Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழின எழுச்சியை பொறுக்க முடியாத பார்ப்பனிய சக்திகள்
க.அருணபாரதி


சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் இந்தியத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய இந்தியத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் 'இந்து' உள்ளிட்ட ஆரியப் பார்ப்பனிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர் என்பதை அண்மை நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

The Hindu சிங்கள அரசிற்கு மகிந்த ராஜபக்ச தலைமையேற்றதிலிருந்து, ஈழத்தமிழினத்தை முழுமையாக அழித்தொழிக்க உறுதிபூண்டு செயல்பட்டுவருகின்றது. சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள இப்போரால் சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதை உலகமே நன்கு அறியும். சிங்கள இனவெறி அரசு பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படும் சிங்கள மக்கள் மீது கூட கவலை கொள்ளாமல், ராஜபக்ச அரசு தனக்கே உரியஇனவெறியுடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இராணுவத்திற்கே அதிக நிதியை செலவிட்டு வந்தது. (காண்க : லைவ் மிண்ட், வால் ஸ்ட்ரீல் பத்திரிக்கை இணையம், http://www.livemint.com/2008/10/10000123/Sri-Lanka-earmarks-record-amou.html?d=1).

கடந்த 2006 ஆம் வருடம் சிறீலங்கா அரசு தனது இராணுவ செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 96 பில்லியன் ரூபாய், 2007 ஆம் வருடம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 139.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்தது. (காண்க: http://www.wsws.org/articles/2007/may2007/sri-m16.shtml). இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் இந்திய அரசு சுமார் 100 மில்லியன் டாலர் நிதியை வெறும் 2 சதவீத வட்டிக்கு சிங்கள அரசின் இராணுவத்துறைக்கு கடனாக வழங்கி தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆரிய இனப்பகையுடன் உதவி புரிநத்தது. (செய்தி ஆதாரம்: http://economictimes.indiatimes.com/Features/The_Sunday_ET/Dateline_India/India_works_on_100_mn_soft_loan_package_for_Lanka/rssarticleshow/2986652.cms).
இதன் உச்சமாக, அண்மையில் உலக வங்கி இனி தன்னிடம் கடன் பெறவே முடியாத நிலைக்கு பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக வெளியிட்ட 28 நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் இடம்பெற்றிருந்தது. (பார்க்க : ராய்டர்ஸ் செய்தி இணையம், http://www.alertnet.org/thenews/newsdesk/N09664381.htm).

இந்திய அரசு சிங்கள அரசிற்கு வெறும் நிதிஉதவி மட்டும் செய்யவதோடு நின்றுவிடவில்லை. மாறாக ஆய்த உதவியையும் தொடர்ந்து செய்து தன் ஆரியச் சார்பை வெளிப்படுத்தி வருகின்றது.

கடந்த 9.10.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான்படை தாக்குதலில் வவுனியாவிலுள்ள சிங்கள இராணுவ தலைமையகத்தில் 10 சிங்களப் படையாட்கள் கொல்லப்பட்டதுடன் இரண்டு இந்திய இராணுவ பொறியாளர்கள் காயம்பட்டனர். இவர்கள் இந்தியா ஏற்கெனவே கையளித்த இராடார்களை கையாள இந்திய இராணுவம் அனுப்பிய பொறியாளர்கள் என்றும் தெரியவந்தது. இலங்கை இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு கூடாது. அரசியல் தீர்வு தான் காண வேண்டும் என்று பேசிப் பேசி மழுப்பியே நாட்கள் கடத்தி வந்த இந்திய அரசின் பார்ப்பனிய சூழ்ச்சி அத்தாக்குதல் மூலம் வெளி உலகிற்கு அப்பட்டமாய் அம்பலமானது.

இராணுவத் தீர்வுக் கூடாது என்று வெளியில் அறிக்கை வெளியிட்டு விட்டு இராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைகளுக்கு நேரடித் துணை புரிவதன் மூலம் தனது ஆரிய பார்ப்பனிய இனவெறியை தமிழினத்தின் மீது இந்திய அரசுக் கட்டவிழ்த்துள்ளது என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஏனெனில், இந்திய அரசு சிங்கள அரசிற்கு இராணுவ உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒன்றும் புதிதான நடவடிக்கை அல்ல. கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு அரசுக்கு 3 போர்க் கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தின் கடற்ப்படை பிரிவுக்கு பயிற்சி நேரடிப் பயிற்சியே அளித்தது இந்திய அரசு. (செய்தி ஆதாரம் : http://www.lankanewspapers.com/news/2005/3/1019.html)

அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை தீவிரப்படுத்தியிருந்த காலகட்டத்தில் சிங்கள இனவெறி அரசிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதன் முதலாக விடுதலைப் புலிகள் வான்படை விமானங்களைக் கொண்டு சிங்கள படைகளை தாக்கினர். செஞ்சோலை ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்ற தமிழ் குழந்தைகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது உலகமே அந்த அரச பயங்கரவாத செயலைக் கண்டித்த போதும் கண்களை மூடிக் கொண்டு வாய்மூடி மவுனியாய் இருந்த இந்திய அரசு, புலிகளின் வான்படைத் தாக்குதல் தமக்கு மிகவும் கவலைப் படுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக புலிகளின் விமானப் படையை எதிர்கொள்ள சிங்கள அரசிற்கு உதவும் வகையில் ராடார்கள் உள்ளிட்ட படைக் கருவிகளை வழங்க 5 - சூன் -2005 அன்று முடிவெடுத்தது. (செய்தி ஆதாரம் : http://www.indiadaily.com/editorial/3027.asp )

இம்முடிவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா உதவக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 12-சூன்-2005 அன்று கடிதம் எழுதினார். இதனை அவர் நேரிலும் வலியுறுத்திப் பேசிய போது பிரதமர் அவ்வாறு உதவிகள் எதுவும் செய்யப்போவதில்லை என்றும் வாய்க்கூசாமல் தெரிவித்தார். (பார்க்க : http://www.hindu.com/2005/06/12/stories/2005061204681000.htm)

"குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு" என்ற இந்திய அரசின் இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கையின்படி பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இரண்டு நவீன ரக ராடார்களை இந்தியா கையளித்தது. அதில் ஒன்று தான் கடந்த மாத வான்தாக்குதலில் புலிகள் அழித்த 'INDRA-II' என்ற ராடார் கருவி.

இது போன்ற இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து வந்துள்ளதை அவ்வப்போது ஆதாரங்களுடன் தமிழ்த் தேசிய அமைப்புகளும் சில தேர்தல் அரசியல் கட்சிகளும் அம்பலப்படுத்தி பல போராட்டங்களையும் நடத்தி வந்த போதும் அதனை இங்குள்ள பார்ப்பனிய ஊடகங்கள் வெளியிடாமல் கள்ள மவுனம் சாதித்தன.

ஆனால் சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், "புலிகள் 100 பேர் பலி - 200 பேர் பலி" என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் இப்பார்ப்பனிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன.

தமிழர்களின் தாயகப்பகுதிகளுக்குச் சென்று செய்திகள் சேகரிக்க எந்த ஊடகங்களும் சிங்கள அரசால் அனுமதிக்கப்படுவதில்லை என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய பணிகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பையும், தொண்டு நிறுவனங்களையும் கூட தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காத சிங்கள இனவெறி அரசு ஊடகவியலாளர்களை மட்டும் அனுப்புமா? என்ன என்பது நடுநிலையாளர்களுக்கே வெளிச்சம்.

ஆனால், தமிழகத்தில் தற்பொழுது எழுந்துள்ள எழுச்சியால் பல செய்திகளை வெளியிட வேண்டியக் கட்டாய நிலைக்கு பார்ப்பனிய ஊடகங்களும் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. அதன் ஒரு பகுதிதான், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடு புலிகளுக்கு தமிழகத்தில் பெரும்பான்மையானோர் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட நேர்ந்தது. அக்கிரகாரத்து "ஆனந்த விகடன்"கூட புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டுத் தான் பல லட்சம் பிரதிகள் அதிகமாக விற்பனையானது.

இருந்த போதும், இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன. ஈழத் தமிழர்களின் இன்னல்களை கவனத்திற்குக் கொண்டு வர இந்திய பொதுவுடைமைக் கட்சி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடத்தியது. தன் கட்சியும் அதில் பங்கு பெறும் என அறிவிப்பு வெளியிட்டார் அ.தி.மு.க. தலைவி செயலலிதா. ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனை சிறையில் அடைக்க வேண்டும் என்று சர்வாதிகாரக் குரலில் சட்டமன்றத்திலேயே பேசிய செயலலிதாவின் அ.தி.மு.க. உண்ணாவிரதத்தில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு ஓங்கிய நிலையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து தனது பார்ப்பனியச் சார்பை உறுதி செய்தார் அம்மையார்.

ஈழத்தமிழர்களின் "சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம் ஆனால் அதற்காக போராடும் விடுதலைப் புலிகளை எதிர்ப்போம்" என்று அறிக்கையும் விடுத்தார் அம்மையார். தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் துறக்க "நேரிடும்" என்று ஒருவழியாக இந்திய அரசுக்கு தமிழக அரசு மிரட்டல் விடுத்த போதும் அதனை சிங்களர்களின் குரலில் நாடகம் என்கிறார்.

The New Indian Express ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக் குரலை உலகிற்கு உரைப்பவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கமே என்கிற எளிய உண்மையைக் கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் செயலலிதா நிச்சயம் இல்லை. ஆனால் அம்மையாரை ஏதோ ஒன்று தடுப்பதாக தெரிகிறதே அது என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அதன் பின்னால், 'துக்ளக்' சோ, சுப்பிரமணிய சுவாமி, 'இந்து' நாளேடு என்.ராம் உள்ளிட்ட ஆரிய பார்ப்பனியக் கூட்டாளிகளின் சதிவலைச் சங்கிலித் தொடர் தான் தெரியும்.

இதனை அம்பலப்படுத்துவது போல் இந்து நாளேடு 14-10-2008 அன்று தன் ஆசிரியர் குழுசில் இருக்கும் பார்ப்பன பெண் ஒருவரை வைத்துக் கட்டுரை ஒன்றைத் தீட்டியது. சிங்கள சந்திரிகாவிடம் "சிங்கள ரத்னா" விருது பெற்ற இந்து ஆசிரியர் என்.இராமின் விசுவாசம் அக்கட்டுரையை படிப்பவர்களால் நன்கு உணர முடியும். சம்பந்தமில்லாத விசயங்களுக்கு ஒரு பிரச்சினையை எப்படி திசைத் திருப்ப வேண்டும் என்று பயிற்சியே எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு அக்கட்டுரையில் பார்ப்பனிய திரிபும் தமிழின வெறுப்பும் வெளிப்பட்டது.

ஓர் அரசு தன் மக்கள் என்று சொல்லக் கொண்டே அவர்கள் மீது கண்மூடித்தனமாக விமானங்களில் குண்டு வீசிக் கொண்டிருப்பதைக் கண்டிக்க வக்கற்ற, துப்பற்ற "இந்து" ஏடு, அதனை எதிர்த்துப் போராடும் மறத்தமிழர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்துக் கட்டுரை வெளியிடுகின்றது.

இக்கட்டுரை வெளிவந்த அதே தினத்தில் கோவையில் பெரியார் தி.க., ஆதித் தமிழர் பெரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் அணியணியாய் சென்று அப்பத்திரிக்கையை எரித்து அதன் அலுவலக்தின் வாயிலிலேயே முற்றுகையிட்டு கைதாகி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழ் இனத்தையேக் கொல்லத் துடிக்கும் ஆரியப் பார்ப்பனியப் சக்திகளை சுதந்திரமாக உலவ விட்டுவிட்டு, போராடியத் தோழர்கள் மீது வழக்கம் போல வழக்குப்பதிவு செய்தது, தமிழக அரசு. மறுநாள் (16-10-2008) அன்று ஈரோட்டில் 'இந்து' ஏடு தமிழ் இன உணர்வாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பல தோழர்கள் கைதாகி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில், பெயரிலேயே பார்ப்பனர்களாக வெளிப்படும் பார்ப்பனர்கள் சிலர் அக்கட்டுரையைப் பாராட்டி கடிதம் வேறு எழுதியிருந்தனர். அதனை வெளியிட்டு தானே மகிழ்ந்து கொண்டது, 'இந்து'.

இவை அடங்குவதற்குள் 15-10-2008 அன்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு' பார்ப்பனிய முகாமின் கோமாளித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் கட்டுரை ஒன்றை மிகுந்த அக்கரையுடன் பிரசுரித்தது. "புலிகள் பயங்கரவாதிகள்" என்ற பழைய பல்லவியை அதில் மீண்டும் மீண்டும் பாடியிருந்தார் சுவாமி. மேலும் அதில் ஈழத்தில் இனப்படுகொலை என்பதேக் கிடையாது என்று அதில் தெரிவித்திருந்தார் ("We can say there is no genocide of Tamils in Sri Lanka" - Swamy ). அவருக்கு பதிலளிக்கும் விதமாக அதற்கு மறுநாள் வெளிவந்த நக்கீரன் வார இதழின் அட்டைப் படத்தில் சிங்கள இனவெறியர்களால் காயமுற்ற பிஞ்சுக் குழந்தைகளின் பட ஆதாரங்களைக் வெளியிட்டது. சு.சுவாமியின் தரம் தாழ்ந்த அந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது, இந்திய அரசுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில தமிழ் இன உணர்வாளரும் திரை இயக்குனரான சீமானும் பேசிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. "நாம் இன்னும் சனநாயகவாதிகளாக, மானமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சாட்சியே சுப்பிரமணியம் சுவாமி போன்றோரை சுதந்திரமாகத் திரியவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான்". அவரது வரிகளில் எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கின்றன!

இவை மட்டுமல்லாமல், 'டைம்ஸ் நவ்' என்கிற ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஈழப்பிரச்சினையொட்டி தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவை பற்றி செய்தி வெளியிட்டது. அதில் ஈழப்பிரச்சினையை பற்றி கருத்துக் கேட்கப்பட்ட "அறிவுஜீவிகள்" யார் யார் தெரியுமா? 'துக்ளக்' சோவும், சுப்பிரமணியம் சுவாமியும் தான்.

இந்த ஊடகம் மட்டுமல்ல மற்ற ஊடகங்களும் கூட தமிழர் எழுச்சி்யைக் கொச்சைப்படுத்துவதிலும் தமிழீழ மக்களின் போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிப்பதையுமே வழக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்திய ஊடகங்களில் பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்துவது ஆரியப் பார்ப்பனர்களே என்பது தான் இதற்குக் காரணம். இதனை, கடந்த 2006 ஆம் ஆண்டு "வளரும் கல்வியைப் பற்றிய கல்வி மையம்" (Centre for the Study of Developing Societies) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர். (செய்தி ஆதாரம்: http://www.thesouthasian.org/archives/2006/social_profile_of_indian_media.html ). மக்கள் தொகையில் வெறும் 8 சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் இந்திய ஊடகங்களில் 71 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவு தெரிவித்தது.

சிங்கள அரசின் இனவெறியால் வன்னிக் காடுகளில் விலங்குகள் போல உலகமே எதிர்கொள்ளாத மனித உரிமை மீறல்களை எதிர் கொண்டுள்ள ஈழத்தமிழனம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆதரவு அலையால் சிறிதாவது ஆறுதல் பெறும் என்ற நம்பிக்கையே நம்மை மேலும் எழுச்சி பெற வைக்கிறது. இச்சமயத்தில் இவ்வெழுச்சியை பொறுக்க முடியாத ஆரிய பார்ப்பனிய சக்திகளை புறக்கணிப்பது மட்டும் நமது கடமையல்ல எதிர்காலத்தில் அவை பயங்கொள்ளுமாறு எழாத வண்ணம் அடக்கி வைப்பதும் நமது கடமையாகும். அதற்கான வழிவகைகளில் ஈடுபடுவோம். ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாய் தாயகத் தமிழகத்தில் வெறும் அலையாக அல்லாமல் ஆழிப்பேரலையாய் எழுவோம்!

- க.அருணபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com