Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
யாசகம்!
கிருஷ்ணகுமார்

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்!

இறந்தால் மண்ணாகிப் போய் விடுவோம்! கார்பன் துகள்களாய், கால்சியம் பொடிகளாய் இங்கேயே கலந்து விடப்போகிற நாம், பேப்பர் தாள்களாய் இருக்கும் செக்குகள் மற்றும் பணம் பார்த்தால் ஆச்சரியமான உறவு கொண்டு அதைப் பெறப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம்!

கும்பிடு போடுவோம்!

வாலை ஆட்டிக் குழைவோம்!

அன்பு பாராட்டுவோம்! மனிதர்களைச் செல்லமாக அணைத்துக் கொள்வோம்!

ஆனால் மனிதர்கள் பர்ஸை திறந்து பணத்தை மற்றவர்களுக்காக எடுக்க வைக்க நாங்கள் படும் பாடு யாருக்குத் தெரியும் ?

ஆண்களைவிடப் பெண்கள் பணத்தில் கெட்டி! அப்பாவி ஆன் அப்படியா "இந்தாருங்கள் $100 என்று" கொடுத்து விடக்கூடாது!

"ஏங்க! இப்படி கொடுத்தால் ஹார்வர்டில் எப்படி நம்ம பையன் படித்து புஷ் மாதிரி C க்ரேட் வாங்குவதாம்!"

"நான் பேசிக்கிறேன்!" என்று வரிந்து கட்டி வருவார்கள்.

"ஐயா இந்தியாவில் பள்ளிகள் கட்டுகிறோம்! சுனாமி வந்த அலைகள் தாக்கி கூரைகள் காணாமல் போய் விட்டன! இரண்டாயிரம் டாலர்கள் கொடுத்தால் நல்லாயிருக்கும்! வேண்டுமென்றால் சும்மா கொடுக்க வேண்டாம்! நமிதா நடனம்! விவேக் நகைச்சுவை! வடிவேலு விளாசல்! பிரசாந்த்தின் பிரகாச நடனம் எல்லாம் இருக்கும்! வந்து பார்த்து விட்டு இரண்டு பீர்களை அள்ளி விட்டு விடு அப்படியே கொஞ்சம் சிக்கன் 65 போட்டு விட்டு . . . . கொஞ்சம் 6500 டாலர்கள் தந்தால் நல்லது! இல்லையென்றால் கூடப் பரவாயில்லை நாங்கள் விற்கும் இந்த டிக்கெட்டாஇயாவது $65 கொடுத்து வாங்குங்கள்!"

"அம்மா! ஐயா கிட்டே சொல்லுங்கம்மா! நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி! சேவைக்குச் சேவை! ( தின்கின்ற சேவை/இடியாப்பத்தைச் சொல்லவில்லை! ) பொதுச் சேவை தான்! $65 தான்!"

பில்கேட்ஸின் அம்மாவும் இந்தியா மாதிரி ஏழை நாடுகளுக்கு "நாம கொடுக்காவிட்டால் யார் கொடுப்பார்கள்! அப்புறம் 2000 ஆண்டுகள் முன்னே ஜீவித்திருந்த கர்த்தர் கூட நம்மை மன்னிக்கமாட்டார்!" என்று கூறிவிட கொலராடோ செட்டியார் கையிலிருந்து பணம் யாசகனிடம் வந்து சேர்ந்தது.

"ரசீது கொடுப்பீர்களா! அமெரிக்கா டாக்ஸ் கட்ட உதவியாயிருக்கும்!"

$65 க்கு ரசீது கொடுத்தேன்!

"இந்தப் பணம் $65ம் அப்படியே சுனாமி கூரை சொன்னீங்களே, அதைக் கட்டின பிறகு இந்தக் கூரைக்கு $64.50 செலவளித்தேன்! அடுத்த $0.50 அடுத்தக் கூரைக்குச் செலவளித்தேன் என்று கணக்கு காண்பீத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்! அப்படியே அப்படத்தினை டிஜிட்டல் படத்தினால் படம் பிடித்து அனுப்புங்கள் " என்று கூறி அனுப்பினார்கள்.


பணம் பெற்றோரிடமிருந்து பணம் பெறுவதற்குள் எவ்வளவு பாடாய் பட்டிருப்போம்!

அப்பா! ஸ்கூல் எக்ஸ்கேர்ஷன்! ரூ 100 கொடுங்கள்!'


"ஒரு தம்படி கூட அந்தச் சல்லிப் பையலுக்கு கொடுக்க மாட்டேன்!" என்று என் அப்பா கூறக் கேட்டிருக்கிறேன்!.

"நல்லா ஒழுங்காய்ப் படி! இல்லை ஓடு தூக்குவே!" என்று வைதார்.

எடுத்துக் காட்டாக என் காரிலிருந்து 75,000 மைல் முதல் 225000 மைல் வரை எவ்வளவு தமிழ் பணக்காரர்கள் கிட்டே நடையாய் நடை நடந்து ஓடேந்தி ஓடாய் தேய்ந்திருப்பேன் தெரியுமா ?. எல்லாம் சுனாமிக்காகத் தான் சார்! அது ஐயாயிரம் மைல் தள்ளி வந்தாலும் வந்தது, இங்கே நான் ஐம்பதாயிரம் மைல் ஓட வேண்டியிருகிறது!

கவனிக்க! கார்! மைல்கள்! அதற்கு நான் போட்ட பெட்ரோல்! அனைத்து மாகாணங்களிலும் அமெரிக்காவில் கார் ஓட்டியிருக்கேனாக்கும்! இங்கிருக்கும் தமிழ் பேசும் நல்லுலகம் என்னை வரவேற்க எங்கும் காத்திருந்தனர்.


என் பாட்டா செருப்பு தேய (கார் டயர் தேய) அந்தப் பாவி மனுசனைப் பார்க்க எவ்வளவு தேய்ந்திருப்பேன் தெரியுமா ? கடைசியில் பேரம் பேசி $65 ஐ அந்த ஐயாவின் அம்மாக்கிட்டேயிருந்து கறந்தேன்.

சத்யஜித்ரே படத்தின் ஹீரோ மாதிரி அறுந்த செறுப்பை இழுத்து நடந்து, மாடி வீட்டு வாசலிலே உச்சி வெயிலில் "கறுப்பு வெள்ளை" பட எபெக்டோட ( உச் ...உச் .... உச் கொட்டுவீர்கள் என்று கொஞ்சம் விலாவாரியாக எழுதினேன்!) வெளியே காத்துக் கிடந்தேன்! என்னைத் தாண்டி "விர்ரெ"ன்று படகுக்கார் தாண்டிச் சென்றது.

"சே! அதிகார வர்க்கம்!" கம்யூனிஸ மொழி வாயில் வந்து போனது.

சும்மா அப்படியா காப்டலிஸத்தில் ஊறி வாழும் நான் சொல்வேன் ?
சும்மா! நீங்க வேறு! இப்படியெல்லாம் கற்பனை செய்யாதீர்கள்! சும்மா விளையட்டாக மைல்கள் பல பறந்து எட்டுத்திக்கும் சென்று பணம் பலம் கொண்டு படைகளைத் திரட்டி எல்லாம் வேலை செய்யவில்லை!

வாங்கிய $65 ஐப் பையில் போட்டுக் கொண்டு அடுத்த வீடு நோக்கி காரில் ஜிவ்வென்று பறந்து போனேன்.


ஒரே இ-மெயில் தட்டினேன்! மேலும் பத்தாயிரம் டாலர்கள் குவிந்தது! இந்த ஊரில் நிறைய பில்கேட்ஸ் இருக்கிறார்கள்! அவர்களுக்குச் சேர வேண்டியது சேர்த்தால் தர வேண்டியது தருவார்கள். காபிடலிஸமில்லையா ? நமிதா/விவேக்/சாலமன் பாப்பையா/ஊர்வசி/ரம்பை/மேனகா/கர்நாடக சங்கீதம்/நடனம் என்று பல்வேறு ரசனைக்களுக்கேற்ற மாதிரி கலை நிகழ்ச்சிகளைத் தந்து கொடுத்து வாங்க வேண்டும்.

தந்தார்கள்.

தமிழகத்தின் ஒரு உதவும் கரங்களுக்குத் தந்தேன்!

"நன்றி"

"அப்ப ரசீது தருவீர்களா ?. கொடுத்தால் எங்கள் ஆட்களுக்குத் தர வேண்டும் "

"தருவோம்! ஆனால் உங்களால் போடப்பட்ட கூரைகளைப் படம் பிடித்து அனுப்ப முடியாது! இப்பணத்தினை வேறு மற்றப் பொது நோக்குச் சேவைகளுக்கும் பயன்படுத்துவோம்!" என்றார்கள் உதவும் கரங்களைக் கொண்டவோர்.

யாசகம் ஏன் கேட்கிறோம் ? அவ்வளவு சுலபத்தில் பணம் கொடுத்து விடுவார்களா ? கலாச்சாரம் காப்பாற்ற பணம் வேண்டாமா ?. இரண்டு தடவி மூன்று தடவை கேட்டால் தான் எதையும் தருவார்கள். மனைவி கிட்டேயே கணவன்மார்கள் யாசித்து தான் கேட்டுப் பெற வேண்டியிருக்கிறது.

எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தாங்க!

என் கிட்டேயிருந்து 20000000 மில்லியன் டாலர்கள் இருந்தால் ஏன் ஓடுகின்றேன் ?

எங்கள் ஊரில் ராஜாக்கள் காலமான பிறகு வாணிபத்தில் கெட்டியாயிருந்த செட்டிமார்கள் பணம் கொடுத்தால் தான் கச்சேரியே! கோவிலுக்கு ட்யூப் லைட் போட்டால் கூட "உபயம் : ராஜா செட்டியார்" என்று போட்டால் தான் ரூ 45 ஒரு ட்யூப் வாங்கக் கிடைக்கும்.

மதுரை மணி ஐயர் கச்சேரியா ? பெட்ரமாக்ஸ் விளக்கு வைக்க ரூ 12 அந்த சுமைதாங்கிக்கு கொடுக்கணுமா ?

ஓடு செங்கல்வராயன் செட்டி கிட்டே! என்று ஓடுவோம்!

அம்மனுக்கு முத்துப் பல்லக்கா ? பூப் பல்லக்கா ? பந்து கணக்கில் மல்லிகையும் கனகாம்பரமும் வாங்க அண்ணாமலையார் கொடுத்தால் தான் உண்டு!

விழா காரிய தரிசிகளெல்லாம் ஓடுவோம்!

ஐயா! காளி அம்மன் ஆடித் திங்களுக்கு கூழ் ஊற்ற வேண்டும்! செலவு ஐம்பதாயிரம் ஆகும்! நீங்க மனசு வைச்சா 45,000 ரூ கொடுப்பீங்க!

அப்புறம் நாங்க ஐம்பது பேர் மீதியைப் போட்டு தர்ம கார்யத்தைக் கவனிக்கலாம்! என்று தலையைச் சொறிவோம்!

யாரங்கே! தான்யாதிகாரி!

இந்தச் சிவன் கோவிலுக்கு குடமுழக்கு போட ஐம்பதாயிரம் வராகன்கள் எடுத்து போடுங்க! அந்தக் கிராமத்து மொத்த வருவாயே 40000 வராகன்கள் தான். அப்பர் பாடல் பெற்றச் சிறப்பு மிக்க தலமாக இருப்பதால் அச்சிவன் கல்வெட்டில் நம்ம பெயர் இருந்து விட்டுப் போகட்டுமே!" அப்ப தான் இரண்டாயிரம் ஆண்டுகள் நம் பெயர் நிலைக்கும்!

கொடுக்கிறவன் இருப்பதால் தான் யாசிக்கிறவன் இருக்கின்றான். யாருமே கொடுக்காவிட்டால், வாங்க நாங்க யாருமே இருக்க மாட்டோம்!

அப்ப தான் இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்கள் கொடுக்க முடியும்., எங்களின் மூலம்! நாங்கள் ஒரு இடைத் தரகர்கள்!

இங்க வாங்கி அங்க கொடுப்போம்! அதோடு வேலை முடிந்தது!

பாருங்கள் இந்தியாவில் நூறு பள்ளிக் கூடம் கட்டவோ அல்லது ஆயிரம் எயிட்ஸ் நோய் வந்தவர்களைத் தாங்கவோ பில் கேட்ஸ் கிட்டேயிருந்து பத்தாயிரம் கோடி வாங்க எங்கள் மாதிரி 225000 மைல் கார் ஒஊட்டினால் தான் அனைவரிடம் கேட்டு பெற்று பணம் பட்டு வாடா செய்ய முடியும்!

அம்மா! ஐயா! தர்மம் போடுங்கம்மா! போடுங்கய்யா! போகிற இடத்தில் (கைலாசம் அல்லது சனி கிரகம் அல்லது பக்கத்த்து காலக்ஸியிலோதான்!)

புண்ணியமாகப் போகும்!

கேட்டுப் பாருங்கள்! நமக்கென்ன நஷ்டமா! நம்ம பணமாப் போகிறது ? கொஞ்சம் குரல் வறண்டு போகும்!

தண்ணீர் குடிக்கலாம்! $65 ஐ வாங்கிப் பையில் போட்டுக் கொண்டால் கொஞ்சம் $1 செலவு செய்து பீரடிக்கலாம்! ஒன்று வந்தால் தான் ஒன்று தர முடியும்!

சீனாவில் பூகம்பமா ? ரஷியாவில் எலித் தொல்லையா!

இருக்கவே இருக்கிறார்கள் காபிடலிஸ்ட்கள்!

யாசிக்க வேண்டும்!

அவ்வளவு தான்!

கொடுக்கிறவன் இருந்தால் கேட்டு வாங்கிக் கொள்ளணும்! அது தான் நம்ம பாலிஸி!

அம்மா! ஐயா! தர்மம் போடுங்கம்மா! போடுங்கய்யா! போகிற இடத்தில் (கைலாசம் அல்லது சனி கிரகம் அல்லது பக்கத்த்து காலக்ஸியிலோதான்!)

புண்ணியமாகப் போகும்!

உழைத்துச் சம்பாதித்தது போதும்! போனால் போகிறது போ!


- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com