Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

காங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள்
புதுச்சேரி உண்ணாப்போராட்டத்தில் வெளியீடு
க.அருணபாரதி

pudhuchery ஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.

ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.

ராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு "மரியாதை" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

pudhuchery இப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

உண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். உண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.

வெளியிடப்பட்ட ஆவணங்கள் இங்கு இணைக்கப்பட்டடுள்ளன

ஆவணம் 1

ஆவணம் 2

ஆவணம் 3

ஆவணம் 4

ஆவணம் 5

ஆவணம் 6

ஆவணம் 7

- க.அருணபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com