Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஐயா கலைஞரே.... தமிழினமா? ஈனப்பதவியா?
அறிவழகன் கைவல்யம்


கடைசியில் எதனை எழுதக் கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது.


Karunanidhi கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கனவான்கள் ஒருபுறம். எம்.ஜி.ஆரின் பிண வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெயலலிதா கும்பலின் கால்களில் விழுந்து கிடந்தபோதே தமிழர்களின் அரசியல் அறிவு மழுங்கிப் போனது.

மனிதச் சங்கிலியாய், புயல் மழையை எல்லாம் புறமுதுகேற வைத்த உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில், எம்தமிழ் மக்களின் 40 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், ஒரு முடிவுக்கு வரும் என்று நாங்கள் ஆர்வமாய் இருந்தபோது, ஒரு வார காலத்தில் முடிவு தெரியவில்லை என்றால், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கொஞ்சம் உறுமலாய் சொன்னீர்கள். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மகிழ்வாய் உறங்கப் போனோம். எழுந்து பார்த்தால், உலகின் மூத்த குடியின் வாழ்வா, சாவா போராட்டம் இந்திய இறையாண்மை என்னும் மூடத்தனத்தில் முடக்கப்பட்டு, முகர்ஜிகளின் அறிக்கைகளில் சமாதி அடைந்திருந்தது மட்டுமல்ல, பார்ப்பன பனியாக்களும், ஆரியக் கூத்தாடிகளும் கைகொட்டிச் சிரிக்கும் கேலிப் பொருளாக்கி மூலையில் முடக்கியதே உங்கள் அறிக்கைகள்.

பார்ப்பனக் கழுகளால் அடைகாக்கப்படும், இந்திய இறையாண்மை என்னும் விளக்குமாற்றுக்கு நீங்களும் பட்டுக் குஞ்சம் கட்ட முனைந்தால், அந்த விளக்குமாற்றை தூக்கி எறிவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழ் மக்களின் மரண ஓலம், இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தாலாட்டாய் இருக்குமேயானால், நாங்கள் இந்திய தேசியத்திற்கு ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறு பாதை இல்லை.

"இந்துக்களாய் இருந்து போராடினால், இந்நேரம் ஈழம் கிடைத்திருக்கும்" என்று எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்கிற இடுகாட்டு நரியாக ஒரு பார்ப்பனன் ஊளையிடுகிறான். அட நாதாரிகளா, உங்கள் மதச் சாயத்தை எங்கள் வீட்டுப் பெண்களின் பிணங்களின் மீது சாத்தும் சேலைகளில் தானா தெளிக்க வேண்டும்? விடுதலையே கிடைக்காமல் வீழ்ந்து போனாலும், உங்கள் இந்துத்துவக் கனவுகள் மட்டும் நிறைவேற விடமாட்டோம் நாங்கள். ஈழத் தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்று, இறந்து போன ராசீவின் எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு இந்திய இறையாண்மையில் ஓட்டுப் பொறுக்கித் தின்னும் தங்கபாலுவும், ஜெயலலிதாவும் இன்னும் ஈழத் தமிழ் மக்களின் குருதியைப் பச்சையாகக் குடிக்கவில்லை. அதையும் அவர்கள் செய்வார்கள். நீங்கள் அப்போது அண்ணன் அமீரையும், அண்ணன் சீமானையும் சிறையில் அடைத்துக் கொண்டிருங்கள்.

உங்கள் ராசதந்திரம், பம்மாத்து அறிக்கைகள் எல்லாம் இனிப் பயனளிக்காது ஐயா கலைஞர் அவர்களே. பிணங்களுக்குப் பந்தி வைக்க நீங்கள் குலுக்கும் உண்டியல் ஓசையில் களைந்து கருகிப் போனது ஒட்டு மொத்தத் தமிழர்களின் உணர்வும் விடுதலையும். எம்மக்களின் உடனடித் தேவை இப்போது அரிசியும் பருப்பும் அல்ல. விடுதலையை வென்றெடுக்க உதவும் துப்பாக்கித் தோட்டாக்கள். உங்கள் இறையாண்மை முழக்கங்களுக்குப் பதிலாக, இந்தியத் தலைவர்களுக்கு இலங்கை வழங்கிய அவமரியாதை அழுக்குகளைச் சுமந்து கொண்டு சார்க் மாநாடுகளில் உங்கள் தலைப்பாகை கூட சிறுத்துப் போனது. நீங்கள் மட்டும், ராஜபக்சேக்களின் சிவப்புச் சால்வைகளுக்குள் வெட்கமின்றி ஒளிந்து கொண்டீர்கள். இனி நாங்கள் இந்திய தேசியத்தில் இறையாண்மையைத் தேடுவதை விடவும், தமிழகத்தில் ஒரு ராஜ்தாக்கரேயைத் தேடுவது தான் சரியென்று படுகிறது.

இந்திய இறையாண்மை பற்றியெல்லாம் இனி நாங்கள் பனை மர உரிக்குத் காவல் காக்கத் தயாராக இல்லை. நீங்கள் பூசி மெழுகி அடைக்க நினைப்பதற்கு இது ஒன்றும், போயஸ் தோட்டத்து ஓட்டைக் கதவல்ல. இன உணர்வாலும், மொழி உணர்வாலும் உருக்கப்பட்ட எரிமலைக் குன்றின் முகவாய், வெடித்து வெளிக் கிளம்பினால் அடையாளம் சொல்வதற்குக் கூட இங்கே அரசியல் இருக்காது.

இருப்பது இரண்டுதான், தமிழினமா? ஈனப் பதவியா? எது வேண்டும் உங்களுக்கு. முதலாவது வேண்டுமென்று இப்போது முடிவெடுத்தாலும் தலைவன் நீதானென்று கொண்டாடத் தமிழினம் இங்கே காத்திருக்கிறது.

இரண்டாவது வேண்டுமென்றால் தமிழின விரோதிகளின் பட்டியலில் உங்களையும் சேர்த்து, பார்ப்பன ஜெயலலிதாவுக்கும், உங்களுக்கும் என்ன வேறுபாடு என்று நாங்கள்தான் தேட வேண்டும்.

தமிழினமா? ஈனப் பதவியா?

முதல்வரே, இரண்டில் ஒன்றை இறுதியாகச் சொல்லி முடிவுரை எழுதுங்கள்....

இனி எங்களுக்கும் நேரம் அதிகமில்லை, தொலை தூரப் பயணம் காத்திருக்கிறது.

- அறிவழகன் கைவல்யம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com