Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?
சே.பாக்கியராசன்


karunanidhi
சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

MGR_Indragandhi
1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

சே.பாக்கியராசன், மிச்சிகன்...(packmymails@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-01-27 11:23:00
porkkaiponds@yahoo.co.in

அத்தனையும் உண்மை பாக்கியராசன் அவர்களே!

1991ல் ஜெயலலிதா, ராஜீவின் துணையோடு கருணாநிதி ஆட்சியைக் கலைத்த பின், அடுத்து வந்த தேர்தலில் கருணாநிதிதான் ஜெயித்திருக்க வேண்டும். மக்களின் அனுதாப அலை கருணாநிதியின் பக்கம் தான். ஆனால், ரஜீவின் கொலை வரலாற்றின் போக்கை மாற்றியது. கருணாநிதி மீதான அனுதாபம், ராஜீவின் மீது மாறியது. கருணாநிதி ஒரு வாய்ப்பை இழந்தார்.
ராஜீவோடு கூட்டணி அமைத்த பார்ப்பன ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார்.

ஆக, கருணாநிதியின் ஆட்சி விடுதலைப் புலிகளை முன்னிட்டு கலைக்கப்படவில்லை. ஆனால், வர இருந்த ஒரு வாய்ப்பு பறிக்கப்பட்டது. அவுவளவு தான்!

கருணாநிதியிடம் நாம் கேட்கும் கேள்வி இது தான். ஆட்சி என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? ஆதாயத்திற்காக ஆட்சி நடத்துகிறீர்களா இல்லை மக்களுக்காக ஆட்சி நடத்துகிறீர்களா? மக்களுக்காக ஆட்சி நடத்துவதாய் இருந்தால் இழப்பைப் பற்றி வருந்த வேண்டியது ஏன்?

அரசியலின் அடிப்படையையே மறந்து விட்டீர்களா? அந்த அளவுக்கு அரசியல் தறிகெட்டுள்ளதா?

ஆம் தோழர்களே! தறிகெட்ட இந்த அரசியலை நாம் சீராக்க வேண்டும். ஒன்றினையுங்கள். படித்த பண்பாளர்களே! நமக்கு கடமைகள் உள்ளது. கடமை தவறாதீர்

Kokuvil
2009-01-28 02:04:00
kokuvil@gmx.vom

மூவாயிரம் பிணம் தின்னி நாய்கள் இந்தியாவில் இருந்து பின் கதவால் ஈழத்துக்குள் நுழைந்துள்ளன.

selva
2009-01-28 02:46:00
enselva@gmail.com

You have exactly articulated. I also feel the same. Karunanithi has certain ideologies. True. But when it comes to the question of power and his own family welfare he'll compromise anything. We know it. But today for the Tamils there is no other alternative other than him. That is why we need to tolerate him.

ssk
2009-01-28 07:15:00
ssktpj@gmail.com

கலைஞர் பற்றி குற்றஞ் சொல்லி என்ன பயன். . தமிழன் சற்றும் ஒற்றுமை இல்லாமல் தானும் வாழாமல் தன் இனத்தையும் வாழ விடாதவன் .(வைகோ , கருணா, காங்கிரஸ் மற்றும் பலர்.)
தமிழ் நாட்டிலும் ஒற்றுமை இல்லை ஈழத்திலும் ஒற்றுமை இல்லை. பார்ப்பான் தந்திரம் பலிக்கிறது. தமிழன் தனக்குள்ளே குற்றம் பார்த்து சாவது கண்டு.
படித்த நிங்களே தடுமாரலமா
தயவு செய்து , தமிழன் ஒற்றுமை பற்றி மட்டுமே எழுதவும், சிந்திகவும். முதலில் நமக்கு கூரை தேவை பிறகு கலைஞரை திட்டலாம்.
போர் நின்றாலே போதும்.
போரின் வலி தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது வெகு ஜன ஊடகுமான டிவி, cinema, பத்திரிகைகள் இது பற்றி பேச எழுத காட்டமாட்டர்கள்
ஒற்றுமை இல்லாமல் தமிழ் இனமே அழிய வாய்ப்பு தர வேண்டாம்.
என்ன செய்ய முடியும் என்பது பற்றி எழுதுங்கள்
உங்கள் எழுத்து தமிழன் எழுச்சிக்கு பயன் படட்டும் .
நன்றி

Dr. V. Pandian
2009-01-28 08:00:00
porkkaiponds@yahoo.co.in

செல்வா! ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அரசியலைய்யா! அதில் நேர்மை மட்டும் தான் இல்லை. கருணாநிதியை இன்னும் நம்பப் போகிறீர்களா?

கொக்குவில் சொன்னது போல, சார்க் மாநாடு சமயத்தில் மன்மோகன் பாதுகாப்புக்காக சென்ற 3000 வீரர்கள் இந்தியா திரும்பாமல் சிங்களனோடு சேர்ந்து போராடுகின்றனர்.

இது தமிழுலகுக்கு இந்தியா செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழர்களே, எண்ணிப் பாருங்கள்!

Vijayshankar
2009-01-28 10:29:00
vijayfromindia@gmail.com

Election held in srilanka during 1977 was headed by Selva not by Amirthalingam as you stated.

Dr. V. Pandian
2009-01-28 08:33:00
porkkaiponds@yahoo.co.in

இலங்கை சென்ற பார்ப்பன முகர்ஜி, சிங்களனின் ராணுவ அடக்குமுறைகளை 'புன்சிறிப்போடு' பார்த்து ரசித்து விட்டு, மக்களைக் கொல்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சிறித்துக் கொண்டே விண்ணப்பித்து விட்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு, போன வேகத்தில் திரும்பிவிட்டார்.

இலங்கையில் நடப்பது தமிழருக்கும், சிங்களனுக்குமான போரல்ல.

அது,

திராவிடனுக்கும், ஆரியருக்குமான போரின் இலங்கை Chapter.

உணருவீர்களா,

இந்திய திராவிடர்களே!

அடுத்த குறி,

உங்களுக்குத்தான்!

venkatesh
2009-01-28 10:33:00
venkeysri@yahoo.co.in

கருணாநிதியின் பதவி ஆசை,அதனால் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்ய சொல்லி மத்திய அரசை வலியுறுத்தாமல் காலதாமதம் செய்தது தமிழ் சமுகம் மறக்காது.
தன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள,உடனடி நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்கிறார்.
முதுகு வலி என்று சொல்லி மருத்துவ மனையில் படுத்து கொண்டது,ஒரு ஏமாற்று வேலை.
பிப்ரவரி 15 செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்பது ஏமாற்று வேலை.அதற்குள்,போர் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
காங்கிரஸின் துரோகத்தையும்,தி.மு.க வின் கையாளாகதனத்தையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஒரு விடுதலை போராட்ட இய்க்கத்தை மறுபடியும் மறுபடியும் பயங்கரவாத இயக்கம் போல் சித்தரித்து,அதில் ஒரள்வு வெற்றி பெற்று விட்டார்கள்.
ஆனால்,60 ஆண்டுகள் போராடிய ஈழ தமிழர்களின் போராட்டத்தை அழித்ததை வரலாறு மன்னிக்காது.
………………………கலியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்
நாசம் கூறும் நாட்டு வைத்தியர்
இவராம் இங்கு இல் இருதலை கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே!விதியே!தமிழ்சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?
‍‍‍‍……….மகாகவி பாரதியாரின் கேள்வி நமக்கும் எழுகிற‌து

Raja raja cholan
2009-01-28 11:33:00
devaraja123@yahoo.com

கலைஞர் கூறுவது முற்றிலும் உண்மை. ஈழப்பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்ட இயக்கம் திமுகதான். இருமுறை ஆட்சி வாய்ப்பை இழந்திருக்கிறது. 1991-ல் இலங்கை பிரச்சினையைக் காரணம் காட்டிதான் அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கலைஞர் நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டிதான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வரும் ஒரு சூழலில் முன்னாள் பிரதமர் கொலை பொய்க்குற்றச்சாட்டு அடிப்படையில் திமுகவிடம் இருந்து ஆட்சியை ஜெயலலிதா தட்டிப் பறித்தார். இப்படி அதிகம் பாதிக்கப்பட்ட திமுகவின் தலைவர் கலைஞரைக் குறை கூறுவதும் புழுதி வாரி தூற்றுவதும் தமிழர்களின் பெயரில் ஒளிந்திருக்கும் ஓனான்களே!

Dr. V. Pandian
2009-01-29 05:13:00
porkkaiponds@yahoo.co.in

முத்துக்குமார் என்ற இளைஞன் ஈழ சிக்கலை முன்னிட்டு தீக்குளித்துள்ளார்.

அவருக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!

பதிவியைப் பற்றிக்கொண்டுள்ள கோழைகளே! சூடு, சொரணை இல்லையா உங்களுக்கு?

பதவி, பணம், குடும்ப அரசியல் எத்தகைய கேடு நம் இனத்திற்கு உண்டாக்கும் என்பதற்கு நீங்களே இந்த நூற்றாண்டின் இணையிலாச் சான்று!

பார்ப்பன முகர்ஜியே தான் போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று அறிக்கை விட்டபின், அவரை இன்னும் நம்புவோம் என்று தீர்மானமா?

சுத்தமும் மனசாட்சியே இல்லாத மரங்களா நீங்கள்!

நீவிர் ஒழிக! ஒழிக!! ஒழிக!!!

Dr. V. Pandian
2009-01-29 05:40:00
porkkaiponds@yahoo.co.in

3 months ago...
“We have a very comprehensive relationship with Sri Lanka. In our anxiety to protect the (Tamil) civilians, we should not forget the strategic importance of this island to India's interests,... especially in view of attempts by countries like Pakistan and China to gain a strategic foothold in the island nation."
Indian Foreign Minister Pranab Mukherjee in Indian Parliament October 2008

40 months ago...
"A CIA regional analyst in Washington said in July 2001: “containing the LTTE while stepping up pressure on the civilian population under its control by stepping up ‘terror’ bombing might create conditions for unseating Prabhararan”. " US Strategic Interests in Sri Lanka, Taraki, 30 July 2005

126 years ago...
"...Where national memories are concerned, griefs are of more value than triumphs, for they impose duties, and require a common effort. A nation is therefore a large-scale solidarity, constituted by the feeling of the sacrifices that one has made in the past and of those that one is prepared to make in the future..." What is a nation? - Ernest Renan, 1882

Thanks to tamilnation.org.

Who are Indians?

What are Tamils?

Dr. V. Pandian
2009-01-29 05:44:00
porkkaiponds@yahoo.co.in

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: சாகும் தருணத்தில் முத்துக்குரின் உருக்கமான வாக்குமூலம்
Thursday, 29 January 2009

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் என்று சென்னையில் தீக்குளித்த வாலிபர் முத்துக்குமரன் உருக்கமான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.



Sathees Kumar
2009-01-29 06:05:00
satheeskumar.81@gmail.com

என்ன கலைஞர் மீது புழுதி வாரி தூற்றுகிரர்களா.... அவர் நினைத்திருந்தால் எப்பவே போரை நிறுத்தி இருக்க முடியும்... யார் ஓனான்.... யார் தமிழின துரோகி என வரலாறு சொல்லும். ஆனால் அதை பார்க்க கலைஞர் இருக்க மாட்டார்...ஆனால் அதற்கான விலையை அவருடைய(?) இயக்கம் அனுபவிக்கும்.....



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP