Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

உடலுறவும் கிறிஸ்துவர்களின் பாவ மன்னிப்பும்!
விடாது கறுப்பு


சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு கீழ் தளத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளுக்கு சென்றேன். குழந்தையின் குடும்பம் கிறிஸ்து மதத்தினை சேர்ந்தவர்கள். பரம்பரையாக கிறிஸ்தவர்கள் அல்லர். இந்துவாக பிறந்து பின்னர் மதம் மாறிய கன்வர்ட்டடு கிறிஸ்தவர்கள். அவர்கள் அன்றாடம் வீட்டினுள் அமர்ந்து செபம் செய்வதை என் காதுபட கேட்டிருக்கிறேன். உண்மையான பக்தியோடு ஏசுவை துதிக்கின்றனர். 'ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட எங்களின் குடும்பம் இன்றைக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு எங்களின் ஏசப்பாதான் காரணம்!' என்கின்றனர் இவர்கள். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை மாதம்தோறும் சர்ச்சுக்கு அளிக்கின்றனர். ஒரு உறுப்பினர் தன்னுடைய சொந்த வீடுகளில் ஒன்றையே சர்ச்சுக்கு எழுதிக் கொடுத்து விட்டாராம்.

இவர்கள் எல்லா சனிக்கிழமை மாலையும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று வழிபடுகின்றனர். மாதம் ஒருமுறை தங்களின் வீடுகளில் ஜெபக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஜெபக்கூட்டத்தின்போது வகைவகையான சமையல் வகைகளை சமைத்து வைத்து சர்ச்சில் உள்ள எல்லாரையும் அழைக்கின்றனர். அனைவரும் வந்திருந்து கூட்டம் நடத்தும் அந்த குடும்பத்திற்காக எல்லா நன்மையும் செய்யவேண்டும் என ஆண்டவனை தோத்திரம் செய்துவிட்டு பின்னர் குடும்ப விஷயங்களை பரிமாறி, உணவுண்டு சந்தோஷமாக செல்கின்றனர். இந்த கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் பாஸ்டராம். இவர்கள் பிராட்டஸ்டண்டு கிறிஸ்துவ வகுப்பினை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க பிரிவிலோ தலைமை வகுப்பவர் பாதர் என்பவர்.

இதில் நன்கு கவனித்தால் இறைப்பணியும் ஆயிற்று. நிறைய பேரோடு பழகும் வாய்ப்பும் கிட்டுகிறது. இன்ப- துன்பங்களை சக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. யாராவது ஒருவர் கஷ்டப்பட்டால் மற்றவர்கள் அவருக்கு உதவி செய்கின்றனர். பணமாகவோ பொருளாகவோ கொடுத்து அவரை மேலே கைதூக்கி விடுகின்றனர். இதனைப் பார்த்த எனக்கு ரொம்பவும் பொறாமையாக இருந்தது.

ஏசு என்ற மகனைப் பெற்றெடுத்த அன்னை மரியாளும் ஒரு கடவுளே என்பது கத்தோலிக்கின் வாதம். அவர்கள் மரியாளையும் வணங்குகின்றனர். ஆனால் ப்ராட்டஸ்டண்டின் வாதம் வேறு மாதிரி. இறைவன் தன்னுடைய தூதரை யாருடைய வயிற்றில் பிறக்க வைக்கலாம் என மனிதர்களில் தேடி பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய மரியன்னையை தேர்ந்தெடுத்தார். இறைவனைத் தவிர மற்றோரை நினைத்துக்கூட பார்க்காத மரியன்னை தன்னுடைய இறைவனுக்காக அந்த நல்ல இறைச் சேவையை செய்தார். தேவதூதனாகிய ஏசு கிறிஸ்துவை பெற்றுக் கொடுத்தார். அவர் பணி அவ்வளவுதான். ஏசுவே எங்கள் கடவுள் என்கின்றனர் இவர்கள். மரியாளையும் கும்பிடும் வேளாங்கண்ணி பற்றிச் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இது தவிர கத்தோலிக்க சமூகத்திற்குள் இருக்கும் பல குற்றம் குறைகளை என்னிடம் பட்டியல் இட்டனர். பத்து கட்டளைகளை கத்தோலிக்கர்கள் ஒழுங்காக பின்பற்றுவதில்லை என குறைபட்டுக் கொண்டார் அவர்.

அட சொல்ல வந்ததை மறந்து விட்டேன்.. கூட்டம் ஆரம்பிச்சதும் பாஸ்டர் வந்தார். எல்லாரும் அமைதியானார்கள். பாஸ்டர் இத்தனையாவது பக்கத்தில் இத்தனையாவது அதிகாரத்தில் இத்தனையாவது பாராவில் ஆண்டவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதனை வாய்விட்டு உரக்க படித்தார். கூட இருந்தவர்கள் அனைவரும் 'நேசிக்கிறேன் ஆண்டவரே, ஆமென், ரட்சிக்க வேண்டும் ஆண்டவரே, எங்களை காப்பாற்றும் ஆண்டவரே" என்றெல்லாம் மனமுருக வேண்டினார்கள். நானும் அந்த சிறு குழந்தைக்கு நன்றாக படிப்பும் அறிவும் வர வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.

பாஸ்டர் கொஞ்ச நேரத்துல தமிழ் வசனங்களை விட்டுவிட்டு "பப்பர்ர பறபற கிப்பர்ர கிற கிற" என்று ஏதோ ஒரு மொழியில் சத்தமாக பேச ஆரம்பித்தார். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. அதற்கு மற்றவர்கள் பழையபடியே 'உங்களை நேசிக்கிறோம் ஆண்டவரே, எங்களை ரட்சியும் ஆண்டவரே, உங்களின் கீழ் இருக்கும் இந்த பிள்ளைகளை உங்களின் மேலான கிருபையால் காத்தருளும் ஆண்டவரே" என்றார்கள். இந்த பப்பர பறபற கிப்பிர பறபற என்பதன் பொருள் அவர்களுக்கு விளங்கியதா என்று தெரியவில்லை. இந்த பாப்பார மடப் பசங்கள்தான் யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் இங்கே இவர்களுமா? இது என்ன மொழி என ஒருத்தரிடம் கேட்டேன். அவர் சொன்னார், இது சாத்தான் மொழியாம். அவர் பேசிய வசனங்கள் சாத்தானுக்கு மட்டுமே தெரியுமாம்!

கூட்டம் முடிந்ததும் குழந்தைப் பையன் கேக் வெட்டினார். அப்பா, அம்மாவுக்கு ஊட்டினார். பின்னர் சிறு துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்கள். வந்திருந்தவர்கள் பரிசுப் பொருகளை கொடுத்தார்கள். பிறந்தநாளைக் கொண்டாடிய அந்த குழந்தைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் விருந்து நடந்தது. அனைவரும் சாப்பிட்டனர். அனைவரும் குடும்பக் கதை பேசி மகிழ்ந்தனர். அதில் ஒரு இளம்பெண் மட்டும் ஒரு பையனை தனியாக தள்ளிக்கொண்டு சென்று இருளில் பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர் ஒருவரை தனியாகக் கூப்பிட்டு யார் அவர்கள் என விசாரித்தேன். அந்த இளம்பெண்ணுக்கு 19 வயசாம். அந்த பையன் சர்ச்சில்தான் பழக்கமாம். அவன் ஒரு காலிப்பயல். ஏற்கெனவே ஒரு பெண்ணை டாவடித்து மேட்டரை முடித்து(எத்தனை முறை என்று சொல்லவில்லை)விட்டு கைகழுவி விட்டவனாம். அதன்பின் இந்த பெண்ணைப் பிடித்து காதலித்து வருகிறான். இந்த பெண்ணின் அம்மா, அவரின் இரண்டாவது கணவன், அப்பெண்.. மூவர்தான் இவர்கள் வீட்டில். அந்த இரண்டாவது கணவருக்கு 35 வயதிருக்கலாம். அம்மாவுக்கு 45 இருக்கும். இவர்களின் காதல் அப்பா அம்மாவுக்கு தெரியவர பெண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க அவர் காதலை மட்டுமல்ல இன்னொன்றையும் ஒப்புக் கொண்டாராம். இதுவரை 21 தடவை மேட்டர் செய்து இருக்கிறார்களாம். விஷயம் உடனே பாஸ்டருக்கு தெரிய வைக்கப்பட்டு சர்ச்சில் கூட்டம் போட்டு இனிமேல் இதுபோல செய்யக்கூடாது, கல்யாணத்துக்குப் பிறகுதான் மேட்டர் என இருவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு பாவமன்னிப்பு கொடுத்தாராம்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த பையன் இன்னமும் அந்த இளம்பெண்ணை மணக்க மறுக்கிறான். எப்போது கேட்டாலும் பிறகு செய்துகொள்கிறேன் என்று சொல்கிறானாம். இவரை தவிர வேறு பெண்ணை மணக்க முயற்சி செய்து பின்னர் சண்டை நடந்து நிப்பாட்டினார்களாம். இத்தனைக்கும் முதலில் கெடுக்கப்பட்ட பெண்ணும் இரண்டாவதாக 21 முறை கெட்ட பெண்ணும் உற்ற தோழிகள். அவர் இவரிடம் எதுவுமே சொல்லவில்லையாம் கெடுவதற்கு முன். இப்போது இவர் கெட்ட விஷயம் முன்னவருக்கு தெரியவர 'என் ஆளை நீ வளைச்சுப் போட்டுட்டேடி' என்று இரு பெண்களுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.

இப்போது முதலில் கெட்டவர் இந்தியாவில் இருந்து வந்த இந்து ஒருவரைக் காதலித்து அவரை வீட்டோடு அழைத்து வந்து வைத்து டெலிபோன் கடை வைத்துக் கொடுத்துள்ளார். அந்த பையனாவது ஏமாத்தாமல் இருக்க வேண்டும்.

என்ன பாவமோ என்ன மன்னிப்போ... போலீசில் சொல்லி முட்டிக்கு முட்டி தட்டி அந்த காலிப்பயலை பிடித்து போலீசில் தள்ளாமல் பாவமாம் புண்ணியமாம்! இந்த பெண்ணுக்கும் எங்கே போனது புத்தி? 21 முறை செய்யும் வரைக்கும் யோசிக்கவே இல்லையா? ஏசப்பா என்ன கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவா கொள்ளச் சொன்னார்? மன்னிப்பு கொடுப்பதற்கு பாஸ்டர்களும் பாதர்களும் சபையும் இருக்கும்வரை இந்த மாதிரி காலிப்பயல்கள் திருந்தப் போவதில்லை.

- விடாது கறுப்பு ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com