Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

முதலைக் கண்ணீர் வடிக்கும் பார்ப்பனர்கள்!
விடாது கறுப்பு


நீ அள்ளுவதற்காக பிறந்தவன், நான் ஆள்வதற்காக பிறந்தவன் என்ற பார்ப்பனரின் வர்ணாசிரம கொள்கையில் அடிமைப்பட்டு, அவமானப்பட்டு கூனிக் குறுகி இருந்த தாழ்த்தப்பட்டவர், விழிப்புணர்வு பெற்று தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள தாங்களாகவே தேர்ந்தெடுத்த வழிதான் மதமாற்றம். அப்போதாவது தங்கள் வாழ்வு செழிக்காதா என்ற ஏழைகளின் ஆதங்கமே இதற்குக் காரணம்!

இப்படி எல்லோரும் விழிப்படைந்து மதம் மாறிவிட்டால், தாங்கள் கழிந்ததை அள்ளுவதற்கு ஆள் இருக்காது என்று மிரண்டு போன பார்ப்பனக் கும்பல், தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் சக இந்துக்களை தூண்டுவிட்டு மாற்று மதத்தினரைப் பற்றி அவதூறு பரப்புவதை இப்பொழுது முழு வேலையாக செய்து வருகிறது.

மாற்று மதத்தினரைப் பற்றி ஏதாவது சர்ச்சைக் குறிய விசயங்களை ஒருவர் எழுதிவிட்டால், அத்தகைய பதிவுகளின் பின்னூட்டங்களில் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியறியாத தீவிர இந்து ஆதரவாளர்களும் (அடிவருடிகள்) மேலும் மேலும் கொம்பு சீவும் வேலையைச் செய்து வருகின்றனர். ஏதாவது மாற்று மதத்தினர் சர்ச்சைக் குறிய விசயங்களை கேள்வி கேட்டால், அவர்கள் பதிவில் இவர்களே சென்று அவர்களை பின்னி எடுத்து அவர்கள் பதிவை பினாயில் ஊற்றி கழுவினாலும் போகாதபடி ஆபாச 'அர்ச்சனை' செய்து வருகிறார்கள்.

இவர்களின் நோக்கம் தான் என்ன? தாழ்த்தப்பட்டவர்களை மதமாற்றத்திலிருந்து தடுத்து நிறுத்தி, நிரந்தரமாக மலம் அள்ளி சுமக்க வைக்க வேண்டும். இதற்காக இந்துமதத்தின் பெருமையை வேதகாலத்திலிருந்து தொடங்கி வேட்டையன் ராஜா சந்திரமுகியை(?) வைத்திருந்ததுவரை சொல்லி அவர்களை குழப்புவார்கள்.

தலையெழுத்தே என்று இந்துமதத்திலேயே இருக்கும் தாழ்த்தப்பட்டோரும், பிற்பட்டோரும் இந்துமதத்தில் இருப்பதற்காக பார்ப்பனர்கள் பெருமை கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. என்னையும் கடவுளையும் பூணூல் இணைக்கிறது, அது உன்னிடம் இல்லை, அது எங்கள் பார்ப்பனர் சொத்து, அது இல்லாததால் நீ தள்ளி நின்று கும்பிட்டுவிட்டு உண்டியலை மட்டும் நிரப்பினால் போதும், அதன் மூலம் நெய் பண்டமாக தின்று நாங்கள் தொப்பையை வளர்த்துக் கொண்டு, உனக்கு கோமிய (பசுவின் சிறுநீர்) தீர்த்தம் தருவோம், அதைக் குடித்துவிட்டு பாக்கியவான் ஆவாய் என்கிறார்கள். என்றைக்காவது ஒரு பார்ப்பனர் தீர்த்தம் குடித்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? ஆம் என்று நீங்கள் தகுந்த சான்றுகளோடு சொல்லுங்கால் நான் எழுதுவதையே நிறுத்துகிறேன்! உரிமையை(?) ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பார்ப்பனர்கள் மதம் மாறுபவர்களைப் பற்றி கவலை கொள்ளுவது என்பது எதற்கு? அள்ளுவதற்கு ஆள்கிடைக்காது என்பதால் தானே?

தாய்மொழியாம் தமிழை நீசமொழியென்று சொல்லி, சமஸ்கிருதத்தினை தேவபாஷையாகச் சொல்கிறீர்கள். ஆனால் கையேந்தி தட்சணை (உஞ்சவிருத்தி?) கேட்கும்போது தமிழில் அல்லவா கேட்கிறீர்கள்? அதையும் வடமொழியிலேயே கேட்க வேண்டியதுதானே?

கோவிலை விடுவோம், அடுத்து தற்போதைய உயர் கல்விகளுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதங்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு உள்ளது, பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு விசயத்தில் பார்ப்பனர்கள் எதிர்ப்பது ஏன்? ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு சகல அரசாங்க பலன்களையும் ஐம்பது ஆண்டுகளாக அனுபவித்து, அதன் மூலம் பணபலத்தை அதிகரித்து, தன் வாரிசுகளின் முழு நோக்கமும் அந்த பதவிகளை அடைவது என்பது போல் வளர்த்து வந்து, மேற்படிப்பு வரை கொண்டுவந்து, தனக்கு பின் தன் வாரிசுகளுக்கு மட்டுமே உயர்கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.

இன்னும் சில வசதி படைத்த பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அனுப்பி, காசு பணம் கண்டபின் அமெரிக்கா வாழ்க, இஸ்ரேல் வாழ்க என்று இந்தியாவை மறந்து வாழ்த்துவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது பெற்ற தாய்நாட்டை அவமதிக்கும் செயல் அல்லவா? தாய்நாட்டை அவமதிப்பது பெற்ற தாயை அவமதிப்பது போலாகாதா?

மதம் மாறாமல் இருக்கும் சக இந்துக்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விட்டுத்தரத் தயங்கும் பார்ப்பனியக் கும்பல், மதமாற்றத்திற்கு எதிராக சிந்தும் கண்ணீர் முதலை கண்ணீரன்றி வேறென்ன? காலம் காலமாக உழைக்காமல் உண்டு கொழுத்துவிட்டு இட ஒதுக்கீட்டிலும் முன்னுக்கு நின்றால் பாவம் ஏழைகள் என்ன செய்வார்கள்? தலையில் இருந்து துண்டை இறக்கி இடுப்பில் கட்டி, கைகளை நான்காய் மடித்து கூழைக்கும்பிடு போட்டு சேவகம் செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனியும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களுக்கு எங்கள் தோழர்கள் சேவகம் செய்வார்கள் என்று கனவிலும் எண்ண வேண்டாம். கோவிலுக்குள் மணியாட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறோம். போகப்போகப் பாருங்கள்.

உங்களின் இந்த முதலைக் கண்ணீரை படிக்காத பாமர மக்களுக்கு சகல வழிகளிலும் புரிய வைப்போம்!


- விடாது கறுப்பு ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com