Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல்
நீலகண்டன்

டிச-6-அய் அம்பேத்கர் நினைவு தினமாய் அனுசாரித்து வந்தோம், பாபர் மசூதி என்னும் உலக வரலாற்றுச் சின்னத்தை, சாதியை வென்ற மதத்தின் கம்பீரத்தோடு நின்ற அந்த வழிபாட்டுத் தலத்தை பார்ப்பன இந்துத்துவக் கொலைபாதகர்கள் 1992-ல் இடித்துத் தரைமட்டமாக்கும் வரை.

சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள், ரயில் நிலையங்கள், பள்ளிக் கூடங்கள் ஏன் மசூதி வாசல்களிலும் நிறுத்தி குற்றவாளிகளைப் போல இஸ்லாமியர்கள் விசாரிக்கப்பட்டனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை முறை கண்காணிப்பிற்கு உள்ளாகியிருந்த சமயம், நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காகச் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணாசாலை சிம்ஸன் அலுவலகம் எதிரில் இஸ்லாமியப் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுனர் தகராறு செய்து கொண்டிருந்தார். நெருங்கி விசாரித்தோம். ‘பெரியமேட்ல இருந்து இங்க வர்றதுக்கு 30 ரூபா பேசி ஏறினேன் சார். இப்ப எறங்கும்போது 50 ரூபா கேட்டு மிரட்டுறார் சார்’ என்றார் பயணி பரிதாபமாக.

ஆட்டோ ஓட்டுனரிடம் பேச முயன்றோம். காது கொடுத்துக் கேளாதவராய் மேலும் கோபத்தோடு அந்தப் பயணியைத் திட்டத் தொடங்கிய அவர் திடீரென்று ‘டேய் துலுக்க நாயே கேட்ட காச குடுக்கலைன்னா, உன்னை அல் உம்மான்னு புட்சிக் குத்துடுவேன்’ எனக் கத்த அதிர்ந்து போனோம் நாங்கள். எங்களில் ஒருவர் ஆத்திரமுற்று ஆட்டோ ஓட்டுனரை அடிக்கப் பாய்ந்தார். அவரைத் தடுத்து நிறுத்தி இது R.S.S.ம்., மீடியாக்களும் உருவாக்கிய மனநிலை. அவர் என்ன செய்வார் எனத் தோழரிடமும் ஆட்டோ ஓட்டுனரிடமும் விளக்கி உரையாடினோம். கோபமாகத் தொடங்கிய ஓட்டுனர் விரைவில் எங்கள் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். இறுதியில் அவர் அந்த இஸ்லாமியப் பயணியிடம் காசு வாங்கவே மறுத்ததோடு நல்லதொரு தேநீரும் வாங்கித் தந்துவிட்டுப் போனார். எங்களுக்கு நெஞ்சு நெகிழ்ந்து போனது.

நானும் 15 ஆண்டு காலம் வேலைச் சூழல், இயக்க அரசியல், நண்பர்களோடு அரட்டை எனப் பல்வேறு மாதிரியான மனிதர்களிடம் உரையாடிய போதெல்லாம் மாற்றுக் கருத்தைச் செவி கொடுத்துக் கேட்டவர்களும் அந்த அடிப்படையில் தமது கருத்துக்களில் மாற்றங்கள் செய்து கொள்ள முனைந்தவர்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். ஆனால் அம்பேத்கரை முன் வைத்தும், பெரியாரை முன் வைத்தும், நேரு, காந்தியை மேற்கோளிட்டும் நாம் விவாதிக்கும்பொதெல்லாம், காதுகளை மூடிக் கொண்டு நியாயங்களைக் கொலை செய்தும் மற்றவர்கள் (சூத்திரர்கள்) பேசுவதைக் கேட்கவே மறுக்கும் மனு தர்ம மனப்பான்மை கொண்டவர்களாய் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்து வந்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் தற்போது அப்படி மேலெழுந்து கொக்கரிப்பது கா.சு. பத்திரிகையும், அதன் ஆசிரியர் கண்ணனும்.

தமிழ்ச் சிறுபத்திரிக்கை தளத்தில் ‘காலச்சுவடு’ என்கிற பார்ப்பனப் பத்திரிக்கை, இலக்கியத்தில் இந்துத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே கடந்த காலங்களில் இயக்கி வந்தது போதாமல், இப்போது ‘மத சார்பின்மை ஒரு மறு ஆய்வு’ என்கிற பெயரில் இந்துத்துவத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு நரித்தனமாக ஆதரிக்கும் வகையில் இஸ்லாமியர்களை, இஸ்லாமிய ஆதரவாளர்களைக் கொச்சைப்படுத்தியும், உளவுத் துறைக்கு ஆள்காட்டி வேலை செய்யும் நோக்கிலும் நேரடியாகக் களத்தில் குதித்துள்ளது. இந்துத்துவத்தை எதிர்க்கும் சிந்தனையாளர்கள், அதற்கான தங்களது தத்துவக் கருவிகள், அளவீடு முறைகள், மொழியின் போதாமைகள் குறித்தெல்லாம் விவாதிக்கும்போதும், கவலைகொள்ளும்போதும், காலச்சுவடுக்கும் அதன் ஆசிரியர் முன்னாள் A.B.V.P.கார கண்ணனுக்கும் மதச்சார்பின்மையை மறு ஆய்விற்குள்ளாக்க எழுந்துள்ள ‘அக்கறை’ நமக்குப் புதிய விஷயமில்ல.

ஏனெனில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பே G.S.R. கிருஷ்ணன் என்கிற இந்துத்துவ ஆதரவுப் பேர்வழியை எழுத வைத்து இடிப்பதற்கான நியாயம் பேசியவர்கள் இவர்கள். வாசகர் கடிதப் பகுதியையும் கூட மாற்றுக் கருத்தாளர்களுக்கு விட்டுத்தராமல் அரவிந்தன் நீலகண்டன் போன்ற R.S.S. சேவகர்களை வைத்து இந்துத்துவ எதிர்ப்புச் சிந்தனையாளர்களைத் திரட்டுவதையும், காவல் துறைக்குப் போட்டுக் கொடுத்தல் வேலை செய்வதையும் சேவையாக செய்து வருபவர்கள்தான் இவர்கள் என்பது அதன் அப்பாவி தலித், பிற்பட்ட, இஸ்லாமிய வாசகர்களுக்கான செய்தி.

ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுகள் ‘பொடா’ ‘என்கவுண்டர்’ வலைகளை விரித்து வைத்துக் கொண்டு, ஜனநாயகம் பேசுபவர்களை, தீவிரவாதிகள், ரவுடிகள் எனப் பெயர் சூட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கும் ‘பார்ப்பனப் பொற்காலத்தில்’ காலச்சுவடு இதழும் ‘தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள்,’ ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆதரிப்பவர்கள்’ என்று ஆள் காட்டுவதன் எதிர்ப்பு என்ன?

சந்தேகத்திற்குரிய செப்-அக் 2003 இதழின் அட்டைப்படமே மூன்று மதங்களால் இருள் சூழ்ந்தது மாதிரியான தோற்றத்தை முன் வைப்பது அயோக்கியத்தனமானது, சிறுபத்திரிக்கைத் தன்மைக்கே எதிரானது. இன்று சூழ்ந்துள்ள இருளுக்கு சிறுபான்மை மதங்கள் எந்த வகையில் காரணம்? சனாதனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு மதச்சார்பின்மை குறித்து விவாதிக்க முதலில் யோக்கியதை உண்டா?

இந்தியாவில் இன்று நடக்கின்ற முஸ்லிம் படுகொலைகள் அனைத்தையும் வினை - எதிர்வினை என்கிற தன்மையில் அணுகினாலும்கூட அவையனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியது இந்துத்துவ சக்திகள்தான். அதற்கு மௌனமாகவோ பகிரங்கமாகவோ ஒத்துழைப்பது இந்துக்களாய்ப் பிறந்து, எழுதி, பேசி வருகிற அறிவு ஜீவிகள்தான். பார்ப்பனர்களானாலும், பிற்பட்டவர்களாலும், ‘கரசேவகர்கள்’ என அழகு படுத்துவதற்குத் துணைபோன தலித் பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் இதில் அடக்கம்.

‘வெறுப்பூட்டுகின்ற அடிமைத்தனத்தின் கீழும், சலிப்பூட்டுகின்ற அச்சத்தின் கீழும் வைக்கப்பட்டுள்ள நான் பிறந்த சமூகத்தை மீட்கும் முயற்சியில் தோல்வியுறுவேன் என்றால் என்னை ஒரு துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக்கிக்கொள்வேன்’ எனக் கூறிய சமூகப் போராளியும் தனிப்பெரும் ஆய்வாளருமான அம்பேத்கரை அயற்சியுறச் செய்த கொடூர மதம் இந்து மதம். சொந்த மதத்தின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்களாய், சேரிச் சிறைகளில் அடைக்கப்பட்ட தலித்துகளாய்ப் பிரித்து வைத்து, அவர்களுக்குப் பொது அனுபவத்தை, பொது உரிமையை வழங்கிப் பொது மக்க்ளாய் மாற்றாமல் தனக்குள்ளேயே மேல் சாதி கீழ் சாதி என ‘அன்னியப்படுத்தி’ ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிற அளவிற்கு அகமும்-புறமும் வெறுப்பை உமிழ்ந்து திரிவதே இந்து மதத்தின் சித்தாந்தம். அதன் தலையில் பிறந்த காசு. கண்ணன் திமிரெடுத்த சாதியில் பிறந்த குற்ற உணர்வு எதுமின்றிக் கரும்பலகை எடுத்துக் கொண்டு மதச் சார்பின்மை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும் வகுப்பெடுக்க வந்துள்ளார். அவருக்குக் கஞ்சிரா வாசிக்க வழக்கம் போல் ரவிக்குமார் இருக்கிறார். சரி .

கண்ணனிடம் நாம் கேட்க விரும்புவது, ஊர் சூத்தை கழுவுறது இருக்கட்டும் கண்ணா உஞ்சூத்தை எப்பக் கழுவுவாய் என்பதுதான். இந்து மதத்தால் அம்பேத்கர் பட்ட அவதிகள் தொடங்கி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்திற்குச் சங்கராச்சாரி தடை வாங்கியது தொடர்ந்து, இன்று தலித்கள் வாயில் ‘பீ’ திணித்தது வரையிலான இந்து மதக் கொடுமைகளை எத்தனை இந்துக்கள் விமர்சித்துள்ளீர்கள்? அவர்களில் கலை இலக்கியவாதிகள் எத்தனை பேர்? பத்திரிகையாளர்கள் எத்தனை பேர்? இவற்றிற்கெல்லாம் மேலாக பார்ப்பனர்கள் எத்தனை பேர்?

‘ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்து’ என்கிற குரு கோல்வால்க்கரின் வெறித்தனத்தைப் ‘பம்பாய்’ திரைப்படத்தில் திரைக்கதையாக மாற்றியவர் பார்ப்பனர் மணிரத்னம். குண்டு வைத்து யாரையோ கொலை செய்யும்போதும் அமைதியாக இஸ்லாமியர் தொழுகை நடத்துவது போன்று இஸ்லாமியர் எதிர்ப்பை ‘ரோஜா’ திரைப்படத்தில் நேரடியாகத் தொடங்கி வைத்தார் அவர். அதன் தொடர்ச்சியாய் ‘பாபா’ ‘நரசிம்மா’ என எல்லாத் திரைபடங்களிலும் இஸ்லாமியர்கள் குற்றவளிகளாய், வன்முறையாளர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர். இதெல்லாம் வன்முறையாக கா.சு.விற்கும், கண்ணனுக்கும் அவர்களின் மதச்சார்பின்மை மூளைக்கும் உறுத்தாது. ஆனால் அவலச் சூழலில் வாழ்கின்ற இஸ்லாமியருக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் இந்துத்துவ எதிர்ப்பாளர் அ. மார்க்சும் இஸ்லாமியருக்கான இன்றைய பிரச்சனைகள் குறித்து எழுதும் தோழர் ஷாஜகானும்தான் மதச்சார்பின்மைக்கு எதிரிகளாக அடிப்படைவாதிகளை ஆதரிப்பவர்களாக உறுத்தும். சாதி மதக் கலவரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிற ‘தினமலரின்’ விளம்பரப் பணத்தில் பத்திரிகை நடத்துபவர்கள் அல்லவா இவர்கள். ஒரே குட்டையிலிருந்து வரும் இந்துத்துவ நோய் பரப்பும் கிருமிகளில் சிறுசு பெரிசு (பத்திரிகை) என்பதெல்லாம் வசதியான பெரும் மோசடிதான்.

‘மதவாதப் போக்கைச் சிறுபான்மை, பெரும்பான்மை எனப் பிரித்து அணுகுவது பொருத்தமானதல்ல’ என்கிறார் கண்ணன். சூலத்தைக் கையில் கொடுத்துக் கொள்ளையடித்துக் கொள், கொலையும் செய்து கொள் என்று V.H.P., R.S.S. சொல்வதும், தங்களைத் தற்காத்துக் கொள்ள இஸ்லாமியர்கள் அணி திரள்வதும், எழுதுவதும், பேசுவதும் ஒன்றல்ல. இந்தியாவில் நிகழ்ந்த எந்த மதக் கலவரத்தை இஸ்லாமியர்கள் முன் நின்று செய்தார்கள்? ‘இசுலாமியத் தீவிரவாதிகள்’ என்பது ஊடகங்களும் அரசும் இணைந்து உருவாக்கிய கருத்துப் பிரச்சாரம்தான். தேர்தல் அறுவடைக்கானதும்கூட. மூடிய அறைகளுக்குள் நிகழ்த்தப்படுகின்ற விசாரணைகள், அதன் முடிவுகள் அடிப்படையில் சிறுபான்மையினரிடம் மதவாதமுள்ளது என்பதும் ஆபத்தானது. ‘எல்லா நீதிபதிகளும் ஜாதி பார்க்கிறார்கள்’ என ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவர் வெளிப்படயாகக் கருத்து தெரிவித்ததை விவரணமாகக் கொள்ளும்போது, நாம் இந்த நாட்டில் எந்த நிறுவனத்தைத்தான் முழுமையாக நம்புவது?

சூழலின் கருத்திலிருந்து விடுபட்டு யோசிப்பவர்கள் யார்? இந்து அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு நடந்தேறிவரும் இனப் படுகொலைகளுக்கும் இசுலாமியத் தற்காப்பு அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரல்ல கண்ணன். சிறுபான்மையினரை ராமகோபாலன், தொகாடியா, சங்கராச்சாரிகள் மிரட்டுவது போல் பெரியாரிய, இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மிரட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதற்காகத்தான் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ எனத் தலைப்பிட்டுக் கீதோபதேசம் செய்கிறார்.

‘சமமற்றவர்களைச் சமமாய் நடத்துவது சமத்துவத்திற்கே எதிரானது’. (அ. மார்க்ஸ், ‘இந்துத்துவவம் ஒரு பன்முக ஆய்வு’) சுதந்திரமடைந்ததாய்ச் சொல்லப்படுகின்ற அய்ப்பது ஆண்டுகளில் இந்துத்துவத்தால் புறநிலை எதிரிகளாக நிறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையில் அடைந்த பயன்தான் என்ன? இட ஒதுக்கீடு உண்டா? பாராளுமன்றம், சட்டப் பேரவைகளில் போதிய பிரதிநிதித்துவங்கள் உண்டா? இந்து முன்னனிக்குத் துண்டறிக்கை தயாரிக்கும் கண்ணனுக்கு இதெல்லாம் இந்து அடிப்படைவாதமாகத் தெரியாது. 97% சொந்தச் சமூகத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பார்ப்பனப் பன்றிகளின் கரங்கள் இதற்கெல்லாம் நீளாது. (தீண்டாமை குறித்தும் சாதியம் குறித்தும் குற்றவுணர்ச்சி எந்த இந்துவிற்காவது வந்ததுண்டா?) ஆனால் இந்துத்துவத்தின் பொய்களை அம்பலப்படுத்தினால் அ. மார்க்சைத் திட்டுவதும், கேலி செய்வதும்தான் காலச்சுவடின் பிராதான நடவடிக்கை.

அனைத்துப் பாசிசங்களுக்கும் அதிபதிகளான இந்துத்துவவாதிகள் சொல்கிற ‘Suedo Secularism’ மாதிரிதான் காலச்சுவடு கும்பல் செய்கிற ‘மதசார்பின்மை மயிர் ஆய்வு’. இந்துத்துவத்தையோ, இந்து மதத்தையோ அம்பேத்கார், பெரியார் தொடங்கி அ.மார்க்ஸ் வரைக்கும் விமர்சித்தால் முதலில் வெகுண்டெழுபவர்கள் பார்ப்பனர்களாயிருக்கிறார்கள். ஏனென்றால் அதன் வீழ்ச்சியினால் தலையில் பிறந்த சாதிகளின் மண்டை தரையில் விழுந்து உடையும் என்கிற அச்சம்தான்.

‘பிறக்கின்ற ஒவ்வொரு இந்துவும் ஏற்கனவே வாழ்ந்து செத்துப்பொன மனிதர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையை அதனடிப்படையில் உருவாக்கவே வாழ்கிறான். இவனிடம் புதியவைகளைக் காண இயலாது’ என்பார் அம்பேத்கார். குறிப்பிட்டுச் சொல்வதானால் இந்து நம்பிக்கையில் சாதியப் படிநிலைக்கேற்ப நயவஞ்சகம் அதிகரித்துப் போகுமே தவிர, அதற்கெதிரான மனம் உருவாகும் சாத்தியம் அதில் இல்லை. இந்துச் சமூகம் கட்டமைக்கிறப் பார்ப்பன மனநிலை எப்படி இருக்கும் என்பதற்குக் காலச்சுவடும், கண்ணனும் உதாரணம்.

‘ இன்று தமிழகத்தில் செயல்படும் எந்த இஸ்லாமியக் குழுவிலும் இஸ்லாமிய மூல நூல்களை நவீனப் பார்வையில் அணுகும்போக்கு இல்லை’ என்கிறார் கண்ணன். இந்துத்துவம் இஸ்லாத்தை வெறுப்பதற்கான அடிப்படை நோக்கமே அதனுள்ளிருக்கும் நவீன சமூகத்திற்கான விடுதலைக் கூறுகள்தான். மேற்கின் சிந்தனையாளர்கள் எல்லாம் இஸ்லாத்தில் நவீன அறிவியலின் கூறுகள் மிளிர்வதை வியக்கின்றனர். அய்ரோப்பிய நாடுகளின் சுரண்டலுக்கு ஆட்படுகிற ஹைத் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கருப்பின மனிதர்கள் கூண்டோடு இஸ்லாத்திற்கு மாறுவதும், அதற்கு மேல் செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்கா செய்த எதிர்ப்பிரச்சாரங்களையும் மீறி ஆயிரக்கணக்கான வெள்ளை அமெரிக்கர்கள் மதம் மாறியதும், இஸ்லாத்தில் உள்ள நவீனம்தான்.

சாதியத் துயரத்தை, தீண்டாமையைச் சுமந்து திரியும் பழமைவாதப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் பிறந்த ஒரு தலித்திற்கு, ‘இறைவனை நேசிப்பதாய் இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனை நேசி’ என்ற குர்ரான் சொல்கிற செய்தியைவிட, கட்டித் தழுவிக் கொள்கிற, ஒரே தட்டில் சாப்பிடுகிற செய்கைகளைவிட நவீனப் பார்வை வேறு எதில் உள்ளது? உலகமயமாக்கலின் கடும் பொருளாதார நெருக்கடியில் கூட ‘வேலைக்குப் போகிற பெண்கள் 90 சதவீதம் ஒழுக்கக் கேடானவர்கள்’ எனப் பெண்களைச் சமையலறையோடு கட்டிப் போடுகின்ற சனாதன மடங்களை, அதன் வைதீகத் தத்துவங்களை, அந்த சங்கராச்சாரிகளை ஏந்தித் திரியும் மதத்திலிலிருந்து கொண்டு இஸ்லாமியருக்கு நவீனப் பார்வை கிடையாது என்பது எவ்வளவு அம்மாஞ்சித்தானமானது. நவீன சமூகம் தான் நவீனப் பார்வையை உருவாக்கும். இந்தியாவில் நவீன சமுகம் உருவாக வேண்டுமானால் முதலில் இந்து மதத்தை அடியோடு அழிக்க வேண்டும் எனப் பெரியார், அம்பேத்கார் கூறியதை நாம் நினைவில் கொள்வது நல்லது.

‘மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மாறிய தலித் பெண்களின் நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது’ என்கிறது காசு.

மேல் சாதியினரின் அடக்கு முறைக்கும் இழிவிற்கும் அவர்கள் இப்போது ஆளாக வேண்டியதில்லை. அதே சமயம் சுதந்திரங்களும் கூடவே பறிபோய்விட்டன என மொட்டைப் பாப்பாத்தியின் பேரன் கண்ணன் தலித் பெண்ணியமெல்லாம் பேசுகிறார். கிராமங்களில் நிகழ்கின்ற தலித்களின் மீதான அனைத்து வன்முறைகளிலும் கடுமையாக மன, உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவவர்கள் தலித் பெண்கள். தலித் ஆண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வெட்டுக் குத்து மாதிரியானவை மட்டுமல்ல இது. தனக்குச் சம்மந்தமோ, அறிமுகமோ அல்லாத ஆண்கள் உயர் சாதி என்கிற ஒரே தகுதியோடு வன்புணர்ச்சி செய்துவிட்டுப் போகிற வசதியை வேறெந்த மதமும் பிறவிச் சலுகையாய் வழங்குவதில்லை என்பதைப் பண்ருட்டி அருகில் உள்ள ‘சிறு தொண்டமாதேவி’ சம்பவங்கள் உணர்த்துவதோடு, அப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுகிற மிருகங்களை ‘உயர் சாதியினர் இது போன்று செயல்படமாட்டார்கள்’ என்று சட்டப்பூர்வமாக விடுதலை செய்கின்ற ‘நீதியரசர்களை’ பன்வாரிதேவி வழக்குகளில் நாம் பார்த்து வந்துள்ளோம்.

இதெல்லாம் இந்து மதத்திலிருப்பதால் நேர்கிற பெரும் பிரச்சனைகள் இல்லை. ஆனால் இஸ்லாத்திற்கு மாறிய பெண்களுக்கு முக்காடுதான் பிரச்சனை அதை விலக்குவதுதான் விடுதலை என்கிறாரா கண்ணன். மீனாட்சிபுரம் என்றதும் குமரி மாவட்டத் தோள்சீலைப் போராட்டம் நினைவிற்கு வருகிறது. உயர் சாதிப் பிண்டங்களுக்குக் கிளர்ச்சியூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற சாதித் திமிர் கீழ்சாதிப் பெண்கள் மார்பில் துணி போடவே அனுமதிக்காததை எதிர்த்து அம்மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டமும் அதற்கு முழுமையாகக் கிறித்தவ மதப் பாதிரியார்கள் துணை நின்றதும் இந்து மதத்தால் இழிவுபடுத்தப்பட்ட மக்களின் வர்க்க சாதிய வரலாறு. மார்பில் துணி போடாக்கூடாது என்றதும் பார்ப்பனீயம், இஸ்லாமிற்கு மதம் மாறிய தலித் பெண்களின் சுதந்திரம் முக்காடாய் பறிபோய்விட்டது என்று முகாரி பாடுவதும் பார்ப்பனீயம். ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ (நன்றி: அண்ணாவின் ‘ஆரியமாயை’). இஸ்லாத்தை நேசித்தவர் பெரியார். ‘திராவிட மதத்திற்கான அரபுச் சொல் இஸ்லாம்’ எனக்கவிதை பாடியவர் அவர். அப்படிப்பட்டப் ‘பெரியாருக்கு இந்து மனோபாவம் இருந்தது’ என யாருமே நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறி வெட்டி, ஒட்டி எழுதிவரும் எடுபிடிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கண்ணன் அளக்கும் அளப்புகளை யார் நம்புவது?

‘இஸ்லாமைத் தூய்மைப்படுத்தி அதில் கலந்துள்ள இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை நீக்கி, ஆச்சார மயமாக்கும் ஒரு போக்கு உள்ளது. வீட்டுத் தரையைச் சாணியிட்டு மெழுகுவதிலிருந்து தர்கா வழிபாடு வரை பிராந்தியப் பண்பாட்டு அம்சங்களை இஸ்லாமியர்களிடமிருந்து ஒழித்துக் கட்டும் நோக்கோட்டு செயல்பட்டு வரும் வஹாபி இயக்கத் தாக்கம் பரவி வருகிறது’ எனக் கண்ணன் கடுகடுப்பது நெகிழ்ச்சியை வலியுறுத்துவது மாதிரித் தோன்றலாம். ஆனால் தூய்மை தீட்டு, ஆச்சாரம் இவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டா? ஆனால் இந்து மதத்திற்கும் அய்ரோப்பியப் பாசிசத்திற்கும் இவ்வகையிலான தொடர்புகள் உண்டு. தாழ்த்தப்பட்டவனைத் தொடுவதை, அவன் சுவாசித்த காற்றைப் பார்ப்பனர் சுவாசிப்பதைத் தீட்டு என்கிறது மனு தர்மம். அப்படியான அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தியக் கிராமங்கள். சுகாதாரமற்ற இடத்திலேயே பறையனாய், பள்ளனாய், சக்கிலியனாய்த் தள்ளி வைத்துவிட்டு அவன் சமத்துவம் கோரினால், சாமி என் தெருவிற்கும் வர வேண்டும் என்றால், பொதுக் கிணறு குளங்களை பார்ப்பன சூத்திர சூத்துகளால் மூடிவைத்து கொண்டு, “நீ சுத்தமாயில்லை, தனித்தனியாகத்தான் கோவிலுக்கு வரணும்” (அதிலும் பிரிவினைதான்) என அதிகாரம் செய்வதும், இப்படி இழிவுபடுத்தும் மதத்தில் இருக்கமாட்டேன் என்று அறிவித்தால் ‘மதம் மாற்றத் தடைச் சட்டம்’ கொண்டு வருவதும் சிறைத் தண்டனை என மிரட்டுவதும் எந்த மதம் கண்ணா?

யாரையும் மார்போடு கட்டித் தழுவிக் கொள்ளும் இஸ்லாத்தில் தூய்மை என்பது மனிதப் பொதுவானது. ஆச்சாரம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. தனது பத்திரிக்கையிலிருந்த மனுஷ்யபுத்திரன் என்கிற ஒரேயொரு இஸ்லாமியரையும் விரட்டிவிட்டுப் பார்ப்பான ஆச்சாரம் அனுஷ்டிக்கின்ற கண்ணனுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது. பசுவைப் புனித விலங்கு என அறிவிக்க சங்பரிவார் கோருகிற காலத்தில் அந்தக் கும்பலின் குரங்கொன்று ஒதுகிறது, “இஸ்லாமியர்கள் சாணியால் வீட்டை மெழுக வேண்டும், அதுதான் தமிழ்ப் பண்பாடு.” மாயக் கண்ணனின் பார்ப்பன இந்துச் சாயம் வெளுத்தது இப்போது புரிகிறதா? இஸ்லாமியரை இந்து மயமாக்கும் அப்பட்டமான முயற்சி தானே இது. புறநிலையில் எதிரியாக்கப்பட்ட இஸ்லாமியனுக்கு மாட்டுப் பீ. அகநிலையில் அடிமையாக்கப்பட்ட தலித்துகளுக்கு மனிதப் பீ.

தமிழ்ச் சுழலில் இந்து மதச் சடங்கு வடிவங்களான சமாதி வணக்கத்தையும், சடங்குகளையும் முஸ்லிம்களிடமிருந்து அகற்றப் பாடுபட்டு வருவது த.மு.மு.க.போன்ற இயக்கங்கள்தான். அவற்றை மனதில் வைத்துதான் வஹாபி இயக்கம் எனக் கரித்துக் கொட்டுகிறார் காசு கண்ணன். பார்ப்பானுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்கென்றே இருக்கின்ற இந்து மதத்திடமிருந்து இஸ்லாத்தைக் காக்க பெரியாரே இது போன்று பேசியும் எழுதியும் உள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது. 90-களில் தலித் இலக்கியத்தை ஒதுக்கியதற்காக ‘இந்தியா டுடே’ இதழுக்கெதிராக ‘நிறப்பிரிகை’த் தோழர்கள் எடுத்த எதிர்க் கலாச்சார ‘பீ துடைக்கும்’ நடவடிக்கையைப் போன்று, இன்று காலச்சுவடு மதசார்பின்மை சிறப்பிதழை இஸ்லாமியர்களும், மதச்சார்பின்மை பேசுவோரும், இந்துத்துவ எதிர்ப்பு சக்திகளும் ‘பீ’ துடைத்து அனுப்ப அனைத்து தகுதிகளும் உண்டு.

“முந்தைய தலைமுறை இஸ்லாமியரிடையே காணப்பட்ட திராவிட, காங்கிரஸ், கம்யூனிச இயக்கச் சார்புகள் புதிய தலைமுறையினரிடையே பெருமளவு இல்லை. இஸ்லாமிய இயக்கங்களே இவர்களின் ஆதரவைப் பெறுகின்றன .இந்தப் போக்கு அதிகார மையங்களில் அச்சமூகத்திற்கு இருக்க வேண்டிய பரவலான தாக்கத்தை பலவீனப்படுத்தக்கூடியது” என முதலைக் கண்ணீர் வடிக்கும் கண்ணன் தனது கட்டுரை முழுக்க குற்றப்பத்திரிக்கை வாசித்ததையும், தீவிரவாதிகள் எனத் தீர்ப்பு எழுதியதையும் என்னவென்று சொல்வது? 50 ஆண்டுகளில் பல கட்சிகளில் இருந்துள்ள இஸ்லாமியரையும், தலித்துகளையும் எல்லாக் கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் சமூக நலன்களைப் புறக்கணித்து வந்ததில் உருவானதுதான் இஸ்லாமிய, தலித் இயக்கங்கள். இஸ்லாமியருடன் நோன்புக் கஞ்சி குடித்துத் தொப்பி மாட்டிக் கொண்டு போஸ் கொடுப்பதற்கு மட்டுமே ஒவ்வொரு கட்சியும் இஸ்லாமியச் சகோதரர்களைப் பயன்படுத்தி வந்தது.

பாபர் மசுதியை இடிக்கும்வரை அவர்கள், தேசிய அளவில் காங்கிரசை நம்பியிருந்தும் மாநிலத்தில் திராவிடக் கட்சிகளை நம்பியிருந்தும் மோசம் போனதுதான் மிச்சம். இஸ்லாமியருக்குப் பாதுகாப்பாய் கண்ணன் சொல்கிற கட்சிகள் இருந்திருந்தால் குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுச் சொந்த தேசத்தில் அகதி வாழ்க்கை வாழ நேர்ந்திருக்குமா? வாஜ்பாயிடம் கலைஞர், ஜெ.யிடம் வீரமணி, இந்துத்துவத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களாயினும் கம்யூனிஸ்ட் தோழர்கள் தமது வழக்கமான இறுக்கத்துடன் மதசார்பின்மை பேச, நிற்கதியாய் நின்ற இஸ்லாமியர் தனியே அணி திரள நேர்ந்தது துயரம் மிக்கது. “நாடு முழுவதும் உள்ள மசூதிகளை உடைப்பேன்” என்கிற தொகாடியாவை, இஸ்லாமியர் இந்த தேசத்தை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் R.S.S. சுதர்சனனைக் கறாராகக் கேள்வி கேட்க, இஸ்லாமியரைக் கட்டித் தழுவ யார் உளர்?

‘ இசுலாமியரின் குறைபாடுகளை இஸ்லாமியர்களோ, பிற அறீவுஜீவிகளோ விவாதிப்பதில்லை. இன்குலாப் ஒரு விதிவிலக்கு’ என்கிறார். இதுதான் பார்ப்பனக் குசும்பு. இஸ்லாமியருக்குள் ஜனநாயகம் இன்குலாப் பேசுகிறார் என்றால் அவரிடமிருந்து கண்ணன் மாதிரியான பார்ப்பனர்கள் தன் கேவலமான இந்து சமூகத்தை விமர்சிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தவிரவும் இன்குலாப்பிற்கு மார்சியம், பெரியாரியம், தலித்தியம் போன்ற பொது சமூகத்தை உருவாக்கப் போராடுகின்ற அனுபவ விழுமியங்கள் உண்டு. ஆனால் ஷாஜகானின் ‘கறுப்பு’ தொகுப்பில் உள்ள கட்டுரையை V.H.P. யின் துண்டறிக்கையோடு முடிச்சுப் போடுகிற சனாதன மண்டை மட்டுமே கண்ணனிடம் உண்டு.

“கட்டுண்டு கிடந்த நமது சுன்னிகளை நாம் இன்று அவிழ்த்துவிட்டோம். பீபிகளின் இறுக்கமான யோனிகளை நாம் அகட்டிவிட்டோம்” (குஜராத் 2002- அர்த்தங்களும் உள் அர்த்தங்களும் - அ. மார்க்ஸ்) என்று ஆண் குறியின் வன்முறையை பாசிசப் பெருமிதத்தோடு கொண்டாடுகிற V.H.P.- யின் துண்டறிக்கையைத் தற்காப்பு அரசியல் பேசும் ஷாஜகான் கட்டுரையோடு ஒப்பிடுவது இந்துத்துவ மூர்க்கம் கொண்டது. செப்டம்பர் 11 -ல் இடிக்கப்பட்ட நியூயார்க் கோபுரத்தை “அமெரிக்காவின் அழகிய ஆண் குறிகள்” என அய்ஸ்கிரிம் சாப்பிடுவது மாதிரி காலச்சுவட்டில் சிலாகித்து எழுதியவர் பார்ப்பனக் கண்ணன். இது போன்றக் கட்டுரை R.S.S.-சின் ‘விஜயபாரத’த்தில் மறுபிரசுரம் செய்யப்படலாம். அவரது உள் மனம் விரும்புகிறவாறு V.H.P.- யின் துண்டறிக்கையாகவும் மாறலாம். V.H.P.யின் குறிகளும் கண்ணன் சிலாகிக்கும் அமெரிக்கக் குறிகளும் இஸ்லாமிய எதிர்ப்பு என்பதில் ஒன்றிணையும் தன்மையுடையது. ‘மக்களை இராணுவமயமாக்கு இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்கிறான் கண்ணன்களுக்கு குருவான தலைமை சைக்கோ. அவனது வார்த்தைகளைச் சிறுபத்திரிகைத் தளத்தில் இன்று “காலச்சுவடு மதச்சார்பின்மை சிறப்பிதழ்” என்ற பெயரில் செயலாக்க முனைந்திருக்கிறது.

வருடம் முழுக்க இந்துத்துவப் பிரச்சாரம் செய்துவிட்டு திடீரென வாசகர் நெருக்கடிகளால் அது இஸ்லாமிய ஆதரவு முகமூடியையும் தற்காலிகமாக அணியலாம். தன் கட்டுரையில் வஹாபி இயக்கமென மோசமாகக் குறிப்பிடும் இயக்கத் தோழர்களிடமிருந்து கட்டுரை கூட வாங்கி வெளியிடலாம். இதனாலெல்லாம் அதனுடைய பார்ப்பன அயோக்கியத் தனத்தை மறைத்துவிட முடியாது. மதச்சார்பின்மை பேசுபவர்களும், இஸ்லாமியர்களும் இவர்களை நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் ‘குஜராத் படுகொலை’ சம்பவத்திற்காகக் காசு பாசாங்கு செய்து நிதி திரட்டிய கூட்டம் அட்டர் பிளாப். தீஸ்தா செதல்வாடும் கூட இவர்களின் கூட்டத்தைப் புறக்கணித்தார்.

“பாராளுமன்றம், சட்டப் பேரவைகளில் இந்துப் பெரும்பான்மையே இருக்கக்கூடாது. அது எதிர்காலத்தைப் பாசிசத்திற்கு இட்டுச் செல்லும் அபாயமுடையது” என அரசியல் நிர்ணய சபையில் வாதிட்டுத் தோற்றவர் அம்பேத்கர். ஆனால் இன்று அதைவிட வெறித்தனமாகப் பத்திரிக்கைத் தளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற பாசிச அலை உருப்பெற்று வளர்ந்து வருகிறது. அதைச் சிறு பத்திரிக்கைத் தளங்களில் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாகச் செய்வது கவலை கொள்ளத்தக்கது. நடுவில் ‘தாய்மண்’ணிலும் ‘காலச்சுவட்டி’லும் ஒரே நேரத்தில் ரவிக்குமார் போன்றவர்கள் சனாதனக் கண்ணனுக்கு ஜால்ரா அடிப்பதைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. மத நீக்கம் குறித்துப் பேசியவர் பெரியார். ’செக்குலரிசம்’ என்ற ஆங்கிச் சொல்லிற்கு மத நீக்கம் என்ற உண்மையான பொருள் கொண்டறிந்து சமூகத் தளத்தில் அனைத்துத் துறைகளிலும் மத நீக்கம் கோரியவர் பெரியார். ஆனால் பெரியார் எதிர்ப்பு என்கிற, பார்ப்பனரை அண்டிப் பிழைக்கும் அவல அரசியல் ரவிக்குமாரை “தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை அக்கறை தொண்ணூறுகளில் அதிகரித்தது” என்று உளருகிற வரைக்கும் கொண்டு சென்றுள்ளது.

“மதச்சார்பின்மை அதன் அரசியல் பயன்களை அறுவடை செய்பவர்கள் எவரோ சிலர்” என இந்துத்துவ எதிர்ப்பு அரசியலாளர்களை கிண்டலடிக்கிறார். அவரது கட்டுரை முழுக்க, ‘தர்மா குமார் அதை மறுக்கிறார், சஞ்சய் சுப்ரமணியம் இதை மறுக்கிறார்’ என மார்க்சிய அறிஞர்கள் கூற்றையெல்லாம் மறு,மறுவென மறுத்திருக்கிறார். N.C.E.R.T-யில் நிரப்பப்பட்ட இந்துத்துவப் பேர்வழிகளும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களான ரெமீலா தாபரை மறுக்கிறார்கள், பணிக்கரையும் மறுக்கிறார்கள். எல்லாம் நாணயத்தின் மறுபக்கம்தான் போங்கள். இதில் உச்சபட்சம் என்னவெனில் ‘மதமற்றம்’ குறித்த அறிஞர்கள் கூற்றை தானும், தர்மா குமாருமாய் மறுத்தும் ஆமோதித்தும் வரும் ரவிக்குமாருக்கு அந்த விஷயத்தில் அம்பேத்கரின் கருத்துக்கள் தேவையில்லை போலும். அல்லது அவர் கரைத்துக் குடித்த அம்பேத்கர் ‘மதமற்றம்’ விஷயத்தில் மட்டும் செரிக்கவில்லை போலும்.

நமக்குள்ள கவலை எல்லாம் பார்ப்பனர்கள் நேரடி எதிரிகள் என முடிவு செய்துகொள்ளக் கண்ணன் போன்றோர் உதாரண புருஷர்கள் தான் எனத் தெளிவாகிவிடுகிறது. ஆனால் தலித் அரசியலைப் பேசிக்கொண்டு கண்ணனுக்கு முகமூடியாக, அவருக்கு அணுக்கமாக ‘மதசார்பினமை’யை விவாதிப்பது தலித் அரசியலுக்கு ஆபத்தானது என்பதை அவரை அடையாளப்படுத்திக் கொள்கிற அரசியல் தோழர்கள் உணர்வது நல்லது. மறைந்த தத்துவக் கவிஞர் குடியரசு மா.பொ.சி.யை “திராவிடத்தில் இரை தேடிவிட்டு தேசியத்தில் முட்டை இடும் மோசடிக் கோழி” என்பார். மார்க்சிய - லெனினியக் குழுக்களில் புரட்சிகர புருடா விட்டு அம்பேத்கர் - பெரியார் அரசியல் விவாதங்களை நிகழ்த்திய ‘நிறப்பிரிகை’யில் பெயர் சம்பாதித்துவிட்டு பார்ப்பன - காலச்சுவட்டில் முட்டையிடுகின்ற “சிந்தனையாளர்” ரவிக்குமாருக்கும் இது பொருந்தும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com