Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்... சூப்பர் 'பல்டி' ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே?
எஸ். அர்ஷியா

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கலைத் தாகத்தைத் தீர்த்து வைக்கும் முகமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'குசேலன்' தமிழ்த் திரைப்படம் தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிரச்சனைகள் ஏதுமின்றி வெளியாகி விட்டது.

கர்நாடகத்தில்,

'அன்பும் பாசமும் மிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்! ஒகனேக்கல் பிரச்சனையின் போது, தமிழகத்தில் திரைப்பட நடிகர் - நடிகையர் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளும் கூட. ஒரு கலைஞன் நாடு, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லோருக்கும் பொதுவானவன். நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல்,
கன்னடியர்களும் பிற மொழியினரும் பார்க்கிறார்கள்.

எனவே, யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் 'குசேலன்' படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
ரஜினிகாந்த்.'

என்று, கிட்டத்தட்ட அவர் மன்னிப்புக் கேட்டு / வருத்தப்பட்டு எழுதிய 'சாதுர்ய பல்டி'க் கடிதத்தின் அடிப்படையில் தான், அங்கே திரையைத் தொட முடிந்திருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகியைக் காப்பாற்ற அவர் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் தாண்டி, இப்போது சாத்வீகமாக அடித்திருக்கும் இந்தக் கடித பல்டியின் அவசியமென்ன எனும் கேள்விக்கான பதில், எல்லோருக்குமே தெரிந்தது தான்!

இதன் மூலம், சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தின் உண்மை முகம் வெளிப்பட்டு இருக்கிறது! ஒரு சூப்பர் ஸ்டார், படங்களுக்கு வெளியேயும் நடித்து வந்திருக்கிறார் என்பதை அவராகவே தெளிவுபடுத்தியிருக்கிறார்! மேலே சொன்ன மாநிலங்களைத் தவிர, அமொ¢க்காவிலும், ஜப்பானிலுமாக ஆக மொத்தம் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் நட்பைப் போற்றும் அப்படம், காட்சிகளாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

படம் வெளியாகும் முன்பே, அப்படம் வெற்றியடைய மதுரை ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட பக்தி மயம். அடுத்த படமான ரோபோவுக்கு பறவைக்காவடி எடுப்போம் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்ட நேர்த்திக் கடன். திரையரங்குகளின் கட்டிட உயரத்துக்கும் மேலாக, ஒட்டுகள் போட்டு உயர்த்தப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவப்படங்கள் வைத்தது போன்ற பில்ட் - அப்புகள். நாளிதழ்களிலும்., ஒரு சில உள்ளூர் சேனல்களிலும் தினம் தினம் இதே செய்தி தான். படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் தான், இவை!

இங்கே மட்டுமல்ல, அமொ¢க்காவிலும் நடந்தது இந்தக் கூத்து. ஜப்பானில் நடந்தது பற்றியத் தகவல்களைத் திரட்ட முடியவில்லை!

வறுமைக்கும் தா¢த்திரத்திற்கும் அடையாளமாக்கப்பட்டு, வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் நட்பாக ஆச்சரியப்படுத்தப்பட்டு புராணக் கதையில் உலவி வரும் பொருளாதார வக்கற்ற சுதாமா என்ற 'குசேலன்' பெயா¢ல், பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கிறது, இப்படம். சுதாமாவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய ஏழை நிறுவனமான கவிதாலயா, தனது ஏழை நண்பர்களில் ஒருவரான விஜயகுமார் ஆகிய குசேலர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிருஷ்ணா¢ன் வடிவமாக அவதானித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்!

"கதைப்படி, அவர் பத்து நிமிடங்கள் தான் படத்தில் வருவதாக முதலில் இருந்தது. இது, சூப்பர் ஸ்டார் படமல்லவா? ரஜினிகாந்த்தின் குறைநேரப் பிரவேசத்தை எப்படி ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? அவரவர் வீட்டில் அடுத்த நேரத்திற்கு அடுப்பு எரியாதே! தமிழ்நாடே பட்டினிக் கிடந்து... சோமாலியா போல் தமிழ்நாட்டு மக்கள் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டால்... நயன்தாரா போன்ற கொழு கொழு நடிகைகளுடன் சூப்பர் ஸ்டார் ஆடிப் பாடி நம்மை மகிழ்விக்கும் காட்சிகள் பயனில்லாமல் போய் விடுமே? அப்படியாகி விடலாமா? அதன் பின்பு நாமெல்லாம் தமிழர்களா? என்ற கேள்வி எழுந்து, ஐ.நா. சபையில் விவாதிக்கத் தொடங்கி விடுவார்களே எனும் ஐயப்பாட்டில் தான், பத்து நிமிடங்களை அறுபது நிமிட நேரமாக அதிகா¢த்து, தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சில் மட்டுமன்றி உலகத் தமிழர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளேன். குறிப்பாக, கன்னட தமிழ் ரசிகர்களின் நெஞ்சையும் குறிவைத்தே பால் வார்த்துள்ளேன்'' என்று அப்படத்தின் இயக்குநர் அம்மா - தாலி சென்டிமென்ட் புகழ் பி. வாசு சொல்லி, நம்மையெல்லாம் ஆசுவாசப் படுத்தியிருக்கிறார்.

இல்லையென்றால்... இந்நேரம் தசாவதாரம் படத்தின் கடைசிக் காட்சியில் ஏற்படும் பிரளயம் போல் ஏதாவது ஏற்பட்டு, தமிழர்களெல்லாம் அழிந்து போய்விட்டிருப்பார்கள். நல்லவேளை... அவரது நாசூக்கான விளம்பரப் பேட்டி, நம்மையெல்லாம் காத்துவிட்டிருக்கிறது.

அப்பப்பா... குசேலனுக்குத் தான் எத்தனையெத்தனை விளம்பரங்கள்? கோயமுத்தூர் ஏர்டெல்லிலிருந்து அம்பானி மைந்தர்களின் பிக் மியூஸிக் வரை. அத்தனையும் விளம்பரங்கள் தான்! அது சரி...விளம்பரங்கள் தானே ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. அது, சூப்பர் ஸ்டார் படமாகவே இருந்தாலும்! விளம்பரங்களால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிட முடியுமா?

அதற்கு பதில் இங்கே இருக்கிறது!

"தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா... 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்?"

நாடக மேடையையும் நடிப்புக் கலையையும் சமூக சீர்திருத்தங்களுக்கும், நாத்திகப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வெற்றி கண்டவர், பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா. 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த ரகளைப் பேட்டியில், "தமிழ்ச் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?" என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, அவர் சொன்ன பதிலின் ஒருபகுதிதான், இது!

ஆம்... 1964-ம் ஆண்டின் நிலைமையிலிருந்து (அதற்கு முன் என்ன வாழ்ந்தது என்று கேள்வியும் எழுப்பலாம்) 2008-ம் ஆண்டு வரையிலும் கூட தமிழ்ச் சினிமா மாறவில்லையென்பது, காலத்தின் கொடுமையும் ரசிகர்களின் மாறாத மனோபாவமுமே ஆகும். அதுவே திரையுலகின் வெற்றியாகவும் இருந்து வருகிறது!

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இருபெரும் திலக துருவங்களுக்குப் பின், தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ் கெய்க்வாட் நடித்து வருகிறார். பிற நடிகர்களுக்கு வழங்கப்பட்டது போலவே அவருக்கும் ஒரு பட்டம் அளிக்கப்பட்டது. அதுதான் சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினிகாந்த் என்ற பெயருக்கு மாற்றாக திரையுலகின் உள்ளேயும் வெளியேயும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு நான்கு படங்கள் வரை, தனது ஸ்டைலைப் போலவே வேகவேகமாகக் கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார், பாட்ஷா படத்தின் வெற்றிக்குப் பின், நிலை நிறுத்திக் கொள்ளும் வாழ்வியலின் தத்துவத்திற்கேற்ப நிதானத்திற்கு வந்தவராக இருக்கிறார். அவரது படம் வெளியாகும் தினம், மற்றெல்லா நாட்களைப் போல இல்லாமல், அது ஓர் உன்னத தினமாக அவரது ரசிகர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு அந்த தினம் தான் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஏன் கதிமோட்சமும் கூட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நடித்தத் திரைப்படம் வெளிவராத தீபாவளியை, ரசிகர்கள் துக்க தீபாவளியாக அனுஷ்டித்தக் 'காலக் கெரகமும்' நடக்கவே செய்தது. ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை குதிரை ரேஸைப் போலவும், மஞ்சுவிரட்டு போலவும் ஆர்வமுடன் ஓடவிட்டு கலெக்ஷனைக் 'கல்லா'க்கட்டி வந்த போட்டியிலிருந்து, அவரது படங்கள் தற்போது சுயமாகவே விலகிக் கொண்டுள்ளன. கால இடைவெளி அல்லது நீண்ட நாள் தயாரிப்புக்கு இலக்காகி, தனித்த ஓட்டங்களுக்கு அவை தயார்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிற ரசிகர்களின் பார்வையிலும் அந்தத் திரைப்படங்கள் கவனம் பெற்று வசூலில் பின்னியெடுக்கின்றன. இது, ஒருவித யுக்திதான்!

அந்த நிலையிலும், சூப்பர் ஸ்டாரின் பாபாவும் சிவாஜியும் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்பதன் காரணம், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பதிலிலேயே இருக்கிறது! ஆனாலும், பொதுமையிலிருந்து விலகி, அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், தனித்த பூகம்ப நாட்களாக மாறிவருவதை பூடகமாகவே கருத வேண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் திரைப் பா¢மாணத்தின் மூலமான பொதுமையை, கி.பி., கி.மு., போல, பாட்ஷா படத்துக்கு முன்பு, பாட்ஷா படத்துக்கு பின்பு என்றே கணக்கிட முடிகிறது. அதற்கு முன்பான அவரது படங்களில், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் போன்ற படங்களில் தான், அவர் அப்படங்களின் இயக்குநர்களின் உதவியால் நடிப்பு வேலையை திறம்படச் செய்திருந்தார். அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் வாய்ப்பு உள்ளது. பிற படங்களில் அவர், 'யாரடி நீ மோகினி?' படப்பாடலுக்கு உத்தமபுத்திரனாக விரைத்துக் கொண்டு நடித்த சிவாஜி கணேசனின் பாணியைத்தான், சற்றே மாற்றி வேகநடையில் செய்து வந்திருக்கிறார். இதனாலேயும் கூட அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் உண்டு. எப்படியாயினும் தமிழ்த் திரையுலகின் அழிக்க முடியாத சாகச சாதனைப் பட்டியலில், அவரது பெயர் சூப்பர் ஸ்டாராகவே பிளாட்டின எழுத்துக்களால் பொதியப்பட்டுவிட்டது.

தமிழ்த் திரையுலகின் மன்னாதி மன்னனாக - எம்.ஜி.ஆர். இல்லை - சூப்பர் ஸ்டார் மாறிவிட்ட பின்பு, அவரது வாய்ஸ்க்கு மதிப்பு இருப்பதாக நம்பப்பட்டு வருவது, தமிழ்நாட்டின் கேடுகளில் மிக முக்கியமானக் கேடாகும். 1996 மற்றும் அதற்குப் பின்பானத் தேர்தல்களில் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் காரணியாக அவர் வரையறுக்கப்பட்டு வருவது, வேறூன்றி கிளைபரப்பிய அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கட்சியின் மீதும் தங்களின் மீதுமன்றி, மக்களின் மீதும் நம்பிக்கையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. புள்ளி விவரக் கணக்கில் சாதுர்யம் மிகுந்த தலைவர் கூட வாய்ஸ்க்காக ஏங்குவது கேலிக்கூத்துதான்!

அப்போதும் கூட, கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் தான் முத்திரைகளாகப் பதியப்பட்டன என்பது தெரிந்திருந்தும், வாய்ஸ் தேடி ஓடும் கொடுமை அரசியல் கட்சிகளிடம் இன்னும் இருக்கவே செய்கிறது.

காவிரிப் பிரச்சனைக்கு, ஒட்டு மொத்தமாக நெய்வேலியில் திரண்ட நடிகர்களுக்கு எதிர்ப்பாக, மறுநாள் சென்னையில் மேடைபோட்டு தனித்து உட்கார்ந்து, பட்டினி வேஷம் கட்டி, தன்னைத் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகடனப்படுத்திக் கொண்டது; நதி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, தனது சொந்தப் பணத்தில் ஒருகோடி தருவதாக அறிவித்தது; அதை இதுவரைக்கும் தராமல், 'அஸ்க்கு... புஸ்க்கு' காட்டுவது; புலி வருது புலியாக பன்னெடுங் காலமாக அரசியலில் குதித்து, மக்களின் நல்வாழ்வைக் கெடுப்பேன் என்று தவணை முறையில் பயமுறுத்துவது; அதைச் சொல்லிச் சொல்லியே தனது ரசிகர்களை உசுப்பேற்றிவைத்திருப்பது தான், அவரது சூப்பர் ஸ்டார்த்தனம்!

அவரது வாய்ஸ்க்கு, மக்கள் செவி சாய்க்கிறார்களா எனும் கேள்வி தான் அவரை இத்தனைக் காலமும் யோசிக்க வைத்து, அவ்வப்போது மலையேறச் செய்து வருகிறது. அந்த மலையேறலை நிதர்சனப்படுத்த அவர் எடுத்த பாபா, கல்லா கட்டும் அருள் தராமல் மலையிறங்கிப் போய்விட்ட சம்பவம், தான் கடந்து வந்த பெரும்பான்மை வழியைத் தேடி சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ஓட வைத்தது.

என்ற போதும், அவர் தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அதன் பின்பு வெளியான படையப்பாக்களும் சந்திரமுகிக்களும் சிவாஜிக்களும் அதன் வெளிப்பாடுதான்! அகத்தியனின் 20 + வயதுடைய மகள் விஜயலட்சுமியுடன் ஜோடி கட்டப் போகும் 60 வயதைத் தொட்டு விட்ட, நாட்டில் அதிகமாகச் சம்பளம் பெறும் மூத்த நடிகர் அவர். குசேலனுக்கு முன்பாக நடித்த சிவாஜி படத்துக்கு, அவர் வாங்கிய சம்பளம் கொஞ்சம் தான். சுமார் ரூபாய் 15 கோடியாம்!

இதுதான் தமிழனின்... தமிழ்நாட்டின்... வக்கு!

கஞ்சி குடிக்காமல், உழைத்தக் களைப்பைப் போக்க டாஸ்மாக் போகாமல், தமிழக மக்கள் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்ததில் தானே அவருக்கு இவ்வளவு சம்பளம் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடிகிறது? அதை அவர் நன்றியுடன் வைரமுத்துவின் வா¢களால் எப்படிப் பாடுகிறார் தெரியுமா? "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா... ஆயிரம் தடைக்கல்லும் படிக்கல்லப்பா...!"

அப்படி அவர் படிக்கல்லில் ஏறச் சிந்தும் ஒவ்வொரு வேர்வைத் துளியும் தமிழக மக்களின் இளிச்சவாய்த்தனத்தாலே தங்கக்காசு ஆனதை, அவர் மறைக்கவே இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன்(?) பட்டுள்ளதாக கூறிக் கொள்ளும் அவர், ஒகனேக்கல் பிரச்சனையில், பேசியப் பேச்சை நினைவுபடுத்திக் கொள்ள, திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சி போல, நாம் சற்று சுற்றிச் சுற்றிச் சுற்றி... பின்னுக்குப் போக வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பாக, கர்நாடகத்தில் இயங்கிவரும் அத்தனை சாதிய அமைப்புகளும் அங்குள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஒட்டு மொத்தமாய்க் குரல் கொடுத்தன. அதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் தமிழ் மண்ணில் முத்தெடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிறத் தண்ணியிலே பிரச்சனைக் கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு, தமிழ் மக்கள் புளகாங்கிதப்பட்டு, "சூப்பர் ஸ்டாரு... சூப்பர் ஸ்டாரு தான்..." என்று பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் பாடியதென்னவோ உண்மை தான்! 'கர்நாடகத்து ஆளா இருந்தாலும், பொழைக்க வந்த மண்ணுக்கு ஏத்துக்கிட்டுப் பேசறாரே!' என்று அகமகிழ்ந்து போனதும் உண்மை தான்! அதே வேளையில், 'அங்கே உக்காந்துக்கிட்டு டமாரம் வாசிக்கிறியா!... வாடி, ஒம்படம் இங்கே வரணும்ல்ல?' என்று அப்போதே கர்நாடக அமைப்புகள் அறைகூவல் விட்டன. கர்நாடக அமைப்புகளுக்கு, அறைகூவலை செயல்படுத்துவதற்கான நேரம், இது!

மோசமான நடவடிக்கைளில் ஈடுபடும் அவை, குசேலனை திரையிட விடாமல் ரகளை செய்யவும் தயாராகவே இருந்தன. இந்நிலையில் தான், சூப்பர் ஸ்டார் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபைக்கு மேலே சொன்ன கடிதத்தை எழுதியிருக்கிறார்.

கடிதம் எழுதுவதற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது? தமிழக மக்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டால், அதன் பின்னால் கர்நாடகத்தில் தன் படங்களை ஓட்ட முடியாது என்று தெரியாத அப்பாவி விரல் சூப்பியா நம் சூப்பர் ஸ்டார்?. எல்லாம் அவருக்குத் தெரியும். இருந்தும், ஏன் பேசினார்? கர்நாடக மக்கள் மறந்து விடுவார்கள் என்றா? இல்லை, படம் முடியும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றா?

இல்லவே இல்லை... எல்லாமே தொழில் தந்திரம்!

அந்தத் தந்திரம் தான், கடிதம் கொடுத்துப் படத்தை ஓட்டுங்கள் என்று சொல்ல வைக்கிறது. 'பாடம் கற்றுக்கொண்டேன்' என்று தன் பொய் முகத்துக்கு ஒப்பனை போட்டுக் கொள்கிறது. பாடம் கற்றுக்கொண்டேன் என்றால் யாரிடமிருந்து? சோறு போடும் தமிழ் ரசிகனிடமும் தமிழ் நாட்டிலிருந்துமா? இல்லை, தொழில் முடங்கிப்போய்விடும் பயத்தை உருவாக்கிய கன்னட வெறியர்களிடமிருந்தா?

சொல்லுங்கள்... சூப்பர் 'பல்டி' ஸ்டார்... மன்னிக்கவும்... சூப்பர் ஸ்டார் அவர்களே!

இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக உணர்ச்சிப் பொங்க பேசிவிட்டு, இப்போது அடித்திருக்கும் பல்டி, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை பேரும் 'கேனைக் கிறுக்கன்' என்று அவர் நினைத்திருப்பதால் தானே! வாழும் இடத்தில் காலூன்றிக் கொள்ள அவர் அப்போது பேசியதும், தான் பிறந்த மண்ணில் தனது படம் ஓட அவர் மன்னிப்புக் கேட்பதும் நிச்சயம் பெருந்தன்மையினால் அல்ல என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அவரது நிஜ முகம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் போர்த்தியிருந்த பசுந்தோல் பொருந்தாமல், கோர முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

கர்நாடகத்தில் அவர் படம் திரையிடப்படவில்லையென்றால்... இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ¥ம் ஒண்ணும் மண்ணுமாக கைக் கோர்த்துக் கொள்வார்களோ? இல்லை... இலங்கையில் சிங்கள இனவாத அரசு வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமரசமாகிப் போய் விடுமோ...? இல்லை... புஷ்தான், பின்லேடனுடன் கை கோர்த்துக் கொண்டு மியாமி பீச்சில் காற்று வாங்கப் போய்விடுவாரோ?

தமிழ் மக்கள் மீது பற்று கொண்ட சூப்பர் ஸ்டார், 'கர்நாடகால என் படத்தைத் திரையிட விடாட்டிப் போங்க!' என்று சொல்லியிருந்தால்...'சபாஷ், சூப்பர் ஸ்டார்!' என்று விசில் அடித்திருக்கலாம். ஆனால் மண் பாசத்தில், அவர் பல்டியல்லவா அடித்திருக்கிறார்? பிரச்சனைக்கு முன்பே விநியோகஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டிருந்தால், நஷ்ட ஈடு கொடுத்து சரிக் கட்டியிருக்கலாமே! திரையிட்ட தோல்விப் படங்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர் தானே...இந்த சூப்பர் ஸ்டார்!

அவரது பல்டியை அதே திரையுலகில் இருக்கும் சத்யராஜ், 'எனது படத்துக்கு இந்த நெருக்கடி வந்திருந்தால்... விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு தந்திருப்பேன். ஆனால் ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாக இருப்பேன்!' என்றதற்கு, அவர் பச்சைத் தமிழன் என்பதும் ஒரு காரணமாகும்! ஆனால் இவர் வியர்வை சிந்தி, அதைத் தங்கக் காசுகளாக மாற்றிக் கொள்ள வந்தவர் தானே?

இதைத் தவிர, இந்த சந்தடியில் வேறு பல கூத்துகளும் தமிழ்கூறும் நல்லுலகில் நிகழ்ந்து தொலைக்கின்றன. தமிழுக்கும் சுயமா¢யாதைக்கும் நேற்று சாயங்காலம் வரைக்கும் முட்டுக் கொடுத்து வந்த இயக்குநர் சீமான் போன்றவர்கள், 'இது தொழில். அதை மனசுல வைச்சு நிதானமா யோசிச்சுப் பாக்கணும்!' என்று புதுசாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவர்களையே கேலி செய்து கொள்வது போலத் தான் இருக்கிறது. பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்? சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஒரு படம் செய்யக் காத்துக் கிடப்பவர்கள் தானே!

கவலைப்படாதீர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே... சொரணை கெட்ட தமிழர்கள் தான் நாங்கள். இந்த விளம்பரச் சந்தடியில் குசேலன் வெற்றிப் படமாகியிருக்கும். உங்களது அடுத்தப் படம், ரோபோவாக இருந்தாலும் சரி கீபோவாக இருந்தாலும் சரி... நீங்கள் தங்கக்காசுகளை அள்ளிக் கொள்ள, அதையும் வெற்றிப் படமாக்கித்தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

"ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போ தான் முதலாளிங்க புது ஆசாமிகளாப் போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?" பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த அதே ரகளைப் பேட்டியில் அதே கேள்விக்குச் சொன்ன பதிலின் பிற்பகுதி தான், இது!

இன்றைக்கு மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் பதிலாகவே அது, இருக்கிறது!

ரஜினிகாந்த் என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை. அவரும் அதைச் சொல்லவில்லை. ஆனால் தமிழர்களாகிற நாம், தொடர்ந்து பாடம் கற்றுக் கொண்டே வருகிறோம். ஏனென்றால், அந்த அளவுக்கு மக்குகள் நாம்!

- எஸ். அர்ஷியா (arshiyaas@rediffmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
madeswaran
2008-08-11 02:25:00
smades@yahoo.com

மிக சரியாக சொன்னீர்கள். இந்த அடி மடைய ரசிகன் எப்பொழுது திருந்துகிறானோ அப்பொதுதான் இந்த உலகை ஏமாற்றும் சூப்பர் ஸ்டார்கள் ஒழிவார்கள்.

Vishwanath
2008-08-11 11:39:00
vishwanath.selvaraj@cognizant.com

Arshiya...
Excellent post......

I was totally taken back by your stupid logic and idiotic sense....time and again the so callled Thamizh mongers have proved that they will never improve and will never allow others to improve....

Today you are judging a persons loyalty by the money he is earning..what a fool you are.If you think Rajini is paid more than he deserves then let the producers take a decision..why are you bothering.
Rajini can never be a Thamizhan.....he is always an Indian.We always want him to be an Indian.Actually by seeing all your vetti post(this includes other post by so called "Pachai Thamizhargal")i have come to a conclusion that You guys doesnt want to be a part of India.If et all Rajini has apologized then whom did he apolagise to?Fellow Dravidians(Kannadigas are also Dravidians)Arent they your brothers?.Go and ask the so called Dravidians Political parties as to why did they Include the name dravidians in their political manifesto.

Rajini is an actor and his profession is acting...Just because all these idiotic Sathiaraj and Seeman have raised their voice did Tamil Nadu get water from Karnataka.Will Sathiaraj never go to bangalore or will he not allow any Kannada technician to work in his movies.....?

Arshiya...understand the fact.Hogenekal water issue can be sorted only if Politicians come out of their comfort zone and fight.If supreme court verdict has been taken for granted then why are you bothering Cinema actors.

All your BALTI logic will not bear any fruit if u comfortably forget Karunanidhi..the biggest joker in the politics...Why did he announce Hogenekal fasting with film actors....did you see any of his ministers participating in the fast or even MLAs.Why did Mr.Karunanidhi totally take back the decision on Hogenekal water issue and why is he keeping quiet so far....

Ask this nagging questions to your self and u ll find answers.why are you bothering some film actor for this.he is doing his work properly but we are commenting for no fault of his...

Pls use brains before writing such one-sided craps.....

anbudan..
Vishwa

paanjasanyan
2008-08-12 02:18:00
paanjaasanyan@gmail.com

Rajini is an actor, thats all. Dont expect something more than from him. He never tried to use his fans for him. He never taken other's money. He is acting and getting his salary. How do you say that is wrong? A writter is writting a book and earning money, that book also bought by all people, so do put the writter and actor on the same scale. A software engineer is writting a software, whoever uses that they are paying that, so would do u say that the software engineer should respect all, need to work for them. Lot of people working on other countrly, do you think all are investing their money there only? why only rajini should do that. These kind of articles are just a way to get a cheap publiicity.

Thangapalani
2008-08-12 04:02:00
gold_prabha@yahoo.co.in

Neela chayam veeluthu pochu tum tum tum
Kakkai veesam kalanju pochu tum tum tum
"Nadikargal Nadikka Peeranthavargal avaarkal kolkaivathikal alla"

Syed
2008-08-12 07:14:00
sanicsoft@gmail.com

Dear Arshiya!! Rajinikku paadam solli thara ungalukku enna thakuthi irukirathu enbathai sollivittu, ungal katturaiyai ezhthungal. ungalukku vaitherichal! adhan velippattai than ippadi kotti theerthu irkkireerkal. paarthu, vedithu sithari vidatheerkal!!!!

prabhanathan
2008-08-12 09:27:00
pbn1961@gmail.com

அய்யா,
ரஜினியை தேவதூதுவனாகக் கருதியது அவருடைய முட்டாள்தனமா.. அல்லது நம்முடையதா.. அவர் என்றும் வியாபாரிதான்.. திரைப்படத்தில் புதிய கருத்துக்களைக் கூட வராமல் பார்த்துக் கொள்வது அவர் MINDSET மற்றும் வியாபாரம் சேர்ந்ததுதான்.. ஏற்கனவே நெய்வேலியில் கூப்பிட்டு வர முடியாமல், வேறு காரணம் கூறி, பின்பு தனி ஆவர்த்தனம் வாசித்து அதனால் ஏற்பட்ட நெருக்கடியினால் 1 கோடி அறிவித்து.. அதனால் தற்போது ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்றுதான் அந்த famous உதைக்கணும் என்று பேசினார். அது backfire ஆகிவிட்டதனால், மன்னிப்பு படலம்.

ஒரு வியாபாரியிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.. ஆக வியாபாரி என்ற முறையில் அவர் மீது தவறு ஒன்றும் இல்லை.. ஆனால் நான்தான் தமிழ்க் காவலன் என்றால், நாம் எதிர்ப்போம்..

குருசாமி
2008-08-12 09:31:00
gurus_18samy@rediffmail.com

எதிர்பார்க்கவில்லை, இப்படியொரு கட்டுரையை. என்றாலும் தவிர்க்க முடியாததாக இருந்தது. ரஜினிகாந்த்தை சூப்பர் ஸ்டாராக ஆக்கினாலும் ஆக்கினோம். அவர் தன்னை சூப்பர் பவர் மேனாகவே கருதிக் கொண்டிருந்த மாய பிம்பத்தை எஸ். அர்ஷியா உடைத்து விட்டுருக்கிறார். கீற்று சிறப்பான பணியை செய்திருக்கிறது.இனியாவது தமிழ் ரசிகர்கள் தங்கள் நிலையை உணர்ந்து செயல்படவேண்டும். ஏமாறத் தயாராக இருப்பதை கைவிடவேண்டும். c

Dr.M.ராஜலெட்சுமி.
2008-08-12 09:34:00
landscaping_greenworld08@rediffmail.com

மிக நல்ல கட்டுரை. எல்லோர் மனதிலும் அ¡¢த்துக் கொண்டிருந்த விஷயம் தான் ,இது. அதை வெளிச்சொல்ல தயக்கமும் பயமும் இருந்ததை அடித்து நொறுக்கித் தகர்த்திருக்கிறார். எஸ். அர்ஷியா. நல்லதொரு கட்டுரையை வெளியிட்டு கீற்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. தொடரட்டும் கீற்றின் பணி.

கலைவாணி
2008-08-12 08:13:00
kalaivaaniy@gmail.com

//படம் வெளியாகும் முன்பே, அப்படம் வெற்றியடைய மதுரை ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட பக்தி மயம். அடுத்த படமான ரோபோவுக்கு பறவைக்காவடி எடுப்போம் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்ட நேர்த்திக் கடன். திரையரங்குகளின் கட்டிட உயரத்துக்கும் மேலாக, ஒட்டுகள் போட்டு உயர்த்தப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவப்படங்கள் வைத்தது போன்ற பில்ட் - அப்புகள். நாளிதழ்களிலும்., ஒரு சில உள்ளூர் சேனல்களிலும் தினம் தினம் இதே செய்தி தான். படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் தான், இவை!//

இப்படி எவ்வளவு காலமாக நடக்கின்றது. எஜமான் படம் முதல் சோ பார்க்கவில்லை என்று ரயிலில் விழுந்து தற்கொலை செய்த ரசிகர்கள். மோனால் இறந்தபோது விசம் குடித்து இறந்தவர்கள் என்னும் நெறய சம்பங்கள் இருக்கு.

ரசிப்பு தன்மையில் இப்படி ஒரு வெறி கொண்ட நிலை ஏன் ஏற்படுகின்றது?

உண்மையில் இது ஆழ்ந்து அணுகப்பட வேண்டிய விசயம். ரசிகனை முட்டாள் என்பது சரியல்ல. சமூகத்தால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மனவளம், ஆசைகள் நிராகரிக்கப்பட்ட மனவளம், என்னும் ஏராளமான சமூக கலாச்சார இறுக்கங்கள், வறுமை போன்றன ஒரு மனிதனை அமிழ்த்தி விட்ட நிலையில் அந்த மனிதன் எழுந்து நிற்பதில், சுயமாக நிற்பதில் தோல்வி காண்கின்றான். சுப்பர்ஸ்டார் எழுந்து நிற்கின்றார், எல்லாவிதத்திலும் அவரால் எழுந்து நிற்க முடிகின்றது சினிமாவில். ஐந்து நிமிடத்தில் பணக்காரனாக முடியும், அழகான பெண்ணை காதலிக்க முடியும், முதலாளியை எதிர்க்க முடியும், பெருங் கூட்டத்துடன் சண்டை போட முடியும். என்னும் நிறைய முடியும்.

சாதராண மனிதனுக்கு இவை கனவே. அவன் தன்னுடைய அழ்ந்த உணர்ச்சிகளை சுப்பர்ஸ்டாரில் ஒப்புவிக்கின்றான்.

சினிமா வியாபாரிகள் சமூக சீர்கேடுகளையும் கலாச்சார இறுக்கங்களினூடகவும் மக்களை உளவியல் யுக்திகளுடன் ரசிகராக்குகின்றனர்.




anbu
2008-08-13 03:25:00
anbu_origin@hotmail.com

Ennakku rajini sonnathu/ seiththuvai vida inga comment eluthum viswa ponra aalugala ninaicha sirippu varuthu.

V Thamilanban
2008-08-13 05:10:00
veeruthamil@rediffmail.com

Thangalathu karuththai miga arumaiyaaga veli paduthi ulleergal. ungalodu oththa sindhanai udayavan thaan naan. 13th aug Dinamani seithi thaalil enath karuththai pathivu seithullen mudinthaal padithu paarungal.unarvey illaamal andru unarchiyaga pesiya rajinikaaga vakkalathu vaangi pesiyavargalum, unarvodu unarchi kaatiya sathiyarajai vasai paadiyavargalum indru mugaththai engey vaithu kolvaargal? mattra kannada nadigargalai pola nadippu thozhilai mattum seithu vittu ponaal entha ethirpaarpum illai. adikkadi thannai oru thamizh makkalin pirathi nithiyaagavum thamizhgathai aalapogum magaraasanaagavum thannai kaatikkolla avar potta poli veshangal thaan intha ethirpaarpugalukkum yemaatrangalukkm kaaranam. avar eppothum thamizh makkalin pirathinithiyaaga irunthathu illai,irukkavum mudiyaathu enbathai meendum oru murai avarey nirubanam seithirukuraar.ini theerppu ezhutha vendiyathu thamizhaga makkal thaan. kuttravaali kaiyum kalavumaaga sikki vittar aanaal thandanai kidaikkumaa illai mannipu kidaikumaa? kannadaththu makkal mandram endraal thandanai nichayam aanaal thamizhagaththu makkal mandrathil...?

Gowtham
2008-08-13 05:11:00
rgbudhar@yahoo.com

Dear Arshiya,

Your article reflects the questions and anger came up in my mind. No one expects answers from Rajni or people like Viswa.

Viswa has spit out venum. No one asked Rajni to solve the Hogenekkal water problem. On first place, it was not necessary for him to become so emotional and use such words against Kannadiga fanatics. His status which Tamilians have given is such that he should have spoken in a more mature way- may I say, like Kamal and Vijyakanth. Rajini failed in that. I even would say that what he told was correct, but once uttered, he should have stood by his words. At last, what he told- only those who burn buses and make commotion should be kicked, is it not? He did not tell about whole Kannadigas. Then what is the problem to stand by his own words. The same Rajni told later that my film would be screened all over the world and if they donot allow to be screened in Karnataka, let it be so. We respect those who stand by their words and not those who change their stance for financial gains.

Viswa, please donot put a Indian Mask and deny water to those who need it. Now to top it, Karnataka says Hogenakkal is part of that state. They may even produce documents for that like Chinese could provide documentary evidence for Arunachal Pradesh. It is possible. and by the time, anyone gets into the base of the real problem-be it Karunanidhi or Eddiyurappa or their grand children- another 25 years would have passed by.

vishwa
2008-08-14 01:40:00
vishwanath.selvaraj@cognizant.com

To-anbu_origin@hotmail.com,

Anbu...Ungala ninicha enakku paavama irukkunga.Vetti evanavudhu maatuvana avan thali arukalamanu ninaikira kootathula neenga arivaliya irukanumnu nan edhirpaaka mudiyaadhu...

Vishwa
2008-08-14 02:39:00
vishwanath.selvaraj@cognizant.com

To- rgbudhar@yahoo.com,

Dear Gowtham/Arshiya...
i really dont know whether to laugh or cry by seeeing your ignorance...

Read my reply carefully.I was never judgemental in the issue,so i never expected people like you to accept my answers...

Now all i said is Rajini apologised to Dravidians(if u guys believe in your own ideology) for the word "udhaika vendama".Is he a fool to say that all the kannadigas need to be kicked or are you the fool to think all the kannadigas need to be kicked for hogenekal issue?.It is intended towards Problem creators and mischief mongers..Even if they are problem makers he shudn't have used the word and he realised it later and felt sorry for it...so whats ur problem then....I have sounded the same as u felt....pls awaken yourself.....He never apologised on behalf of Thamizh nadigar sangham or even to his stand on hogenekal water issue....Manda irundha mattum podhadhu adhukulla konjam moolayum venum...madasambrani'gala

Your another allegation is, Rajini changed his stand for financial gains...let it be so...but whose financial gains?Rajini is given salary only for acting and for not karnataka rights....after seeing so much problem will Rajini accept Karnataka screening rights....?!!! use ur brains buddy...

When Rajini compensated crores and crores for BABA's loss,he can also bear 2 crores for Kuselan( some people say Kuselan is small film and hence Rajini wanted to solve this issue now itself because ROBO is a big budget film and stakes would be higher in future....laughing my heart out by this useless statement by a director)

Today its a problem for Rajini,tomorrow it will spread to other tamil movies..then to other states and how will you react..will u keep quiet...We have so many Thamizh brothers and sisters living and working in Bangalore...think about their fate before jumping into conclusions.

Now you said that i am wearing Indian Mask....i am proud..yes atleast i make an attempt to wear Indian mask,unlike other secterian separatists...

Gowtham,why do we need to wait for another 25 years....Supreme court verdict on Hogenekal issue was awarded in 1990s..so 2 goverments have been sworn inbetween but no action has been taken till 2008.Why did we wait so long...had we started the work at that time itself we would not be facing this problem.what i felt bad was emoional quotient has been kindled on this issue.

Now that i have answered all your questions(really they were not questions but your ignorance) why dont you answer my questions....i hope you have guts and brains to answer....

1)Why did Karunanidhi keep this project under wraps for so many years?

2)Why did karunanidhi reopened this issue after so many years?

3)After so many talks in public meetings("Elumbugal noringinalum Hogenekal thittathai kai vidamatom"-Karunanidhi)why did Karunanidhi stop this issue and said we will restart it once the election in Karnataka is over(i still do not know why Karunanidhi bothered about election in karnataka)?

4)Why is Karunanidhi keeping quiet after elections in Karnataka?(3 months has passed so far)

5)What did nadigar sangam do when Baba film release was disturbed by PMK hooligans?why didnt Sothairaj(sorry Sathiaraj) and vetti seeman raise their voice...?

Pls answer..waiting ur reply to satiate my curiosity..

anbudan...
Vishwa

raj
2008-08-14 03:41:00
raghu1356raj@gmail.com

thambi Arshiyaa,

Very bad post....People like u have been waiting to attack rajini and his fans....first of all do ur own business instead of writing stupid things...now a doys all low-class and third rate writers are started writing about rajinikanth...Dont compare him with that sathyaraj and all...he has done lot of things to tamil people....his wife is a tamil not a kanndiga...Like you lot of people doing VETTI VELAI

bolivian
2008-08-14 11:00:00
ganeshs_j@rediffmail.com

Looks like people like Vishwa has got job in CTS by idiot quota or Rajini rasigan quota .

This article is about Rajini and his statements. Here is my analysis:

On the podium of Hogenakkal issue :
"Avangalai udaikkanum"

When Kannadigas protest Kuselan:
Falling at their feet: "I am sorry"

When Tamils question this statement:
"I never meant sorry, its just sorry"

Now our concerns are Rajini is so cunning with the above statements and if he enters politics , he will be more idiotic and worst than anyone we know. And second thing, we dont want any of his damn opinions on anything. Let him mind his own business of making fool of people.

arshiyaas
2008-08-16 12:05:00
arshiyaas@rediffmail.com

why i am telling the word 'Balti', he often changed his words. first ofall he gave his voice, in during the 1996 election,'aandavanaleye kapaatha mudiyathu'. a few years after he met J.Jeyalalitha and praised her as 'thairiya lakshmi'. in the next election he turned himself, silent.

we, the tamil, never asked him to give voice about in kaveri, hogenekkal and such other issues. he inducted himself voluntarily in all issues and put make - up himself as a tamilzhan. so far we expected from him much more. or else we didn't expect anything from him. here is so many kannadigas as stars... arjun, prakash raj, murali and so far. they do their job only. if rajini does his job only, acting, we never mind himself.

vishwa, you often mention the name of karunanithi. in tamlinadu, the people forget him for the past two and half years. why rajini raise his voice while seeing the tamil crowd? or on behalf of karunanithi?

nanga mada sampiranikala irukkirathala than, avaru than tamil makkalukkanavannu sonnathai nambi emanthathu.ini nanga enga moolaiya use pannuvom, vishwa.

thanks.

ஜமாலன்
2008-08-20 01:35:00
jamalan.tamil@gmail.com

சரியான பிரச்சனையை முன்வைக்கும் கட்டுரை. முதலில் ரஜனி என்பது ஒரு பிம்பம். அந்த பிம்பத்தின் ஆட்டத்தைக ஆட்டுவிக்கும் அரசியலும் சரி அதைக் கண்டு அசந்த தன்னிலை மறந்து நிற்கும் ரசிகர் கூட்டமும் சரி, சமூக-உளவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய நோய்க்கூறைக் கொண்டவர்கள். அதைவிட்டுவிட்டு ரஜனியைப்பற்றி பேசியவுடன் வரிந்து கட்டுபவர்கள் உடனடியாக ஆரிய-திராவிட முரணைக் கையிலெடுப்பதிலிருந்து ரஜனி என்கிற பிம்பம் எப்படி இந்தத்துவா சக்திகளின் பிடியில் உள்ளத என்பதை புரிந்து கொள்ளமுடியும். இங்கு உள்ள பின்னோட்டங்களில் ரஜனிநிலையை ஆதரிப்பவர்களின் அரசியல்போக்கும் சரி நிராகரிப்பவரின் அரசியல் போக்கும் சரி இரண்டுமே தமிழின் ஆரிய-திராவிட முரணில் வெளிபப்டுவதைக் காணமுடிகிறது. இங்குதான் ரஜனி என்கிற பிம்பத்தின் அச்சமூட்டும் அரசியல் வெளிப்படுகிறது. கட்டுரை பல தளங்களில் சிந்திக்கம் வண்ணம் எழதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அர்ஷியா.

Bahrudeen
2008-08-20 04:05:00
baharjassim@yahoo.co.in

very good article, i appreciate you, it is fantastic.

Vishwa
2008-08-21 12:10:00
vishwanath.selvaraj@cognizant.com

To jamalan.tamil@gmail.com,jamalan.tamil@gmail.com and Arshiya,

Let Rajini be illusion(bimbam)or whatever....but whatever question that i have asked has been comfortably forgotten by pseudo intellectuals like you guys.Suddenly one guy called JAMALAN is saying that this issue shows stark conflict between aryan-dravidian race.What the F@#K you guys are talking.When did this issue blew itself to such a large extent?

So far brainless Arshiya has been keeping quiet on my question...i really dont know whether Arshiya is male or female so dont know how to address.....pls answer my question and we will go to the his/her question of Rajini did BALTI or not?

vaayathorangada vennaigala....kenakoogala(ungalukku indha varthai romba pidikum..enendral idhai prayogidhadhu oru Pachai Thamizhan allava?dont mistake me as i am helpless)

1)Why did Karunanidhi keep this project under wraps for so many years?

2)Why did karunanidhi reopened this issue after so many years?

3)After so many talks in public meetings("Elumbugal noringinalum Hogenekal thittathai kai vidamatom"-Karunanidhi)why did Karunanidhi stop this issue and said we will restart it once the election in Karnataka is over(i still do not know why Karunanidhi bothered about election in karnataka)?

4)Why is Karunanidhi keeping quiet after elections in Karnataka?(3 months has passed so far)

5)What did nadigar sangam do when Baba film release was disturbed by PMK hooligans?why didnt Sothairaj(sorry Sathiaraj) and vetti seeman raise their voice...?

anbudan...
Vishwa

Ganesh
2008-08-21 05:00:00
ganeshs_j@rediffmail.com

Dear Vishwa,
This article is about Rajini. Kindly understand the same.
I know that u cannot understand, because you are a Mann Sorru eater.








Regards,
ganesh

Ganesh
2008-08-21 10:47:00
ganeshs_j@rediffmail.com

Hello Vishwa,
This article is about Rajini not KK.
Everyone knows about KK and used to his baltis.
Rajini's balti is new and we are discussing about Rajini's balti only.

Hopefully, you can understand this.


Regards.

Vishwa
2008-08-25 10:50:00
vishwanath.selvaraj@cognizant.com

To ganeshs_j@rediffmail.com & Arshiya,

Yappa Madasambrani,
Mr.vennai....Then arshiya shud have mentioned only about Rajini's attitude towards water issue or hogenekal Issue.Why did Arshiya draw lines between so many personalities like Sathyaraj,MGR,M.R.Radha,Vijayalakshmi in this article.

Nobody is ready to answer my questions but just say that this article deals with the issue about Rajini's Balti.

If u f...king guys can draw parallel with other useless guys with rajini then i can also do the same with "BALTI THILAGAM Karunanidhi"
One thing is clear,If arshiya just ended the article that Rajini didnt do what was expected of him in hogenekal issue then her/his article would be so f..king loongggggg,and no body would have shown interest.hence Arshiya in the name of criticism,compared Rajini with other incidents and personalities....Try checking if Arshiya ate "MAN SORU" for Karunanidhi,Sathyaraj and dubious personalities.

May be i will eat MANSORU but unlike you who has only Kalimannu in you MANDAI...varttaaaaa

Hope u understand now...

anbudan
Vishwa

Ganesh
2008-08-27 10:11:00
ganeshs_j@rediffmail.com

Mann Soru eater,
Can you give me one country or culture or place where the people consider their buffoons, circus artists, cinema artists as their Gods except TN??
Can you give me one country or culture or place where people do mass suicide even for the death of actor or actress??
Can Rajini act in a role of the Auto Shankar or Veerappan or Nithari mass killer of children?? or atleast the role of Amitabh in Cheeni kum??
Questions posted by Arshiya are about our culture. This article is an attack on the stupid worship of cinema icons by Tamils.
Cinema artists are just entertainers, not politicians. Nobody expected them to resolve Hogenakkal issue or cauvery issue. They need to mind their own business of cinema.

For further learning, I can send you the articles of Gnani and Charu. But sincerely, I do not expect any improvements from you.
You will learn it the day when you get affected.

Regards,
Ganesh

ஜமாலன்
2008-08-31 12:42:00
jamalan.tami@gmail.com

//Let Rajini be illusion(bimbam)or whatever....but whatever question that i have asked has been comfortably forgotten by pseudo intellectuals like you guys.Suddenly one guy called JAMALAN is saying that this issue shows stark conflict between aryan-dravidian race.What the F@#K you guys are talking.When did this issue blew itself to such a large extent?//

நிசமான அறிவாளியான விஸ்வாவிற்கு போலி அறிவுசீ....வீ எழுதுவது..

கருணாநிதி பல்டி அடிப்பதால் ரஜனி அடிக்கும் பல்டி சரி என்கிறாரா மேன்மை தாங்கிய விஸ்வா அவர்கள். 4 எழுத்து வார்த்தைகளை பொது இடங்களில் ஒருவரை வசைப்பாட பயன்படுத்தும் இவர்தான் பொது அறம் பற்றி பேசுகிறார். கேனப்பயல் என்பதைவிட அதிகப்படியான வார்த்தைகளை உபயொகிக்கும் இவர் அதனை தமிழ்மக்கள் விருப்பம் என நக்கலடிப்பது என்ன நியாயம்?

அவரை சொன்னால் இவரையும் சொல்லு என்று. இப்படி வாலைப் பிடித்துக்கொண்டு அலையும் இவர் ஏன் கருணாநிதி பல்டியைப்பற்றி எழுத வேண்டியதுதானே. அதைவிட்டு பக்கத்து இலைக்கு ஏன் பாயசம் கேட்கிறார். இவரது கேள்வி என்ன பெரிய ஸ்பிங்கஸ் புதிரா. சும்மா முற்றிப்போய் போலி-அறிவுஜீவி அவன் இவன் என்று வாரிக்கொட்டும் இவர்தான் நான் கூறிய மேற்கொண்ட சமூக உளவியல் ஆய்விற்கு உரியவர். ரஜனி பல்டி அடித்தார்தான் கருணாநிதியும் அடித்தார் அதனால் ரஜனி அடித்தது சரி என்கிறாரா? எம்ஜியார் துவங்கி யார் யாரையோ பற்றி அர்சியா எழுதுவதாக புலம்பும் இந்த மகானுபாவர்.. அவர்கள் எல்லாம் தமிழ்சினமா உருவாக்கிய பிம்பம்கள் என்பதை புரியாமல் எதற்கெடுத்தாலும் கருணாநிதியின் வேட்டியைப் பிடித்துக் கொண்டு அலைவதால் பயனில்லை. ரஜனி என்பது ஆதிக்க சக்திகள் உருவாக்கிய பிம்பம் அந்த பிமபம் பால்வினைநோய் பீடிக்கப்பட்ட மண்சோறு தின்னும் ஒரு சமூகம் தமிழ் சமூகம். அச்சமூகத்தின் ஏகப்பிரதிநிதியாக நின்று குரல் கொடுப்பதில் பயனில்லை நண்பரே.

ஒருவன் குளத்தங்கரையில் உட்கார்ந்து வாழைப்பழம் தின்றானாம். அந்த வழியே வந்த ஒருவன் என்னடா உள்ளபோவது வெளியே வருது, அப்படி சாப்பிடாதே ஆரோக்கிய கேடு என்றானாம். நான் தொட்டுக் கொண்டுகூட சாப்பிடுவேன் என்றானாம் அவன். தொட்டுக்கொள்வது அவர்கள் விருப்பம் அர்சியா பார்த்துவிட்டு போக வேண்டியதுதானே. அதைவிட்டு எதற்கு எழுதுகிறீர்கள்?

கருணாநிதிபற்றி நணபர் விஸ்வாவின் கருத்தை கட்டுரையாக எழுதங்கள். அதைவிட்டு இங்கு வந்து இது முன் பல்டி (பிரண்ட் டைவ்) அது பின்பல்டி (பேக் டைவ்) என்று பேசுவதில் பயனில்லை.

புலவர்களே கோபம் இருக்கலாம்... சாந்தமாக உரையாடுங்கள்.. .. அய்யோ அய்யோ... )))

Vishwa
2008-09-01 10:17:00
vishwanath.selvaraj@cognizant.com

To Jamalan & co,

ரஜினி "உதைப்பேன்" என்று சொன்னதற்க்காக வருத்தம் தெரிவித்ததை சிவாஜி, குசேலன் படத்தை விட பரபரப்பான விஷயம் ஆக்கியது தமிழ் மீடியா. இந்த விசயத்தை தமிழ் மீடியா ரஜினி வருத்தம் தெரிவித்தது தவறு என்று பிரச்சாரம் செய்ததே தவிர என் வருத்தம் தெரிவித்தார் அதற்க்கான அவசியம் என் என்று யோசிக்கும் திறமை கூட மிடியாவுக்கு இல்லாமல் போனது.

மீடியா சொல்லும் முதல் காரணம் ரஜினிக்கு கன்னட ரைட்ஸ்க்கும் பங்கு உண்டு. அங்கு படம் ஓடினால் தான் அவருக்கு அந்த பங்கு கிடைக்கும் என்பது. ரஜினி கன்னட பிலிம் சேம்பெருக்கு கடிதம் எழுதிய உடனே குசேலனுக்கு முன்பதிவு தொடங்கி விட்டது. அதனால் ரஜினி படம் ரிலிஸ் ஆவதற்கு தான் வருத்தம் தெரிவித்தார் என்பேதே தவறு.அப்படி இருந்தும் ரஜினி வருத்தம் ஏன் தெரிவித்தார் என்று யோசித்து பார்த்தல் அது தான் வாழ வைத்த தெய்வங்ககளான தமிழ் மக்களுக்கு ரஜினி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று தெரியும்.

படம் பார்க்க வரும் தன் ரசிகர்கள் கன்னட போராட்டக்காரர்களால் எந்த பிரச்சனைக்கும் ஆளாக கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.ஆனால் அரசியல்/சுய லாபத்திற்க்காக மட்டும் இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் உங்களால் பெங்களூர் தமிழர்களுக்கும் அதரவு அளிக்கும் ரஜினியை விமர்சிப்பது கேலி கூத்தானது.

பெங்களூர் தமிழர்களுக்கு பிரச்சனை வரும் போது அரசியல்வாதிகள்/மீடியா செய்ததை விட ரஜினியும் அவரது ரசிகர்களும் செய்த உதவியை யாரும் மறுக்க முடியாது. உதரணமாக பெங்களூர் தமிழ் சங்கம் தாக்கப் பட்டபோது கடிதம் எழுதியது இதே ரஜினி தான். அதே போல் அமெரிக்காவில் கன்னட சினிமா விழாவிற்கு கொடுத்த அழைப்பிதழை ரஜினி வாங்க மறுத்து விட்டார் என செய்தி வெளியிட்டதும் இதே மீடியா தான்.

இதை எல்லாம் மறுத்தாலும் ரஜினி உதைப்பேன் என்று சொன்னதற்கு தான் வருத்தம் தெரிவித்தாரே தவிர ஒகேனக்கல் திட்டம் வேணும் என்று சொன்னதற்க்காக வருத்தம் தெரிவிக்க வில்லை. அப்படி இருக்கும் போது இதில் ரஜினி தமிழ் நாட்டுக்கு செய்த துரோகம் என்ன வென்று தெரியவில்லை.

காவேரி பிரச்சனை,ஒகேனக்கல் பிரச்சனை வரை தப்பு தப்பா நியுஸ் போட்டு தான் பார்க்கிறிங்க சூப்பர் ஸ்டார்க்கு கூட்டம் அதிகம் தான் ஆகுது. அதைப் பார்த்தும் மக்கள் யார் பக்கம்னு புரிஞ்சுக்காம நியுஸ் எழுதுறவங்களுக்கு விவேக் காமெடி லைன் தான் நினைவு வருது "இப்படி எழுதுறதுக்கு நீ கேரளாவுக்கு அடி மாட போயிருக்கலாமே".

கர்நாடகாவில் பிறந்த ரஜினி ஒகேனக்கல் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் பொது தமிழ் நாட்டில் பிறந்த நடிகர்கள் எல்லாம் எனக்கு கர்நாடக நடிகர்களும் வேண்டும் தமிழர்களும் வேண்டும் என மழுப்பி பேசியதை விமர்சிக்க வழியில்லாமல் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு ஒகேனக்கல் போராட்டத்தில் பேசியதையே சொல்கிறேன்.

"உதைக்க வேண்டாமா" என சொல்லி உங்களை உயர்த்த விரும்ப வில்லை. சத்தியம் பேசுங்க, உண்மை பேசுங்க அது தான் சோறு போடும்.

Vishwa
2008-09-02 02:07:00
vishwanath.selvaraj@cognizant.com

திரு ஜமாலன்,
உங்களை என்ன சொல்வதென்றே புரியவில்லை.
நியாயமான கேள்வி என்றால் நிச்சயம் பதில் கூறலாம் . ஆனால் திராவிடம் ஆரியம் என்று உளறி விட்டு தற்போது ரஜினியை வசை படுவது எந்த ஊரு நியாயம். நன்கெழுத்து வார்த்தை நான் பிரயோகிக்க முற்பட்டது தவறாயின்,அதை விட மிக மோசமான வார்த்தை பிரயோகம் செய்த மற்றவர்கள் உங்கள் கண்களுக்கு நல்லவர்களாக தெரிவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ரஜினி மன்னிப்பே கேட்டு விட்டார் என்று கூட வைத்து கொள்வோம்.அவர் மன்னிப்பு கேட்டது அவர் சார்ந்த தொழில் சார்ந்தவர்களை காப்பாற்றவே.இதில் அவர் கேட்டு விட்டதாக கூறப்படும் "மன்னிப்பால்" யாருக்கு எந்த விதத்தில் நட்டம் வந்து விட்டது அல்லது எந்த கன்னடருக்கு லாபம் வந்து விட்டது.
ரஜினி கேட்ட மன்னிப்பால் ஹோகேநேக்கள் குடிநீர் வரத்து நின்று விட்டதா?
காவேரி நீர் தடுக்க பட்டதா? அல்லது தமிழனின்(பச்சை) மானம் அடகு வைக்கப்பட்டதா? இல்லையே.......

இல்லை, அன்று ஹோகேநேக்கள் போராட்டத்தின் பொது வக்கிரம் வழிய பேசியவர்களால் ஒரு சொட்டு நீரை கொண்டு வர முடிந்ததா?காலையில் ஆரம்பித்து சாயும்கலத்தில் கிடப்பில் போடபட்ட திட்டத்திற்கு இத்தனை ஆர்பாட்டம், அழுச்சாட்டியம்.

சற்று யோசித்து பார்த்தால் அவர் எங்கயும் எப்போதும் தான் ஹோகேநேக்கள் போராட்டத்தின் போது பேசிய பேச்சில் "உதைக்க வேண்டாமா" என்ற வார்த்தை பிரயோகம் மட்டுமே தவறு அதற்காக வருந்துகுறேன் என்றுதானே சொன்னார்.எங்கயாவது அவர் பேசிய மாற்ற பேச்சை திரும்ப பெறுவதாக கூறினாரா? அப்படி என்றல் நீங்கள் கண்ணில் விளகென்னை விட்டு பார்ப்பது எதை?

"கேனகூ,என் பொண்டாட்டி என் கூட படுத்தா அவனுக்கென்ன?" போன்ற பேச்சுக்கள் தமிழர் போராட்டம் என்ற பெயரில் பேசினால் உங்களுக்கு ஆனந்தம் அல்லவா?இல்லை "எனக்கு கும்ளேவும் வேண்டும்,பாலாஜியும் வேண்டும்" என்று பொத்தாம் பொதுவாக பேசிய பேச்சுகளை நீங்கள் ஏற்று கொள்வீர்களா? ஏற்று கொள்ளத்தான் வேண்டும் அல்லவா?ஏன் என்றால் அவர்கள் பச்சை தமிழர்கள்.

அவ்வலவு வீராவேசத்துடன் பேசும் பச்சை தமிழர்கள் இனி கன்னடர்கள் பங்கு பெரும் எந்த ஒரு விஷயத்திலும் நாங்கள் பங்கு பெற மாட்டோம், அல்லது எந்த ஒரு கன்னடனையும் நாங்கள் பங்கு பெரும் தொழிலில் அனுமதிக்க மாடோம் என்று உறுதி எடுக்க சொல்லுங்கள் ஜமாலன்......

இன்று ரஜினியை கன்னடன் என்று விமர்சிக்கும் சிலருடைய வாதம் எம்.ஜி.அர் மட்டும் சுத்த தமிழனாக தெரிகிறாரா என்பது வரை தொடரும்?சத்தியமாக உங்களுக்கு பதில் சொல்ல வராது அல்லது தெரியாது(இது சில கேனகூகளுக்கும் நன்றாகவே தெரியும்)

நாங்கள் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்கிறோம் ஆனால் நீங்கள் குளிக்கும் வேலைய மட்டும் பார்க்க வேண்டியது தானே.

யாரை பற்றி எழுதினால் உங்களுக்கு காசு பார்க்க முடியுமோ அவரை பற்றி எழுத வேண்டியதுதானே உங்கள் தலையாய கடமை.(நான் குறிபிடுவது பத்திரிக்கைகளை)

ஜமாலன்,பல்டி அடிப்பதில் தலை சிறந்தவர்கள் இங்கே ஏராளமானோர் உள்ளார்கள்.ஆனால் அவர்களை பற்றி எழுதினால் காசும் பார்க்க முடியாது,வீட்டுக்கு ஆடோவும் வரும். ஆனால் ரஜினி அப்படியா..இன்று வரை இந்த விஷயத்தில் அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை.அப்படி ஏதாவது பேசினால் அதுவும் காசுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும்.... அந்த சந்தர்பத்தை அவர் இன்னும் வழங்கவில்லை.ஆக, இந்த பேச்சு தொடர்ந்து கொண்டிருபதில் வியபேதுமில்லை.

அன்புடன்...
விஷ்வா

arshiya.s
2008-09-02 02:44:00
arshiyaas@rediffmail.com

to
the editor,

respected sir,

really i did'nt expect this much of responses to these matter. i am very much happy to contribute the matters to Keetru. the readers of Keetru mr. vishwa, mr. ganesh, mr.anbu, mr.thamilanban and mr.jamalan gave their worthy comments regarding that rajni's issue.and few others gave to ms.jeyalalitha matter also.

few friends sent their comments to my mail.

it gives me very good experience.

thanks to you sir.

arshiya.s

anbazhagan
2008-11-04 03:35:00
anbazhagan_kaivalyam@yahoo.com

nadiganai patthi inayathlayum pesikitu irunda nammala rajini sollra madiri.......illada aandavanalayum kappathamudiyadu.velaya pappom adoda namma makkalukkaga konjam nalla visayangala eluduvome...mudinja....



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com