Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல்
அதிரடியான்


ஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

Ma.Ka.E.Ka இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ‘புலிகளுக்கு வீரவணக்கம்’ என்று காவடி எடுத்துள்ளார்கள். ’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.

என்ன தான் இவர்களது அரசியல்? இவர்கள் உண்மையில் யார்? ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன? இவர்கள் உண்மையிலேயே ‘புரட்சி’யாளர்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன? இவர்களை இயக்குகின்ற சக்தி எது?

யார் இந்த ம.கஇ.க. ?

‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ (ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.

பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ‘தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ‘சாகசங்களை’....

இட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோர்க்கும் ‘ராஜதந்திரம்’

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்

இந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ‘இந்தியா நமது நாடு’ என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ‘நடிகர்கள்’. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்பார்கள். ‘ஒ.. அப்படினா என்னங்க..’ என்று யாராவது கேட்டால், ‘இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது’ என்பார்கள்.

இந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இவர்களுக்கு தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதும் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களைப் போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.

ஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.

Maruthaiyan ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

ஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ‘பேனர்’ பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ‘பிழைப்புவாதிகள்’ என்று முத்திரை குத்தும் இவர்கள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ‘வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்’ என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.

தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் அங்கு இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.

ஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத ம.க.இ.கவினர், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.

ஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழன்’ என்று இவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் ‘தமிழின பிழைப்புவாதிகள்’. ஆனால் இவர்கள் ‘தமிழர்களே சிந்தியுங்கள்’ என்று துண்டறிக்கை அடிப்பார்கள்; சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ‘தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி’ என்று கூறுவார்கள்.

‘தமிழ்த் தேசியர்கள்’ யார்?

வாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ‘புரட்சி’யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா?

தேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ‘இலங்கை’த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

அவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது ’தமிழ்த் தேசியம்’ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசியவாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.

இவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ‘தமிழ்த்தேசிய’த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.

மேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.வினர் இவர்கள் பேசுவது தான் ‘தமிழ்த் தேசியம்’ என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.

அந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.

பெரியார் தி.க.

தமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தேர்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.

‘செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல’ என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது ம.க.இ.க.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ‘வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று மட்டும் பரப்புரை செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.

உண்மையான ‘தமிழ்த் தேசியம்’ எது?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

பெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

ம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று குறிப்பிடுகின்றது?

‘இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா?’ என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.

தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘தமிழ்த் தேசியர்கள்’ வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.

இவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது ம.கஇ.க.விற்கு தெரியாதா? என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ம.க.இ.க.வினர் தான் சுட்டிக் காட்டி பதிலெழுத வேண்டும்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்றே தோன்றுகிறது.

வெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.

இந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.

இந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.

தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்?

பார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன?

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.

‘இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்’ என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ‘லாபம்’ பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ‘மேலாதிக்கவெறி’ தானா காரணம் என்று விளக்குமா?

தனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ‘சோசலிசத் தமிழீழம்’ என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.

ம.க.இ.க. கூறுவதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும..? இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ ?! இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..?

முதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன..? ம.கஇ.க. ‘தத்துவ’ புருடர்கள் விளக்குவார்களா..?

இது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.

எப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...!

- அதிரடியான் (athiradiyaan@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
vijayakumar
2009-06-14 02:10:00
kumarnilavu@gmail.com

உலக உத்தமர்கள்(!) மகஇகவினருக்கு சரியான சாட்டையடி. இவர்கள் திட்டாத ஆளில்லை. இவர்களை திட்டுவதற்கும் ஒரு ஆள் வந்தாரே, அந்த வகையில் அதிரடியானின் வரவு நல்வரவு.

Dr. V. Pandian
2009-06-14 02:14:00
porkkaiponds@yahoo.co.in

நானும் எனது தோழர்களும் விவாதித்துக்கொண்டு இருந்த விடயங்கள் அப்படியே பதிவாகியுள்ளது. கட்டுரையாளருக்கு எனது அன்பான பாராட்டுகள்.

ம.க.இ.க. என்பது பார்ப்பனீயத்தால் இயக்கப்படும் ஒரு இயக்கம். இது ஒரு திட்டமிட்ட சீர்குலைவு இயக்கம். RAW வின் பங்கு இருப்பதற்கும் மிகுந்த வாய்ப்புள்ளது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களை சீர் குலைத்து, ஈழம் இனி எடுபடாத வகையில், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பிளவு ஏற்படுத்த RAW முயல்வதாக செய்திகள் வருகின்றன.

பாரப்பான் என்று இந்திய மன்னில் காலடி வைத்தானோ, அன்றே பிடித்தது தருத்திரம். தங்களின் பிழைப்பிற்காக, யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள் இந்தக் கேடுகெட்ட பாரப்பனக் கும்பல். அப்படி அழிந்தது தான் ஈழம்.

பாஸிஸ்ட் என்று அழைத்த அதே புலிகளுக்கு இன்று இவர்கள் வீர வணக்கம் செய்வது எதனால்?

உண்மையான தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை உணர்ந்துகொண்டு அதற்குத் தகுந்தார்ப்போல உத்திகளை மாற்றி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே நோக்கம்.

கோபாவேசத்தோடு உருவாகும் இளம் தமிழ் மக்களை, தங்களது வலையில் சிக்கவைத்து, அவர்களைக் காயடிப்பது தான் இந்த இயக்கத்தின் முழுநேரப் பணி.

அதாவது புரட்சி என்று எதும் வாராமல் பார்த்தக்கொள்வது தான் இவர்களிடம் இடப்பட்ட பணி.

தமிழ் மக்களே! பாரப்பான் உள்ள எந்தக் கட்சியிலும் சேராதீர். நட்போடு பழிகி வீழ்த்துவது தான் பாரப்பனீய வழிமுறை. இதை புத்தன் காலத்திலிருந்தே பார்க்கிறோமே!

வள்ளளாரோடு சேர்ந்து வள்ளளாரையும் பலிவாங்கியது பார்ப்பனீயம்.

சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் நடத்திய பேரணியில் 'புதிய ஜனநாயகம்' விற்க வந்தவரை, ஒரு இளைஞர் கூட்டம் சுற்றி வளைத்து, சரமாரியான கேள்வி கேட்டு மடக்க, விட்டால் போதும் என்று நடையைக் கட்டினார் அந்த சலவை செய்யப்பட்ட மூளைக்கார ம.க. இ. க. ஆசாமி!



Aranga Kanthasamy
2009-06-14 08:18:00
kanthanaar@hotmail.com

எனக்கென்னவோ இலங்கைப் பிரச்சனையில் expose ஆகிக் கிடக்கும் திராவிடத் தலைவர்களை காப்பாற்ற இந்த மாதிரி பிரச்சாரம் முடிக்கி விடப்பட்டிருக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது... மகஇக எதாவது செய்யட்டும் அவர்கள் ஒரு handful செஞ்சட்டைக்காரர்கள்.. கோடி கோடியாக காசில்லாதவர்கள் ஆனால் தமிழினித்திற்கு நான்தான் அண்ணாவி என்பவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்ல ஏன் வலிக்கிறது ??

Dr. V. Pandian
2009-06-14 06:15:00
porkkaiponds@yahoo.co.in

அரங்க. கந்தசாமி அவர்களே!
மணி. செந்தில் அவர்களின் கட்டுரைக்கு பதில் எழுதும்போது 'தீவிர அரசியல் பேச இது தளமல்ல' என்று கருத்துரைத்த அதே தோழர் தானே நீங்கள்?

நீங்களும் Expose ஆகி விட்டீரே! உங்களின் யோக்கியதை இது தானா?

ம.க.இ.க. என்பது ஒரு சிறிய குழு, காசில்லாதக் குழு. தி. மு. க. போன்ற கோடிகளில் புறளும் அண்ணாவிகளை விமர்சிக்கவில்லை என்றீர்கள். நீங்கள் கீற்றுவை தொடர்ந்து படித்துக்கொண்டு தானே வருகிறீர்? பிறகு எப்படி இப்படி அபத்தமாக எழுதுகிறீர்? ஓகோ! தமிழன் மனம் கவர்ந்த கியூபாவே, இலங்கைக்கு ஆதரவாகவும், ஒடுக்கப்படும் ஈழ மக்ளுக்கு எதிராகவும் ஐ. நா. வில் வாக்களித்தது போல, உங்களது 'கம்யூனிசத்தை' இப்போது தானையா நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

அட, நாசமாய்ப் போன வரட்டு (வர்க்க) 'கம்யூனிஸ்டுகளே'!

ஒருவன் சாகவேண்டுமானால், மலைப்பாம்பு விழுங்கியோ அல்லது சிங்கம் தாக்கியோ அது நிகழ வேண்டியதில்லை! பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத, காற்றில் பறக்கும் கிருமிகளால் கூட அது நிகழ்த்தப்படலாம்.

அப்படிப்பட்ட நச்சுக் கிருமிதான் ம.க.இ.க. என்பது. சிங்கம், பாம்பு போன்றவைகளிடமிருந்து பேராபத்து இல்லை. அவை கண்ணுக்குத் தெரிந்த அச்சங்கள். ஆனால், ம.க.இ.க. பற்றி அதிரடியான் அவர்கள் சொன்ன 'நச்' வரியை இங்கு நினைவு கொள்க..........

'எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.'



அரங்க கந்தசாமி
2009-06-15 12:43:00
kanthanaar@hotmail.com

///காற்றில் பறக்கும் கிருமிகளால்////
அய்யா.. பாண்டியன் அவர்களே... என் யோக்கிதை ஒரு புறம் இருக்கட்டும்.. நான் தளம் பற்றிய அன்று பேசியது தப்பிதமாக உங்களால் புரிந்து கொள்ளப் பட்டால் நான் என்ன செய்வது.. ஒருவர் ஒரு விசயம் பற்றிப் பேசும் போது அதைவிட்டு வெளியே எங்கெங்கோ விவாதம் செய்வது சொல்ல வந்த கருத்தையே சிதைப்பது ஆகும் என்பது எனது தாழ்மையான கருத்து,, அதனால்தான் அன்று அப்படி எழுதினேன்.. இங்கும் அதேதான்.. அதிரடியான் சொன்ன கருத்தை மட்டும் விவாதிப்போம்.. மற்றவை பின்னர் பார்ப்போம் என்பதுதான் நான் சொல்ல வருவது... சரி நீர் இப்போது சொல்வது கிருமி பற்றி... குழப்பம் என்ற கிருமி இருக்கிறதே அதை விட கொடிய கிருமி ஒன்றுமே இல்லை என்பது என் கருத்து.. உலகில் உள்ள மக்களை உழைக்கும் வர்க்கம் என்ற ஒரு பிரிவும், பிறர் உழைக்கா வர்க்கம் என்ற பிரிவும் என்று இரண்டு உள்ளதாகக் கருதுகிறேன்... அவர்களுக்கும் இருக்கும் முரண்பாடுதான் முதன்மையானது என்று நான் நினைக்கிறேன்..... இல்லை இனம்தான் என்பது உங்கள் நிலைபாடு... இருந்துவிட்டுப் போகட்டும்.. காலம் எல்லாவற்றுக்கும் பதிலை சொல்லி விடுகிறது என்பதுதான் நடைமுறை உரைகல்... நீங்கள் வசைபாடுவதால் என்ன பயன் என்பதுதான் என் கேள்வி.. வதைக்கப்படும் எந்த வித மனித இனத்திற்கு எதிராக எவன் வாக்களித்தாலும் உதவி செய்தாலும் அவன் மக்கள் எதிரி.. அவனை கம்யீனிஸ்டு என்று அழைப்பது கம்யூனிசக் கொள்கையே அவமதிப்பது போன்றது என்பதும் என் கருத்து.. எவனாவது கம்யூனிசம் கம்யூனிச நாடு என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி செய்தால் அவன் மக்கள் விரோதி என்றுதான் சொல்ல வேண்டும்.. எத்தனையோ மொள்ள மாரிகள் கம்யூனிச நாடு கம்யூனிசம் என்று பெயர் வைத்துக் கொண்டு இதைச் செய்தால் அவள் கம்யூனிஸ்ட் கிடையாது மொளள மாரிதான்..
அதனால்தான் சொல்கிறேன்.. இந்த உலகில் கம்யூனிச நாடு என்பது எங்கும் கிடையவே கிடையாது...
ஒரு நாள் உலகம் நீதி பெறட்டும் அன்று விசயங்கள் தெளிவுறட்டும்.. ஆனால் நீங்கள் சொன்ன படி கம்யூனிசம் வந்தால்தான் ஏற்றுக் கொள்வேன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது... காலம் பதில கூறும்....

mani
2009-06-15 02:37:00
fmvasanthy@gmail.com

நான் மணி...

புலிகளின் தலைமை பாசிசமாக இருப்பதும், அதனது அணிகள் தியாக உணர்வுடனும் இருப்பதும் அனைவருமம்
அறிந்த ஒன்றுதான். நடந்த போரில் இறந்த அணிகளுக்கு எந்த ஒரு ஜனநாயக உணர்வுள்ள இயக்கமும் வீரவணக்கம் செலுத்துவதுதான சரியானது. தலைமை ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தன்னைச் சுற்றி உள்ள அமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் தேர்வு செய்யாமல் தனக்கு வேண்டிய நபர்களையே வைத்து கட்டி இருந்தால், ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால், ஒருவன் ஒருவன் முதலாளி... பாடலாம்.. எல்லோரும் பாட முடியாது..

பிரபாகரன் தேசியத் தலைவரா... அந்த தேசிய இனத்தில் சோசலிச புரட்சியெல்லாம் பேசிய புலிகள், தமது விடுதலைக்கு பிறகு சாதி ஒழிப்பு பற்றி என்ன திட்டம் வைத்திருந்தார்... அதனை எப்படி செயல்படுத்துவோம் என்று எந்த வாக்கியமும் புலிகளிடம் ஏன் இல்லை.. கிழக்குப் பகுதியில் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டார்களா... தாய்த் தமிழகம் தாய்த் தமிழகம் என்று அங்கலாய்க்கின்றீர்களே... புலிகளால் அகதிகளாக்கப்பட்ட முசுலீம்கள் தமிழர்கள் இல்லையா.. ஒருவேளை யாழ் பிள்ளைவாள்களை விட தாழ்ந்த சாதியினர் என்பதால் விரட்டப்பட்டனரா...

ஆயுதப் புரட்சி பற்றி பேசுபவர்கள் இதுவரை ஆயுதம் எடுக்கவில்லை என்றும், இந்திய புரட்சி பற்றி பேசுவபவர்கள் தமிழக எல்லையை தாண்டவில்லை என்பதும் விமர்சனம் என்ற வகையில் அடங்காத்து. ஒருவேளை உங்களுக்கு புரியவைக்க இது கொள்கை சம்பந்தப்பட்டது அல்ல, பலம் மற்றும் எண்ணிக்கை அளவு சம்பந்தப்பட்டது எனக் கருதுகிறேன். உங்களைப் போலவே பதில் சொல்ல வேண்டுமென்றால், மணியரசனது தமிழ் தேசியம் மூன்று மாவட்டங்களை மாத்திரமே கொண்டுள்ளது என்றும், பெ.திக வின் அமைப்பு மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என்றும் வரையறுக்க‍லாம். ஆனால், அது விமர்சனம் என்ற வரையறைக்குள் வராத திட்டுகின்ற முறை மாத்திரமே..

ஆயுதம் எடுக்காத்து தவறுதான்... ஆயுத்த்தை மக்கள் சார்பாக நாங்கள் எடுப்போம் என்று மக•இக என்றைக்கும் சொன்னது இல்லை. புலிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்... அதுதான் அவர்கள் தோற்றதற்கும் முக்கிய காரணம். மக்கள் பார்வையாளர்களாக மாத்திரமே இருக்க தகுதியானவர்கள் என்ற அறிவு புரட்சி பற்றிய மேட்டிமைத்தனம் உங்களை இயக்குமென்றால் நீங்கள் விடுதலை அடைய முடியாது..புலிகளுக்கு மாத்திரமல்ல•. இந்திய மாவோயிஸ்டு இயக்கமும் நம்புகின்ற மாஒ வின் பொன்மொழி ஒன்று.. துப்பாக்கி குழாயிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது... உண்மைதான். உங்களுக்கு மாத்திரமல்ல•. முதலாளி வர்க்கத்துக்கும் அதிகாரம் அதிலிருந்துதான் பிறக்கிறது. தயவுசெய்து மீண்டும் படியுங்கள்.. துப்பாக்கி குழாயிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது... சித்தாந்தம் இல்லை...

சித்தாந்தம் இல்லாவிட்டால் என்ன ... என்ற உங்களது கேள்வி க்கு முதலில் பதில் சொல்வோம்..

mani
2009-06-15 04:27:00
fmvasanthy@gmail.com

இந்து மத்தை விட்டு வெளியேறுங்கள் என்று முதலில் சொன்னவர் அம்பேத்கார்தான் ... ஆகவே முதலில் நீங்கள் விமர்சிக்க வேண்டியது அவரைத்தான்... இருந்தாலும்... சாதியும் மதமும் வேறு வேறு என்று கருதுகின்றீர்களா.. பார்ப்பன இந்து மதம்தான் உள்ளடங்கிய நிலவுடமை சமூகம்தான் சாதியையும் காப்பாற்றி வருகிறது.. அதிலிருந்து வெளியேறுங்கள் என்பது மானமுள்ள ஒவ்வோரு சூத்திர, பஞ்சம் சாதியினருக்கும் புரிந்து இருக்க வேண்டிய உண்மை. தன்னைத் தவிர மற்ற சாதியினர் அனைவரும் தவறான முறையில் பிறந்தவர்கள் என தனது மத்த்தை சேர்ந்தவர்களையே திட்டுகின்ற மதம் பார்ப்பன இந்து மதம்தான்.. மானமுள்ள மனிதன் இந்த அவலத்தை எப்படிச் சகித்துக் கொண்டு தொடர்ந்து அந்த மத்த்திலேயே இருக்க முடியும்... இதில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பவர்களே... கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தலித் மக்களுக்கு கூட இட‌ ஒதுக்கீடு ம‌றுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டுதான் இருக்கிற‌து.. ஆனால் அவ‌ர்க‌ள் மான‌முள்ள‌வ‌ர்க‌ள் ஆக‌வேதான் த‌ம்மை ம‌ற்றும் த‌ம‌து தாயின் பிற‌ப்பைப் ப‌ழித்த‌ ம‌த‌த்தில் தொட‌ர்ந்து வாழ‌ விருப்ப‌மில்லாம‌ல் கிறித்த‌வ‌த்தை த‌ழுவின‌ர்... அத‌ற்காக‌ இட‌ ஒதுக்கீடு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ போதும் அம்ம‌க்க‌ள் அத‌ற்காக‌ வ‌ருந்த‌வில்லை.. மான‌மா ப‌ண‌மா என்று வ‌ரும்போது ம‌க்க‌ள் மான‌த்தை தேர்வு செய்கின்ற‌ன‌ர்.. காரிய‌ வாதிக்ள் ப‌ண‌த்தை தேர்வு செய்கின்ற‌ன‌ர்.

தேசிய‌ இன‌ங்க‌ளின் சிறைக்கூட‌ம்தான் இந்தியா என்ப‌து அனைத்து மா.லெ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தெரியும்.. இதில் தேசிய‌ இன‌ங்க‌ள் த‌னித்த‌னியாக‌ புர‌ட்சி செய்ய‌ வேண்டும் என்ற‌ மார்க்சிய‌ வ‌ரையறையை நான் வ‌லியுறுத்த‌வில்லை. உண்மையில் அப்ப‌டி ஏதும் இருப்ப‌தாக‌ நான் கேள்விப்ப‌ட்ட‌தில்லை.. ந‌டைபெற்ற‌தாக‌ ச‌ரித்திர‌மும் இல்லை. அப்ப‌டி சாத்திய‌ம் என்றால் தேசிய‌ இன‌ங்க‌ள் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தும் அப்ப‌டி ஒடுக்குகின்ற‌ தேசிய‌ இன‌மும் எதிரியாக‌ பாவிக்க‌ தேவை என்று க‌ருதுகிறேன். ..

எதிரி பார்ப்ப‌ன‌ இந்து தேசிய‌ம் என்றால் பிர்லா அம்பானி டாடா வின் ந‌ல‌னுக்கும் அர‌சுக்கும் எந்த‌த் தொட‌ர்பும் இல்லையா... இந்திய‌ தேசிய‌ம் என்ற‌ அர‌சின் இராணுவ‌ம் ம‌ற்றும் அர‌சிய‌ல் போலீசை எதிர்த்து எப்ப‌டி த‌ள‌ப்பிர‌தேச‌ம் அமைத்துப் போரிட‌ப் போகின்றீர்க‌ள்... அப்ப‌டிப்ப‌ட்ட‌ எதிரியை எதிர்த்து க‌ர்நாட‌கா ம‌ற்றும் ஆந்திர‌ ம‌க்க‌ளை எதிர்த்தும்தான் போரிட‌ப் போகின்றீர்க‌ளா...

mani
2009-06-15 04:56:00
fmvasanthy@gmail.com

ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமையை த்தான் மக•இக வலியுறுத்துகிறது. இதனை வலியுறுத்துபவர்கள் புலிகளை விமர்சிக்க கூடாதா... நல்ல நண்பன் என்பவன் குறைகளை சுட்டிக் காட்டுபவனாக இருப்பான்.. அதனை ஏற்க முடியாவிட்டால் வேறு நண்பனைத்தான் தேர்வு செய்வான்.. நயவஞ்சகனோ எல்லாத் தவறுகளையும் கண்டும் காணாத்து போல விமர்சிக்காது இருந்து விட்டு புதைகுழிக்குள் தள்ளி விடுவான்..அதனைத்தான் தமிழின அரசியலுக்காக ஒன்றிணைந்த அமைப்புகள் செய்துள்ளன•.. ஜெயல்லிதா தேர்தலுக்காகத்தான் ஈழத்தையும் சுயநிர்ணய உரிமையையும் பேசினார்... இன்றைக்கு பேசுகிறாரா... அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லித்தானே பெதிக பிரச்சாரம் செய்த்து.. காங்கிரசுக்கு போடாதீங்கன்னு மணியரசன சொன்னாரே அப்படின்னா தேர்தல புறக்கணிங்கன்னா அர்த்தம்.. பிஜேபி அல்லது அதிமுக வுக்கு போடு அப்படின்னு தானே அர்த்தம்... அவங்க எல்லாம் ஈழத்துக்கு ஆதரவானவஙகளா...

புலிகள் கோரும் தனி ஈழத்தை அடைந்தால் என்றைக்காவது ஒருநாள் தான் பிரதமர் பதவிக்கு வர நேர்ந்தால் காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டி இருக்கும்... அந்தச் சிக்கல் வரக்கூடாது என்பதற்காகவே எந்த அமைப்பு ஈழத்திற்காக போராடினாலும் ஜெயா எதிர்ப்பார். வாராது வந்த மாமணியாக அவருக்கு வாய்த்து வந்த்து ராஜீவ கொலை.. மக•இக புலிகளை விமர்சனம் செய்கிறது... கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை...இரண்டும் வேறு வேறு எனப் புரிகின்றதா..

ஒன்றுபட்ட இலங்கை என போலிகள் வரையறை செய்த்து போல மக•இக செய்தாக நிறுவ முடியுமா..

பேனர் பிடித்து தங்களது அரசியலை தங்களது அமைப்பை முன்வைத்துதான் மக•இக செயல்பட்டது... திலீபன் படத்தை போட்டுக் கொண்டு தாங்கள்தான் அத்தாரிட்டி என்றும் ஏதோ முல்லைத்தீவிலிருந்து கிளம்பி வந்த வீர்ர்கள் போலவும் நடந்து கொண்ட அமைப்பினரின் போலித்தனத்தை விட இந்த உண்மைத்தனம் சரிதானே.. நிற்க•. எல்லா அமைப்புகளும் ஊர்வலத்தில் பேனர் பிடித்துதான் வந்தார்கள்... பேனர் பிடித்தால்தான மக்களுக்கு உங்களது அரசியல் என்ன‍ எனத் தெரியும்... அதில் அரசியல் இருக்கிறதா... அல்லது வெறும் மனிதாபிமானம் உள்ளதா... அல்லது இன உணர்வு மட்டுமே உள்ளதா என்பது மக்களுக்கு தெரியும்.. அப்படி பேனர் பிடித்த்தால் தங்களை அவமதித்த்தாக மக்கள் யாரும் கருதவில்லை... தமிழ் இன உணர்வு பற்றி அரச்சு ஒன்றும் கவலைப் படாது என்பதும் அதன் வர்க்க நலனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால் தான் அவர்கள் பீதி அடைவார்கள் என்பது தெரிந்தும், இன உணர்வுக்கு காவடி தூக்குவதன் மூலம் நீங்கள் அரசுக்குத்தான் துணை போகின்றீர்கள்..

எல்லா அமைப்பும் தங்களது அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பினரிடமும் செல்ல வேண்டும்.. அதுதானே சரியானது... அந்த உணர்வுதானே இணைய்த்திலும நம்மை எழுத்த்த த்தூண்டுகிறது... அதனை மூளைச்சலவை என்றால் அப்படி சலவை செய்யப்படும் அளவில்தான் உங்களது மூளைக்கு லாஜிக் உள்ளது என்றால் அதற்காக உங்களது அரசியல் நிலப்பாடுதான் எவட்க்க‍ப்பட வேண்ட்டும்

mani
2009-06-15 05:39:00
fmvasanthy@gmail.com

//தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம்// இதனை எங்கே படித்தீர்கள் எனச் சொல்ல முடியுமா.. பாட்டாளி வர்க்கத்திற்கு தேசியம் என்பது சர்வதேசியம்தான்... இலங்கையின் தோட்டத் தொழிலாளியும், சென்னையின் ஐடி தொழிலாளியையும், கர்நாடகத்தின் சுரங்கத் தொழிலாளியையும், அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிப் தயாரிக்கும் தொழிலாளியையும் தேசிய இனம் ஒன்றிணைக்க முடியாது.. அவர்களை ஒன்றிணைப்பது அவர்களது எதிரி வர்க்கம்தான்... அந்த முறையில் அவர்கள் வர்க்கமாகத்தானே இணைய முடியும்.. வேறு எதாவது வழிமுறை அல்லது தேசியம் இருந்தால் சொல்லுங்கள்..உங்களுக்கு கூட தேசியம் என்பது எப்போதும் முதலாளி வர்க்கத்தின் கொரிக்கைதான் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பார்முலா மாதிரி சொல்ல்லாம்... ஆனால் விவாதித்து எளிய முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமே..

தமிழ் தேசிய எழுச்சியை பார்த்து மக•இக நடுங்குவது இருக்கட்டும்.. இந்தியா துளி கூட சட்டை செய்யவில்லை.. நரித்தனமான கருணாநிதியோ,, பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது நமது எதிர்போராட்டங்களைப் பார்த்து ஆட்சியைக் கவிழ்க்க சதி என்று கூட புலம்பிவர், எதற்கும் அஞ்சாமல் போட்டி உண்ணாவிரத்த்தை துவங்கினார்... ஏனென்றால் இது உணர்ச்சி பூர்வமானது மட்டுமே, உணர்வு (அறிவு)பூர்வமானது இல்லை என்ப‌து அவ‌ருக்கு தெரியும்.. ஆனால் நீங்க‌ள் இர‌ண்டையும் குழ‌ப்பிக் கொண்டு உங்க‌ளையும் குழ‌ப்பிக் கொள்கின்றீர்க‌ள். உண‌ர்ச்சியை உண‌ர்வாக‌ மாற்ற‌ அர‌சிய‌ல் சித்தாந்த‌ம் தேவை... அத‌த‌னை இன‌வாத‌ம் அளிக்க‌முடியாது... ஏன்னா ச‌ர‌க்கு அதுக்கு மேல‌ ஒன்னுமில்ல•.

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிப் பேச‌ என்ன‌ யோக்கிய‌தை இருக்க‌ வேண்டும்.. அவ‌ங்க‌ பினாமியாக‌ இருந்தாதான் பேச‌ணுமா... அவ‌ங்க‌ளோட‌ ஹோட்ட‌ல் ல‌ போய‌ சாப்பிட்டிருந்தாதான் பேச‌ணும்ஆ... புலி புலி ன்னு அலைஞ்சிருக்க‌ணுமா... இப்ப‌டி சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்த‌ புலிக‌ளோட‌ த‌னியுட‌மை போராட்ட‌மா மாற்றிடாதீங்க•

ஈழ‌ப் போராட்ட‌த்தை ம‌க•இக‌ கொச்சைப் ப‌டுத்த‌வில்லை.. அத‌னை புர‌ட்சித்த‌லைவியின் ஆசிக்காக‌ அனுப்பிய‌வ‌ர்க‌ள்தான் அந்த‌ வேலையை செய்துள்ள‌னர். இத‌னை ஒரு கால‌த்தில் ரா கூட‌ செய்த‌தாக‌த்தான் நெடுமாற‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் க‌ருத்து வைத்துள்ள‌ன‌ர்.. அத‌ற்கு த‌மிழ‌னைத் த‌லைவ‌னாக‌ப் போட்டால் வேலை முடிந்து போகும் என்று க‌ருதுவ‌ப‌வ‌ர்க‌ளும் உண்டு... அத‌ற்காக‌ ரா அமைப்பை குறை சொல்ல‌க் கூடாது என்றெல்லாம் கொடி பிடிப்பீர்க‌ள் போல‌ உள்ள‌தே...

த‌மிழ‌ர்க‌ளே சிந்தியுங்க‌ள் என்று கூறித்தானே த‌மிழின‌ வாதிக‌ள் என்ற‌ பெய‌ரில் உல‌வும் அர‌சிய‌ல் ஓட்டாண்டிக‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ முடியும்... த‌மிழ‌ன் ஒரு தேசிய‌ இன‌ம்தானே... அப்ப‌டி இல்லைன்னா நீங்க‌ வேணும்னா வேறு மாதிரி சொல்லிக்கோங்க•..

பொள்ளாச்ச‌ ம‌காலிங்க‌த்தை விம‌ர்சித்த‌த‌ற்காக‌ அருந்த‌தி இன‌த் த‌லைவ‌ரை மேடையை விட்டு இற‌க்கிய‌ பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர் நெடுமாற‌ன் ப‌ற்றியா சொல்கின்றீர்க‌ள்... அவ‌ரோட‌ ம‌திமுக‌ விச‌ பாம‌க‌ சேர்ந்த‌துக்கு அத‌ மாதிரி எதுவும் சாதிப்ப‌ற்று இல்ல‌ன்னு நினைக்கிறேன்... த‌மிழின‌ உண‌ர்ச்சிதான‌ இணைத்த‌து அவ‌ர்க‌ளை... அந்த‌ அர‌சிய‌ல்ல‌ அதுக்கு மேல‌ என்ன‌ இருக்கு... ச‌ரி இர‌ண்டாவ‌து கூட்ட‌ணில‌ பிண‌த்தைக் குறைக்க‌ பெதிக‌ அதிமுக‌ வை ஆத‌ரித்த‌து எப்பா புல்ல‌ரிக்கு... அமெரிக்கா கேட்டு ந‌ட‌க்காத‌து... ஐநா சொல்லி நிறுத்தாத‌ போரு புர‌ட்சித்த‌லைவி நாப்ப‌து இட‌த்துல‌ ஜெயித்தா ந‌ட‌க்கும்னு எந்த‌ குழ‌ந்தைட்ட‌ வேண்ம்னாலும் சொல்லிப் பாருங்க•.. வாயால‌ சிரிக்க‌ மாட்டாங்க•.. 2001 எல‌ங்ச‌ன்ல‌ திமுக‌ வை ஆத‌ரிச்சு சைதை ல‌ பிரச்சார‌ம் ப‌ண்ணின‌ அவ‌ங்க‌ கூட்ட‌ணியான‌ பிஜேபி ஐ எதிர்த்து ம‌யிலாப்பூர்ல‌ வேலை பார்த்த‌ மொஒத்த‌ திட்ட‌த்த‌ யாரை விட்டு சிர்க்க‌ வைக்கிற‌தாம்.



Dr. V. Pandian
2009-06-15 05:55:00
porkkaiponds@yahoo.co.in

கந்தசாமி அவர்களே!
உழைக்கும் வர்க்கம், உழைக்கா வர்க்கம் என்று இருப்பது உண்மைதான். உழைக்கும் வர்க்கத்தை உழைக்கா வர்க்கம் நசித்து வாழ்கிறதென்பதும் உண்மைதான். இது ஒவ்வொரு இனத்திலும் உள்ள முரண்தான். இதை யாராலும் மறுக்க முடியாதே!

ஆனால், உலகலாவிய நிலையிலோ அல்லது ஒரு பல்தேசிய நாட்டிலோ, உழைக்கும் வர்க்கம் இனத்தை மீறி ஒன்றிணையவில்லை என்பது, ஏற்கனவே நிரூபனமான விடயம் தான்.

சான்றாக காவிரி நதி நீர் இடைக்கால தீர்ப்பின்போது நடந்த இனக்கலவரத்தில் அடிபட்ட தமிழன் எல்லாம் எளிய உழைக்கும் மக்கள் தான். அடித்த கன்னடனும் எளிய உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன் தான். மேல்தட்டு வர்க்கம் இதில் நேரிடையாக ஈடுபடவில்லை. JVP என்ற சிங்கள உழைக்கும் மக்கள் கட்சிதான், தமிழனுக்கு எந்த ஒரு சலுகையும் கொடுக்கக் கூடாதென்று அரைகூவல் விடுகிறது. இது போன்ற சன்றுகள் ஆயிரமாயிரம். ஆக, வர்க்க விடுதலைக்கு முன்பு இன விடுதலை தான் முதன்மையானது என்பது காலத்தாலும் தீர்க்கப்பட்ட சிக்கல் தான்.

நீங்கள் சொன்னது போல கம்யூனிஸ்டு என்று எவனும் இன்று கிடையாது தான்.

உங்களோடு உரையாடுவதுபோல வேறு சிலவற்றையும் அசை போடுகிறேன். கார்ல் மார்க்ஸ் இல்லை என்றால், தமிழர்கள் தங்களுக்கான நிகரமை சமூகம் அமைத்துக்கொள்ளவே முடியாதா?

திருக்குறளின் படி ஒவ்வொருவரும் வாழ உறுதிபூண்டால், அதைவிட சிறந்த சமுதாயத்தை மார்க்ஸிய முறைமையால் கூட உருவாக்க முடியுமா?

நேற்றய மேற்கத்திய கருத்தியல்களை இறக்குமதி செய்வதைவிட, தமிழரது ஒப்பற்ற அறவழிச் சிந்தனைகள் படி நடந்தாலே, அனைவருக்குமான அன்பான சமூகத்தைக் கட்டமுடியுமே!

உலகின் மூத்த, அறிவார்ந்த, அறம்சார்ந்த தமிழ் சமூகம் தனது சொந்த பொக்கிஷங்களை ஆய்வு செய்து மீட்சி பெற எண்ண வேண்டும்.

பாரப்பனீயத்தால் கொடூரமாக, திட்டமிட்டு, சிதைக்கப்பட்ட மார்க்ஸியத்திலிருந்து, தமிழரை விடுவிக்க குறள்வழி வாழ்முறை ஒரு நல்ல மாற்று.



mani
2009-06-15 06:08:00
fmvasanthy@gmail.com

ததேபொக உடன் பெதிக சேரக் காரணமான அரசியல் தேசியம் இல்லையா... அது இல்லாத வேறு என்ன•.
இந்திய மேலாதிக்கத்தை பெதிக ஏற்றுக் கொண்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத மணியரசன் அவர்களை கூட்டணி போட்டுக் கொண்டு காங்கிரசுக்கு போடாதீங்கன்னா என்ன அர்த்தம்... ஏங்க மக்களப் பத்தி என்ன நினைக்கிறீங்க•.. அவ்வளவு அடிமுட்டாளாகவா மக்கள் இருக்குறாங்க•..

அதே மணியரசன் புலிகளை வெளியுறவுக் கொள்கை தவறு என்றும் அது தங்களது எதிர்கால திட்டத்திற்கு இடையூறு என்று தெரிந்தும் தமிழக தமிழர்களின் சார்பாக முடிவு எடுக்கும் நிலையில் இருந்து அதனை பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துதான் புலிகளை ஆதரிக்கிறாரா... அப்படி தமிழக மக்கள் சார்பாக முடிவெடுக் அனுமதி தந்தவர்கள் யார்..

நெடுமாறன் பற்றி தனியாக சொல்ல என்ன இருக்கிறது... எதைத் தின்றால் ஈழம் கிடைக்கும என்ற நிலைமைதான்... நல்ல வேளை இன்னொரு வளர்ப்பு மகன் இருந்திருந்தால் ஈழம் கிடைக்கும என்பதற்காக சாம்பார் வாளியை தூக்க இவரும் வீரமணியும் போட்டி போட்டுக் கொண்டிருந்து இருப்பார்கள்... வைகோ பாயாச வாளியை எடுத்து ஆயிரம் வாலாவை பற்ற வைக்க மணியரசனை அழைத்திருப்பார். இப்படி சிறிய இடைவெளி காண்பித்தாலும் பத்த வைத்தவனும் வாளி தூக்கியவனும் கொள்கையை தங்களுக்குள் சமரசம் செய்துதானே இணைந்து இருக்கிறார்கள்... அப்படி ஐக்கிய முண்ணனி கட்டலாம் என்று மா ஒ வை துணைக்கு அழைப்பீர்கள் எனத் தெரியும்... ஃஆனால் எந்த அடிப்படையில் இணைந்தீர்களோ ல்லது எந்த அடிப்படையில் கட்சி ஆரம்பித்தீர்களே அதையே இழந்து கூட்டணி அமைப்பதை இப்போதுதான் கேள்விப் ப்ப‍டுகிறேன்...

இந்த‌ப் போர் மாத்திர‌ம‌ல்ல‌ உல‌க்போர்க‌ள் கூட‌ ச‌ந்தையை ம‌றுப‌ங்கீடு செய்வ‌த‌ற்காக‌ த்த‌த‌ம் நாட்டு ஆளும்வ‌ர்க்மான‌ முத‌லாளி வ‌ர்க்க‌த்திற்காக‌ ந‌ட‌த்திய‌ யுத்த‌ம்தான்.. இந்திய‌ அர‌சு என்னைக்கும் அடித்த‌ட்டு வ‌ர்க்க‌த்தை ஆளும் வ‌ர்க்க‌மாக‌ வைத்திருக்க‌வில்லை. அத‌ற்கு ஒரு புர‌ட்சி தேவை. அந்த‌ப் புர‌ட்சிதான‌ உல‌கின் அனைத்து ஜ‌ன‌நாய‌க‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும‌ இந்திய‌ ஆத‌ர‌வைப் பெற்றுத்த‌ரும். இல்லாவிட்ல் அவ்வ‌ப்போது இந்திரா த‌ந்த‌ ஆத‌ர‌வு போல‌த் தோன்றும் நெடுமாற‌னுக்கு.. கேர‌ள‌ ம‌க்க‌ள் க‌ன்ன‌ட‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள் என‌ அனைவ‌ரும் ஆரிய‌ர்க‌ளா... அப்புற‌ம் அங்கெல்லாம் அய்ய‌ன் காளியும், சிறிசிறீ போன்றோரும் தோன்ற‌வில்லைஆ... இன‌வாத‌ம் ய‌தார்த்த‌ உண்மைக‌ளைக் கூட‌ பார்க்க‌வோட்டாம‌ல் த‌டுக்கின்ற‌தா..

பார்ப்ப‌ன‌ இந்திய‌ அர‌சு வித‌ர்பா கூலி விவ‌ப‌சாயிக‌ளை கைவிட்ட‌தே அத‌னை எப்ப‌டி பார்க்கின்றீர்க‌ள்... பெரியார் அணையில் காவிரியில் எல்லாம் த‌லித் ம‌க்க‌ளின் ந‌ல‌ன் இல்லையா... அந்த‌ பிர‌ச்சினைக‌ளில் இந்திய‌ அர‌சாங்க‌மே மாயாவ‌தி போல‌ உல்டாவாக‌ மாறி விட்ட‌தா..


mani
2009-06-15 08:34:00
fmvasanthy@gmail.com

பார்ப்பன இந்திய அரசு கேரள மக்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய்வில்லையா... ஆந்திர மக்களுக்கு, மராட்டிய மக்களுக்கு என்ன செய்த்து... ஒரிசா மக்களுக்கு அல்லது தமிழினத்தை விட கொடுரமானா முறையில் ஒடுக்கப்படும வடகிழக்கின் மக்களுக்கு,,, அதில் பாதி கூட தமிழினத்திற்கு நேர்ந்து விடவில்லை... ஆக இதனை தீர்மானிப்பது பாதிக்கப்படும் வர்க்கம் ஆளும் வர்க்கமா அல்லது அடக்கப்படும் வர்க்கமா என்பதுதான்...

க‌ட‌லில் சாவும் மீன‌வ‌ன் வ‌ச‌தியான‌வ‌ன் ம‌ற்றும் செல்வாக்காஆன‌ டாடா போன்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால் ஒருமாதிரியும் டானியேல் போன்ற‌ பேர் தெரியாதாவ‌ர்க‌ளாக‌ இருந்தால் ஒரு மாதிரியும்தான் ந‌ட‌க்கிற‌து அர‌சு... இத‌னை போலீசு ஸ்டேஷ‌ன் போனாலே புரிந்து கொள்ள‌லாம்...

ந‌ட‌ப்ப‌து ஆரிய‌ திராவிட‌ ப‌யுத்த‌ம‌ல்ல•.. ஆரிய‌ உண‌ர்ச்சி என்ப‌து இன்றைய‌ நில‌பிர‌புத்துவ‌ அழிவின் எச்ச‌த்தில் கூட‌ கிடைக்க‌ வாய்ப்பில்லை... அத‌ன் ந‌ல‌ன் பொருள் சார்ந்த‌துதான் அன்றும் இன்றும்... அன்று ஆரிய‌னுக்கு தாஸ்த்யூஸ்க்க‌ளை அழிக்க‌ அவ‌ர்க‌ளிட‌ம் சொத்து இருந்த‌து... க‌ட‌லையே ந‌ம்பி வாழும் ம‌க்க‌ளுக்கு க‌ட‌ல்தானே சொத்து... த‌னி ஈழ‌ம் என்ப‌து த‌ங்க‌ள‌து அக‌ண்ட‌ பார‌த‌ க‌ன‌வில் ம‌ண்ணை அள்ளிப் போடும் என‌ப் பாப்பார‌ப் ப‌ய‌லுக‌ளுக்கு தெரியும்... இஙல‌ங்கை கூட‌ ஒரு மாநில‌மாக‌ இருக்க‌ணும்கிற‌துதான் அவ‌ங்க‌ நினைப்பு ... அங‌வ‌ங்க‌ள‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ஈழ‌ம் வாங்க‌ நினைத்த‌ தேசிய‌ வாதிக‌ளும் உண்டு...

மீன‌வ‌ர்க‌ளை கொல்வ‌து என்ப‌தால் முத‌லாளிக்கு என்ன‌ இலாப‌ம் என்ற‌ கேள்விக்கு அர‌சிய‌ல் ரீதியான‌ பொருளாதார‌ ரீதியான‌ ச‌ந்தை ரீதியான‌ கார‌ண‌ங்க‌ள் ப‌ல‌ இருந்தாலும் உங்க‌ள‌து பார்வை போல‌வே த‌மிழ‌ன் என்ப‌த‌ற்காக‌ கொல்லுகிறார்க‌ள் என்ப‌தையே ஒத்துக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்... ஏன் கொல்கிறான்... த‌மிழ‌ன் என்ற‌ முறையில் மீனை க் கூட‌ பிடிக்க‌ வ‌ந்தால் சுட்டுக் கொல்வேன்... ஈழ‌த்திற்கா உத‌வுகிறாய் என்ற‌ தாய்த்த‌மிழ‌க‌த்தை மிர‌ட்டும் சிங்க‌ள‌ பாசிச‌ அர‌சு அந்நாட்டு சிங்க‌ள‌ உழைக்கும் வ‌ர்க்க‌த்தையா பிர‌திநிதித்துவ‌ம் செய்யும்... அது பிர‌திநிதித்துவ‌ம் செய்யும் ப‌சில‌ குடும்ப‌ங்க‌ளுக்கும் ந‌ம‌து நாட்டு ஆளும் வ‌ர்க்க‌ குடும்ப‌வ‌ங்க‌ளுக்கும் தொட‌ர்பு இல்லை என்றா நினைக்கின்றீர்க‌ள்... இர‌ண்டு வீட்டுப் பெண்க‌ளும் ஷாப்பிங் போவ‌த‌ற்கு சென்னை புர‌சைவாக்க‌ம் ப‌குதி க‌டைக‌ளில், புக் லேண்டில், சிட்டி சென‌ட‌ரில் ஸெபென்ச‌ர் பிள்ஆசாவில் ப‌ல‌ முறை பார்த்துள்ளேன்... அவ‌ர்க்ள அப்ப‌டி வ‌ருவ‌தும் இவ‌ர்க‌ள் அங்கு டூர் போவ‌தும் சும்ம‌மா சுற்றிப்பார்ப‌க்க‌த்தாஃன் என்றால் ந‌ம்புகிறீர்க‌ளாஃ...மீன் உல‌க‌ச் ச‌ந்தையின் முத‌லாளிக‌ளுக்கு எதிரான‌ சிறு மீன‌வ‌ர்க‌ளை ஒழிப்ப‌து என்ற‌ திட்ட‌மு த‌னி... ந‌க‌ரை அழ‌குப‌டுத்த‌ த‌னி.... கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரை ப‌ற்றிய‌ ஆராய்ச்சி பார் புளூட்டோனிய‌ம் த‌னி... அத‌னை தாரை வ‌ராக்க் உள்ள‌ அம்பானி த‌னி

Dr. V. Pandian
2009-06-15 08:22:00
porkkaiponds@yahoo.co.in

ம.க.இ.க எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத, பார்ப்பனீய, சீரழிவு இயக்கம் என்பதனை, இந்த மணி என்ற தோழர் எழுதிய முதல் பத்தியை மட்டும் விமர்சனம் செய்து நிருத்திவிடலாம்.

பாஸிச புலிகளுக்கு வீரவணக்கம் எதற்கு என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதிலைப் பாருங்கள்.

.........."புலிகளின் தலைமை பாசிசமாக இருப்பதும், அதன் அணிகள் தியாக உணர்வுடன் இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்".............

அப்படி என்றால் முஸோலினி மட்டும் பாஸிஸ்ட் ஆனால் அவனது படைகள் உத்தமர்கள் என்று கொள்ளலாமா?

ஹிட்லர் மட்டும் நாஸிஸ்ட் ஆனால் அனது படைகள் உத்தமர்கள் என்று கொள்ளலாமா?

தங்களின் சந்தர்ப்ப வாதத்தை நியாயப்படுத்த எப்படியெல்லாம் தகிடுதத்தம் போடுகிறது பாருங்கள், இந்த ம.க.இ.க.

ஈழவர் என்ற தாழ்த்தப்பட்ட, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், ஒரு சிறிய குழுவாயிருந்து தொடங்கி, இத்தனை ஆயிரம் படைவீரர்களைக் கொண்டு, முப்டைகளையும் கொண்ட ஒரு வலிமையான, கட்டுக்கோப்பான, ஒழுக்க நெறிகளுடன் கூடிய, உலகமே மெச்சும் ஒரு ராணுவத்தை, தான் ஒரு பாஸிச வாதியாகவும் மற்ற உறுப்பினர்கள் உத்தமர்களாகவும் கொண்டு, 35 வருடகாலமாக, பேரழிவுகளைத் தாக்குப் பிடித்து இயங்கும் ஒரு இயக்கமாக உருவாக்கி இருக்க முடியுமா?

ஹிட்லர் ராணுவத்தில் இருந்த பெரும்பாண்மையினர் அவனது பாசிச, நாசிச கொள்கையோடு ஒத்துப் போன 'ஆரியர்கள்' தான். அதிலும் 'சில' நல்லவர்கள் இருந்தனர் என்பது வேறு விடயம்.

பிரபாகரன் ராணுவத்தில் மேல்சாதி ஆதிக்கம் என்பதே இல்லை. உண்மையைச் சொன்னால், இந்த இயக்கத்தில் இடம் பெற்ற பெரும்பாண்மையினர் பலப்பல கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் தான். ஆக, இங்கு பாஸிசத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகளே இல்லை. ஹிடலர் ஒரு பேரினவாதி. ஜெர்மனியின் யூத சிற்றினத்தை அழித்தான். பிரபாகரனின் இனம் ஒரு சிற்றினம். இங்கு பாஸிச சிங்களவர்களை எதிர்த்து தான், தமிழினம் தற்காப்புப் போர் நடத்தியது. உண்மை இவ்வாறு இருக்க, புலிகளைப் பாஸிஸ்ட் என்று பார்ப்பனீய சக்திகள் அழைக்கின்றன. ம.க.இ.க. வும் அழைக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!

அடுத்ததாக......

பிரபாகரன் தனது இயக்கத்தை ஜனநாயக ரீதியாக கட்டமைக்கவில்லையாம். எவ்வளவு அபத்தம் பாருங்கள் தோழர்களே! ஒரு ராணுவ இயக்கத்திற்கு கொள்கை மீதும், தலைமை மீதும் விசுவாசம் தான் முக்கியம். இது ஒரு பொதுவான விதி. ஆனால், இந்தியாவும், இலங்கையும் புலிகளை முற்றாக அழிக்க அன்றிலிருந்து இன்றுவரை அத்துனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளபோது, இந்த இயக்கத்திற்கு இருந்த நெருக்கடிகள் எத்துனை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இங்கு போராளிகளின் விசுவாசமும், அற்பணிப்பும் தான் முக்கியம்.

ஜனநாயகம் ஒரு வெற்றி பெரும் கருத்தாக்கம் என்றால், தமிழ் நாட்டில் 'திராவிட முன்னேற்ற' என்ற சொல்லாட்சியுள்ள பெரிய கட்சிகள் மட்டும் இப்போது நான்கு உள்ளன. இது ஏன் என்று அந்த மணி மரமண்டை பதில் சொல்லுமா? அது மட்டுமல்ல, இந்த நான்கு கட்சிகளும் ஈழம் போன்ற பொதுவான சிக்கல்களை விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டதில் கூட ஒற்றமையாக பங்கேற்பதில்லையே!

ஜனநாயகமாம், வெங்காயம்!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் ஜனநாயகம் தான் தமிழர்களை ஒடுக்குகிறது. கன்னடர்களின் ஜனநாயகம் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. இதேபோலத் தான் மலையாள, தெலுங்கு, இந்தி ஜனநாயகங்களும்.

இந்த அற்ப, வரட்டு (ஏய்ப்பு) சிந்தாந்தவாதி, தேசியத் தலைவர் பிரபாகரனை, உலகின் ஒப்பற்ற மாவீரன் பிரபாகரனை, ரஜினி என்ற பேப்பர்க் கத்திக் குப்பையோடு ஒப்பிடுகிறது பாருங்கள்.

அடச்சீ........ நீங்களெல்லாம் மனிதர்களா? உங்களுக்கெல்லாம் ஞாய சிந்தனையே சற்றும் இல்லையா?

அடச்சீ.... மனிதப் பதர்களே!

இந்த அற்பனுக்கு பதிலாக இவ்வளவு எழுதியதே அதிகம்.


PORAMBOAKKU
2009-06-15 09:32:00
puramboakku@gmail.com

ஈழத்திலே உள்ள தமிழர்களின் நிலை மிகவும் கொடுமையானது. அவர்கள் துயர் துடைக்க இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் ஆதரவை திரட்டுவதுதான் சரியான வழி.

நீங்கள் ராஜஸ்தானுக்கோ, வங்காளத்துக்கோ சென்று அங்கே உள்ளவர்களிடம் , "வன்னியில் மக்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள்" என்று கூறுங்கள், வருத்தப்பட்டு அனுதாபப்படுவார்கள். "அந்த மக்களை விடுவிக்க ஆதரவு கொடுங்கள்" என்று கேளுங்கள், ஆதரவு தருவார்கள்.

இந்தியாவில் எங்கும் உள்ள சாமானிய மக்கள் மனசாட்சி உடையவர்கள். அவர்கள்தான் இந்தியாவின் இதயம் போன்றவர்கள்.

இந்தியா தனிப்பட்ட சிலரால் உருவாக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள மக்கள் ஒரே வகையான குணாதிசயம், குறிக்கோள், பிரச்சினைகள் உள்ளவர்களாக இருப்பதால் உருவானது.

இந்தியா அதன் 115 கோடி மக்களின் இதயப் பிணைப்பால் நிலை நிறுத்தப்படுகிறது.

ஆனால் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல, மக்கள் உருவாகிய இந்தியாவை தங்கள் சுய நலத்துக்கு அரசியல் வாதிகள் பயன் படுத்துகின்றனர்.

இன்று இந்திய நாட்டால் அதிக பலன் பெறுவது சொக்கத் தங்கங்களும், தானைத் தலைவர்களும், அம்மையார்களும்தான். ஏன், சில "தோழர்கள்" கூட புறங்கையை நக்க ஆரம்பித்து பல காலம் ஆகி விட்டது.

இவர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பற்ற, மக்களை நேசிக்கும் சுயநலம் இல்லாத சிலர் முன் வர வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநிலமும் தனித்து இயங்க முடியாது. மராத்தாவில் ஒரு குடும்ப வெறிக் கும்பல் பிற மாநிலத்தவர் மும்பைக்குள் வரக் கூடாது என்று வன்முறை செய்கிறது.

ஆனால் மும்பை பற்றி எரிந்த போது, அந்த குடும்பக் கும்பல் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி முடங்கிக் கிடந்தது.

பிற மாநிலத்தவர் மும்பையில் வேலை செய்யக் கூடாது என்றால், பிற மாநிலத்தவர் பதிலுக்கு "மும்பையில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம்", என்றால் மும்பயில் தயாரான பொருட்களை எங்கு கொண்டு போய் விற்ப்பார்கள்?

"தமிழ் நாட்டை தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி! "என்றார் அண்ணா துறையார். எங்கே தட்டினால் தங்கமும் வெள்ளியும் கிடைக்கும் என்றும் கூறியிருந்தால் நல்லது. Iron ore is received from JAARKANT, Aluminium ore bauxite is received from ORISSA. The coal reserves in Neyveli are fastly depleting, even now Coal for Tutucorin power plant is received from Orissa. We receive material from other states- make car , trucks and sell it to other states, thus we get gainful employment.

There is no support for the divisive ideas from the tamil nadu public!

ramakrishnan
2009-06-15 10:46:00
pichumani@live.com

மக இக காரர்களே...நீங்கள் புரட்சிக்கு தேதி குறித்துவிட்டு கூப்பிடுங்கள். அதுவரை புலிகள் கோலி குண்டு விளையாடட்டும்.முடிந்தால்... உங்கள் சர்வதேச கம்யூனிச தலைமயிடம் பேசி விட்டு... கள்ளத் தோணியோ நல்ல தோணியோ ஏறி...ஈழத்திற்குப் போய்...கம்யூன்ஸ்ட் புரட்சி செய்து ஈழ விடுதலை பெற்றுத் தந்து விட்டு... அப்படியே நாகாலாந்து போய்... அங்கும் புரட்சி செய்துவிட்டு வாருங்கள்...உங்களைத் தடுக்க யார்? நீங்கள்தான் அவாளுக்கும் சேர்த்து புரட்சி செய்பவர்கள் ஆயிற்றே?

Aranga. Kanthasamy
2009-06-16 12:36:00
kanthanaar@hotmail.com

புலிகளின் தோல்வி, இலங்கைப் பிரிவதை விரும்பாத இந்தயா ஒரு வேளை காசுமீர், வடகிழக்கு அசாம் போன்றவை தனி நாடு என்ற கோரிக்கைகளுக்கு அது வித்திடுமோ என்ற காரணத்தால் தடை போடும் ஆளும் வர்க்கம், ஆகியவை பற்றிய நீண்ட ஆய்வு ஒன்றை கீற்று வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைய விட்டாலும், இலங்கையில் பலியான லட்சசோப லட்சம் தமிழ் உயிர்கள், முடமாகிப் போன லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் அதை மௌனமாகப் பார்த்து தடுக்கத் தவறிய இந்த உலகம்... நினைத்தாலே ஈரக் குலையை நடுங்க வைக்கிறது.. உலகம் எங்குமே மனிதமும் மனிதாபிமானமும் செத்து விட்டதோ என்று குமுறத் தோன்றுகிறது... எத்தனை அதி பயங்கர உலகத்தில் வசிக்கிறோம் என்ற பயமும் பீதியும் தோன்றுகிறது...

mani
2009-06-16 02:40:00
fmvasanthy@gmail.com

டாக்டர் பாண்டியன் நான் மணி... எனக்கு பதில் எழுத உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டது துரதிர்ஷடவசமானது..

பாசிசம் என்பது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை இயக்குகின்ற சித்தாந்தம் என்று எங்காவது நான் சொல்லி உள்ளேனா.. பிறகு எப்படி நான் சொன்னதை வைத்து ஹிட்லர் ன் நாசி மற்றும் முசொலினியின் பாசிச இயக்கத்தோடு ஒப்பிட்டீர்கள்... தலைமை என்ற அதாவது அமைப்பு முறையில் பாசிசம் உள்ளது என்பதுதான் விமர்சனம்... பிரபாகரனை நான் ரஜினி ரசிகர் போல விமர்சனம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை... நீங்கள் அப்படி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அவர் எனக் கருதுவதால் ரஜினி யோடு மட்டுமல்ல•.. எம்ஜிஆர் ஓடு கூட ஒப்பிடலாம்...

ஹிட்லர் குரூப்பில் நல்லவர்களை தேடும் சந்தர்ப்பவாதியே... அந்த இயக்கத்தில் நோக்கமே ஆரிய மேலாதிக்கம்.. அதில் உடன்பட்டுச சேர்ந்த நல்லவன் எப்படி இருப்பான் னு எனக்கு தெரியலையே.. இது டாக்டர்கள் கண்ணுக்கு மாத்திரமே தெரியும் ஆரோக்கியமா..

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தலித் மக்கள் அதிகம் பொறுப்பில் இருந்திருந்தால் கிழக்குப்பகுதியின் தலித் மக்கள் ஏன் அதில் சேரவில்லை.. மாற்று இயக்கங்களையும் சில துரோகிகளையும் நாடினார்கள்...அடுத்து அமைப்பில் களப்பணி ஆற்ற எல்லா சாதியும் இருந்த்து என்ற விபரத்தை விட அவர்களது செல்வாக்கு அதிகமிருந்தால் ஏன் சாதி ஒழிப்பு பற்றி தங்களது திட்ட அறிக்கையில் புலிகள் ஏதும் சொல்லவில்லை...

ஜ‌னநாயகத்துக்கு விளக்கமாக தலைமை மீது விசுவாசம் என்று சோன்ன உங்களது அடிமைப்புத்தியை அல்லது திமுக அதிமுக பாணி ஜனநாயக்த்தை என்ன என்று சொல்வது.. இதை வைத்தா விடுதலை இயக்கம் வெற்றி பெற முடியும்.. இராணுவ இயக்கம் என வரையறுத்து விட்டு அப்புறம் என்ன கொள்கை அது.. ஈழ விடுதலை அதாவது யாரைப் பயன்படுத்தியாவது எவன் தாலிய அறுத்தாவது ஈழ விடுதலை இதான•.. இப்படி பலவற்றை இழந்து ஆதரவு திரட்டாமல் செய்தால் உலக நிலைமைகள் ஆதரவு சக்திகள் துரோகிகள் என ஆராய முடியாமல் போவதும் தோற்பது ம் நிகழும்..

தலைமைக்கு கட்டுப்பட வேண்டும்தான்... தலைமை சரியாக இயங்குகிறதா என்பதை அணிகள் தெரிந்து கொள்ள ஒரு சித்தாந்தம் தேவை.. அந்த சித்தாந்தமும் அதனை பயன்படுத்த குறைந்த பட்சம் தலைமை முடிவு பற்றி கருத்து சொல்ல ஒரு ஜனநாயகமும் அமைப்பில் தேவை... ஆஃனால் பெரும்பான்மைதான் முடிவு செய்யும்.. இதுதான் உலக இயற்கை..இந்தியாவில் ஓட்டுப் போடுவ‌தைத் தாண்டி ஜ‌ன‌நாய‌க‌ம் இருப்ப‌தாக‌ என‌க்கு தெரிய‌வில்லை... ஒரு வேளை உங்க‌ளுக்கு தெரிந்தால் எப்ப‌டி என்று சொல்லுங்கள்.

எண்ப‌துக‌ளின் ம‌த்தியில் ரா அமைப்பு ஆயுத‌ப்ப‌யிற்சியை டெக்ராடூர‌னில் புலிக‌ளுக்கு பிர‌த்யேக‌மாக‌ வ‌ழங்கிய‌ போதும், அவ‌ர்க‌ள‌து ஆலோச‌னையை கேட்டு இந்திய‌ மார்க்சிய‌ லெனிய‌ இய‌க்க‌ங்க‌ளை ச‌ந்திப்ப‌தை த‌விர்த்தை வைத்தும் மாத்திர‌ம் வைத்து போராளிக‌ளை நாங்க‌ள் ம‌திப்பிட‌வ‌தில்லை

mani
2009-06-16 04:31:00
fmvasanthy@gmail.com

அன்பு பாண்டிய்ன்

பார்ப்பனீயம் மக•இக வை இயக்கியிருந்தால் சாதி ஒழிப்பை எப்படி நிறைவேற்றுவோம் என்று தங்களது திட்டத்தில் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்... என்ன செய்ய புலிகளின் திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி ஏதும் இல்லையே .... ஒரு வேளை கிளிநோச்சி ம் யாழ் பகுதியிலும் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதா... யாழ்ப்பாண‌த்துப் பிள்ளைமாரெல்லாம் க‌ல‌ப்பு ம‌ண்த்துக்கு த‌யாராகி விட்டார்க‌ளா..

ரா ப‌ற்றி உங்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு தெரியுமா.. புலிக‌ள் இய‌க்க‌த்துக்கு ஆலோச‌க‌ராக‌ எண்ப‌துக‌ளின் ம‌த்தியில் இர்ந்த‌ ஐபி இன் டிஎஸ்பி ராமானுஜ‌ம் புலிக‌ளிட‌ம் எந்த‌ எந்த‌ ந‌ப‌ர்க‌ளை இய‌க்க‌த்தை ச‌ந்திக்க‌ கூடாது என‌ அவ‌ர்க‌ளுக்கு சொன்னார் என‌க் கேளுங்க‌ள் த‌ப்பிய‌ புலிக‌ளின் த‌லைமைக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளிட‌ம்... அப்போது தெரியும் ஏமாந்த‌வ‌ர்க‌ள் யார் என்று...

புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் விற்க‌ வ‌ந்த‌ தோழ‌ரிட‌ம் கேள்வி கேட்ட‌தால் அதுவும் ஐடி தொழிலாளிக‌ள் கேள்வி கேட்டு ச‌மூக‌ அறிவுள்ள‌ அந்த‌ தோழ‌ர் ப‌தில் சொல்ல‌த் திண‌றினார் என்ப‌தை உண்மை என‌க் க‌ருத‌ வேண்டுமென்றால்... இதோ இந்த‌ இட‌த்தில் அந்த‌க் கேள்விக‌ளை காதால் கேட்ட‌வ‌ர் என்ற‌ முறையில் என‌க்கு சொல்லுங்க‌ள்... அத‌ற்கு உட‌ன‌டியாக‌ப் ப‌தில் சொல்கிறேன்... இது ச‌வால்... அர‌சிய‌லுக்கும் அர‌சிய‌ல‌ற்ற‌ இன‌வாத‌த்திற்கும் உள்ள‌ போட்டி .... ஒப்புக் கொள்கின்றீர்க‌ளா...

Dr. V. Pandian
2009-06-16 07:28:00
porkkaiponds@yahoo.co.in

மணி அவர்களே! உங்களுக்கு பதில் எழுத எனக்கு ஏன் இத்தனை சலிப்பு என்று வினவியுள்ளீர்கள். உண்மையிலேயே சொல்கிறேன் எனக்கான உங்களின் பதிலைப்பார்து அந்த சோர்வு மிகுதியாகியுள்ளது தோழரே. தெரியாமல் பேசுபவரை தௌிவடைய வைக்கலாம், தெரிந்தே, தெரியாதது போல பேசுபவரை எப்படித் தௌியவைக்க முடியும்?

புலிகளின் பாஸிசம் பற்றி நீங்கள் ஒவ்வொருமுறையும் கொடுக்கும் விளக்கம், அப்பப்பா, தலையை சுற்ற வைக்கிறது. புரியவில்லை சாமி!

பிரபாகரனை விமர்சனம் இல்லாமல் யாரும் ஏற்றுக்கொள்ளச் சொல்லவில்லை. அது எங்களுடைய அடிப்படைக் குணமே அல்ல. ஆனால், ம.க.இ.க. விமர்சனம் என்ற பெயரால் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்கிறதே! உதாரணமாக, நீங்களே தடுமாறும் அந்த 'பாஸிசம்' போல.

நாங்கள் ஒரு பொது மனிதர். தமிழர். பிரபாகரனின் உறவுகள் அல்லர். ஆதரவற்ற இந்த உலகில் ஒரு தமிழனை இன்னொறு தமிழன் ஆதரிக்கவேண்டும் என்ற பொறுப்புனர்வால் ஆதரிக்கும் தமிழர். அப்படிப்பட்ட நாங்கள், பிரபாகரனை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக (உங்கள் கூற்றுப்படி) நினைத்தால், அதற்காக பிரபாகரனை நீங்கள் ரஜினி என்ற அற்பனோடு ஒப்பிட்டு பழிதீர்ப்பீர்களா? என்ன ஞாயம் ஐயா இது. அப்படி என்றால் நீங்கள் யார்? தமிழன் இல்லையா? பாரப்பானா? இல்லை வேற்று இனமா? சிந்தித்துப் பாருங்கள் தோழரே!

இருட்டில் இருந்து தடுமாறிப் படிக்கும் ஒருவர், வௌிச்சத்திற்கு வந்து தௌிவாகப் படிப்பார். அது போல, ம.க.இ.க. விலிருந்துகொண்டு உங்களால் முறையாக சிந்திக்க முடியவில்லை என்றால், சற்று வௌியே வந்தும் சிந்திக்க முயலலாம். உங்கள் இஷ்டம்!

அடுத்து, நாஸிகளில் சிலர் நல்லவர் என்பது அறவியல் ரீதியான பார்வை. அவ்வளவே. நான் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வாதங்கள் தர்க்கரீதியாகவும், தௌிவாகவும், நேர்மையாகவும் இருக்கும். உங்களுக்கு ஒரு செய்தி. பாஸிச சிங்களவன் மத்தியிலும், சில சிங்கள வீரர்கள் தான், தமிழர்களின் வதை பற்றிய செய்திகளைக் கொடுத்தனர், புகைப்படங்களோடு. ஆக, நாஸிப் படைகளிலும் சில நல்ல மனிதர்கள் இருந்தனர்.

உங்களுக்கு குழந்தையைப் போல, எல்லவற்றையும் விளக்க வேண்டியதுள்ளது மணி. ரொம்ப மோசம் நீங்கள்!

விவாதத்திற்கான மையப்பொருளை விவாதியுங்கள் மணி. நான் எங்கு சறுக்குவேனோ என்று பார்க்காதீர்கள். நீங்களோ, நானோ முக்கியமல்ல. விவாதிக்கும் மையப்பொருள் தான் முக்கியம்.

ஒரு விடுதலை இயக்கத்திற்கு, அதுவும் ஒரு பாஸிச பேரினவாத, கொலைபாதக அரசிற்கு எதிராக, போராடும்போது, முழு நம்பிக்கை என்ற விசுவாசம் இன்றியமையாதது. அது தலைவனிடமும் இருக்கவேண்டும். தொண்டனிடமும் இருக்க வேண்டும். இது அடிமைத்தனமல்ல. பாவம், நீங்களோ புரட்சி செய்யாத கட்சி. உங்களுக்கு இதெல்லாம் விளங்காது மணி.

புலிகளின் கொள்கை சமரசமற்ற தனித்தமிழ் ஈழம் தான். அது தான் அடிப்படையான கொள்கை. கருணா மாறியபடி மாறாத கொள்கை.

சோர்வாய் இருக்கிறது மணி! எவ்வளவு எழுதுவது? தூங்குவது போல நடிக்கிறீரே! உங்களை எழுப்ப முடியுமா?

சுபாஸ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்காக நாஸிகளின் உதவியை நாடினார். அதை நீங்கள் தவராகப் பார்க்கலாம். ஆனால், நியாயமற்ற இந்த அயோக்கிய உலகத்தில், இன விடுதலைக்காகவும், தற்காப்புக்காகவும் சில நிலைகளை, சில நேரங்களில் எடுக்க வேண்டிவரும். அது போல தான், இந்திய உதவியை புலிகள் ஏற்றுக்கொண்டது.

நீங்கள் என்னை மேலும் விவாதிக்க அழைக்கின்றீர். உங்களோடு விவாதித்தால் தலை சுற்றுகிறது மணி. ஏதாவது மயக்க மருந்து கொடுத்து உங்களை ம. க. இ. க. வில் சிக்கவைத்து விட்டனரா?

உங்களின் மயக்கம் தௌிந்தபின் உரையாடுவோம் மணி.

mani
2009-06-16 11:56:00
fmvasanthy@gmail.com

புலிகள் இயக்கம் விடுதலைக்கான இயக்கம்தானே... விடுதலை இயக்கம் மற்ற நாடுகளின் விடுதலை இயக்கங்களை ஆதரிப்பதுதானே சரியான கொள்கை... இப்போ அமெரிக்கா ஈழவிடுதலைக்கு உதவினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்தானே... அப்படி ஆனால் அவர்கள் ஈராக்கில், பாலஸ்தீனில் நடத்திய அட்டூழியத்தை ஆதரித்துதானே தனி ஈழத்தை அடைவீர்கள்.. அது அறவழிப்பட்டது தானா என சோதிக்க மாட்டீர்களா... கொஞ்சம் எளிய மக்களின் லாஜிக் ஓடு சிந்தியுங்கள்... ஆய்வு மாணவர்கள் கைடை ஏமாற்றுவது போல யோசிக்காதீர்கள்..

பிரபாகரன் தமிழன் அவன ஆதரிக்க யாருமில்ல அப்படிங்கிறதுக்காக நீங்க ஆதரிக்கிறதா சொன்னீங்க•. விமர்சனத்தோட ஏத்துக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்... நான் நபர்களை ஏற்கின்ற அல்லது நம்பிக்கை வைத்து கொள்கிற ஆள் அல்ல•.. ஒரு கொள்கை யின் மீதுதான நம்பிக்கை வைப்பேன். அந்த கொள்கைக்கு உடன்பட்டி ருந்தால் மாத்திரம்தான் நண்பனாக வைத்திருப்பேன்... இதுதான் அறம் என்று நினைக்கிறேன்.. எவ்வளவு கொள்ளை அடித்தாலும் கருணாநிதி தமிழர் அதற்காக ஆதரிக்க வேண்டும் என்று சொல்வது சரி என அறிவு உள்ள எவரும் நினைக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன்...

பாசிசம் ஒரே மாதிரி உலகம் முழுக்க தன்னை வெளிப்படுத்தாது.. உலகம் முழுக்க தூய ஆரிய இனம்தான் ஆள வேண்டும் என்ற ஹிட்லரின் கனவுக்கும், ஒரு தீவில் தனது இனம் மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்ற ராஜபக்ஷ வின் கனவும் ஒற்றுமைக்ள சில இருந்தாலும் தன்மையில் ஒன்று அல்ல•. ஹிட்லரிடம் சேர்ந்தவன் ஆரியன்தான் உயர்ந்தவன் என்ற சொந்த கருத்தும் உடையவன்... இன்றைய போரில் பாகிஸ்தானின் முசுலீம் படைவீரனுக்கும், சீனாவின் படைவீரனுக்கும் அப்படி ஒரு இனப்பார்வை இருந்த்தா... இருந்திருக்கும் என நீங்கள் சொல்லக்கூடும்... அந்தப் பித்த்த்தை எதைத் தின்று தெளிய வைப்பது...

நாசிகள் யூதர்களை மாத்திரம் கொல்லவில்லை... சிங்கள் ராணுவம் தமிழர்களை மாத்திரம்தான் கொல்கிறது.. இது தெரியாமல் பேசுகின்றீர்களா... யாரை நம்பச் சொல்கின்றீர்கள்...

சரிங்க ...பாசிச அரசை எதிர்த்த போராட்டத்தில் மேசையாக்களை மட்டுமே நம்பி வென்ற விடுதலை இயக்கங்களை பட்டியலிடுங்களேன்... அதற்கு உங்களால் முடியாது என்றால் கொஞ்சம் ஜனநாயக முறையில் விவாதிப்பதற்கு உகந்த்தாக நான் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.. தலைவன் மாத்திரம் இருந்த காலம் மன்னர்கள் வரையில் முடிந்து விட்டது... பிரபாகரன் அமைக்க உள்ள ஈழத்துக்கு அவர் மன்ன்னாக போவது இல்லை... ஜனநாயக் நாடாகத்தான் கொண்டு வர வேண்டி இருக்கும்... ஒரு ஜனநாயகத்தை அடைவதற்கு தலைவன் பாத்துக்குவான் கொள்கை தேவையில்லைன்னு அடிமைகள் மாத்திரம்தான் யோசிக்க முடியும்... போராளி தனது போராளியாக மாறுகின்ற மறுபிறப்பிலேயே சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றை கற்றுத்தான் வருகிறான்... அவனுக்கு கொள்கை தேவையில்லை அத தலைவரு பாத்துக்குவாரு... துப்பாக்கிய நீ பாத்துக்க அப்படின்னு சொன்னா அந்த தலைவன் ஒரு அம்மை நோய் வந்து செத்து போய் விட்டான்னு வச்சுக்குவோம்.... அடுத்த மேசையாவை எப்படி தேர்வு செஞ்சு அவர எப்படி கொள்கை வகுக்க வச்சு போராட்டம் செய்வீங்க‌

சரி அவரு அப்பிடியே கொள்கை வகுத்தாலும், இல்லேங்காட்டி செல்வராசா பத்மநாபன் மாதிரி எதிர்திசைக்கு போயிட்டாருன்னு நீங்க சொல்ற மாதிரி போக மாட்டாருங்கிறதுக்கு என்ன நிச்சயம்... இது அம்மைல செத்த தலைவன் ரூபாய்க்க் மயங்க மாட்டான்ங்கிறது க்கு என்ன நிச்சயம் என்பதோடும் பொருத்திப் பாத்துக்கொங்க்...

புலிகள் செய்த புரட்சி என்ன என்று சொல்ல முடியுமா... புரட்சி செய்யாத அதாவது இது வரை செய்யாத கட்சி பேசக்கூடாது என்பதுதான் உங்களது நிலையா... அதாவது புரட்சின்னு நீங்க புரிஞ்சுக்கிடு இருக்குற துப்பாக்கி தூக்குகின்றத மாத்திரம்... சரிதான•.. மயக்கம் எனக்கு இல்லை... உங்களுக்கு துப்பாக்கி மேல இருக்கிற மயக்கத்த கொஞ்சம் விட்டீங்கன்னா அத விட கடினமான மக்களை அணிதிரட்டிதான் புரட்சி செய்ய முடியும் கிற உண்மை புரிய வந்தால், புரட்சிய ரா டிரெயினிங் தந்து இன்னொரு நாட்டுல நடத்த முடியாது ங்கிறது புரிய வந்தால்,,, நம்மை நாமே காயடித்து கொண்டு சுய இன்பத்தில் திளைக்கின்ற அற்பத்தனத்தில் இருந்து வெளியே வரமுடியும்..

தனி ஈழம்தான் புலிகளோட கொள்கையா...

சாதி ஒழிப்பை பற்றி அவர்களது திட்டத்தை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... அவர்கள் அதனை எங்குமே குறிப்பிடவில்லை... தனி ஈழம் கிடைக்கும் வரை கிழக்குப்பகுதியின் தலித் மக்கள் பொத்திக் கொண்டு கிடக்க வேண்டுமா... அப்படிதான் என்றால் 1947 ஆகஸ்டு 15 வரை காந்தியிடம் வாதாடாமல் அம்பேத்கார் பொத்திக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டுமா... காந்தியாவது ஒப்பந்தம் என்ற பெயரில் தலித் மக்களை ஏமாற்றத்தான் செய்தான்... அம்பேத்கார் இன்று இலங்கையில் இருந்திருந்தால் சுட்டுத்தானே கொன்றிருப்பீர்கள்... ஏன்னா அவரு தனி ஈழத்த கெடுத்து விட்டாருன்னு தானே சொல்வீங்க•.

ம‌தம் மற்றும் அரசு பற்றிய தனி ஈழத்தின் திட்டம் என்ன•.. அதுல முசுலீம்களுக்கு இடம் இல்லையா... அரசின் ஆளும் வர்க்கம் யாராக இருப்பார்கள்... அடங்கும் வர்க்கம் யாராக இருப்பார்கள்...

வெளிநாட்டு உறவில் இந்தியாவின் நண்பனா, சீனாவின் நண்பனா, அமெரிக்க பக்கம் சாய்வா, அல்லது புரோ ரசியன் பக்கமா... அல்லது இவற்றை எதனை வைத்து தீர்மானிப்பீர்கள்...

புலிகள் இயக்கத்துல தலைவரை எப்படி ஜனநாயகப் பூர்வமாக தேர்வு செய்கிறார்கள்... கருணாநிதி கூட அப்ப்ப்ப அவர தலைவரா தேர்வு பண்ற தேர்தல் நடத்துகிறாரே... தனது இயக்கத்துக்கு உள்ளயே தேர்தல் மற்றும் ஜனநாயகத்த அமல்படுத்தாத இந்த தலைமை மக்களுக்கு அத தரும்னு எப்படி எதிர்பாக்க முடியும்.. இதுக்கு டைம் இல்லாம காட்டிலயே இருந்தாங்கன்னு டபாய்க்காதீங்க•..

உல‌கம் முழுக்க நியாயமற்றவர்கள்தான் என்ற உங்களது கருத்தை நினைத்தால் அதிர்ச்சியாக இருந்த்து.. அதுனால சில நல்ல விசயத்துக்காக சில கெட்டது செய்யலாம்னு வள்ளுவரின் வாய்மையும் பொய்மையிடத்து ... குறளக் கூட பயன்படுத்துவீங்க•.. நன்மை எதாவது பயத்த்தா... உங்களது கூற்றுப்படியே மாத்தையாவை துரோகியாக மாற்றி கிட்டு வை பலி கொடுத்த்தை மீறி... அன்றைக்கே இதனைச் சொன்ன போது 2000 புதிய ஜனநாயகத்தை கடை கடையாக வாங்கி தீ வைத்தீர்கள்.. கொஞ்சம் விமர்சனத்த படிச்சிட்டாவது தீய வைத்து இருக்கலாம்... என்ன செய்ய தமிழ் உணர்ச்சி மேலோங்கி உணர்வு அதாவதுஃ அறிவு மங்கிய நிலையில் எப்படி நீங்கள் இருந்திருப்பீர்கள்...

புலிகளின் கொள்க ஒன்றும் சமரசமற்ற தனி ஈழம் என்பது வடிகட்டிய பொய்... 2002 இல் ஆண்டன் பாலசிங்கம் தனி ஈழத்தை கைவிடுவதாக அறிவித்து உள்ளார்... கொஞ்சம் ரெபர் பண்ணி விட்டு எழுத வாங்க•...

தனி ஈழம் கிடைக்கும்னா ஜெயல்லிதா வை ஆதரிக்கலாம்... ஆனா அவ கூட்டணில ஒன்றுபட்ட இலங்கைய வலியுறுத்தும் சிபிஎம் தோழர்களை கோவை ல ஜெயிக்க வைக்கலாம்...

தனி ஈழம் கிடைக்கும்னா இந்திராவ ஆதரிக்கலாம்.. அப்படின்னா காசுமீர் மக்களது போராட்டத்த அவ ஒடுக்குறத வேடிக்கை பார்க்கலாம்...

அமெரிக்கா ஆதரிச்சா ஈழம் கிடைக்கும்.. அதுக்காக அவன் பிற நாடுகள்ல நடத்துற முசுலீம ஒழிப்பு, இன விடுதலை இயக்கங்கள ஒழிக்கிறது போன்றவற்ற கண்டும் காணம இருந்துக்கணும்.. அதுதான் அறம் அப்பிடினு சண்ட பிடிக்கணும்..

ஒரு வேளை பிஜேபி ஜெயிச்சுட்டாண்ணா அவனோட அகண்ட பாரத கனவுக்குள்ள நம்ம ஈழத்த ஒளிச்சு வச்சு அடையுறதுக்கு, சிங்கள புத்த பிக்குகள் இடிச்ச கோவில்கள் மட்டும் 1500 ன்னு ரவிசங்கர்ஜிக்கு போட்டு கொட்க்கலாம்.. அந்த சிடி ஐ ராம்பக்தையான ஜெயா பார்த்து கொதித்து பெரியார் திக வை ஆதரிக்க வைக்கும் விதமா தனி ஈழம்னு சொல்ல வைக்கலாம்...

ஏனுங்கே... உங்க நிலைப்பாடு உங்களுக்கே தலய சுத்தலயா...

purachi
2009-06-17 04:08:00
purachi1107@gmail.com

//தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.//

இந்த பொய்க்கு எதுவும் ஆதாரம் இருக்கா? வாய்க்கு வந்த பொய்களை எழுத ஒரு தேசியவாதி வேசம் வேறு..


//’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பா//

இப்படி அந்த தோழர்களிடம் கேட்டீர்களா? அவர்களிடம் கேட்க்காமெலேயே உங்களுக்கு விருப்பமான கருத்துக்களையெல்லாம் ம க இகவின் மீது ஏற்றி அதனை மறுத்து விமர்சனம் செய்யும் நேர்மையற்றத்தனத்திற்கு நீங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். அது சுயமரியாதையுள்ளவன் செய்யக் கூடிய செயல். உங்களிடம் எதிர்பார்க்கலாமா என்று தெரியவில்லை.

ஈழ போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரையான அவர்களின் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக சல்லிசான விலையில் விற்று வருகிறார்கள். படித்து பாருங்கள். பிறகாவது உங்கள் கண் திறக்கிறதா என்று பார்க்கலாம்.

புரச்சி

purachi
2009-06-17 04:11:00
purachi1107@gmail.com

//ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?//

அப்படியா? விடுதலை புலிகளை சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ளச் சொல்லி தனது தவறுகளை சரி செய்து கொள்ளச் சொல்வதுதான் ம க இகவின் நிலைப்பாடு என்பது எனது புரிதல்.

ஒருவேளை நீங்கள் நம்புவது போல புலிகளை எதிர்ப்பதுதான் அவர்களின் நிலைப்பாடு எனில் அதனை ஏன் கேள்வி வடிவில் கேட்கிறீர்கள்? (இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?)

உங்களுக்கே தெளிவாக தெரியாத ஒன்று என்ற பயத்தில்தானே அந்த கேள்வி.

இது முற்றிலும் ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்டுரை. நேர்மையான எந்தவொரு விமர்சனமோ, கேள்வியோ இல்லாத ஒரு கட்டுரை

Dr. V. Pandian
2009-06-17 04:49:00
porkkaiponds@yahoo.co.in

சுய புத்தியோடும், போதைக்கு ஆட்படாததாகவும், சீரிய சிந்தனைத் திறத்தோடும் இயங்கும் உலகத் தமிழினமே!

பிடல் காஸ்த்ரோவைக் கொல்ல நூற்றுக்கனக்கான முறைகள் முயன்றது அமெரிக்கா. எவ்வளவோ நிதியை அதற்காகவும் செலவிட்டது. ஒரு மனிதனை அழிக்க இவ்வளவு பிரயத்தனம் எதற்கு?

தென்னமெரிக்க நாடுகளுக்கு விடிவைக் கொடுக்கக் கிளம்பிய சே கு வேராவை, இமாலய முயற்சி செய்து கொன்றது அமெரிக்க ஏகாதிபத்தியம். எதற்காக?

பிரபாகரனைக்கொல்ல எத்தனையோ சதிகளைச் செய்தது இந்தியா. நமது இந்திய அமைதிப்படைத் தளபதியே சாட்சி சொல்லி இருக்கிறார். புத்தக வடிவில். பிரபாகரனை ஏன் கொல்ல வேண்டும்?

இப்போது படியுங்கள் நமது ஐயன் திருவள்ளுவன் சொன்னைதை......

நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

இதன் பொருள்.....

"நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்."

தலைமைப் பண்பு என்பது கடைச்சரக்கு அல்ல. அது அரிதானது. அனைவருக்கும் அமையாது. ஆகவே, தலைமையின் அவசியத்தை ஆதிக்க சக்திகள் நன்றாகவே உணர்ந்துள்ளன. இது சில கழிசடைகளுக்கு புரியவில்லை என்றால், அது அவர்களது பிரச்சினை. நம்முடையதல்ல.

அடுத்து......

ஈழமக்களின் தொகை, ஈழத்தில் தற்போது வாழும் மக்கள், வெறும் 20 லட்சங்கள் தான். (உலக, இந்திய அகதிகள் நீங்கலாக). சிங்களனின் மக்கள் தொகை ஒரு கோடியே 40 லட்சங்கள். இந்தச் சிறிய ஈழ மக்கள் கூட்டம் அனைத்துமே ஜனநாயகரீதியாக, புரிதலோடு போராடினால், சுதந்திரம் பெற முடியுமா? அதோடு, அம்மக்களுக்கு சுதந்திரம் வரக்கூடாதென்று 100 கோடி மக்களைக்கொண்ட அண்டைநாடு, திட்டவட்டமான முடிவில் இருக்கும்போது, அது சாத்தியமா?

ஆயுதப்போர் தான் ஒரே வழி! சிங்களன் அலுப்படையும் வரை! தானாக சுதந்திரம் கொடுக்கும் நிலை வரும் வரை!

ஆனால், இந்தியாவோ, பாகிஸ்தானோ, சீனாவோ சிங்களனுக்கு உதவாமல் இருந்திருந்தால், மேலை நாடுகள் அனைத்தும் புலிகளுக்கு தடைசெய்யவில்லை என்றால், புலிகள் எப்போதோ தனி ஈழம் அமைத்திருப்பர்.

அவர்கள் அனைவரும் ஏன் சிங்கள பாஸிசத்திற்கு ஆதரவாக நின்றனர்?

இந்த உலகம் 'சாராயம் வாங்கிக் கொடுப்பவன் பக்கம் பேசும்' கட்டப் பஞ்சாயத்து, அயோக்கிய உலகம். எல்லாம், தனக்கு வேண்டியதைச் தேடும் லாப நோக்கு எண்ணத்தால் தான். அதோடு, பிரபாகரனின் படை வலிமையையும், மன வலிமையையும், தமிழரின் அறிவு வலிமையையும் கண்டு, அதனால் தங்களது பிராந்திய திட்டங்களுக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால் தான்.

இது அயோக்கியப் பயல்கள் உலகம். ஈழத்திலே இத்துனைக் கொடூரம்! இந்தியாவில் தமிழனைத்தவிர வேறு எவனாவது, சிறிய ஆர்ப்பாட்டமாவது செய்தானா? இவ்வளவு அட்டூழியமும் தமிழினத்திற்கு செய்த இந்த இந்தியாவை எந்த தமிழனாவது தனது நாடு என்றால், அவனை நாம் என்னவென்று அழைப்போம்?

பாஸிச, பேரினவாதக் கும்பலின் கொடுமைகளில் தத்தளிக்கும் ஒரு சிறிய இனம், அது தனது விடுதலையை அடைய வழி தேடுமா அல்லது உலகை அறவழியில் திருத்த முற்படுமா?

உலகமே ஒரு அயோக்கிய சாம்ராஜ்யங்களின் கூட்டாக இருக்கும் போது, தவறே செய்யாத, அதிபுனிதமாக இருக்கும் (?) தேசத்தை சல்லடை போட்டுத் தேடி, அதன் ஆதரவில் சுதந்திரம் பெற முடியுமா? இல்லாத ஊருக்குப் போகாத வழி என்பது இதுதான்.

ஆக தமிழ் மக்களே! கஞ்சா, பெத்தடின் போதைகளிலிருந்துகொண்டு முக்கியமான விடயங்கள் பற்றி சிந்திக்கக் கூடாதென்ற உண்மையை இங்கு சில நபர்களின் மூலம் நாம் உணர்ந்து கொள்வோம்.

நன் தமிழ் மக்களே! கீற்று தளத்தில் "தமிழத் தேசியம் - சிறப்பு மாநாட்டு வரைவு அறிக்கை" என்ற ஒரு விளம்பரக் கட்டுரை உள்ளது. அதைப் படியுங்கள். மேலும் பல விளக்கங்கள் கிடைக்கும்.

இறுதியாக, எதிரிகளை அடையாளம் காண, ஒரு குறள்..............

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

இதன் பொருள்.....

"நன்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும், பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத்தன்மை, விரைவில் உணரப்படும்."

முற்றும்.



purachi
2009-06-17 04:52:00
purachi1107@gmail.com

//‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.//

விடுதலைப் புலிகள் குறித்த ம க இக கருத்துக்களை விமர்சிப்பார் என்று பார்த்தால் அதிரடி அதிரடியாக தனது பழைய அரிப்புகளையெல்லாம் பட்டியலிடுகிறார். பிழைத்துப் போகட்டும் அதனையும் ஒரு முறை பார்த்து விடலாம்.

ம க இ கவின் இடஓதுக்கீட்டு கொள்கை குறித்து புத்தகம் உள்ளதே அதனை மறுத்த் பே.ம உள்ளிட்டோர் எதுவும் எழுதவில்லையே ஏன்? இதே இணையத்தில் மயிர்பிளக்க இரு வருடம் முன்பு கூட ம க இகவுடன் சர்வ கட்சி கூட்டணியினர் விவாதம் செய்தனரே அவர்கள் எல்லாம் கடைசியில் பதுங்கி பம்மி ஓடினரே ஏன்? உங்களுக்கு விருப்பம் எனில் அந்த சுட்டிகளை தருகிறேன் நீங்கள் அந்த விவாதத்தை தொடருங்கள். அம்பலமாவது யார் என்று தெரிந்து விடும்.

'தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ இது அம்பேத்கரின் முழக்கம். அம்பேத்கரை மறுப்பதுதானே பெ.ம கும்பலின் நுண்ணரசியலும் கூட. கருணாநிதியின் நாக்கை வெட்டுவேன் என்று ஒரு ஆர். எஸ். எஸ் பன்றி சொன்ன போது இந்து மதத்தை கருணாநிதி விமர்சிப்பது தவறு என்று கட்டையை திருப்பிப் போட்டு அடித்தவர்தானே இந்த பார்ப்பன, இந்து மத ஆதரவு பெ.மணியரசன்.

இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள்? இந்து, இந்தி, இந்தியா என்ற அடிப்படையில். ஆனால் அதிரடியான் ஆதரிக்கும் புலிகளும் சரி, அல்லது வேறு எந்த அமைப்பும் சரி(பெதிக ஓரளவு விதிவிலக்கு இந்த விசயத்தில்) இந்திய தேசியத்தை எதிர்க்கிறோம் என்பதை முல்லைப் பெரியாறு, காவேரி தாண்டி வேறெதிலும் காட்டுவதில்லை. இந்த யோக்கிய சிகாமணிகள் எல்லா வகையிலும் 'இந்து'வுடனும், 'இந்தி'யுடனும் சமரசம் செய்பவர்கள்தான். ஏன் ஈழப் பிரச்சினையில் கூட இவர்கள் இந்தியாவை கடசி வரை விட்டுக் கொடுக்கவில்லை. இந்தியாவை நிராகரித்து, அதனை அம்பலப்படுத்தி களத்தில் செயல்பட்டவர்கள் ம க இ கவினர்தான்.



//ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?//

இது இன்னொரு பொய். இதெற்க்கெல்லாம் ஆதாரம் கேட்டாலே அதிரடியான் பொய்யடியானாக மாறிவிடுவார். இன்னொரு தேசத்தின் விடுதலைப் போருக்கு இன்ன வகையான தீர்வு என்று அடுத்த நாட்டு பாட்டாளி வர்க்க கட்சி வரையறுக்க முடியாது. அதன் அடிப்படை உரிமைகளை ஆதரிக்க மட்டுமே முடியும். அந்த உரிமைகளை வென்றெடுப்பது, அதற்க்கான சரியான தீர்வு இதனை அந்த நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தனி ஈழமோ, ஒன்றுபட்ட இலங்கையோ எதுவாகிலும், ஈழத் தமிழ் தேசிய இன்ங்களின் சுயநிர்ணய உரிமை வெல்ல வேண்டும் என்பதே ம க இ கவின் நிலைப்பாடு. போலி கம்யுனிஸ்டு CPM சொல்வது போல ஒன்று பட்ட இலங்கை என்று ம க இ க எங்கும் சொன்னதில்லை.

//, புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள்.//

விடுதலைப் புலி தலைமை பாசிச-சந்தர்ப்பவாத வழிமுறைகளை கையாண்ட அதே நேரத்தில் அதன் அணிகள் தியாக உணர்வுடன், நேர்மையாக போராடினர். ஈழப் போரின் இறுதி நிகழ்வாகக் கூட புலித் தலைமையின் சரணடைவு துரோகமும், புலி அணிகளின் வீரத் தியாகமும் நிகழ்ந்தது. அதே போல பல்வேறு அமைப்புகளின் அணிகள் நேர்மையாக உள்ளனர். இவர்களை வென்றெடுக்க பிரச்சாரம் செய்வதில் என்ன தவ்று? ஒரு வேளை உங்களிடம் பிரச்சாரம் செய்யும் வலு இல்லை என்ற பொறாமையா அதிரடியான்?


//இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.//

முதல் விசயம், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் என்று ஒற்றை வரியில் ம க இ க எங்கும் சொன்னதில்லை. அப்படி ஒரு கருத்து மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத வழிப்பட்ட கண்ணோட்டமும் அல்ல. இவ்வளவிற்கும் காரணம் என்ன என்று பரிசீலியுங்கள், ஆய்வு செய்யுங்கள் என்று கடைசி நிமிடம் வரை புலிகளிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர் ம க இ கவினர். இரண்டாவது விசயம், கேள்வி கேட்பவர்களை தமிழின பிழைப்புவாதி, பாசிஸ்டு என்று ம க இ க எங்கு சொன்னது என்று அதிரடியான் நீருபிக்க வேண்டும். உண்மையில் கேள்வி கேட்பவர்களான ம க இ கவை 'மறைமுக பார்ப்பனியம்' என்ற உளுத்துப் போன முழக்கம் கொண்டு அணுகும் நேர்மையற்ற தற்குறிகளின் குரல்தான் அதிரடியானுடைய இந்த புரளி கட்டுரை.


//இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.//

இந்த நெடுமாறனோ ஆர் . எஸ் . எஸ்ஸின் தமிழக குடி தாங்கியாக இருக்கிறார். தமிழ் தேசியம், இந்துத்துவம், பார்ப்பனியம், இந்தியம், ஈழம் இவையெல்லாம் ஒருங்கே திகழும் இந்த அற்புத மனிதர்தான் அதிரடியான் கண்களில் தமிழ்த் தேசியவாதியாக தெரிந்தால். அது தமிழ் தேசியத்திற்கு பிடித்த வியாதி என்றே நாம் கருத இடமுள்ளது.


//இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான்//
உண்மை, உண்மை... உங்களைப் போன்ற அதிமேதாவி வரையறுத்த தமிழ் தேசியவியாதியான நெடுமாறனின் வீரதீரங்களை நான் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.. என்னே அவரின் தமிழ்த் தேசிய போராட்டங்கள்.

எனக்கு ஒரு சந்தேகம், ஈழ போராட்டத்தின் ஒட்டு மொத்த நிகழ்வில் நெடுமாறன் மீது ஒரு சருகு கூட விழவில்லையே ஏன்? கைதான கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் அதிரடியான் பார்வையில் தமிழ் தேசியவாதிகள் இல்லையெனில், உண்மையில் அவ்ர்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள். பின்னே நெடுமாறனுடன் அவர்களும் ஒன்றாக நிற்க்க வைக்கப்படுவது என்பது அவர்களது போராட்ட உணர்வுக்கு அவமானம்.


//அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும்.//

இது என்னையா இது. மாமியார் பிடிச்சா கொளுக்கட்டை அப்படினு ஒரு பழமொழி சொல்ற மாதிரி, தமிழ் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும், இந்திய புரட்சி பேசும் ம க இ க பார்ப்பனிய கட்சியாம். ஆனா, இந்தியாவுக்குள்ளேயே ஏதோ ஒரு மாதிரி தமிழ் மாகாணத்தை பேசும், ஆர். எஸ். எஸ்வுடன் கூடிக் குழாவும் நெடுமாறன் தமிழ் தேசியவியாதியாம். எனக்கென்னவோ அதிரடியான் டிக்சனரியில் தமிழ்தேசியம் என்பது நேடுமாற தேசியம் என்று இருக்கும் என்று தோன்றுகிறது.


//காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்.//

இந்தியாவை புலிகள் ஆதரிக்கலாமாம். அவர்கள் பார்ப்பனியவாதிகள் கிடையாதாம். அவர்களின் அந்த நிலைப்பாட்டை நெடுமாறன் ஆதரிப்பார் அவர் பார்ப்பனியவாதி கிடையாதாம். ஆனால் இந்தியாவில் பார்ப்பனி கொடுங்கோன்மையில் உழலும் மக்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் இந்திய புரட்சி பேசும் ம க இ க, 'இந்து' இந்தியாவின் ஒற்றை பார்ப்பனிய தேசியத்தை சமரசமின்றி எதிர்க்கும் ம க இ க பார்ப்பனியவாதிகளாம். உங்களது நோக்கம் நேர்மையாக இல்லையே அதிரடியான்.


// மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.//

ஆக இவர்கள் யாருக்குமே இந்திய தேசியத்தை எதிர்க்க துப்பில்லை. வெற்று வாய்ச்சவடால். இந்த சமரசவாதிகள் அனைவருமே ராஜீவ் படுகொலை நிகழ்ந்த சமயத்தில் பதுங்கி இருந்த இடம் எங்கு என்று தெரியவில்லை. அப்பொழுதும் களத்தில் ஈழத் தமிழர்களுக்கும், ராஜீவ் கொலையை ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் ம க இ கவினர்தான்.


//இந்திய அரசை எந்த சமரசமும் //
//தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக//

இந்தியத் தேர்தலில் மறைமுகமாக பங்கெடுப்பதன் மூலம் இவர்களின் சம்ரசமற்ற தன்மை வெளிப்பட்டதே அது குறித்து அதிரயானின் கருத்து என்ன?


//என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. //

எதிர்க்கிறோம் என்று என்றைக்காவது பேசியிருக்கிறார்களா? இந்த அமைப்புகள் கள்ளமௌனம் சாதித்ததன் அர்த்தம் என்ன்வென்று சொல்லுங்கள் அதிரடியான்.

//தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...! //

இதே எச்சரிக்கையைத்தான் நானும் கொடுக்க விரும்புகிறேன்..

புரச்சி

purachi
2009-06-17 04:54:00
purachi1107@gmail.com

வெற்று விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு ஏதாவொரு காரணத்திற்காகவோதான் இந்த கட்டுரை முகப்பில் இடப்பட்டுள்ளது என்பது எனது வலுவான எண்ணம். ஏனேனில் கட்டுரை மிக கீழ்த்தரமாக, முற்றிலும் ஆதாரமற்ற பொய்களும், அவதூறுகளும் நிரம்பியதாக உள்ளது.

mahesh
2009-06-17 08:54:00
ask.mahesh@gmail.com

நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் கருணாநிதியின் கைத்தடி, உளவுத்துறையின் செல்லப்பிள்ளை. ஒரு பக்கம் ஈழப் போர் குறித்து எழுதிக் காசு பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் கருணாநிதியுடன் கூடிக் குழாவும் ஒரு நாலாந்தரப் பத்திரிக்கை தான் நக்கீரன். அந்தப் பத்திரிக்கை தங்களுக்கு ஆதரவாகச் செய்தி போடுகிறது என்ற உடன் அது உளவுத்துறையின் செய்தி என்று கூடப் புரிந்து கொள்ள முடியாமல் கள்ள மார்கெட்டில் 100 ருபாய் வரை கொடுத்து வாங்கிப் படிக்கும் மனோ நிலையில் இருப்பவர்களால், தற்போது ஈழ விடுதலை அடைந்துள்ள பாரிய பின்னடைவுக்கு காரணம் என்ன என்று தொகுத்துப் பார்க்கும் படி கூறுவதை எப்படிப் புரிந்து கொள்ள முடியும். ஈழ விடுதலைப் போரின் தமிழக அத்தாரிட்டியே தாங்கள்தான் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களால் தங்களை ஒருவர் கேள்வி கேட்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். அது தான் கேள்வியை விடுத்துக் கேட்டவரைக் கேவலப் படுத்துகிறார்கள். ஆனால் மக்களே ஒன்று மட்டும் உண்மை, இந்த விடுதலைப் போரின் அனுபவங்களை விடுதலைப் புலிகளே மீளாய்வு செய்து பார்த்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போலும்.

PURAM BOAKKU
2009-06-17 09:48:00
puramboakku@gmail.com

தமிழ் நாட்டை இந்தியா நாட்டின் ஒரு பிரிக்கவே முடியாத பகுதியாகவே வைத்திருப்பது- மைய அரசோ, இராணுவமோ, உச்ச நீதி மன்றமோ,தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளோ, பார்ப்பனர்களோ அல்ல - தமிழ் நாட்டின் சாதாரண குடிமக்கள் தான்!

ஐ.சி.எஃப் வாசலில் இட்டிலி கூடையை வைத்து இட்டிலி வியாபாரம் செய்யும் கிழவி, கொட்டாம் பட்டியில் வயலில் நாற்று நடும் பெண் மணி, கோயம்பேட்டில் கறிகாய் வியாபாரி- யாரை வேண்டுமானாலும் போய்க் கேளுங்கள், "இந்தியாவில் இருந்து தமிழ் நாடு தனியே பிரிய வேண்டுமா?" என்று-அவர்களின் மறுவினை உங்களுக்கு பல பாடங்களை தரும்.

கறந்த பால் பசுவின் மடியில் புகுந்தாலும், கருவாடு மீனாக மாறினாலும், இந்தியாவில் இருந்து தமிழர் பிரிய மாட்டார்கள்- பிரிய வேண்டிய அவசியம் இல்லை.

அண்ணா. அக்பர், போன்றவர்களின் சகிப்புத் தன்மை உடைய, புறாவுக்கு தன் வூணை ஈந்த சிபி சோழனின் கருணை உடைய, காந்தி, அசோகர் போன்றவர்களிடம் அஹிம்சைக் கொள்கையைப் பெற்ற , காமராசர் , கக்கன், அம்பேத்கர் போன்றவரிடம் அரசியல் நேர்மையைக் கற்ற மக்கள் தமிழ் மக்கள்.

இந்தியாவைச் ஸுற்றியுள்ள எல்லா நாடுகளும் இராணுவ, ஸர்வாதிகார ஆட்சியில் சிக்கித் தவிக்கும் போதும், முழுமையாக எப்போதும் சனநாயக முறையில் தேர்தல், மக்கள் ஆட்சி என்று குடியாட்சி நடக்கும் நாடு இந்திய நாடு! நாட்டில் கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் உரிமை, ஆட்சி மாற்றும் உரிமை , என்ற கலாச்சாரத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள்!

இந்தியாவின் ஒற்றுமை, இந்திய மக்களின் இதய இணைப்பால் உருவானது. சில ஐக்கியங்கள் ( Soviath Union போன்றவை)அரசியல் அதிகாரத்தால் உருவானவை. அதிகாரம் குறைந்த போது, அவை பிரிந்து விட்டன. ஆனால் இந்தியாவோ, ஒரே பூனை ஈன்ற வெவ்வேறு நிறமுள்ள பூனைக் குட்டிகளைப் போன்றவையாதலால், உலகிலேயே வெவ் வேறு மொழி பேசும், ஒத்த சிந்தனையுள்ள மக்கள் ஒன்று பட்டு வாழும் அதிசயமாக உள்ளது.

உங்களுக்கு பார்ப்பணர்களைப் பிடிக்கவில்லை என்றால் அதை தனியே எழுதி விட்டுப் போங்கள்- பார்ப்பனரை இந்திய நாட்டின் ஒற்றுமையுடன் தொடர்பு படுத்துவது ஏன்? பார்ப்பனர் மட்டுமே முயற்சி செய்து இந்தியாவை ஒற்றுமையாக வைத்து இருப்பதாக எழுதுவது எல்லா இந்தியர்களையும் இழிவு படுத்துவது ஆகும்!


சிலர் விரும்புவது போல இந்தியா,தனி தனி சிறு சிறு குட்டி நாடுகளாகப் பிரியுமானால் என்ன நடக்கும்?

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பாகிஸ்தான், வங்க தேசம், பர்மா, சீனா, ஆகிய் நாடுகளில் சன நாயகத்துக்கு என்ன மதிப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே! இராணுவ ஆட்சியே பெரும்பாலான நேரங்களில் நடை பெறுகிறது.

இலங்கையில் உள்ள " சன நாயகம்" எப்படிப்பட்ட "மக்கள் பாதுகாப்பு சன நாயகம்"" என்பதும் நாம் அறிந்ததே!

நேபாளம் எந்த வழியில் செல்லும் என்று அதற்க்கே தெரியவில்லை!

பெரிய நாடாக இந்தியா இருக்கும் போதே, 1962 ல் நேரு மாமா பறக்க விட்ட புறாவை சீனத்து தோழர்கள் சிவக்க வறுத்து விட்டனர்.

இந்த நிலையில் இந்தியா குட்டி குட்டி நாடாக
'சுய நிர்ணயம்' செய்து கொண்டால், மேற்கு வங்கத்தை பங்களாதேஷ ஆக்கிரமிக்கும். காஷ்மீரை (இப்போது இந்திய காஷ்மீர்) இரு தூண்டாக்கி பாகிஸ்தான், சீனா பிரித்துக்கொள்ளும்.

ராஜஸ்தான், குஸராத், பஞ்சாப் ஆகியவற்றை பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளும்!

அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் சீனாவுக்கு இரையாகும்!

தமிழ் நாட்டில் சிங்களன் புகுந்து ஈழத்தில் செய்தது போல, தமிழ் நாட்டையும் பாழ் பாணமாக்கி, தமிழரை சிங்களருக்கு முழு அடிமை ஆக்குவான்.

115 கோடி இந்தியருக்கு இது நன்றாகத் தெரியும்!

7 கோடி தமிழருக்கு இது மிக மிக நன்றாகத் தெரியும்!

இதைப் புரிந்து கொள்ளாத சிலர், அல்லது புரிந்து கொண்டும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், இந்தியாவில் இருந்து தமிழரைப் பிரிப்போம் என்று மனப் பால் குடித்துக் கொண்டு, சிறு பிரச்சினைகளை வூதிப் பெரிதாக்கும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தியாவை ஒற்றூமையாக வைத்து இருப்பது, இந்திய ஒற்றூமைக்கு பாதுகாவலன் ஆக இருப்பது அதன் மக்கள்தான்!

purachi
2009-06-18 04:43:00
purachi1107@gmail.com

////இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.////

தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!
http://www.vinavu.com/2009/06/18/nedumaran/

புரச்சி

சீன இலங்கா கூட்டு களவாணி
2009-06-18 09:42:00
cpimlsoc@gmail.com

என்னதான் இருந்தாலும் கட்டுரையாளர் cpiml soc தான் மக இக என்பதை தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டாரே. சீனாவிற்கு வால்பிடித்து வாய் கிழிய புரட்டு செய்யும் நவீன பார்ப்பனர்களை இன்னும் அதிகமாக உரித்தெடுக்க வேண்டும்

veerasamy
2009-06-23 09:07:00
ram_2007@imail.com


சரி சரி சண்ட போடாதிங்ப்பா.....


இடஒதுக்கீடு வாணாம்ந்னு சொல்லுற புரட்ச்சிகாரரு அதை நடைமுறைக்குள்ளாகும் வகையில ஒரு "மாமி"யை கண்ணாலம் கட்டிகீறாரெமே மெய்யாலுமா காம்ரெட்ஸு

mani
2009-06-25 11:01:00
fmvasanthy@gmail.com

இட ஒதுக்கீடு வேண்டாம் னு சொன்ன புரட்சிக்கார்ரு யாருன்னு சொல்ல முடியுமா வீராச்சாமி

suresh
2009-06-26 03:17:00
radhakumar96@gmail.com

மகஇகவினருக்கு சரியான சாட்டையடி

purachi
2009-06-26 03:28:00
purachi1107@gmail.com

//தமிழ்தேசியவியாதியும், அதிரடியானின் அன்பு தலைவருமானன மாவீரன் நெடுமாறனின் இந்திய மேலாதிக்க பூசாரி வேலை குறித்த கட்டுரை://

மாவீரனுக்கு மாவீரன் என்று பெயர் வந்த கதை தெரியுமா அதிரடியான்? பாசிச இந்திரா காந்தி மதுரை வந்திருந்த போது அவர் மீதான தாக்குதலில் இருந்து வீராதீரமாக பாதுகாத்ததினால் நெடுமாறனுக்கு மாவீரன் பட்டம் வந்தது.

இந்திய பார்ப்பன தேசியத்தின் பாதுகாவலந்தான் உங்களாது தமிழ தேசிய திருமகன்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP