Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பார்ப்பனர் தமிழை அழிக்க முயன்றது எவ்வாறு?
விடாது கறுப்பு


நாடோடிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுக்கு நாகரீகம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. ஆடு மேய்ப்பதும், ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். எங்கு இடம் பெயர்ந்தாலும் ஆட்டு மந்தை போல குழுக்களாகவே அவர்கள் சென்றனர்.

ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ், தமிழம் என்ற பெயரில் செழித்து வட இந்தியா முழுவதும் பரவியிருந்தது. சிந்து சமவெளி நாகரீகத்தில் அதற்கான குறிப்புகளில் 'மீன்' என்ற சித்திர எழுத்து ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டதை ஐயர் ஐராவதம் மகாதேவனே ஆராய்ச்சிக் குறிப்புகளில் வெளியிட்டு இருக்கிறார். இப்படியாக நன்கு மொழியிலும் நாகரீகத்திலும் சிறந்த இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், முதலில் தங்களுக்கான மொழியை தமிழிலிருந்து திரித்துக் கொண்டார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் மொழியை அழித்தால் அந்த இனமே அழியும் என்ற அடிப்படையை ஆரியர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தனர்!

அதன் பிறகு மனு, பிரம்மா என்ற பாத்திரங்களுக்கு பின் மனுதர்மம், நான்கு வேதம் என்ற கதைகளை கற்பனையாக புனைந்து கொண்டார்கள். இவர்கள் இந்தோ ஐரோப்பிய மொழி பேசியதற்கான ஆதாரம் பற்றி ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர்.

பார்ப்பனர்கள் தங்கள் யுக்தியை முதலில் மன்னர்களிடம் இருந்து ஆரம்பித்தனர். இதைச் செய்தால் ஷேமம், அதைச் செய்தால் சுபிக்ஷம் என்று முதலில் நல்லது செய்வது போல் மன்னர்களை வளைத்தனர். காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஒன்றிரண்டு நடக்க, மன்னர்கள் இவர்களது சூழ்ச்சி வலையில் விழுந்தனர். அதன் பிறகு அரசவையில் இடம் பிடித்து தங்களது வருணாசிரமத்தையும் வேதங்களையும் கடவுள் அளித்ததாக, புழுகு மூட்டைகளை மெதுவாக அவிழ்த்து தங்கள் நிலையை மேம்படுத்தி நிலை நிறுத்திக் கொண்டனர்.

இவர்கள் முதலில் வடமொழிச் சொற்களை தமிழிலிருந்து திரித்து அமைத்துக் கொண்டனர். உதாரணம் தாமரை. இது வடமொழியில் தாமிரஸ என்று திரியும். இப்படியாக திரிக்கப்பட்ட சொற்கள் தான் 1/3 பகுதி அளவுக்கு வடமொழியில் இருக்கின்றன. பின்பு அந்த சொற்களை வடமொழி சொற்கள் போல சமஸ்கிரத எழுத்துக்களில் எழுதிக் கொண்டனர். பின்னாளில் அதே சொற்களை மற்ற மொழிகளிலும் தமிழிலும் புகுத்த ஆரம்பித்தனர். நீர், மீன், காகிதம் போன்றவை சமஸ்கிருத வார்த்தைகள் என்று ஜயராமன் என்ற பாப்பான் சொல்ல இதுவே காரணம்.

வடமொழி இலக்கணமும், திராவிட மொழி இலக்கணமும் வேறு வேறு. வடமொழி எவ்வாறு தமிழிலோ, மற்ற திராவிட மொழிகளிலோ கலந்தது என்றால், பார்ப்பனப் பண்டிதர்கள் அந்த மொழிகளைக் கற்றுத் தேர்ந்து சொற்புணர்ச்சி விதிகளை அமைத்தனர். புணர்ச்சி விதி அடிப்படையில் வடமொழி சொற்கள் தமிழ் மொழியில் அதிகமாக கலந்தது. கொச்சை தமிழாக பேசப்பட்ட மற்ற திராவிட மொழியில் இந்த கலப்பு விகிதம் அதிகமாகவே இருந்தது. மேலும் அந்த மொழிகள் வடமொழியில் இருந்தே உருவானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வடமொழி உச்சரிப்பு உள்ள எழுத்துகளை அமைத்துக் கொடுத்தனர். அதற்காக அவர்கள் ஜ,ஸ,ஷ,க்ஷ போன்ற எழுத்துக்களை தமிழ்மொழியில் அதிகம் கலந்தனர்.

எவ்வளவு தான் அவர்கள் கலந்தாலும், தமிழ் புலவர்களின் தமிழ்பற்றால் வடமொழியும், தமிழ்மொழியும் பிரித்தே பார்க்கப்பட்டு வந்தது. பார்ப்பனப் புலவர்களே வடமொழி வார்த்தைகளை தமிழில் நேரடியாக பயன்படுத்தினர். கம்பனைப் போன்ற மற்ற புலவர்கள் வடமொழி எழுத்துக்களை தவிர்த்தே எழுதி வந்தனர். உதாரணம் லக்ஷ்மனன் என்பதை இலக்குவன் என்று கம்பரால் எழுதப்பட்டது. இந்த காலகட்டத்திற்குப் பிறகு வடமொழி தேவபாசை என்ற பொய்ச்செய்தி நன்றாக பரவியிருந்தது. திராவிட மொழி பேசும் மற்ற மக்கள் தங்கள் மொழி தேவபாசையில் இருந்து தோன்றியதாக நம்பத் தொடங்கினர். அதனை மிகவும் பெருமையாக நினைத்தனர். பார்ப்பன தமிழ்ப் புலவர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மணிப்பிரளவம் என்ற புது யுக்தியை (அதாவது பாதிக்கு பாதி வடமொழி கலந்து தமிழில் எழுதுவது) கொண்டு வந்தனர். இவ்வாறு அவர்கள் மணிபிரளவம் என்பதை தமிழில் புகுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

இந்த காலத்தில் தமிழும், வடமொழியும் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து பிறந்ததாக கதைளை எழுத்தினர். இவ்வாறு செய்வதால் வடமொழியை மறுப்பவர்கள் தமிழையும் சேர்த்தே மறுப்பார்கள் என்பது இவர்களின் நினைப்பு. இந்த நிலை கால்ட்வெல் ஐயர், ஜியு போப் ஐயர், சீகன் பால்க் போன்ற வெளிநாட்டு பாதிரிமார்கள் வடமொழி தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இவர்களின் ஆராய்ச்சி முடிவில் வடமொழி தேவபாசை அல்ல, அது தமிழுக்கு தேவையில்லாத பாசையும் கூட என்று தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டனர். உண்மையை மறைத்து இதுகாறும் பழம்பெருமை பேசிவந்த ஆரியர்களுக்கு பெருத்த அவமானமும், மரண இடியுமாக அது அமைந்தது. ஏனென்றால் தங்கள் பாசை தேவபாசை என்று சொல்லிச் சொல்லியே கோவில் சடங்குகளில் நுழைந்து தண்டச்சோறு தின்று (வாழ்க பாரதி!) வயிறு வளர்த்து வந்தனர். தேவபாசை என்று உலகில் எந்த ஒரு மொழியும் கிடையாது. அதுவும் செயற்கையாக தோன்றி செம்மை அடைந்த மொழியாக தனக்குத்தானே அறிவித்துக் கொண்ட வடமொழிக்கு அந்த தகுதி கிடையவே கிடையாது என்று மேல்நாட்டினர் எடுத்து வைத்த வாதத்திற்கு பிறகு பார்ப்பனர்கள் நொறுங்கிப் போயினர். தங்களையும் வடமொழியையும் கேவலப்படுத்தியதாக வீறு கொண்ட பார்ப்பனர்களின் அடுத்த திட்டம் வெள்ளையர்களை வெளியேற்றுவது.

அதுவரை வெள்ளையனுக்கு பின்பாட்டு பாடிவந்த பார்ப்பனர்களில் பலர் வெளிப்படையாக வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக தேசியவாதிகள் போன்ற அவதாரம் எடுத்தனர். மேல்சாதிக் கொடுமையைவிட வெள்ளையர் ஆதிக்கம் கொடுமையாக தெரியாததால், இந்த திடீர் தேசியவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களை தேச துரோகிகள் என்று முத்திரை குத்தினர். தலித்துகளுக்கு தெய்வங்களே இல்லை என்று சொல்லி நசுக்கி வந்த பார்ப்பனர்கள், தடாலடியாக தலித்துக்களை இந்துக்கள் பட்டியலில் தந்திரமாக பல எதிர்ப்புகளையும் மீறி இணைத்துக் கொண்டனர். தலித்துக்கள் விடுதலைக்காக தமிழகத்தில் போராடிய அயோத்திதாசர் (பள்ளர்) பற்றிய குறிப்புகளில் (நான் பூர்வ பவுத்தன்) இந்த அரிய செய்திகளைக் காணலாம்.

இதன்பிறகே தமிழ் ஆர்வலர்கள் மறைமலை அடிகளார், பரிதிமார் கலைஞர் (சூரிய நாரயண சாஸ்திரி - உண்மையை உணர்ந்து தெளிந்த பார்ப்பனர்), தேவனேயப் பாவாணர் போன்ற அறிஞர்களால் தனித் தமிழ் இயக்கம் தோன்றி வளர்ந்து தமிழில் இருந்த ஆரிய மொழிக் கலப்பு களையெடுக்கப்பட்டது. அடுத்த தலைமுறையில் வடமொழி முற்றிலுமாக அழிந்துபோகும். ஏனென்றால் அதை நடைமுறையில் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருக்கின்றனர். அவர்கள் சந்ததிகளும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கைக்காக வெளியில் செல்கிறார்கள். இப்பொழுது தமிழ், பார்ப்பன சன்யாசிகளுக்கு வேறுவிதத்தில் பயனளிக்கிறது. அதாவது ஜெகத்குருவை குளிக்க வைப்பது தமிழ்தான். தமிழ் பேசவில்லையென்றால் அவர் குளிக்க மாட்டாராம்.

தங்கமணி அவர்கள் பதிவில் சாதிகளை ஒழிப்பதற்கு இந்துமதத்தை ஒழிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது? என்று கேட்டிருக்கிறார். சாதிகளின் ஆணி வேறான பார்ப்பனீயத்தை முற்றாக ஒழித்தால் மட்டுமே போதும். இதைச் செய்தாலே தேவர் சமூகம் போன்ற சாதிவெறிப் பிடித்த மற்ற சாதியினர் தலித்துகளை பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற ஊர்களில் தள்ளி வைப்பது தடுக்கப்படும்.
- விடாது கறுப்பு ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com