Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
அழைப்பு

இலங்கை யுத்த வெறி அரசின் கொடூரத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்

இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டு கொண்டிருப்பதற்கு எதிராக பல போராட்டங்கள் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் ஈழத் தமிழர்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் மக்கள் தம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இத்தருணத்தில் இன்று ஆங்காங்கு நடந்துகொண்டிருக்கும் பல்வேறு போராட்டங்களை ஒன்றிணைத்து ஒருமுகப்பட்ட பலமான போராட்டமாக மாற்றவேண்டிய தேவை அவசியமாக இருக்கிறது. இதற்கான முயற்சியாக படுகொலைகளை நிறுத்தி ஜனநாயக உரிமைக்கான போராட்ட இயக்கம் என்ற அடிப்படையில் நமது போராட்ட முன்னெடுப்புகளை உருவாக்கவேண்டுமென்று அழைக்கிறோம்.

இலங்கை இராணுவத்தின் மிகக்கொடூரமான யுத்தத்தை உடனடியாக நிறுத்தி யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, சுகாதார நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது இன்று மிகமுக்கிய தேவையாக இருக்கிறது. இந்த அடிப்படைக் கோரிக்கையில் உடன்படும் அனைவரும் ஒன்றுபட முன்வர வேண்டும். மக்களைக் கொன்று குவித்துவிட்டு இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் ஜனநாயகத்தை கட்டி எழுப்பப் போவதாக கதைபேசும் இலங்கை அரசுக்கு எதிரான ஜனநாயக உரிமைப்போர் பலப்படவேண்டிய அவசியம் இருப்பதால் ஒன்றுபட்ட போராட்டம் மிகமுக்கியமானதாக இருக்கிறது.

உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களுக்காக பல நாடுகளில் போராடிவரும் சர்வதேச அமைப்பான தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு-இந்தியாவில் புதிய சோசலிச மாற்று- மேற்கு நாடுகளில் நடக்கும் போராட்டங்களை ஒன்றிணைக்க முயற்சிகள் செய்து வருகிறது.

ஏற்கனவே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கிரீஸ், ஸ்வீடன், பிரான்சு, மலேசிய ஆகிய நாடுகளில் எதிர்ப்புக் குரலை ஒன்றிணைக்கும் முயற்சிகளைச் செய்து வருகிறோம். இத்தருணத்தில் அவற்றுடன் தமிழ்நாட்டு எதிர்ப்புக் குரலையும் இணைக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.

தமிழ்நாட்டு சகோதரர்களின் எதிர்ப்புக் குரல் மட்டுமே இன்று ஈழத் தமிழருக்காக போராடிக் கொண்டிருக்கும் பெரும் சக்தி. இந்த சக்தி ஒன்றுபட்டு பலப்படுவது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அவசியமாக இருக்கிறது.

இலங்கை யுத்த வெறி அரசின் கொடூரத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம். இலங்கையில் படுகொலைகளை நிறுத்தி ஜனநாயகத்திற்காக போராடுவதற்கான ஆரம்பத்தை வரும் மார்ச் 7ஆம் திகதி, தமிழகத்தில் இருந்து தொடங்கி வைத்து அதில் பங்குபெற உங்களை தாழ்மையுடன் அழைக்கிறோம்.

நேரம் : பிற்பகல் 3 முதல் மாலை 6.30 வரை

இடம் : உழைக்கும் மக்கள் மாமன்றம்
இலக்கம் 5,
டாக்டர் வாசுதேவன் தெரு
கீழ்பாக்கம்
சென்னை 10.
(அம்மன் கோவில் அருகில்)

தொடர்புகளுக்கு: [email protected]
கைப்பேசி: 9884706531


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com