Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்!
க.அருணபாரதி

நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் ”புலி”யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? ”எமக்காக பேசுங்களேன்” என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

”இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்” என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது ”உடன் பிறந்தோர்”தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், “அவர்களை காப்பாற்றுங்கள்“ என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. ”இந்தியர்கள்” என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், ”தமிழர்கள்” இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் ”இந்தியா”, கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், ”இந்தியன்” என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

- க.அருணபாரதி (arunabharthi@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Dr. V. Pandian
2009-06-18 06:29:00
porkkaiponds@yahoo.co.in

மிகச்சரியான வார்த்தைகள், அருணபாரதி!

தமிழர்கள் இந்தியாவின் அடிமைகள் என்பது, தமிழக அரசால் அதிகார பூர்வமாகவே ஒப்புக்கொள்ளப் பட்டது. தமிழகத்தின் முதல்வர் இப்படி வௌிப்படையாகச் சொன்னால் அது ஒரு அதிகாரபூர்வ அறிக்கை தானே!

ஈழம் பற்றிய தனது இயலாமையைப் பற்றிக் கருத்து சொல்லும்போது "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியுமா" என்று அவர், தான் ஒரு முதல் அமைச்சராக இருந்து கேட்டது, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

ஆக, இனி மயக்கம் வேண்டாம் தோழர்களே! அடிமை என்றானபோது "விடுதலை" என்பது தானே இனி நமது இடைவிடாத சிந்தனையாக இருக்க வேண்டும்?

நேற்று, காஷ்மீர பிரிவினைவாதிகளிடம் பேசத்தயார் என்று இந்திய பிரதமர் சொல்லியுள்ளார். நேற்று, 50 மேற்கு வங்க கிராமங்கள் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் என்று செய்தி.

கேட்டாலே இனிக்கிறது!!!!!!!!!




Puram boakku
2009-06-19 12:30:00
puramboakku@gmail.com

இலங்கை பிரச்சினையில் மைய அரசு எடுத்த நிலைப்பாடு , அது போகும் வழி சரியல்ல.

அதனால் ஈழத் தமிழருக்கு பெரும் கேடு விளைந்து உள்ளதோடு, சிங்கள அரசுக்கும் இது நிலையான வெற்றி அல்ல.

இந்தியா, இலங்கை அரசுக்கு நண்பன் என்ற முறையிலாவது நல்லது எது, தவறு எது என்று எடுத்துச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு இப்படி வேலை செய்வது இந்தியாவின் பாரம்பரியத்துக்கு இழுக்கை தேடித் தரும் செயல்.

பெரும் கறை இந்தியா மேல் விழுந்துள்ளது. ஆனல் இதற்கு காரணமும்,பொறுப்பும் இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரெஸ் கட்சியும், அதைத் தாங்கிப் பிடிக்கும் கட்சிகளும்தான்.

இந்திய நாட்டு மக்களின் மீது தவறு அல்ல. இந்திய நாடு என்பது வேறு, அதை ஆள்வோர் என்பவர் வேறு.

ஈழப் பிரச்சினையில் முக்கிய தவறு காங்கிரெஸ் அரசின் மீதுதான், அதை தாங்கிப் பிடிக்கும் கழக கூட்டணி மீதுதான்.

அதை அப்படியே இந்திய நாட்டின் மீது, 115 கோடி இந்திய மக்கள் தலை மீது கட்ட பார்க்காதீர்கள்.

எட்டப்பன் கூடத்தான் தமிழ் நாட்டை ஆண்டான். கட்டபொம்மனை காட்டிக் குடுத்தான். அப்ப தமிழ் நாடு என்றால் எட்டப்பன் நாடா? ஜெர்மனி என்றால் ஹிட்லர் நாடா?


2008 ம் வருடம் சூலை மாதத்தில் காங்கிரெஸ் அரசு கவிழும் நிலையில் இருந்தபோது, அதைக் காப்பற்றிச் சீராட்டிப் பாராட்டியது, தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் தானே? அப்போதே பிராணப் முகர்ஜியை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் ?

தவறு தமிழ் நாட்டு எம்.பி,க்கள் மீது என்பது உண்மையா இல்லையா? அப்போது புறங்கையில் வழியும் தேனை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்து விட்டு, இப்போது இந்தியாவைத் திட்டினால் என்ன அர்த்தம்?

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கத்தானே தேர்தல், மக்கள் பிரதி நிதிகள் எல்லாம்? தமிழ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் காங்கிரெஸ்ற்கு முழு ஆதரவு அளித்த பிறகு, இந்தியாவின் சின்னமான அசோகச் சின்னத்தில் உள்ள குதிரையும், எருதும், சிங்கமும், யானையுமா உயிர் பெற்று இறங்கி வந்து வேலை செய்ய முடியும்?

ஆனால் காலை முதல் உழைத்து இரவில் குடும்பத்தோடு சேர்ந்து கஞ்சி குடித்து அமைதியாக வாழும் அப்பாவியின் குடியைக் கெடுக்கும் வகையில், இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்க உங்களால் முடியாது.

பொன்பரப்பியில் பிரிவினைவாத தீவிர வாதி தமிழரசனை, அவனுடைய வூர் மக்களே, அடித்துக் கொன்று விட்டார்கள்.அப்படி செய்தது சரி என்று சொல்லவில்லை- நடந்ததை சுட்டிக் காட்டுகிறோம்.

ஈழத் தமிழருக்கு உதவ வேண்டியது பற்றி சிந்திக்காமல் , இந்தியாவில் இந்தியர்கள் அழியும் வகையில் இந்திய ஒருமைப் பாட்டுக்கு எதிராக பகல் கனவு காண்கின்றனர்.

இவர்களால் ஈழத் தமிழருக்கும் உதவியில்லை. இந்தியாவில் உள்ளவர்களும், (தமிழ் நாட்டில் உள்ள தமிழர்ளும்) மக்கள் விரோத பிரிவினையாலரை புறக்கணிப்பார்கள்.


MakizhNan
2009-06-19 01:54:00
Pandi@wisc.edu

அருமையான கட்டுரை...


--
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

மகிழ்நன்
2009-06-19 01:59:00
Pandi@wisc.edu

போராளிகள்
உயிர் துச்சம் கருதி போரடி எனக்குள்ளும்
உனக்குள்ளும் மிச்சம்மீதி தமிழ்யுணர்வு எழுப்பீர்
க‌ண்ணீர் பொங்கி துடித்த‌பொழுது கொஞ்சியே
தண்ணி காட்டிய துரோகிகளை காட்டீர்
சண்டையில் மக்களும் மடிவது இயல்பு
மகிழ்குரல் யொழுப்பிய எதிரிகளை சுட்டீர்
எம்மக்கள் சாக மட்டற்ற மகிழ்ந்த‌
எத்த‌னையும் வீண‌ர்க‌ளையும் காண்பித்தீர்
எள்ளி எக்காள‌மிடும் இந்திய திராவிட‌மும் காண்
துள்ளியெழுந்த‌ மெய் த‌மிழ‌னை புலபடவைத்தீர்
த‌மிழா! கொல்ல‌ப‌டுவ‌தில்லை போராளிக‌ள்‍ இத்
த‌ர‌ணியில் குருதி கொட்டி விதைபடுகிறார்கள்
ம‌ற‌ம் சென்றாலும் அற‌ம் கொண்டு தமிழ்நாடும்
ஈழ‌ம் கொள்ள‌மால் வீழ்வ‌தில்லை மெய்த‌மிழ‌ன்

Dr. V. Pandian
2009-06-19 07:24:00
porkkaiponds@yahoo.co.in

இந்தியா, தமிழருக்கு எதிராகவேதான் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுள்ளது. இன்று நேற்றல்ல. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்தே அதே கதி தான்.

ஆங்கிலேயர்களால் 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கையின் மலைக்காடுகளை அழித்து, தேயிலை தோட்டங்களை அமைத்து, இலங்கையின் பொருளாதாரத்தில் 60 விழுக்காட்டுக்கு காரணமான தமிழர்களை இலங்கை, சுதந்திரத்திற்குப் பிறகு நாடற்றவர்களாக மாற்றி, இந்தியாவிற்கு அனுப்ப சிரிமவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக 6,00,000 தமிழர்களை 60களில் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. இது தமிழருக்கெதிரான இந்திய துரோகம்.

நேருவே, ராமாயணம் என்பது திராவிட-ஆரிய யுத்தம் என்றார். ஆகையினால், இரண்டு காலங்களில் இலங்கை சென்ற நேரு, இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உருப்பினர்களை சந்திக்க மறுத்தார்.

இலங்கை சென்ற இந்திராவும் தமிழ் உருப்பினர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். சிங்களவர்கள் தங்களை ஆரியிர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர் என்பதை நாம் உணரவேண்டும்.

இவர் புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததெல்லாம் தமிழருக்கு நீநி கிடைக்க அல்ல. இலங்கையை மிரட்டி வைக்கத்தான். பிந்திரன் வாலேவுக்கும் பயிற்சி கொடுத்தவர் தான் இவர். தன்னலமில்லாமல் இவர்கள் எதையும் செய்வதில்லை.

1974ல் கச்சத்தீவை, தமிழருக்கு சொந்தமான கச்சத்தீவை, தமிழரிடம் கேட்காமலேயே, இலங்கைக்கு தாரைவாரத்தார் இந்திரா. தமிழரின் உடைமையை தமிழரைக் கேட்காமலேயே, வழிப்பிள்ளையாருக்கு, கடைத்தேங்காய் என்ற கணக்காக, கொடுத்தார்.

ராஜீவ்-ஜெயவரத்தனே ஒப்பந்தம் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டது. அதையும் செயல் படுத்தாத சிங்களவனைத் தட்டிக் கேட்காமல், தமிழரை வேட்டையாடியது இந்தியா. அமைதிப்படை அனுப்பப்படும் போது, தமிழகத்தின் எதிர்ப்பையும் அலட்சியம் செய்தனர் டெல்லி, ஏகாதிபத்தியம்.

ராஜீவ் கொலை பயங்கரவாத செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றமே, அரிதாக, சொல்லியும், தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்காமல், புலிகளைத் தடை செய்தது இந்தியா.

உலக அரசுகள் தடை செய்வதற்கும் இந்தியாவின் ராஜதந்திரம் தான் காரணம்.

தற்போது ரேடார், ஆயுதம், பயிற்சி, படைக்கலன்கள், தொழில் நுட்பம், உளவு செய்தி என அத்தனையும் தமிழரின் எதிரப்பையும் மீறி, சிங்களனுக்கு வழங்கி, தமிழனைப் லட்சக்கனக்கில் கொல்ல துணை நின்றது இந்தியா.

ஆக, இந்தியா என்றுமே தமிழருக்கு எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

இது ஆரியருக்கும் தமிழருக்கும் உள்ள அடிப்படையான பகையின் வௌிப்பாடு.

இது சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் உள்ள பகைமையின் வௌிப்பாடு.

இந்தியாவை வழி நடத்தும் சக்தி, ஆரியர்களே! இது ஒரு தேசமென்றால் அது ஆரியருக்கானது தான். இது ஒரு ஆரியதேசம்.

இந்தியாவிலுள்ள அனேக பத்திரிகைகள் ஆரியராலோ அல்லது ஆரிய ஊடுருவலாலோ நடத்தப் படுகிறது. அதனால், தமிழரைப்பற்றிய கீழ்மையான கருத்துகளை இந்தியாவில் விதைப்பதை அவர்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். தொலைக் காட்சிகளும் அப்படியே!

தமிழனுக்கு நடக்கும் பல தீங்குகளின் மூலம் இது தான்.

பகவன்
2009-06-20 06:31:00
pagavan@gmail.com

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி” என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட ”இந்திய” அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். ”நான் இந்தியன்” என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?
உண்மையான வரிகள்! கட்டுரையாளரின் மன வருத்தம் புரிகிறது! 'இனி ஒரு விதி செய்வோம்!'

Puram Boakku
2009-06-20 09:24:00
puramboakku@gmail.com

60 வருடம் அல்ல, 6000 வருடங்களுக்கு மேலான வரலாறு இந்திய சமுதாயத்தின் வரலாறு.

வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சில இந்திய அரசியல்வாதிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

மனு சோழன்: தான் மகன் ஒரு கன்றை விபத்திலே கொன்றதற்க்காக, தன் மகனையே, தேரை யெற்றி மரணம் அடைய வைத்த- நீதி தவறாத மன்னன் - வேறு எங்காவது உண்டா?

கரிகாலன்: மக்கள் வரிப் பணத்தை வைத்து மாட மாளிகை , கூட கோபுரம் என்று தனக்கு வசதி செய்து கொள்ளும் மன்னர்களின் நடுவில், தன் கரூவூலப் பணத்தை எடுத்து காவிரியில் மக்கள் நன்மைக்கு ஆக அணை கட்டிய மாமன்னனின் கருணை- உலகில் பிற நாடுகளில் காண்பது அரிது!

அசோகர்: மாவீரன் அலெக்சாண்டர் மறைவுக்குப் பின், இந்தியா உலக அரங்கில் ஒரு பெரிய வல்லரசாக உருவாககும் சூழல் இருந்தது. அதே நோக்குடன் தான் அசோகன் கலிங்கப் போரை நடத்தி வெற்றியும் கண்டான். வேறு யாராக இருந்தாலும், அந்தப் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல படை எடுப்புகள் போர்கள், என மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதில் முனைப்பு காட்டி இருப்பான். ஆனால் அடுத்தவருக்கு துன்பம் தர விரும்பாத இந்தியனின் மன உணர்வு அவன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வெளியே வந்து, பிறகு நடந்ததும் ஒரு சரித்திரம் தான்!

அக்பர்: தீவிரமான கட்டுப்பாடு உடைய ஒரு மதத்தைச் சேர்ந்தவர்! அவருடைய பாட்டனார் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர், அப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணி உடைய அக்பர், இந்திய மக்களின் சகிப்புத் தன்மை, அமைதி கருத்துக்களை தன் நல்ல உள்ளத்தில் பிரதிபலிக்கச் செய்து, இந்தியாவின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.

இப்படியே இன்னும் பல இந்திய அரசர்களை குறிப்பிடலாம். நேரம் இல்லாததால் அவர்களை குறிப்பிட இயலாததற்கு, அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இதோடு இன்னும் காந்தி, காமராசர், கக்கன்,ஜீவா... இப்படி பல சமீப கால தலைவர்களையும் சொல்ல முடியும்!

இவர்கள் எல்லாம் இப்படி தன்னலம் இல்லா தியாகியாக வாழும்படிக்கான கருத்துக்கள், இந்தியாவில் உள்ள எல்லா மக்களின் மனக் கருத்துக்கள்தான்!

அசோகர், அக்பர், கரிகாலன் எல்லோரின் கருத்தும் , எண்ணமும் 8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் கருத்துக்கள் தான். மக்களின் மனதில் உள்ள கருத்துக்கள் அவர்கள் மனதில் பிரதிபலித்ததால் தான்!

8000 வருடங்களாக தொடர்ந்து இந்திய சமுதாயத்தில் வாழ்ந்த எல்லா மக்களின் மனங்கள்தான்.

எனவே அரசர்கள் யார் ஆண்டாலும், ஆட்சி மாறினாலும், சோழர் ஆண்டாலும், மௌரீயர் ஆண்டாலும், முகலாயர் ஆண்டாலும் , ஆங்கிலேயர் ஆண்டாலும் குமரி முதல் இமயம் வரை உள்ள மக்களின் அடிப்படை எண்ணம், உணர்வு ஒன்றாகத் தான் இருந்தது.

அந்த எண்ணம் தான் காந்தியை, அக்பரை, அசோகரை, கரிகாலனை உருவாக்கியது.

அப்படிப்பட்ட மக்கள், சன நாயக அடிப்படையில் ஒரு அமைப்பை உருவாக்கிய போது, அது இந்தியாவாகத்தானே உருவாகும்?

அப்படிப்பட்ட இந்தியாகவே, மனு சோழனின் இந்தியாகவே, அசோகரின் இந்தியாகவே, அக்பரின் இந்தியாகவே, காந்தியின் இந்தியாகவே, இந்தியா எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான் நமது விருப்பம். ஆனால் சொக்கத் தங்கங்களும், தமிழனத் தலைவர்களும், அம்மையார்களும் இந்தியாவை தங்கள் சுயநலத்துக்கு பயன் படுத்தக் கூடாது என்பதே நம் விருப்பம்.


Puramboakku
2009-06-20 09:51:00
puramboakku@gmail.com

நேரு யாரை சந்தித்தார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் இந்தியா நேருவுக்கோ, அத்வானிக்கோ, சொக்கத் தங்கத்துக்கோ சாசனம் எழுதிக் கொடுக்கப் பட்டதல்ல!

இராமன் எதற்கு இலங்கை மேல் படை எடுத்தான்? கோழையும், பொருக்கியுமான இராவணன் துறவி போல வேடமிட்டு, பிறன் மனைவியை களவாடி சென்று விட்டான்.

தான் களவாடிய பெண்ணை திரும்பவும் ஒப்படைத்து இருந்தால் இராமன் போர் செய்திருக்கப் போவது இல்லை.

இந்த ஒழுக்கம் கெட்ட, பொருக்கி பார்ப்பனன் இராவணனுக்கு ஆதரவு கொடுக்க சிலர் உள்ளனர். வள்ளுவர் பிறன் மனை விழையாமை பற்றிக் கூறியது இதுதானா?

ஒரு வேளை சாதாரண பார்ப்பானைத் திட்ட வேண்டும் என்பதும், வலிமையுள்ள பொறுக்கிப் பார்ப்பானை புகழ்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதுவும்தான் இவர்கள் கொள்கையா??

Puramboakku
2009-06-21 04:21:00
puramboakku@gmail.com

இங்கே நம்மில் பலர் வரலாறு படித்து விட்டு தானே வந்திருக்கிறோம். பல முக்கியமான போர்களைப் பற்றி நாம் படித்து இருக்கிறோம்.

மைசூர் போர், பானிபட் போர், தலையாலங்கானம், கலிங்கத்துப் போர் இப்படி பல போர்கள் வரலாற்றில் உண்டு.

ஆரிய திராவிடப் போர் என்று ஏதாவது போர் வரலாற்றிலே இருக்கிறதா? இப்படி இல்லாத போர்களை கற்பனை செய்து, கனவிலே மகிழுந்து, குளிர் சாதன அறையிலே வீரமாக எழுதி தமிழர்கள் வாழ்க்கையை நசுக்கியதுதான் மிச்சம்.

தமிழர்கள் சோழ, சேர பாண்டியர்கள் தங்களுக்குள் சமர் செய்து கொண்டதுதானே அதிகம்?

ஹர்ஷர் நரசிம்ம பல்லவனுடன் போரிட்டதாகவோ, குப்தர்கள் சோழ நாட்டின் மீது படை எடுத்ததாகவோ வரலாறு உண்டா?

பெரிய தலைகள் எல்லாம் இளைங்கர்களை தூண்டி விட்டு, தாங்கள் ஒதுங்கி, பிறகு அதிகார மையங்களை வாழ்த்தி வளமடைகின்றனர்.

உலக சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய மக்கள் எல்லா நன்மையும் பெற்று நல்ல நிலைமையில் வாழ எது சிறந்த வழி என்று பார்க்க வேண்டும்.

மக்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க விவரமாகத் தான் இருக்கிறார்கள். யாரும் மக்களை எளிதாக ஏமாற்றிக் குழியில் தள்ள முடியாது.

siruthai
2009-06-21 08:29:00
siruthaai@yahoo.com

ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்து மிரட்டாமல்..சீனாவிடம் போகாதே! பாகிஸ்தானிடம் போகாதே! நான் உனக்கு வழிகாட்டுகிறேன் பேர்வழி என்று அனைத்தையும் வாரி வழங்கிய பொந்தியா இனி அதற்கு தண்டனையாக ஆயுட்கால கப்பம் செலுத்த போகிறது! ஒன்றும் இல்லை இனி இலங்கை பட்ஜெட் பாகிஸ்தான் சீனா இந்தியா ஆகியவற்றை மிரட்டி மிரட்டி இவன் எனக்கு இவ்வளவு கொடுத்தான் நீ எனக்கு என்ன கொடுத்தாய்? என நோகாமல் நொங்கு திங்க போகிறது இதுதான் உண்மையாகும்.. யார் வீட்டு வரிபணம்? நம்முடையது அதில் உள்ளது அல்லவா? எதிரிக்கும் சேர்த்து நாம் உழைக்க வேண்டுமா?

இதில் ஒன்று நினைவு வருகிறது கத்தார் நாட்டில் அந்நாட்டு எண்ணை விற்ற காசில்
ஒவ்வொரு நாட்டுக்கும் இவ்வளவு விற்றேன் இதில் உன் பங்கு இவ்வளவு என ஒவ்வொரு குடும்பதிற்கும் ஷேர் போகிறது அரசாங்கத்தின் மூலமாக அதே போல் இலங்கையில் இந்தியாவினை மிரட்டி இவ்வளவு பணம் வாங்கினேன் சீனாவினை மிரட்டி இவ்வாளவு வாங்கினேன் என சிங்கள அதிபர்கள் யாருடைய உழைப்பயோ வாங்கி திங்க போகிறான்

அதில் ஈழதமிழினம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிக முக்கிய பங்கினை வகிக்க போகிறது.. ஏற்கனவே ராசபக்ச சொல்லிவிட்டான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஈழ தமிழர்களை திறந்த வெளி சிறைசாலையில் இருந்து விடுவிக்க போவதில்லை என..காரணம் என்ன?சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..நம்மவர்களும் ஒன்னுக்கு போன அரசியல் இரண்டுக்கு போன அரசியல் என நான் இவ்வளவு ஈழ தமிழர்களுக்கு கொடுத்தேன் நீ குறைவாகதான் கொடுத்தாய் என ஆளாளுக்கு சண்டை நடைபெறும் ஆனால் உண்டியல் குலுக்குவதென்னவோ அப்பாவி தமிழர்களிடம் தான் பின்னே சொந்தகாசினையா தருவார்கள்? ஏன் இந்த நம் இனத்திற்கு வந்தது என்று எவன் யோசிக்கிறான்

இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பதினை பார்ப்போம்!

இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! ஈழ தமிழர்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்… அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..

ஒரு சாதாரண் குட்டி நாடு இஸ்ரேல் பாலஸ்தீனதினை இந்த பிரட்டு பிரட்டுகிறது இவ்வளவு அரபு தேசம் இருந்தும் ஒன்றும் கைவைக்க முடியவில்லை காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, வல்லரசுகளின் பேராதரவு இதுவே ஈழ தமிழர்களுக்கு தேவைபடுவது அனைத்து நாடுகிளும் தடைசெய்யப்பட்ட நிலையிலும் தனி அரசாங்கத்தினையே நடத்தியவர் அண்ணன் பிரபாகரன் பொருளாதாரத்தினை அவர்கள் பார்த்து கொள்வார்கள் தேவைபடுவது நவீன தொழில் நுட்பமே இன்று புலிகளிடம் அணுகுண்டோ வேறு எதாவது புது வகை ஆயுதம் இருந்திருந்தால் போர் தொடங்கவே அஞ்சியிருப்பான் சிங்களன்

அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் இன சமநிலை பேணபடவேண்டும் அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் எவன் நட்பு நாடு எவன் பகை என ரூம் போட்டு யோசித்து இருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..

மேற்குலகிற்க்கு தேவை வியாபாரம் அதற்கு மனித மந்தை தேவைபடுகிறது இதில் முதலிரண்டு இந்தியா மற்றும் சீனா இவைகளை ஒரு சேர பகைக்க மேற்குலகம் விரும்பாது.. அதிலும் பார்க்க இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை ஆனாலும் அதை ஒரே புள்ளியில் நிறுத்தி வாங்கி திங்க போகிறான் சிங்களன் காரணம் அதன் அமைவிடம்..

இதை தடுக்க ஒரே வழி இன்று தமிழன் வேறு வடநாட்டான் வேறு என சின்ன விதை ஈழ தமிழர்பிரச்சினையினால் விதைக்க பட்டுள்ளது அது இன்னும் மறுபடி காவிரி முல்லை பெரியாறு என வரும் போது விரிவாகும் அல்லது விரிவாக்கவேண்டும் இந்தி இறைமை என்று எவன் வந்தாலும் செருப்பால் அடித்து அனுப்பவேண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இதனை பெரிதாக்கவேண்டும் எதிரி வடநாட்டான் எதை நினைத்து பயபிடுகிறானோ அதையே ஆயுதமாக கொள்ள்வேண்டும்..

தமிழர்கள் முக்கியமாக பொறாமையை விடுங்கள் நாடுகள் என்ற எல்லையை கடந்து அது மலேசியா முதற்கொண்டு வேறு நாடுகள் வரை தாம் கற்றதினை ஈழ தமிழர்ளுக்கு கொடுங்கள் பொருளுதவி அல்ல மூளை உதவி ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ.. அவர்களுக்கு உதவுங்கள் நமக்கென ஒரு நாடு அமைந்த பிறகு வேறு நாட்டில் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அப்போது தைரியமாக ஈழத்தினை பார்த்து கேட்கலாம் நீ ஏன் எங்களுக்காக குரல் எழுப்பவில்லை என (இது பொந்தியாவிற்கும் சேர்த்துதான்)

siruthai
2009-06-21 01:54:00
siruthaai@yahoo.com

//இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள் போராட்டம் -ஒர் பார்வை//

மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)
தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியது தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்டதிற்கு மன்னிப்பு கேட்பாரா?

மாற்றத்திற்கான வழி:
மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!

இந்தி அரசியல் வியாதிகள்
(கவலையளிக்கிறது-வருத்தமளிக்கிறது- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)
இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள் ஆகிவிடலாம்.உண்மையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக்கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை. நேரடியாக செயலில் இறங்குவதுதான் இவர்களது பாலிசி.மலெசிய தமிழர் போராட்டதில் இருந்து வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சிறையில் வாடிய போதும் இவர்கள் கூறியது மேற்கூறியவார்தைகள் தான். அதாவது இவர்களுக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் எ.டி.எம் மிஷின் தானே தமிழர்கள்!தமிழீழத்தில் இருந்து தினம் தினம் 100க்கும் மேல் நமது உறவுகளை குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தி அரசினை கண்டித்தும் இங்கு கக்கூசு கழுவுபவர்கள் முதல் காய்கறி கடைக்காரர்கள் வரை போராடி பார்த்தாகிவிட்டது ஆனால் இந்தி அரசு இம்மியளவும் நகர்கிற வழி தெரியவில்லை.தமிழினத்தின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன?இந்தி அரசின் சட்டதிட்டங்களும் மற்றும் அதை நடைமுறைபடுத்தும் இந்திய ஆட்சியாளர்களே ஆகும்!

இந்த இந்தி ஆட்சியமைப்பு முறையில் சராசரி ஒரு சிங்கும் ஒரு தமிழனும் ஒரு கோரிக்கை மனுவோடு புதுடெல்லியில் உள்ள எதாவது ஒரு மத்திய அரசின் அமைச்சகத்தின் முன் நிற்கட்டும் யாருடைய மனு முதலில் பரிசீலிக்கபடும் என்பது நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…ஏன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?

மாற்றத்திற்கான வழி:
சுயநலமற்ற தலைவர்களை எம்.பிக்களாக தேர்ந்தெடுப்பது.. வெளியுறவு மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு பெறுவது.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும் ..சில காலத்திற்காவது அவர்களை முக்கிய பிரச்சனைகளில் காக்க வைக்கவேண்டும். அப்போதுதான் நாமும் மனிதர்கள் என உணர்வார்கள்.நம்முடைய வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியும்.

தமிழக அரசியல் வியாதிகள்:(தந்தி-தபால்-பொதுகுழு- செயற்குழு -அனைத்துகட்சி கூட்டம்-மத்திய அரசிற்கு தீர்மானம்)
தமிழக அரசியல் வியாதியாவதற்கு மேற்குறியவைகள் இருந்தால் போதும் வியாதி ஆகிவிடலாம் எவன் தமிழ்நாட்டில் இருந்து தந்தியடித்தாலும் அது எங்கு செல்லும் என இங்குள்ள வியாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆகா தமிழ்நாட்டில் இருந்து தந்தி தபால் வந்ததா.. மிளகாய் பஜ்ஜியை அதில் வைத்து சாப்பிடுவோம் என இந்திகாரன் சாப்பிடுவான் என அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஏன் அதையே தொடர்ந்து செய்கிறார்கள்?இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!

சரி இவர்களை மாற்ற என்ன வழி?
1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.

2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..

3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..

4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்

5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..

6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்

–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!

மக்களுக்காக:(மானாட மார்பாட- கலக்க போவது யாரு- சீரியல்கள்-இலவசங்கள்)
தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.ஒரு சீக்கிய இனத்திற்காக போராடிய பிந்துவாலேவிற்காக ..எங்கே நம்மை விட்டு பிரிந்து போய்விடுவார்களோ என இந்தி அரசு அவர்களை கண்டால் நடுங்குகிறது. எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான். எந்த காரணம் சொல்லி இந்த அரசு ஈழ தமிழர்களை கொன்று ஒழித்ததோ அதே ஆயுதத்தை நாமும் ஏந்துவோம் ! பிரிவினைக்காக பிறகு! நம்முடைய பிரச்சனைகளுக்கு ஈழ தமிழரின் வாழ்வுரிமைக்கு!

makiznan
2009-06-21 02:56:00
Pandi@wisc.edu

உண்மைதான் திரு சிறுத்தை நண்பரே!

யூதர்களின் அறிவியலில் அறிவும் இன்றி, தொழிலில் அவர்கள் செலுத்திய நேர்த்தியும், நேர்மையும் மற்றும் தங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் மாறாமல் இருதார்கள். அவர்களின் உறுதியும் நேர்த்தியும் நமக்கு வேண்டும்.

தமிழர்கள் எங்கு சென்றாலும் இன உணர்வும் , பொருளாதார உயர்வு பெற வேண்டும். முடித்த வரை நம் மக்களின் தொகையயெய் உயர்த்தி அந்தந்த நாட்டின் வாக்கு எண்ணிகைய் மிகைப்படுத்த வேண்டும்.

இதற்க்கு இடையில் தமிழகத்தில் நாம் தமிழர் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு சாதிய எண்ணங்களை அடியோடு அழிக்கவேண்டும்.

எதிரிகள் இந்தியம் என்ற பார்வையோடு இயக்கும்பொழுது, அவர்களையும் மீறி தமிழர் என்ற உணர்வை ஊட்டி மக்கள் ஆதரவை பெறவேண்டும்.

--
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Dr. V. Pandian
2009-06-21 06:52:00
porkkaiponds@yahoo.co.in

பார்ப்னர்கள் எப்பேர்பட்ட அயோக்கியர்கள், மனசாட்சியில்லாதவர்கள், பச்சைப் பொய் சொல்கிறவர்கள், தன்னலம் கொண்டவர்கள், ஏமாந்தவனை வஞ்சனையில்லாமல் ஏமாற்றுபவர்கள் என்பதெல்லாம், இந்தப் பார்ப்பனப் "புறம்போக்கு" எழுதுவதைப் படித்தாலே நன்றாக புரிந்துவிடும்.

தமிழகமே இழவு வீடாகுமளவுக்கு தமிழின துரோகம் செய்த இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி இந்தப் புறம்போக்கு ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும்?

பார்ப்பனீயம் ஓட்டமெடுக்கும் காலம் இது! தமிழ் நாட்டின் உப்பைத்தின்று கொண்டே, தமிழனுக்கு எதிராகவே நிலை எடுத்து, அதை சாதித்தும் விட்டது இந்தப் பார்ப்பனீயம். ஆனால், இப்போது அவர்களுக்கு பொறுப்புகள் அதிகம். சிங்களவன் அங்கே தமிழனை வாழ விடப்போவதில்லை. அவர்களின் நிலங்களை அபகரிக்கப்போகிறான். ஒரு தனி மாநிலம் என்ற அளவுக்குக் கூட அவர்களுக்கு அவன் உரிமைகள் கொடுக்கப் போவதில்லை.

தமிழர்களுக்கு அரணாயிருந்த புலிகளை அழித்த பாவத்தைச் செய்தவர்கள், இந்தப் பார்ப்பனக் கும்பல் தான். ஆக, ஈழத்தமிழர்களின் வாழ்வியலை நாசப்படுத்திய பாவம் இந்தப் பார்ப்பனக் கும்பலைச் சேரந்தது. ஆக, ஈழ மக்களின் எதிர்காலம் பற்றிய பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இவர்களே!

இவர்களின் பதற்றம் புரிகிறதா?

தோழர்களே! சிறுத்தை எழுதிய பின்னூட்டத்தை பல முறை படியுங்கள்.

இது வல்லவர்களின் உலகம். நல்லவர்களின் உலகம் அல்ல.

வல்லவனுக்கு வல்லவனாக இருப்பது ஒன்றே நமது தற்காப்பு!



புறம் போக்கு
2009-06-22 01:06:00
puramboakku@gmail.com

அயோக்கியர்கள், மனசாட்சியில்லாதவர்கள், பச்சைப் பொய் சொல்கிறவர்கள், தன்னலம் கொண்டவர்கள், ஏமாந்தவனை வஞ்சனையில்லாமல் ஏமாற்றுபவர்கள் யார்?

தமிழனத் தலைவர் அவரைப் புகழ்பவர்களுக்கு தமிழர் பட்டமும், விமரீசிப்பவருக்கு துரோகி பட்டமும் வழங்கியது போல, பாண்டியனாரும் அவர் விருப்பம் போல பார்ப்பனப் பட்டம் வழங்கி வருகிறார்.

ஈழம் பற்றி எரிகிறது. அங்கே எரியும் நெருப்பை அணைக்க வேண்டும். ஈழத்திலே தனி மாநிலம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனி ஈழம் அமைக்க வேண்டியதின் நியாயங்கள் உள்ளன. ஏன் என்றால் அங்கே தமிழர்கள் அழிக்கப் படுகின்றனர். தமிழ் மொழி அழிக்கப் படுகிறது.

ஆனால் இந்தியாவில் தமிழருக்கு ஆபத்து இல்லை.
'தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்ககப் பட வேண்டும்'- என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து குமரியை சேர்ந்த சிலர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, தமிழ் மொழியை படிப்பது நல்லது என்று கூறி விட்டது.

தமிழ் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரம் தமிழும் காக்கப் பட்டு வருகிறது.

பிறகு எதற்கு தமிழ் நாட்டில் தீயை பற்ற வைக்க வேண்டும்?

இவர்கள் முதலில் தனித் தமிழ் நாடு கேட்பார்கள். ஆனால் ஆரம்பிப்பது தான் இவர்கள். முதலில் இவர்கள் பேச்சைக் கேட்பவர்கள் "செயல் பட" ஆரம்பித்தால், கடைசியில் பாண்டியனார் தான் அவர்கள் சொற்படி நடக்க வேண்டி இருக்கும்!

தனி தமிழ் நாடு உருவாகிறதோ இல்லையோ, தனி சோழ நாடு, தனி பாண்டிய நாடு, தனி சேர நாடு- இது மட்டும் அல்லாது தனி கொங்கு நாடு, தனி தொண்டை நாடு என்று ஆங்காங்கே "படைகள்" உருவாகும்.

அதிக பகுதிகளை தன்னுடைய "கண்டிரோலில்" வைத்து இருக்க ஒரு குழு மற்ற குழுவை தாக்கும். சிங்கள பேரின அடக்குமுறை ஈழத்திலே இருப்பது போல இங்கே இருக்கவில்லை என்பதால், இவர்களுக்கு பொது எதிரி இல்லை, தாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே! இடையில் அப்பாவிகள் மாட்டிக் கொண்டு சாவார்கள். தமிழ் நாடு இந்தியாவுக்குள்ளே பீஹாரைப் போல வன்முறை மாநிலமாக மாறும். இது தேவையா பாண்டியனாரே?அப்போது நீங்கள் எழுதுவதைக் கேட்டு நடக்க மாட்டார்கள்.

ஆனால் தமிழக மக்கள் வன்முறையை ஆதரிப்பதும் இல்லை. அனுமதிப்பதும் இல்லை.

இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி, ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்றால், நான் இந்தியாவின் 7 கோடி தமிழர் உட்பட எல்லா இந்தியரையும் நேசிக்கிறேன். ஈழத் தமிழரை நேசிக்கிறேன். அவர்கள் என் உறவு. இப்போது அவசர உதவி அவர்களுக்கு தான் தேவை. முள்வேலியின் நடுவே தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். உறவுகள் பிரிக்கப் படுகின்றன. உலகிலே வேறு எங்கும் இல்லாத கொடுமை.

அதிலிருந்து அவர்களை மீட்டு எடுக்க சிங்கள அரசுக்கு அழுத்தம் குடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு சாவி குடுக்கப் பட்ட பொம்மையைப் போல, இந்திய பிரிவினை பற்றி எழுதுவது ஏன்?

நான் மக்களின் கருத்ததைத் தான் எழுதுகிறேன். 7 கோடி தமிழரும் எழுதுவதில்லை. ஆனால் அவர்களுக்கு இது தெரியும்!

தமிழக மக்கள் பிரிவினையை, வன்முறையை ஆதரிப்பதும் இல்லை. அனுமதிப்பதும் இல்லை.

இந்தியா பிரிந்தால் பாகிஸ்தானும், சீனாவும், சிங்களமும் தமிழகத்தில் உள்ள தமிழரை சூறையாடும். அப்போது இணையத்தில் எழுதுவது அல்லாமல் வேறென்ன உங்களால் செய்யக் கூடும் நண்பரே ?

என்னுடைய எழுத்தில் சுயநலம் இல்லை. நான் ஈழத் தமிலரையும் நேசிக்கிறேன், இந்தியரையும் நேசிக்கிறேன்.

பிரிவினை கருத்துக்களால், தமிழக மக்கள் வாழ்வும் கெடும்! இந்திய பிரிவினை கருத்துக்களால் ஈழத் தமிழருக்கும் உபயோகம் இல்லை!

அயோக்கியர்கள், மனசாட்சியில்லாதவர்கள், பச்சைப் பொய் சொல்கிறவர்கள், தன்னலம் கொண்டவர்கள், ஏமாந்தவனை வஞ்சனையில்லாமல் ஏமாற்றுபவர்கள் யார்?

தான் வாழ பிறரைக் கெடுப்பவர் யார்?

யோசித்திதுப் பதில் எழுதுங்கள்! எனக்கு உங்கள் மேல் நமபிக்கை உண்டு









S.Thiru
2009-06-23 08:02:00
s.thirumugam@gmail.com

பாண்டியன் அவர்களே,

ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் இவ்வருமையான கட்டுரையின் பின்னூட்டங்களில் யாருமே 'பொறம்போக்கை' கண்டுகொள்ளவில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்கிற வகையில் நம் சிந்தனை செல்ல வேண்டும்.

தோழர்களே!

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் பார்ப்பனிய மதத்தை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயலுத்தியாகக் கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை, நிகரமைய (சோசலிச), பொதுமைய (கம்யூனிச) சமூக அமைப்புக்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். தோழர்களே! ஒரு மார்க்சியவாதி என்ற முறையில் ஒன்றைக் கூறுகிறேன். ஈரோட்டுப் பெரியார் மூலமாகத்தான் நீங்கள் செர்மானியப் பெரியாரை அடைய முடியும். வேறு எந்தப் பெரியவாள் மூலமாகவும் அல்ல! பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்.

பொறம்போக்கு
2009-06-24 04:20:00
puramboakku@gmail.com


நன்றி திருமுகம் அவர்களே,

என்னை யாரும் கண்டு கொள்ள வேண்டும் என்பதோ கண்டு கொள்ள வேண்டாம் என்பதோ எனக்கு ஒரு பிரச்சினையில்லை. எனக்கு நான் வாழும் நாட்டில் என்னுடன் வாழும் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதுதான் சிந்தனை.

நீங்கள் பார்ப்பனீயக் கட்டமப்பை வெட்டி முரியுங்கள். "பெரியாவாளைத்" திட்டுங்கள், "சின்னவாளைத்" திட்டுங்கள். துறவி போல வேடமிட்டு பெண்களிடம் வம்பு செய்யும் யாரையும் திட்டுங்கள். எனக்கு பிரச்சினையில்லை.

நான் கூறும் கருத்துக்கள் சாதாரண மக்களின் கருத்துக்கள். சாதரண இந்தியனின் கருத்துக்கள்.

தமிழ் நாட்டை தட்டினால் தங்கம் , வெட்டினால் வெள்ளி என்றார் அண்ணா. எங்கே தட்டினால் கிடைக்கும் என்றும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஜார்க்கண்டில் இருந்து இரும்பு வருகிறது. ஒரிசாவில் இருந்து அலுமினியம் வருகிறது. தூத்துக்குடியில் உள்ள அனு மின் நிலையத்துக்கு கூட நிலக்கரி ஒரிசாவில் இருந்துதான் வருகிறது. ராஜஸ்தானில் இருந்து மார்பில் வருகிறது. அதை எல்லாம் வைத்து தொழில் செய்து கார்களை , தானியங்கி பாகங்களை உற்பத்தி செய்வதால் எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கூட இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனை செய்வதால்தான் எங்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது.


இந்தியாவில் எந்த மாநிலமும் தனித்து இயங்க முடியாது.

மராத்தாவில் ஒரு குடும்ப வெறிக் கும்பல் பிற மாநிலத்தவர் மும்பைக்குள் வரக் கூடாது என்று வன்முறை செய்கிறது.

ஆனால் மும்பை பற்றி எரிந்த போது, அந்த குடும்பக் கும்பல் வீட்டுக்குள் பேச்சு மூச்சின்றி முடங்கிக் கிடந்தது.

பிற மாநிலத்தவர் மும்பையில் வேலை செய்யக் கூடாது என்றால், பிற மாநிலத்தவர் பதிலுக்கு "மும்பையில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம்", என்றால் மும்பயில் தயாரான பொருட்களை எங்கு கொண்டு போய் விற்ப்பார்கள்?

திருமுகம் அவர்களே,

//பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான்//

பீகாரி வட இந்தியன் அல்லவா?


பீகார் என்ன தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும் நடுவிலா இருக்கிறது? பீகார் வட இந்தியாவில் இல்லையா? அப்படி பீகார் வட இந்தியா இல்லை என்றால், தமிழ் நாடு தான் வட இந்தியாவா?

பீகாரி வட இந்தியன் அல்லவா?

அப்ப இங்கெ இருக்கும் குப்பனும் சுப்பனும் வட இந்தியனா?

பீகாரியின் மேல் உங்களுக்கு உள்ள இன உணர்வைப் பாராட்டுகிறேன்.

பீகாரிலும், ஒரிசாவிலும் தவறாக வழி நடத்தப் பட்ட வன்முறையாளர்கள், எல்லா பிரிவு மக்களையும் சுட்டுக் குவித்து வருகின்றனர், அதனால் உங்களுக்கு அந்தப் "புரட்சியால"ரைப் பார்த்த்வுடன் இன வுணர்வு எழுகிறதா - என்று நான் கேட்கவில்லை.

வன்முறைக் குழுக்களால் அதிக பாதிப்பு அடைவது சாதரண அடித் தட்டு ஏழை மக்கள்தான் என்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

அந்த அளவில் இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் மீது உங்களுக்கு உள்ள அன்பிற்கு நன்றி.

Dr. V. Pandian
2009-06-25 09:06:00
porkkaiponds@yahoo.co.in

நீங்கள் சொன்னது அத்துனையும் சரியே, திருமுகம் அவர்களே!

கேரளனுக்கு தனிநாடு வேண்டியதில்லை என்று முடிவாக உள்ளனர். இது நான் சொந்த அனுபவம் மூலமாக அறிந்த செய்தி. இளம் மலையாளிகளும் இதில் தௌிவாகவே உள்ளனர். ஆகவே, தனித்தமிழ்நாடு என்பதற்கு இவர்களும் பார்ப்பனீயத்தோடு சேர்ந்துகொண்டு எதிர்ப்பார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதன் முன்னோடியாகத்தான் ஈழத்தில் மலையாளி தனது கைவரிசையைக் காட்டியுள்ளான்.

கன்னடனோ, தெலுங்கனோ கொள்கையளவில் தனிநாட்டிற்கு உடன்பட்டே உள்ளனர். இதுவும் எனது சொந்த அனுபவம் ஊடாகவே சொல்கிறேன். அவர்களை நாம் அறவனைத்து செயல்பட முனைய வேண்டும்.

இந்தியா தனது அரசியலமைப்பாலும், பொருளாதாரக் கொள்கைகளாலும் தானே உடையும் காலம் வந்து கொண்டுள்ளது. அது உடைந்தே தீரும். அதன் வௌிப்பாடுகள் தான் மாவோயிஸ்டுகள் நடத்தும் போர்கள். மாவோயிஸ்டுகள் இப்போதைக்கு ஒடுக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும், முடிவில் மாற்றம் இல்லை.

நமது போராட்டவடிவம் மக்கள் திறள் எழுச்சி தான். விடுதலை விழையும் அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில், மக்கள் திறள் எழுச்சி வடிவாகப் போராடினால், வழிக்கு வரும் நடுவனரசு.

நமது முதன்மை செயல்திட்டம் என்பது பாமரத் தமிழனுக்கு விபரங்களைச் சொல்லி உசுப்பேத்துவது தான்.



apavi
2009-07-03 12:14:00
appavi_tamilan@yahoo.com

why dont you commiy suicide then



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP