Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
அறிவிப்பு

புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான கவிதைப் போட்டி


துவக்கு இலக்கிய அமைப்பு, மாற்று கவிதையிதழ் மற்றும் கூடல்.காம் தமிழ் இணைய தளம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் புலம்பெயர் வாழ்க்கைப் பதிவுக்கான மாபெரும் கவிதைப் போட்டி

முதல் பரிசு: ரூ. 10,000
இரண்டாம் பரிசு: ரூ. 7500
மூன்றாம் பரிசு: ரூ. 5000
பாராட்டு பரிசு: ரூ. 1000 பத்து கவிதைகளுக்கு

கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரிகள்:

இ. இசாக்
post Box: 88256
Deira- Dubai
U.A.E

சி. சுந்தரபாண்டியன்
மாற்று கவிதையிதழ்
கோணான்குப்பம் - 606 104
விருதாசலம் வட்டம்
தமிழ்நாடு

மின்னஞ்சலில் அனுப்ப

thuvakku@yahoo.com
thuvakku@gmail.com

கவிதைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள்: 15, டிசம்பர் 2005

விதிமுறைகள்

1. கவிதைகள் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் உணர்வுகளை பதிவு செய்வதாக இருக்க வேண்டும், தேவையற்ற மாற்று மொழிக் கலப்புகள் தவிர்த்தல் வேண்டும்.

2. ஒரு கவிஞர் எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம், கவிஞரின் புகைப்படம், சிறுகுறிப்பு இணைத்து அனுப்பவேண்டும்.

3. போட்டிக்கான கவிதைகள் சொந்த படைப்பாகவும், வேறு எங்கும் வெளியாகாதவைகளாகவும் இருக்க வேண்டும். இது குறித்த உறுதிமொழி கடிதம் இணைக்க வேண்டும்.

4. கவிதைகள் 35 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, அய்க்கூ (குறைந்தது மூன்று அய்க்கூகள்) என எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

5. பரிசுக்குரிய கவிதைகளை முன்னணி கவிஞர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும், தேர்வுக்குழவின் முடிவே இறுதியானது.

6. போட்டிக்கு வரும் கவிதைகள் தகுதியடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பாக வெளியிடப்படும்.

மேலும் விரிவான விபரங்கள் அறிய, www.thuvakku.com, மாற்று கவிதையிதழ், www.koodal.com ஆகியவற்றை பார்க்கவும்.

தொடர்புகளுக்கு:

இ. இசாக்- 00971 503418943
கவிமதி- 00971 505823764
நண்பன்- 00971 50 8497285
சே.ரெ.பட்டணம் அ. மணி- 00971 50 7763653
சி. சுந்தரபாண்டியன்- 0091 9360021254


Unable to connect to database! Please try again later.