Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

திரவியதேசம் புத்தக வெளியீடு
பாண்டித்துரை

30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல்.

Pa.vijay தமில் தொண்டர் ஜோஸ்கோ நிறுவன அதிபர் தங்கராஜ் தலைமை ஏற்க ; திரைப்பட பாடலாசிரியர் வித்தககவிஞர் தேசிய விருது பெற்ற பா.விஜய் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விடுதலை கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நிகழச்சியின் துவக்கமாக சிங்கப்பூர் கவிஞர் முருகடியானின் புதல்வி செல்வி குமுதா பா.விஜயின் தேசிய விருது பெற்ற பாடலான ஒவ்வொரு பூக்களுமே எனும் பாடலின் மெட்டுக்கு சிங்கப்பூர் நாட்டுப்பண் இயற்றி பாடி அனைவரின் பாராட்டையையும் பெற்றுச்சென்றார்.

திரவியதேசத்தில் மொழிப்பற்று

நூலினை ஆய்வு செய்து பேச்சாளர் சிவக்குமார் பேசினார். நீ தான் வன்முறை வழுப்படாத கற்புமிக்க கன்னித்தீவு எனும் கவிஞரின் கவிதை வரியை படித்தவுடன் மெய் சிலிர்த்து விட்டதாக கூறி தமிழகத்தில் நாளிதழ் ஒன்றில் வரும் கன்னித்தீவு தொடரையும் ஞாபகபடுத்தினார். மேலும் திரவியதேசத்தை படிக்க கடிக்க திரவிய தேசத்தின் மொழிப்பற்று தேனாய் இனிப்பதாக கூறி தனது உரையை நிறைவு செய்தார்


திரவியதேசத்தில் நாட்டுப்பற்று

எனும் தலைப்பில் நூலினை ஆய்வு செய்து பேசிய பேச்சாளர் கலைச்செல்வி விஜயபாரதியின் கவிதையை படித்தால் நாமும் கவிதை எழுதலாம் என்று கூறி உரையை ஆரம்பித்தார். எட்டயபுரத்து பாரதியின் கவிதையில் தீ சிந்தும் விஜயபாரதியின் கவிதையில் தேன் சிந்தும் என்று கூறி முந்தைய பேச்சாளர் சிவக்குமாரன் பேச்சினை ஆமோதித்தார். மேலும் கவிஞர் பற்றி கூறும் போது சகலவிதமான காழ்புணர்ச்சி காட்டப்படாத கவிஞர் என்றும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கவிஞர் என்றும் கூறினர்

கவிஞர் மண்மேல் கொண்ட பாசத்தையும் மனிதர்மேல் கொண்ட பாசத்தையும் பிரதிபலிப்பதாகவும் பண்முகம் காட்டும் இக்கவிஞர் சிங்கை மேல் உள்ள பாசத்தை வெளிபடுத்தியதால் தான் ஒரு விசுவாச பாரதி என்பதை நிருபித்துள்ளார் என்றும் எனக்கு ஆயிரம் கரங்கள் வேண்டும் என்ற கவிஞரின் கவிதை வரியை கூறி எனக்கு வாய் ஒன்று போதாது கடவுளே இங்கு வந்திருக்கும் அனைவரின் வாயும் எனக்கே வாய்த்திட வேண்டும் அவ்வாயினால் நான் கவிஞரை வாழ்த்திட வேண்டும் என கூறி முடித்தார் (ஆமாம் பேச்சாளர்களுக்கு ஒரு வாய் பத்தாது தான்!) ( இவரின் பேச்சு மிக சிறப்பாக அமைந்தது என்று என சக தோழர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்)

மலேசிய பத்திரிக்கை தமிழ்நேசன் சுதந்திர தின போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பின் ஆசிரியர் சந்திரகாந்தன் பரிசினை வழங்கினார்.

இந்த ஆண்டின் கவிமாலையின் கணையாழி விருது பெற்ற எழுத்தாளர் சிங்கப்பூர் சித்தார்தனை தமிழ்தொண்டர் தங்கராஜ் சிறப்பித்து பெருமை சேர்த்தார். பின் தலைமையுரையாற்றினார்

வித்தக கவிஞர் பா.விஜய் பேசியதில் என்னின் பசுமையான பக்கங்கள் பகிர்வுக்கு உங்களுடன்.

அற்புதமான கவிஞர் நண்பர் விஜயபாரதி என்று கூறி உரையை ஆரம்பித்தார் பின் தங்கராஜ் பற்றி தான் எழுதியதாக ஒரு கவிதை வாசித்தார். அதில் ஒரு வரியில் தங்கராஜை தங்க காசு என்று தேசிய விருதுபெற்ற கவிஞர் ராஜாவை காசு ஆக்கியது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

சிங்கப்பூரில் வியந்த விசயம் என்று ஒளி 96.8 வானொலியை பாராட்டினார் (முன்னதாக அவரின் பேட்டி நேரடியாக 96.8ல் மீனாட்சி சபாபதி தொகுத்து வழங்கினார்) விழாவிற்கு இவ்வளவு நண்பர்கள் வந்திருப்பது தமிழப்பற்றுக் சான்று என்றார். பின் அவர் 12ம் வகுப்பு படித்தபோது வெளியிட்ட முதல் புத்தக தொகுப்பு பற்றி விவரித்து அது தற்கொலை முயற்சிக்கு சமமான நிகழ்வாக அமைந்தது என்றும் எந்த ஒரு பத்திரிக்கையும் சரியாக அங்கிகாரம் தராததால் நான் புத்தகம் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று பேசினார். தமிழகத்தில் எந்த ஒரு புதிய படைப்பாளிக்கும் வரவேற்பு இல்லை என்றும் படைப்பாளியின் படைப்பை பார்க்காமல் படைப்பாளியின் பின்புலத்தை பார்த்து புத்தகம் வாங்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ளது என்றும் தன் ஆற்றாமையை வெளிப்புடுத்தினார்.

கவிதை எங்கேயிருக்கிறது என்று பார்க்கும் போது எல்லாயிடத்திலும் நிரம்பிக் கிடப்பதாகவும் குறிப்பிட்டார் புரியாத கவிதை எழுதும் புதுமைகவிதை பற்றி குறிப்பிட்டு தான் எழுத எத்தனித்து தோல்வியை தழுவியதாக கூறினார். பின் கவிஞர்கள் வாலி, அப்துல்ரகுமான், மேத்தா, கண்ணதாசன என பல கவிஞர்களின் கவிதைகளை குறிப்பிட்டு பேசினார். அவரின் பேச்சுகளில் அதிகம் வாலிபற்றி பேசியது குறிப்பிடதக்கது (அவ்வளவு காதலா!). பின் பெரிதும் அறிமுகம் ஆகாத எழுத்தாளர்களின் பிரமிக்க தக்க கவிதை வரிகள் என்று சில கவிதை பற்றி பேசினார் (அதிகம் பிரபலதன்மையற்ற எழுத்தாளர் பற்றி அதிமாகவே பேசினார்)

கதையானாலும் கசக்கி கட்டு
அது சரி
காயும் வரை எதை கட்டுவது

பரதனுக்காக 16 ஆண்டுகள் விட்டுத்தந்த ராமர் பாபருக்காக ஒரு 10 அடி விட்டுத்தர மாட்டாரா?

சாகும் போது கூட ஒரு கொசு கைதட்டல் வாங்குகிறது இருக்கும்போது மனிதா நீ?

பாரி தேர் வைத்தபோதும் மோட்சமடையாத முல்லை உன் கூந்தலில் இருந்தபோது முக்தியடைந்தது

என பல கவிதைகள் சிலகவிதைகள் நம் மனதில் ஆழ பதிகின்றது என்றார்.

கவிஞர்களின் முதல் அங்கிகாரம் என்பது கல்லிலிருந்து நார் உரிப்பது போன்றது என்றார்.

விமர்சனம் ஒரு படைப்பாளியை சின்னா பின்னபடுத்துவதாகவும் நண்பர்களின் விமர்சனம் தவிர்த்து மற்ற விமர்சனத்தை பெரிதாக எடுத்து கொள்ள கூடாது என்று பேசினார்.

புதுக்கவிதையின் தலைநகரம் கோவை என கவிஞர் மேத்தா சொன்னதை ஞாபகபடுத்தினார்.

நண்பர்கள் எதார்த்தமாக பேசிசெல்வதும் சில நேரங்களில் புத்தக விமர்சனங்களும் மிகசிறந்த கவிதையாக இருக்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதியின் விமர்சனத்தை மேற்கோள் காட்டினார்.

மேலும் கவிஞர் விசயபாரதியின் நூல்பற்றி பேசும் போது இந்நூல் தமிழர்களுக்கான பொக்கிசம் என்று; புதிதாக வருபர்களுக்கு இப்புத்தகம் ஒரு கையேடு என்றார். பின் கவிஞரின் இனியது நாற்பது சிங்கப்பூரை பார்க்காதவர்களையும் ஒளிநடையில் அழைத்து செல்கிறது என்றார். இப்புத்தகத்தை முழுமையாக படித்தபோது சிங்கப்பூர் திரவியதேசமட்டுமல்ல ஒரு திராவிட தேசம் என்பதும் புலனாகிறது எனறார்;. கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளது மிகவும் சிறப்பு கவனிக்க படக்கூடிய அம்சம் என்றார். கவிஞரின் ஒவ்வொரு வரியிலும்; கலாச்சாரம் மொழிப்பற்று வாழ்க்கை முறையை அறியமுடிகிறது.

புரவலர்கள் நண்பர்கள் என வந்திருந்து புத்தகம் வாங்கியதை பாராட்டி இனி உங்கள் இல்ல விசேசத்திற்கு சென்று கலந்து கொண்டு மொய் செய்வது போல புத்தக வெளியீட்டிலும் கலந்து கொண்டு மொய் செய்து எழுத்தாளர்களை உற்சாக படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கவிஞர் விசயபாரதி தன் நன்றியுரையில் தான் சிங்கப்பூர் வந்து 10 ஆண்டுகுள் நிறைவு பெற்ற விதத்தை ஒவ்வோரு ஆண்டாக (முதல் ஆண்டில் தமிழ்முரசு 2 ம் ஆண்டில் ஒளி 96.8 5ம் ஆண்டில் கவிமாலை) என தான் சந்தித்த களம் மற்றும் உயரங்களை (அங்கிகாரத்தை அவருக்கே உரிய அழகில் கூறி நன்றி பாராட்டினார்.)நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com