Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஞாநியும் புடைக்கும் சில பூணூல்களும்!
விடாது கறுப்பு


ஒருவர் புகழடைந்துவிட்டால் அவரை தங்கள் சாதிக்காரராக காட்ட எத்தனிப்பது என்பது சாதி வெறியர்களின் யுக்தி. அதற்கு முன்புவரை அவரை நாயிலும் கேடாக வைத்திருப்பர். மகாகவி பாரதியார் நலிவுற்ற போது எந்த பார்ப்பனரும் அவருக்கு உதவவில்லை. மாறாக பாரதியை ஏற்கனவே தள்ளிவைத்த பார்பனர்கள் வீம்புக்கு பாரதியை சாதியை விட்டும் தள்ளிவைத்தனர். பார்ப்பனர்களில் அத்தி பூத்தாற்போல சில நல்ல பார்ப்பனர்களும் இருப்பதுண்டு. அந்த வகையில் பாரதியார், சூரியா நாரயண சாஸ்திரி ஆகியோர் பார்ப்பனராக பிறந்ததற்கு வெட்கப்பட்டு தீண்டாமையை புறக்கணித்து தமிழுக்கு சேவை செய்திருக்கின்றனர்.

சமீபத்திய உதாரணமாக பத்திரிக்கையாளர் ஞாநி பார்ப்பனராக பிறந்தும் பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெண்ணியம், பெரியாரிசம் போன்ற முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அந்த கருத்துக்களை பத்திரிக்கைகளிலும் எழுதியவர். இவரின் எழுத்துக்கள் பார்ப்பனரை எரிச்சல் படுத்தியது. பார்ப்பனர்களில் ஒருவரும் இவரைப் பாராட்டியதே இல்லை. ஞாநி தற்பொழுது ஓரளவு பிரபலமடைந்து விட்டதால், ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதை அவருக்கு ஆதரவளிக்காத பார்ப்பனர்களும் முன்னின்று பரப்பி வருகிறார்கள். காரணம் ஞாநி எழுத்தின் மீதோ, ஞாநியின் மீது உள்ள அன்பினாலோ அல்ல. எங்கள் பார்ப்பன சமூகத்திலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக ஞாநியின் புகழ்நிழலை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திடிரென்று ஞாநியின் முற்போக்கு சிந்தனை குறித்து கேள்வி எழும் வகையில், சமீபத்தில் ஞாநி கருணாநிதி குறித்து சொல்லிய கருத்துக்கள் சர்சையை கிளப்பி விட்டதால், திமுக ஆதரவாளர்கள் மற்றும் திராவிடர்கள் ஞாநியின் கருத்து ஒரு பார்ப்பனிய சிந்தனை என்று சொல்லி ஞாநியின் அந்தக் கருத்தை பார்ப்பனீய வெளிப்பாடாகவே பிரகடனப்படுத்தினர். இதைக் கண்டதும் ஞாநியை இதுவரை ஒதுக்கி வைத்திருந்த பார்ப்பனர்களின் பூணூல் புடைத்துவிட்டது. ஞாநி சொன்னதில் தவறு என்ன? என்று பார்ப்பனர்கள் இணையப் பக்கங்களில் ஞாநி கூறியவை பார்ப்பனீயக் கருத்து அல்ல என்று சொல்லாமல், ஒரு பார்ப்பனர் என்பதால் ஞாநி சொல்வது தவறா? என்று கேட்கின்றனர்.

இதன் மூலம் இவர்கள் ஞாநியை ஒரு பார்ப்பனராக காட்டி, அவருக்கு இந்த சூழலில் ஆதரவளிப்பவர்கள் அவருடைய சாதியில் பிறந்த பார்ப்பனர்களாக மட்டுமே இருக்க முடியும் என்பது போல் ஞாநிக்கு சமிக்ஞை செய்கிறார்கள். அதாவது ஒரு பார்ப்பனர் கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டால் அதற்கு பாப்பான் மட்டுமே உதவ முடியும் என்ற கட்டமைப்பில் ஞாநியை சிக்க வைத்து, ஞாநியை பார்ப்பன எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட முடியும் என்று முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

இதை வெளிப்படையாகவே டோண்டு இராகவன் என்ற பெயரில் இண்டர்நெட்டில் உளறிக் கொட்டும் பார்ப்பானரும் மற்ற அன்புடன் பாலா போன்ற அவரது சக பார்ப்பனத் தோழர்களும் செய்து வருகிறார்கள். டோண்டு ராகவன் சொல்கிறார், "பார்ப்பான் மனம் திருந்தி முற்போக்கு சிந்தனை என்று சென்றால் என்றாவது ஒரு நாள் ஞாநி தாக்கப்படுவது போலவே தாக்கப்படுவார்கள். எனவே ஞாநி போன்றவர்கள் விழித்துக் கொண்டு பார்ப்பானாக மாறிவிடவேண்டும். மேலும் முற்போக்குத் தனம் என்று சொல்லி தங்களை எந்நாளும் பிற்படுத்திக் கொள்ளக் கூடாது!" என்கிறார்.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்று தெரிந்ததால் தங்கள் குலத்துக்கு இழுக்கு தேடித் தருகிறார் என்று அவர் மீது பார்ப்பனர்கள் கோப்பட்டு, ஞாநி தன்னை பார்ப்பனர் இல்லை என்று கூறும் போது அவரைப் பார்ப்பனராகப் பார்ப்பதற்கு கண்டனம் என்று சொல்லி இந்த விசயத்தில் மேலும் கருத்து கூறாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் ஞாநிக்கு ஆதரவாகப் பேசினால் அவரது பார்ப்பனீய எழுத்துக்களுக்கு வீரியம் குறைந்து தம் போக்கை மாற்றிக் கொள்வார் என்ற எதிர்ப்பார்பில் ஞாநி மீது பாசமழை பொழிகிறார்கள் இந்த பார்ப்புகள்.

கருப்பு என்னடா திடீரென ஞாநிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கருணாநிதிக்கு வயதாகி விட்டது, அதனால் அவர் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல ஞாநிக்கு எந்த உரிமையும் இல்லை. சொன்னதையும் சொல்லிவிட்டு அதற்கு சாக்குபோக்கு சொல்வது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்மீது கொண்ட அன்பினால் ஆலோசனை சொன்னதாக அள்ளி விடுகிறார் ஞாநி.

இத்தனை வயதாகியும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சி கேமகேடி ஊத்தைவாயன் சுப்ரமணியையோ அல்லது இத்தனை வயதாகியும் பார்ப்பன கம்பராமாயாணம், பார்ப்பன மகாபாரதம் மற்றும் பார்ப்பன ஏகாதிபத்திய பூணூல் அரசியல் என்று துக்ளக் பத்திரிக்கையில் புலம்பும் சோமாறியையோ அவர் சொல்லிவிட்டு வந்து பிறகு கருணாநிதியை சொல்லி இருந்தால் அதனை நடுநிலையாகக் கொள்ளலாம்!


- விடாது கறுப்பு ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com