KeetruLiteraturePoem
கவிதை
பயணம்
க.ஆனந்த்



நினைவூட்டியும்
நிறுத்தவில்லை
எனக்கான
நிறுத்தத்தில்

travel திசை குறித்த
என் உத்திரவுக்கு
எதிராக திரும்புவதே
வழக்கமானது

இறக்கி விடப்படுவதும்
இருந்தன
எனக்கு
இசைவில்லாத இடங்களாய்

எனக்கு
உடன்பாடில்லாத
இலக்கு நோக்கியதாகவே
பெரும்பாலான என்
பயணங்கள்

என்னுடையதாய்
வாகனம் மட்டும்
இருந்து என்ன செய்ய
ஓட்டுவது
யார் யாரோவாக
இருக்கையில்

- க.ஆனந்த் ([email protected])