Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
ஈழத்தமிழர்களும் இலக்கியப் புடுங்கிகளும்
மணி.செந்தில்


புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல்லாய், கோபத்தின் வெளிப்பாடாக தொனிக்கும் சொல்லாய் இருக்கிறது. அந்த சொல் அலட்சியத்தினையும், கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்க உதவும் ஒரு சொல்லாய்.. சமூகத்தின் சக்கரவர்த்திகளாக தன்னைத் தானே கிரீடம் சூட்டிக் கொள்பவர்களை அடையாளப்படுத்தும் குறியீடாய் இருக்கிறது. கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும்போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு, அரங்க கூட்ட அரசியல் செய்து கொண்டு, இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு, எந்த அவலத்தின் மீதும் துயரத்தின் மீதும் கரிசனப் பார்வை கூட செலுத்தாமல் சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபமும், அசல் தன்மையும் தான் என்னளவில் இப்போதைக்கு சரியாகப் பட்டது.

Prabakaran and Anton ஈழம் நமக்குள் ரணமாய், வலியாய், துயரயாய் இருக்கும் இந்த சூழலில் ‘இனி என்ன செய்வது’ என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது, வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் எகத்தாளம் செய்ய இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.

ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம், வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து, நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ, துயரைப் பற்றியோ, வாய் திறக்காத இந்த இலக்கியப் புடுங்கிகள் யுத்தம் மக்களின் அழிவாய், ஒரு இனத்தின் வலியாய், ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது, வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுதத் துவங்குவதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ, உரிமைகளுக்காகவோ, நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்படவில்லை. மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய், உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளர்கள் போராடும் போது, அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும், தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுதத் துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம் இலக்கியத்திற்காகவே, தமக்காகவே, பிழைப்பிற்காகவே, சோத்திற்காகவே, சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு, ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை, தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள், புத்தக விழாக்களுக்காகவும், நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர். பின் நவீனத்துவ, முன் நவீனத்துவ, பக்க நவீனத்துவ, துக்க நவீனத்துவ என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய், நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது, மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில், அடித்த போதையில், அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர், தவித்த வாய்களுக்கு தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள், தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் ‘ஏன்,எதற்கு,எப்படி’ என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா...ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது. மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு, எங்கேயாவது மாமிசம் விழுமா, பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள் மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும், வழுக்கவும், இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள், இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை, கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கிப் பிழிவார்கள். அலாவுதீனின் அற்புத பூதம் போல, இது வரை எங்கிருந்தார்களோ,தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக்காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல், அவர்களின் துயர் துடைக்க, தோள் கொடுக்காமல், சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி, பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள்.

இனம் அழியும்போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி, குழு சண்டை, குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை... அமெரிக்க பொருளாதார சிக்கல், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எதிர்வரும் உணவுப் பஞ்சம் என்றெல்லாம் உலக வரைபட நாடுகளின் சிக்கல்களுக்கு கொள்கை வடிவ சித்தாந்த நடைமுறைகள் வரையறுத்து கருத்தரங்குகள் நடத்தி வரும் இவர்களுக்கு, பக்கத்து நாட்டில் கேட்பாரும், மீட்பாரும் இல்லாமல் இனம் அழிகிறதே என்ற இனப்பற்றின் விளைவாய், ஏதாவது செய்யத் தோன்றியதா என்றால் இல்லை. இவர்களுக்கு முதலில் இதில் வாய் திறக்கலாமா, வாய் திறந்தால் மூடிய வாய்க்குள் இருக்கு கட்சியின் ஈ வெளியே பறந்து விடுமே... கட்சி கட்டுப்பாடு நாற்றம் அடித்து தொலைத்து விடுமே என்ற பயம். இனத்தை விட, சக மனிதனின் அழிவை விட கட்சி வந்து கிழிப்பதுதான் இவர்களுக்கு முக்கியம்.

இன்னும் சிலருக்கு இனம், மொழி என்ற ஒன்று இருந்தால்தானே, நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும்...

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது உளறிக் கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம். அது தான் இட்லி ஆறிய பிறகென்ன, ஊசிப் போன பிறகு என்ன, எதையும் இவர்கள் சாப்பிட துணிவது.. பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பிறகு யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில், தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில், நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுதத் துவங்கி உள்ளார்கள், இனிமேலும் எழுதுவார்கள்.

வெகு ஜனப் பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்னவென்றால், ஊர் முழுக்க தந்தி அனுப்பவும், மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது, ஏதாவது சொல்லும் போது அன்றே சொன்னேனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது. இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக்க இவர் ஆசைப்படுகிறார். உணர்வும், உண்மையும், கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும். பிரபாகரன் இருக்கிறாரோ, இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.

சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே, உங்களுக்காகவது எம் தலைவர் வருவார், வந்தே தீருவார்.

அடுத்ததாக ஜெயமோகன் என்ற இன்னொருவர். இவரின் வேலையே காவி கட்சியின் ஏஜெண்டாக பணிபுரிவதுதான். அவ்வப்போது கெட்டி, கெட்டியாக புத்தகம் போடுவார். இணையத் தளத்தில் வேதாந்த வியாக்ன விசாரணைகளையும், கீதா சுலோக ஆராய்ச்சிக்களையும் சலிக்காமல் செய்து வரும் இலக்கிய கடலின் மலையாள மாந்தீரீக ஆசாமி. இவருக்கு என்ன வெறுப்போ, ஏது வெறுப்போ தெரியவில்லை. வெறுப்புடன் உரையாடி தனக்கான ஈழப் பங்கை செவ்வனே செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு இப்போது இவர்தான் ஏஜண்ட் என்பது போல யாரோ ஒருவர் கேட்டதாக பக்கம் பக்கமாக வழக்கம் போல எழுதித்தள்ளியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை மனக் கிளர்ச்சி என ஒற்றை பதத்திற்கு அலட்சியப் படுத்த துணியும் இவருக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய சுபாஷ் சந்திர போஷ், பகத்சிங், சேகுவேரா போன்றோரும் மனக் கிளர்ச்சியினால் மட்டுமே ஆயுதம் தூக்கியவர்கள் ஆகிறார்கள். தென் ஆப்பிரிக்க நெல்சன் மண்டேலாவினையும், காந்தி அடிகளையும் ஒப்பிட்டு ஈழப் போராட்டத்தின் தோல்விகளை குறிப்பிடுகிறார். இதில் ஈழத்தில் மட்டுமா போராட்டம், அழிவு இதெல்லாம், உலகில் பல நாடுகளிலும் தான் மக்கள் அழிந்துக் கொண்டிருக்கிறார்கள் என சாவு சமாதானம் பாடுகிறார். மக்களின் சுயநிர்ணய வாழ்விற்கான போராட்டத்தினை அடித்துக் கொண்டு சாகும் சண்டையாக உருவகப்படுத்துகிறார் இந்த உள்ளொளியாளர். இவரும் ஈழ அவலத்தின் காரணங்களையும், போராளிக் குழுக்களின் அரசியலையும் மக்கள் அலை அலையாய் அழியும்போது போட்டிருந்த மெளன வேடத்தை கலைத்து விட்டு, திருட்டுப் போன வீட்டில் யாராவது இருக்கிறார்களா என எட்டி பார்த்து விட்டு இந்த இலக்கிய நாட்டாண்மை தீர்ப்பு சொல்ல வந்திருக்கிறது.

மூன்றாம் நபர் சாருநிவேதிதா ஞாயிற்றுக்கிழமை வாரமலர் கிசுகிசு ஆசாமி. எதை எதையோ எழுதி விட்டு பின் நவீனத்துவப் படைப்பு என்று இவராகவே சொல்லிக் கொள்பவர். இன்றளவும் எதன் பொருட்டும் கூச்சமில்லாமல் பெண்களை சதையுமாகவும், காமமாகவும் மட்டுமே பார்த்து விட்டு, சிறந்த ஒயின்ஸ் பார்களை அறிமுகப்படுத்தும் அறிவாளி. இவரும் தன் பங்குக்கு வன்முறையின் தோல்வியாக ஈழத்துப் போரை முடித்து வைத்து அக்மார்க் ராஜபக்சே முத்திரை வாங்கி உள்ளார். இவரும் காந்தி அடிகளை தன் துணைக்கு அழைத்து உள்ளார். இது போன்ற காலரா கிருமிகளுக்கு திடீரென்று காந்திப்பாசம் ஏன் பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பதனை நாம் தனியே ஆராய வேண்டும், சுதந்திரத்திற்காக நாடு நாடாக பறந்து ராணுவம் கட்டி போர்புரிய வந்த சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்த ஒயின் ஷாப் உல்லாசி பாஸிஸ்ட்டுகளின் பங்காளி என பாட்டு பாடி இருக்கிறார். கியூபா நாட்டினரை சுதந்திரமாக விட்டால் மக்கள் நாட்டினை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றும், நேதாஜியும் பகத்சிங்கும் ஒட்டுமொத்த மனித குல பிரதிநிதிகள் இல்லை என்றும் அன்று அடித்த போதை அகலாமல் அள்ளிக் கொட்டி இருக்கிறார் சாரு.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மனித குல பிரதிநிதிகள் இல்லை என்றால், பிராந்தி, பீர் அடிப்பவர்கள் தான் மானுட நேசம் போற்ற வந்த மகா தலைவர்கள் என்று சாரு தன்னளவில் முடிவு செய்திருக்கிறார். புலித் தலைவர் எதார்த்தத்தை புரிந்துக் கொள்ளவில்லை என இப்போது சொல்கிறார் சாரு. 6 மாதங்களுக்கு முன்னால் இந்த கருத்தை ஏன் சொல்ல வில்லை அய்யா? இலங்கை பேச அழைத்தும் போகவில்லையாம் புலிகள் என ‘அம்ச’மான கருத்தை உதிர்த்துள்ள இவர் போல இன்னும் பலர் இருக்கிறார்கள், எழுதவும் செய்வார்கள்.

ஒரு இனத்தின் அழிவினை வன்முறையின் தோல்வியாகவும், வெறுப்பின் உரையாடலாகவும் பார்க்கின்ற இவர்கள், மலையாளப் பாசம் உடைய மேன்மக்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக அழியும் போது எங்கே சென்றிருந்தார்கள்? எம் இனம் அழியும்போது பிரியாத இவர்களின் உதடுகள், இனம் அழிந்து விட்டது, தலைவர் மறைந்து விட்டார், இனி கேட்பதற்கு நாதியில்லை என உறுதி செய்து கொண்டு உற்சாகமாய் எழுத்து விசில் அடிக்க துவங்கிறதே, இது ஈழத்திலும், கொழும்பிலும் தமிழ் மக்களை சூறையாடும் சிங்கள காடையர்களை விட கேவலமானவை இல்லையா?

தீர்ப்பு சொல்லவும், விமர்சிக்கமாகவும் இருக்கும் இவர்கள் யார் என்ற கேள்வி இப்போது மிக முக்கியமானது. இழவு வீட்டில் அழுவது போல அழுது எதைப் பறிக்க வந்துள்ளீர்கள்?

இவர்களின் சமகாலத்து எழுத்தாளுமைகள் அறிவுமதியும், இன்குலாப்பும் தமிழக அரசின் பதவி, பட்டங்களை துறந்தார்கள். பா.செயப்பிரகாசம், லீனா மணிமேகலை போன்றவர்கள் தலைநகர் வரை சென்றும், ஒப்பாரி கவியரங்கம் நடத்தியும் தன் உள்ளுணர்வினை வெளிப்படுத்தினர். இன்னும் நான் பெயர் குறிக்கத் தவறிய எழுத்தாளர்கள் ஆங்காங்கே தன் உணர்வினை வெளிப்படுத்தினார்கள். ஆனால் உச்சாணிக் கொம்பில் அமர்ந்துக் கொண்டு இலக்கிய அரசாங்கம் நடத்துகிற இவர்களைப் போன்றவர்கள் ஒன்றுமே செய்யாமல், இப்போது கட்டுரை எழுதி, கதை சொல்ல வந்திருக்கிறார்கள். கசையடியாய் வலிக்கிறது.

சகமனிதன் மீது காட்டும் அக்கறைதான் உலக அளவில் இலக்கியமாகவும், புனைவாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம். எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று, அவதியுற்று நிர்க்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும். என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா, வால்டர் ரூசோ, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்(வீரம் விளைந்தது), ஜான் ரீடு, பாரதி, பாரதிதாசன், காசி ஆனந்தன், என பட்டியல் நீள்கிறது. ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல், அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே! சமூகம் என்ற ஒன்றும், உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு, வெங்காயம் இதெல்லாம்.

எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி, எழுதினானே பாரதி, அவனும் படைப்பாளிதானே, குடிப்பதையும் பற்றியும், இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்கள் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்? தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இனஅழிவின் போது சிறு சலனத்தைக் கூட காட்டாத இவர்கள், இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா... இலக்கிய இசங்களை கரைத்து குடித்து, வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து... இதிகாச, வரலாற்று, மீள் புனைவில் மீண்டெழுந்து, குடிப்பதையும், குடிச்சாலைகளையும்... ஊற்றெடுக்கும் காமத்தினையும்... வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே... ஈழத்தினையும், மக்களையும் விட்டு விடுங்கள்... அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள். காரண காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே, வைத்துக்கொண்டு... ஏற்கனவே பணத்திற்காகவும், சாராயத்திற்காகவும்... தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளைத் தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும், பட்டங்களை பறிக்கவும் எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும், இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்... உங்களுக்குப் பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன. மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன. இது போதாதா, ஏகாந்த எழுத்து எழுதவும்.... கூட்டம் நடத்தவும், கும்மி அடிக்கவும்...?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆனால் எதற்கும் உண்டு விடியல். விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது நீங்களும்,உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் . இலக்கியப் புடுங்கிகளே,சீக்கிரம் கடந்து போங்கள். இல்லையேல் கடத்தப்படுவீர்கள்.

- மணி.செந்தில், கும்பகோணம் (advmsk1@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-05-31 07:24:00
porkkaiponds@yahoo.co.in

தமிழனின் நீண்ட நெடிய வரலாற்றில், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுவரை ஏற்பட்டிருக்க முடியாது. இந்த உலகமே உளச்சான்றில்லாத ஒன்றாக மாறியுள்ளது. போரின் கடைசி ஐந்து தினங்களில் மட்டும் குறைந்த மதிப்பீடாக 30,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது இந்தியாவுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் ஐ. நா. வின் இலங்கையின் மீதான போற்குற்றம் சார்ந்த சிறப்புக்கூட்டத்தில், இந்தியா இப்படி ஒரு கூட்டமே தேவையற்றது என்று வாதாடுகிறது.

மிருகங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன், மிருக குணங்களைக் களைய மறுக்கிறான் என்பதே நாம் உணரும் செய்தி.

மணி. செந்தில் அவர்கள் குறிப்பிடும் எழுத்தாள வர்க்கம் மட்டுமல்ல, தமிழர்களில் வசதி படைத்த பலரின் நிலைப்படாடும் வேதனைக்குறியது.

தனக்கொன்று வராதவரை இவர்கள் எதைப்பற்றியும் கவலை கொல்வதில்லை. அப்படி வரும் காலங்களிலும் இவர்கள் கருணாவைப்போல் மாறி தங்களின் நலன்களைக் காத்துக் கொள்வார்கள் என்பது தான் உண்மை.

நம்மினத்தைப்பற்றிய திறனாய்வு இன்று மிக, மிகத் தேவையானது. முறையான திறனாய்வும், மீட்சிக்கான வழியும் கண்டறியப்படவேண்டும்.

பாமரத் தமிழர்களின் தற்காப்பு என்பது அவர்களின் முறையான கல்வி தான். அதில் நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.



Sarvachitthan
2009-05-31 08:27:00
sarvachitthan@gmail.com

Very good Article written at the 'Right' time!But, is it necessary to mention them as "PUDUNGGIS" rather than calling them with another polite word?
Anyway, the contents of the Article is cent percent true and should be welcome by "TRUE TAMILS".

jegan
2009-05-31 11:40:00
jegan556@gmail.com

nandraha irundhadhu

Dr. V. Pandian
2009-06-01 01:39:00
porkkaiponds@yahoo.co.in

2002 க்குப் பிறகு விடுதலை அடைந்த தேசங்கள்.

தேசம் மக்கள் தொகை தேசத்தின் பரப்பளவு

இழக்கு திமோர் 9,00,000 14,000 சதுர கி. மீ

மாண்ட்டநீக்ரோ 6,00,000 13,000 சதுர கி. மீ

கொசவோ 22,00,000 10,000 சதுர கி. மீ

--------------- ஈழம் செய்த பாவம் என்ன?

ஈழம் 40,00, 000 17,000 சதுர கி. மீ

சிங்கள வந்தேறி ஓனாய்களால் வேட்டையாடப்பட்டும், 60 வருட காலமாக போராடியும், 30 வருடகாலமாக ஆயுதவழி போராடியும், இவர்களுக்கு மட்டும் நீதி கிடைக்காததற்கு காரணமென்ன?

குறுக்கே நிற்பது யார்?


mayooran
2009-06-01 03:11:00
mayooran1981@gmail.com

saaddai adi

Prabhu R.
2009-06-01 08:36:00
prabhu.rlic@gmail.com

Nichayam yennai ponra ina unarvulla thamizhargaluku yngal thanga thalaivanai patriya poiana seithigalai ketu azhuthu pulambiyavargalin manathirku aaruthalaga irunthathu.

Dr. V. Pandian avargaluku thangalin pala vimarsanangalai keetruvil parthu irukiren, Thangalin thodarbu vendum yevvaru thangaludan thodarbu kolvathu yenbathai thangaluku virupam irukkum patchathil yennudaya minnanjal mugavariyil thriviyungal.

அரங்க. கந்தசாமி
2009-06-01 09:10:00
kanthanaar@hotmail.com

உங்கள் கட்டுரையைப் படித்ததும் ஒன்று தோன்றியது..
பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரண்டு phase களை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது..
முதல் phaseல் (1875-1975) பெரும்பாலும் யோக்கியர்கள் நிறைந்து காணப் படுகிறார்கள்..
மார்க்ஸ் லெனின் முதல் மாவோ, ஓ-சிமின் போன்ற பொது உடமைவாதிகள்
லிங்கன், இங்கர்சால், பெர்னாட் சா, ரஸ்ஸல், சார்லி சாப்ளின், போன்ற சிந்தனை வாதிகள், இந்தியாவில் காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கார், போஸ் போன்றவர்கள்.. இவர்கள் உருவாகக் காரணம் பொது உடமை எழுச்சிதான்.. மனிதன் என்பவன் சமூகத்தால் உருவாக்கப் படுவதும். பாரதி போன்ற எழுத்தாளர்களுக்கும் ஒரு வகையில் இந்தச் சமூக மாற்றம்தான் பெருமையைத் தேடித்தந்தது..
ஆனால் இந்த phaseல் பாருங்கள் அதாவது 1975 முதல் உள்ள காலகட்டம்..
ரொம்ப நல்லவங்க (?) வாழும் காலகட்டம்..
அமெரிக்காவில் புஸ் புஸ் என்று மூச்சுவிட வைக்கும் ஒரு “மொ.......“
ரசியாவில் ஒரு ”மு.........................”
இந்தியாவில் ”,......................................”
இலங்கையில் ஒரு ”-------------------------------------------”
பின் நவீனத்து வாதிகள் எனறு
திரும்பிய பக்கம் எல்லாம் எத்தனை நல்லவர்கள மயம்தான் போங்கள்....
அதனால்தான் இந்தக் காலகட்டத்தில்தான் பொது உடமை மண்ணைக் கவ்வியதோ என்னவோ....?
என்னைப் போன்ற மக்களுக்கு வேறு பாதையில்லை... அடுத்த phaseக்கு காத்திருப்பதைத் தவிர..

g.hariharan
2009-06-01 10:00:00
harigeein@yahoo.co.in

except few these so called intelectuals didnot do any protests against singhala regimenn neither through their writing nor through their physical activities.it directly reflects many of our thoughts.good article from mani

MakizhNan
2009-06-01 06:59:00
Pandi@wisc.edu

ஆழ் மனதின் வெளிப்பாடு.... நெத்தி அடி.... ஞானி மற்றும் சாரு போன்ற இலக்கிய புடுங்கிகளை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்... முற்போக்கு முகமூடி இட்டு கொண்ட பசுத்தோல் போர்த்திய பார்ப்பார்கள்..... தனது இலக்கிய கொள்கைகளை பணத்துக்காக மாற்றி தான் வெறுத்த குமுதம் இதழுக்கு புடுங்கி தனமாக எழுதும் அறிவாளி.... இவர் காந்தியும் பெரியாரைரும் இணைத்து இந்திய ஒற்றுமையும் எழுதி தள்ளியவர்...
சாரு சவுக்கடி எழுத்தாளர் தனக்கு தானே பட்டம் கொண்டு தினமலரில் எழுதும் ஒரு இலக்கிய புடுங்கி......
என் மக்களை என் போன்ற உணர்வாளர்களின் கண் முன்னே கொன்ற இந்த நாட்ட்ரிக்கு ஒரு பாடத்தை கற்று கொடுக்கமால் நாங்கள் அயர மாட்டோம்.... இன்று இல்லையினில் எங்களுக்கு என காலம் வரும்.....

MakizhNan
2009-06-01 07:07:00
Pandi@wisc.edu

சிங்களனே!

அறிவியலில் வரலாறு படைத்த மேற்குலகில்
அனைவரும் ஆளலாம் யென சட்டம்‍‍‍‍- சிங்களனே
புத்தம்யென புற்று நோயாய் புளுகி‍ தமிழனை
யுத்தம்கொண்டு எம்மக்களின் உயிர் கொல்கிறாய்!
அறுபதுக்கு மேல் நோபல் பொற்கிழியெய்
அள்ளிச்சென்ற யூதனிடம் தலைக்கனம்யில்லை- சிங்க‌ள‌னே
ம‌ட்டி முட்டாள் உன‌க்கு யேன்
ஆட்ட‌ம் ஆணவ‌ம் ஆதிக்க‌ம் க‌ர்வ‌ம்!
கூர்மை குத்துமா? த‌ன்னையே குத்தி கொள்ளும்
கூறு கெட்ட‌ சிங்க‌ள‌னே உன‌க்குயேன்
த‌ற்பெருமை த‌காத‌ யெண்ண‌ம்!
செம்மொழியும் இல‌க்கிய‌ பெருமை த‌மிழில்
செத்தொழிய‌ வேண்டிய‌ சாதித் திமிர் த‌மிழ‌ட‌ன‌த்தில்
தேவ‌னும் ப‌ள்ள‌னும் வ‌ன்னிய‌னும் ப‌றைய‌ரும்யென‌
தேடாம‌ல் கிடைக்கும் எதிரியும் பிரிவினையும் எம்மிட‌த்தில்
ப‌ண‌துக்கும் ப‌த‌விக்கும் ப‌ல்லிளித்து த‌மிழ‌னை
புற‌முதுகில் குத்தும் குழிதோண்டி புதைக்கும்
உள்ளருப்பு மிகுத்த‌ கூட்ட‌ம் எங்க‌ள‌ட‌த்தில்-‍ சிங்க‌ள‌னே
உன‌து வெற்றி உன்னால் அல்ல‌ எங்க‌ளுக்கு
எங்க‌ளால் வைத்து கொண்ட‌ வேட்டு!

Dr. V. Pandian
2009-06-02 12:06:00
porkkaiponds@yahoo.co.in

I praise Mr. MahizNan for his poetry!

The Tamil community should unite, accross the world, as one entity.

Let them keep their casts, but let them not bring it in politics of every thing.

ஒட்டக்கூத்தர்
2009-06-02 01:12:00
riyaz194701@gmail.com

வணக்கம் மணி செந்த்தில் இலக்கிய புடுங்கிகளை பற்றி புடுங்கி அல்லது எழுதி இருக்கீங்க.. சரி தான் அது என்ன ஜெயமோகனையும் சாருவையும் பற்றி புடுங்கிட்டு எஸ்.ராமகிருஷ்னனை பற்றி புடுங்கவே இல்லை. உலக இலக்கியத்தைபற்றியும் சினிமாவைபற்றியும் அதிகமாக புடுங்கி கொண்டு இருக்கும் எஸ்.ரா போன்றவர்கள் ஆயிரம் பக்க நாவலை 3 நாளில் படித்து 100 பக்க விமர்சனம் எழுதி தங்கள் அரிப்பை தீர்க்க முடிந்த எஸ்.ரா ஈழத்தைபற்றி கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?

திரையுலகில் வசனம் எழுதுப்பிழைக்கும் எஸ்.ரா. திரையுலகினரின் ஈழப்போராட்டத்தில் கவிஞர் தாமரை அளவு பேசாவிட்டாலும் குறைந்தபட்சம் கலந்து கொள்ளதது ஏன்? அதற்கு அவரின் இலக்கிய மேதாவிலாசம் தடையாக இருந்திருந்தால் இலக்கியவாதிகள் நடத்திய ஒப்பாரி கவிதைகள் போன்ற எத்தனையோ போராட்ட வடிவங்களில் கலந்து கொள்ளாதது ஏன்?

இதை எல்லாம் மணி செந்தில் தொடாதா அரசியல் என்ன? ஒரு வேளை எஸ்.ரா வின் ஊறுபசி நாவல் முதல் பக்கத்தில் தன்னுடைய பெயரைப்போட்ட விசுவாசத்திற்காய் வாலாட்டுகிறாரா? மணி செந்தில்

தன்னுடன் நெருக்கமாய் இருக்கும் எஸ்.ரா வையும் சோ.பா சக்தியுடன் மட்டுமல்ல தன்னுடனும் சரக்கடுக்கும் அ.மார்க்ஸ் வகையறாக்கள் பற்றியும் புடுங்காத் நீங்கள் என்ன விமர்சன புடுங்கியா மணி செந்தில்

விஷ்ணுபுரம் சரவணன்
2009-06-02 08:18:00
vishnupuramsaravanan@gmail.com

அய்யா ஒட்டக்கூத்தரே..

வழக்கமாக ஆர்குட்டில்தான் உங்கள் அதிரடி எனச்சொல்லிகொண்டு இறங்குவீர்கள் இங்கும் கோதாவில் இறங்கியிருப்பது ஆச்சரியந்தான். எதுவா இருந்தாலும் வாழ்த்துக்கள்.

முதலில் உங்களுக்கு ஒன்று சொல்லவிரும்புகிறேன். நண்பர் மணிசெந்தில் எழுதிருக்கும் கட்டுரை நீங்கள் அறிவுஜீவியாக நினைக்கும் நபர்கள் எழுதுவதுபோல நின்னு யோசிச்சு மொட்டை மாடியில் கூட்டம் போட்டு எழுதியதல்ல. உங்களுக்கே நன்றாக தெரியும் ஈழவிசயத்தில் மெளனமாக இருந்துவிட்டு இப்போது வாய்திறப்பவர்கள் குறித்த பதிவாகவே இது அமைந்துள்ளது என.
கடந்த ஒரு வாரமாக ஜெயமோகன், சாரு, தொடர்ந்து ஞாநி இம்மூவரும்தான் ஈழப்போராட்டத்தின் நிறத்தை மாற்றத்துடிப்பவர்கள். அவர்களை மையப்படுத்தியே எழுதியிருப்பதாக தோன்றுகிறது.
மேலும் ஈழவிசயத்தில் தொடர்மெளனத்தில் இருப்பவர்களை கூட மணிசெந்தில் பேசவில்லை ஈழப்போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை எழுதியிருப்பதாகவே எனக்கு படுகிறது.

எஸ்.ரா பற்றியும் சோப்புடப்பா மன்னிக்கவும் ஷோபா சக்தி பற்றியும் அமா பற்றியும் எழுதவேண்டும் என நீங்க கங்கனம் கட்டிகின்னு இருந்தா அதை ஏன் மணிசெந்தில் எழுதனும் என நினைக்கிறீங்க நீங்களே எழுதலாமே..

தட்டுங்க ..உங்க ஆசை போல யாரை வேண்டுமானாலும் ரவுண்டு கட்டுங்க..
மற்றபடி அ.மாவோடும் சோபாவோடும் ஜலக்கிரிடை நடத்த தனியாத தாகம் உங்களுக்கு இருக்கிறதுஎன் நினைக்கிறேன் அப்படி இருந்தால் அதை நேரடியாவே அவர்களிடம் சொல்லலாமே இடையில் மணிசெந்தில் எதற்கு?

வழக்க்மாக ஆர்குட்டில் மணிசெந்திலை பின் தொடரும் நீங்கள் இதில் மாறுபடும் அரசியலை எனக்கு மட்டுமாவது தொலைபேசியில் சொல்ல தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

நன்றி தல..

சரி.. சரி .. அடுத்தது யாரு?

Dr. V. Pandian
2009-06-02 06:48:00
porkkaiponds@yahoo.co.in

அரங்க. கந்தசாமி அவர்கள் நேரு, காந்தி போன்றவர்களை நல்லவர்களாக சித்தறிக்கிறார். இவர்களும் நல்லவர்கள் அல்லர், இந்தியாவும் என்றுமே நல்ல 'தேசமும்' கிடையாது.

பணியாக்களுக்கான தலைவர் தான் காந்தி. 1900த்துக்கு முன்பே தேசம் என்ற கருத்தாக்கம் ஐரோப்பாவில் தோன்றி, 30க்கும் மேற்பட்ட தேசங்கள் தோன்றி இருந்தன. ஆனால், பல தேசங்களை உள்ளடக்கிய இந்திய நிலத்திற்கு அது காந்தியால் மறுக்கப்பட்டது. தமிழனுக்கு என்று ஒரு தேசம் இருந்திருந்தால், நம்மின மக்கள் லச்சக்கணக்கில் கொல்லப்பட விட்டிருப்போமா? வெறும் 1.4 கோடி தொகை கொண்ட சிங்களன் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடுகிறான். 9 கோடி தமிழன் பேடிகளாய் வாழ்கின்றான். தமிழன் வாழ்வில் இனி பொருளுள்ளதா?

வெறும் 5 லட்சம் மக்களைக் கொண்ட, நேற்றய மக்களுக்கு தேசங்கள் உள்ளன. உலகின் மூத்தக்குடியான தமிழனின் சொல் அம்பலமேறாமல், அடிமைகளாய் வாழ்கிறான். ஞாயமா?

ஆங்கிலேயனின் கொடிய ரௌளட் லாவையே, தனது ஆட்சிக்காலத்திலேயே நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் செயல் படுத்திய செயல்வீரர் தான் நேரு.

தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்பியவர் தான் நேரு என்ற 'மா' மனிதர். இந்தியா உள்ளளவும், மற்ற தலைவர்களை நாம் மறந்தாலும், நேருவை நாம் மறக்க இயலாது அல்லவா? இது தான் பார்ப்பன மூளை என்பது.

Dr. V. Pandian
2009-06-02 11:23:00
porkkaiponds@yahoo.co.in

முள்வேலிக்குள் சிறையிடப்பட்டுள்ள தமிழ் மக்கள் கருப்பின மக்கள் என்பதால் தான் இந்த உலகம் இவ்வளவு பாராமுகமாய் இருக்கிறதோ?

வௌ்ளைத் தோலுடையவன் அழுதால் அது 'ஐயோ, பாவம்'.

கருத்த நிரத்தவன் அழுதால் அது அவனது 'விதி'!

R.Ramamoorthi
2009-06-03 05:42:00
ramrational@yahoo.co.in

Dear friend
Your work is a very need at this moment.
Thank you

அரங்க. கந்தசாமி
2009-06-03 09:39:00
kanthanaar@hotmail.com

///அரங்க. கந்தசாமி அவர்கள் நேரு, காந்தி போன்றவர்களை நல்லவர்களாக சித்தறிக்கிறார். இவர்களும் நல்லவர்கள் அல்லர், இந்தியாவும் என்றுமே நல்ல 'தேசமும்' கிடையாது. ///
நண்பர் பாண்டியன் அவர்களே
உங்களைப் போல் தீவிர அரசியல் பேச வரவில்லை.. அதற்கான தளமும் இது அல்ல என்றாலும், சமூகம் தான் மனிதனை உருவாக்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன்.. நிச்சயமாக லெனின் மாவோ வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில், பூர்ஸ்வாக்கள் பயந்த அந்தப் பொது உடமை பூதம் ஆட்டிப் படைத்த அந்த நேரத்தில், அதன் தாக்கம் இல்லாமல் எந்த மனிதர்கள் தலைவர்கள் இருக்க முடியாது.. காந்தியும் நேருவும் என்னதான் முதலாளிய வர்க்க சார்பானவராக இருந்தாலும், நிச்சயம் பொது உடமை தாக்கத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.. அவர்களுக்கு ஒரளவு மனிதமுகம் வந்ததிற்கு அதுதான் காரணம் என்று நம்புகிறேன்.. அவர்களுடன்தான் இன்றய அயோக்கிய அரசியல்வாதிகளை ஒப்பீட்டுத்தான் கூறியிருந்தேன்.. நன்றி

Dr. V. Pandian
2009-06-03 06:48:00
porkkaiponds@yahoo.co.in

வரலாறு தெரிந்த, தெரியாத மிக நீண்ட காலமாக, வாழையடி வாழையாக வாழ்ந்த நிலத்தின் மைந்தர்கள், கம்பி வேலிக்குள், பட்டினியாய், அடிமையாய், விலங்குகளின் வாழ்வாய், 60 ஆண்டுகளின் கொடுமையான உரிமைப்போரில், உளச்சான்றில்லாத உலகின் போக்கிரித்தனத்தால், வீழ்ச்சி மனப்பான்மையில், எதிர் காலம் புரியாமலும், நம்பிக்கை இல்லாமலும்.

2500 ஆண்டுகளளவில் இந்தியாவிலிருந்து வந்தேறிய நாய்களின் வம்சாவழி, இந்திய ***** ஆதரவோடு அட்டூழியம் செய்து, மன்னின் மைந்தர்களை அவர்களது சொந்த மன்னிலேயே விலங்குகள் போல அடைத்து வைத்துக்கொண்டு, கொண்டாடுகிறார்களாம் வெற்றி விழா!

தமிழக மக்களே! இனி ஈழம் என்பது ஈழ மக்களின் கடமை மட்டுமல்ல. நமது கடமையும் கூட.

நமது நெருக்கடிகள் பற்றிய ஆழ்ந்த புரிதலும், போராடுகின்ற முறை பற்றிய தௌிவும் வேண்டும்.

நமது முதல் போராட்டம் என்பது, உண்மைகளை வௌிக்கொணர்வது, எதிரிகளை அடையாளங்காட்டுவது, துரோகிகளைத் தோலுரிப்பது, மக்கள் எழுச்சியை கட்டியெழுப்புவது.



Dr. V. Pandian
2009-06-03 09:29:00
porkkaiponds@yahoo.co.in

(For the kind attention of N. Ram, the Srilankan High Commissioner for India)

The Srilankan Chief Justice Sarath N. Silva's speach on Tuesday:

“I visited 'relief villages' where Vanni IDP families are sheltered. I cannot explain their suffering and grief in words. It is an utter lie if we continue to say that there is only one race and no majority or minority in the country. I visited Cheddiku'lam camps where IDP families live. I cannot explain the pathetic situation they undergo. I was unable to console them. They survive amid immense suffering and distress.

"We construct massive building on our side. But these IDPs live in tent-shelters. Ten IDPs live in one tent-shelter. They could stand straight only in the centre of the tent shelter. Their neck will break down if they move to aside of the tent-shelter.

"IDPs are seen waiting in queues, extending from 50 to 100 yards to take their turn to answer a call of nature. This is the life of Vanni IDPs in Cheddiku'lam camp

"I attempted to smile at these IDPs. But it was without success. I failed to express my feeling towards them. I was unable to tell them that we also were crying with them for their suffering. I was unable to tell them that I would supply new clothes to them.

"They should be provided with enough relief. We would be blamed if we fail to supply them with enough relief.

"They cannot expect justice from the law of the country. Their plight and suffering are not brought to the court of law in our country. I openly say this. I will be penalized for telling this”.

Dr. V. Pandian
2009-06-04 07:12:00
porkkaiponds@yahoo.co.in

அரங்க. கந்தசாமி அவர்களே!

காந்தியும், நேருவும் பொது உடைமை வாதிகளா என்பதல்ல வாதம், அவர்கள் நல்லவர்களா, ஈனர்களா என்பது தான்.

லெனின், மாற்றின மக்களுக்கு சுயநிர்ணய உரிமையைக் கொடுத்தார். மாற்றின மக்களைப் பிரிந்து போகவோ அல்லது விரும்பியபோது பிரிந்து செல்லும் உரிமையோ கொடுத்தார்.

அந்த மேதகு வரலாற்று நிகழ்வுக்கு வெகு நாளைக்குப் பிறகு உருவெடுத்த சுதந்திர இந்தியாவில், நமது எண்ணங்களைக் கேட்டு நடக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணம் இந்த மனிதர்களுக்கு இருந்ததா?

ஒரு கூட்டாட்சி முறையாகவாவது முயற்சித்தார்களா? இவர்களின் சுய(இன)நல அரசியல் தான் இந்தியாவை நாசப்படுத்திய காரணி.

ஆக, இனியும் இவர்களை நல்லவர்கள் என்று தவறியும் அழைக்கக் கூடாதென்பது எனது கருத்து. சிறதளவாயினும், விஷம் கலந்த பாலை விஷம் என்போமா, பால் என்போமா?

பாரப்பன, பனியா உடகங்கள் இவர்களை இமாலய அளவுக்கு தூக்கிப் பிடித்தது, ஒன்று பட்ட இந்தியாவை உருவாக்கவே. இன்றும் இதையே செய்கின்றன. அதே தேவை இன்றும் உள்ளது பாருங்கள்!

ஒட்டக்கூத்தர்
2009-06-04 07:18:00
riyaz194701@gmail.com

வண்க்கம் விஷ்னுபுரம் படைப்பு மனம் படைப்பு மனம் என புடைத்துகொள்ளும் நீங்கள் மணி செந்த்திலின் நட்புக்காய் களம் இறங்கி இருக்கீங்க பேசி அசிங்கப்படும் இலக்கிய வியாதிகளுக்கு மத்தியில் தன் பிழைப்பு வாத்திற்காய் கள்ள மௌனம் சாதிக்கும் எஸ்.ரா க்கு வக்காலத்து வாங்கும் அரசியல் எங்களுக்கு புரிகிறது இலக்கிய பிடத்தில் உங்களுக்கான இடத்தை தக்கவைக்க உங்களுக்கு எஸ்.ரா அ.மார்க்ஸ் வகையறாக்களின் நட்புக்காகத்தானே..

நீங்கள் அப்படியே நம்ம வேர்ட்பிரஸ் வாங்க தல
http://allinall01.wordpress.com/

Dr. V. Pandian
2009-06-04 11:40:00
porkkaiponds@yahoo.co.in

பாகிஸ்தானின் மேநாளய பிரதமர் மேதகு சுல்பிக்கர் அலி பூட்டோ அவர்கள் இந்தியர்களை Indian Dogs என்று தான் அழைப்பாராம். எனது சிறு வயதில் இதைப்பற்றிக் கேள்விப்பட்ட நான் அப்போது மிகுந்த கோபமுற்றேன்.

baskar
2009-06-04 05:22:00
mbaskar2005@gmail.com

சகோதரர் மணி.செந்தில் குறிப்பிட்டுள்ளது மிக சரிதான். நானும் எதிர்ப்பார்த்தேன் நம் கவிஞர்கள் வைரமுத்து போன்றோர் யாராவது நம் ஈழத் தமிழர்களின் துன்பங்களை அவர்கள் எழுத மாட்டார்களா என்று. ஆனால் கொஞ்சம்கூட தமிழுணர்ச்சியும், மனிதாபிமானமும் இல்லாமல், நாங்கள் காமத்திற்கும், காதலுக்கும், வன்முறைக்கும், அரசியல் அரக்கர்களைப் புகழ்வதற்குமே உள்ளோம்மென்று நிரூபித்துவிட்டார்கள். தற்பொழுது இவர்களைப் போன்ற கவிஞர்களின் முகத்திரையும், கழக அரசியல்வாதிகளின் முகத்திரையும், நான் தமிழின தலைவன் என்று கூறிக்கொள்ளும் அனைவரது உன்மையான முகம் வெளிப்பட்டுவிட்டத்து.

நன்றி

ஈழத்தின் விடிவை எதிர்நோக்கியிருக்கும் அனனைத்து தமிழ் மனிதர்களுக்கிடையில் ஒரு தமிழ் மனிதன் குவைத்திலிருந்து

மா.பாஸ்கர்

senthilkumar R
2009-06-05 12:25:00
senkr.raj@gmail.com

ஜெய மோகன் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் , தனது அரசாங்க வேலை மற்றும் தனது மனைவியின் வேலை காரணமாக இறையாண்மை துதி பாடுவார்.

எஸ் இரா எழுதிய ஒரு கட்டுரையை படித்தேன் . அது நியாயமான வார்த்தைகள் என்று தோன்ருகிருகிறது. தனது இயலாமையை அவர் சொல்வது போலவே , எல்லா உண்மையான் தமிழனும் நினைப்பான் என நினைக்கிறன் .

சாரு ஒரு மஞ்சள் பத்திரிக்கை எழுத்தாளர் . போராளிகளை பற்றி பிரெஞ்சு மொழியில் நல்ல வார்த்தைகள் இல்லையோ என்னவோ ?
பார்பனர்கள் வாய் வியாபாரம் செய்வதில் வல்லவர்கள் . ஞானியை பற்றி சொல்லவா வேண்டும்

அரங்க. கந்தசாமி
2009-06-05 01:23:00
kanthanaar@hotmail.com

///காந்தியும், நேருவும் பொது உடைமை வாதிகளா என்பதல்ல வாதம், அவர்கள் நல்லவர்களா, ஈனர்களா என்பது தான்.////
மதிப்பிற்குரிய பாண்டியன் அவர்களுக்கு
நான் இத்துடன் நமது வாதத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றாலும் இந்தத் தளத்தை அளவுக்கு அதிகமாக பயன் படுத்திவிட்டேனோ என்று தோன்றினாலும் வேறு தளத்தில் சந்திக்கும் முன்பு இறுதியாக.....
காரல் மார்க்ஸ்.லெனின் வகையறாக்கள் அய்ரோப்பிய வழி சிந்தனையாளர்கள்..
காந்தி நேரு என்பர்கள்தான் இந்திய வழி (அல்லது உங்கள் வாதப்படி ஆசிய வழி) சிந்தைவாதிகள்.. நான் இவர்களை நுால் ஏணியில் முதல் படி என்கிறேன்.. நீங்கள் கடைசி படி எங்கே என்கிறிர்கள்... அதுதான் வித்தியாசம்


Dr. V. Pandian
2009-06-05 06:13:00
porkkaiponds@yahoo.co.in

அரங்க. கந்தசாமி அவர்களே!

நானும் நிறைவு செய்துகொள்கிறேன். அதற்கு முன்பாக, இன அரசியலைப் பற்றி விவாதிக்க கீற்றைவிட சிறந்த தளம் இருக்க முடியாது என்பது எனது கருத்து. அத்தகைய இதழ்களின் சங்கமமாக கீற்று விளங்கும் போது, இது அதற்கான தளமல்ல என்று நீங்கள் கூறுவது எனக்கு வியப்பளிக்கிறது.


Caesar
2009-06-05 10:07:00
csrcaesar@gmail.com

I'm amazed at the call for unification of all Tamilians in the various posts? when we have been unable to make an includsive, unified society out of what is a pristine tamilian region like Tamil Nadu, how are we goind to unify all Tamilians in the world? Remember, TN has been ruled by the DMK/ADMK parties for 50 yrs now. These are the guys who told Dalits like us that destroying Brahmins will solve the problem, but 60 yrs on we are still languishing in the fringes of the society, except the select few who make it to the mainstream by sheer chance.

All these parties are capable of is to support the mightier of the lot at the expense of the minority who can't defend themselves or vote them out of power. In TN Brahmins are used to deflect the core issue of untouchability which is more seriously practised in several villages by more powerful communities like Gounders...what has this Karunanidhi done for them? and today, in Srilanka he takes a position favourable to rajapakshe...and lobbies for his son when the great warrior lays dead in the sea shores of Ealam...! an this guy is 'Tamil ina mana talaivar'...!!!

sherin
2009-06-06 08:45:00
sherinarin@yahoo.com.sg

there is no fault on sinhalees.coz srilanka is a buddhist country.so it belongs to sinhalees.if tamilians want to take srilanka means,is it possibile?if they want country they can go to india.india is their belonging place.so the fault is on hindus.also the fault is on sinhalees.coz they really attacked many hindus.but im sure the fault is not only on sinhalees.!!

e.ramani
2009-06-07 02:51:00
ramanigandhan@yahoo.com

ANAITHTHU YEZHUTHTHU PUDINGHIGALUKKUM KIRAAMATHTHAANIN VANAKKAMUNGO!!! KANDA KANDA KAZHISADAIYELLAAM YEZHUTHTHAALANAAGA VANDHADHAALADHAAN YEM INATHTHIN UNARVAI , UYIR AZHIVAI UNARAADHU KUZHAAYADI SANDAIYIL IRANGHIYIRUKKIREERGAL .PUDINGHIGALE UNGALIN PUZHUTHTHUPPONA PULAMBALAI ITHTHODU NIRUTHTHUNGAL . KEETRIL YEM TAMIZHANUKKAAGA SINDHIPPAVANMATTUM YEZHUDHATTUM....

mukilvannan
2009-06-08 09:13:00
saravanai1@yahoo.com

we have many pudunkis among us whom always betray us.sadley this is the reson we failled to unite together.

Pudungi
2009-06-30 01:59:00
pudungi@pudungi.com

மணி செந்தில் இன்னும் பல புடுங்கிகளைப்பற்றி எழுதவில்லை. குறிப்பாக முற்போக்கு முகம் மாட்டிக்கொண்டுதிரியும் ஆதவன் தீட்சண்யா என்றொரு புடுங்கியைப் பற்றி இங்கே குறிப்பிடவேண்டும்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டபோது, உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பதறியடித்துக்கொண்டு பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தபோது, இந்த புடுங்கி நடராசா சுசீந்திரன் என்றொருவனை எங்கிருந்தோ தேடிக்கண்டுபிடித்து, ஒரு பேட்டியை வெளியிட்டான்.

கீற்று புடுங்கிகளும் அந்த பேட்டியை வெளியிட்டு அகம் மகிழ்ந்துகொண்டனர்.
கீழுள்ள சுட்டியில் அந்த பேட்டியை படியுங்கள், ஆதவன் தீட்சண்யாவின் முற்போக்கு முகமூடிக்குள் ஒளிந்திருப்பது துக்ளக் சோவின் கோரமுகம் என்று தெரியும்.
http://www.keetru.com/visai/apr09/suseendran.php

raavan rajhkumar-jaffna
2009-07-22 03:17:00
raavan@hotmail.fr

unmaiyil ungal karuththukkal,athilum PANDIYANIn karuththukkal ennai kavarkinrana.engalukkaaka ,eezhaththirkaaka kural kodukkum aththanai SOTHARARUKKUM nanrikal....



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP