்.

இன்று தொடங்கி
அவனுடன் இணைந்து நடப்பதற்காகவே
என்னுடையது அனைத்தையும் கொடுப்பேன்
அற்பமானதாயினும் மகத்தானதாயினும்.

நின்று நிமிர்ந்து எரியும்
இடைவெளிகளைக் கடப்பதற்காக
பற்களை நெறித்து முட்டிகளை இறுக்கி
சக தோழர்களின் மீதான நம்பிக்கையை தனது
ண்மைமிகு நெஞ்சினில் வரித்துக் கொண்டதனால்

அவனுடன் இணைந்து கைகோர்த்து நடக்க
நீண்டதொரு பயணம் தொடங்க விரும்புகிறேன்.

எந்தவொரு மனிதன்
போராடி சமர் புரிந்து வெற்றிபெற்று
மற்ற மனிதர்களைப் பலவானாய் மாற்றுகின்றானோ
அவனுடன் இணைந்து
நடை பயில விரும்புகின்றேன்.

மூலம் :LIMON ABBOT

புதுவை ஞானம் (j.p.pandit@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.