Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

சுஜாதாவுக்காக ஒப்பாரி வைக்க முடியுமா?

“அவர்களைவிட(தமிழர்கள்) நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். (கைதட்டல்) சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர்; அவர் மிகச் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார். நாம் எதற்கும் பயப்படக் கூடாது.(25.12.2005)”

இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்ப்பனர் சங்க மாநாட்டில் போய், நான் தமிழர்களை விட நன்றாகவே எழுதுகிறேன் என்று திமிர் வழிய பேசிய சுஜாதா என்கிற பார்ப்பன எழுத்தாளர் இறந்து விட்டாராம், தமிழ்மணமெங்கும் ஒப்பாரி ஓலம் காதை கிழித்துக் கொண்டிருக்கிறது.

"எனக்கு வாழ்நாள் சாதனை விருது' கொடுத்தார்கள். பல மிகப் பெரிய பார்ப்பன சாதனையாளர்கள் திருநாமங்களின் வரிசையில் அடியேனையும் சேர்த்ததற்குத் தன்யனானேன்'" (ஆனந்த விகடன்', 15.1.06)

இப்படி எழுதி தான் யார் என்பதை தமிழர்களின் முகத்திலறைந்து சொன்ன இந்த பார்ப்பன சாதி எழுத்தாளருக்காக பார்ப்பனர்களோடு சேர்ந்து மற்றவர்களும் ஏன் இப்படி புரண்டு புரண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

arasezilan இப்படி நாம் எழுதினால் சில 'நல்லவர்கள்' நமக்கு உபதேசம் செய்ய ஓடோடி வந்துவிடுவார்கள், அவர் என்ன செய்திருந்தாலும் அதனை மரணத்தின் போது நினைவு கூறாதீர்கள், மரணத்தோடு மறந்துவிடுங்கள் என்று இவர்கள் நமக்கு அறிவுரை சொல்வார்கள், ஆனால் மரணத்தையே திருவிழாவாக்கி கொண்டாடும் பார்ப்பன பண்டிகையான தீபாவளியை இவர்கள் கண்டிக்க மாட்டார்கள். சூரசம்ஹார விழா என்றொரு விழாவே ஆண்டாண்டுக்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறதே, யார் அந்த சூரன்? சம்ஹாரம் செய்தது யார்? அவன் அசுரன் என்றால், யார் அந்த அசுரன்? இதையெல்லாம் கேட்கமாட்டார்கள்!

எமது மூதாதையர்களை அசுரர்கள், தஸ்யூக்கள் என்று இகழ்கின்றன வேத, புராண, இதிகாசங்கள், அந்த அசுரர்களை பார்ப்பன கடவுள்கள் கொன்றொழித்ததையே பண்டிகைகளாக கொண்டாடி மகிழ்கிறார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பன இந்துமதத்தின் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு ஆபாச காரணமிருக்கிறது அல்லது இது போல அசுரர்களை பார்ப்பனர்கள் வீழ்த்திய இனவெறி காரணமிருக்கிறது. தங்கள் இனத்துக்கு எதிரிகளாயிருந்த அசுரர்களின் மரணத்தையே அவர்களால் விழாவாக கொண்டாடி மகிழ முடிகிறதென்றால்... தமிழர்களை இழிவுபடுத்துவதையும், பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிப்பதையுமே தமது எழுத்தின் நோக்கமாக கொண்டு வாழ்ந்த சுஜாதாவின் மரணத்தை நாங்கள் கொண்டாடக் கூடாதா?

'சாதி' என்கிற கொடூரத்தால் இங்கு ஆயிரமாயிரம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படும் பொழுது, ஆதிக்க சாதியினரின் வன்முறைக்கு அவர்கள் இரையாகி உயிரிழக்கும் பொழுது, தன்மானமிழந்து, சுயமரியாதை இழந்து, தனக்கான பொருளாதார வாழ்வை இழந்து அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, தான் உயர்சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த திமிர் வழிய எழுதிய ஒருவருக்காக, தன்னை அந்த உயர்சாதிக்குரியவனாகவே அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு ஓடி வருவார்கள் இந்த 'நல்லவர்கள்'.

இந்த 'நல்லவர்களின்' இரட்டை வேடம் எப்படிப்பட்டதென்றால், சாதி ஒடுக்குமுறையால் ஒருவர் உயிரிழந்தாலும் இரங்கல் தெரிவித்துவிட்டு தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள், சாதியின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள செயல்பட்டுக் கொண்டிருப்பவன் இறந்தாலும் அவனுக்கும் 'இரங்கல்' தெரிவித்துவிட்டு தனது வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள் இந்த 'நல்லவர்கள்', ஆக இவர்கள் எல்லோருக்கும் 'நல்லவர்கள்' 'மனித நேயர்கள்'.

இப்படி நல்லவன் சர்டிபிக்கேட் வாங்க எளிய வழி இருக்கின்ற காரணத்தினால்தான் ஆயிரக்கணக்்கான மக்கள் பசியாலும், பட்டினியாலும், சாதிய ஒடுக்குமுறையாலும் இறந்து கொண்டிருந்த பொழுது கும்மியடித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் இன்று இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்று பச்சோந்திதனமாக எல்லோருக்கும் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை எனும் போது நாம் ஏன் சுஜாதா என்கிற உயர் சாதி பார்ப்பன எழுத்தாளரின் மரணத்திற்காக அழ வேண்டும்?

சமீபத்தில் வெளிவந்த சிவாஜி என்ற படத்தில் கூட "அங்கவை சங்கவை" என்ற சங்க இலக்கிய மகளிரின் பெயர்களை கதாபாத்திரங்களுக்கு சூட்டி அவர்களுக்கு கருப்பு சாயத்தை பூசி, தமிழர்களின் அடையாளமாக அந்தப் பெண்களை காட்டி, "பழக வாங்க" என்று சாலமன் பார்ப்பையாவின் வாயால் அழைக்க வைத்து தமிழர்களின் மீதான தனது இனவெறி வக்கிரத்தை தீர்த்துக் கொண்ட இந்த ரங்கராஜ அய்யங்கார்(எ)சுஜாதாவிற்காக நாம் ஏன் அழ வேண்டும் நண்பர்களே?

தமிழிலக்கிய மகளிரை இவ்வளவு கேவலப்படுத்திய இந்த ரங்கராஜ அய்யங்கார் கீதையை பற்றியும், பார்ப்பனீயத்தையும் பற்றி யாராவது விமர்சித்தால் கோபம் கொப்பளிக்க ஆனந்த விகடனில் மறுப்பெழுதினாரே இது தெரிந்தும் கூடவா இந்த அக்கிரகார எழுத்தாளரின் மரணத்திற்காக நாம் அழுது வடிய வேண்டும்?

தமிழிலக்கிய மகளிரை விடுங்கள் தங்களது உரிமைக்காக போராடுகின்ற மகளிருக்கு எதிராக "நாங்களெல்லாம் நின்னுகிட்டே ஒண்ணுக்கு அடிப்போம்" ஆணாதிக்க வக்கிரம் பொங்க விக்ரம் படத்தில் வசனம் எழுதிய ரங்கராஜ அய்யங்காரின் மரணத்திற்காக பெண்களும் புரண்டு அழ வேண்டுமா என்ன?

இந்த ரங்கராஜ அய்யங்கார் தனது வாழ்வின் அந்திமக் காலத்தில் வெளிப்படையாக தன்னை ஒரு பார்ப்பன இந்துமத வெறியனாகவே காட்டிக் கொண்டார், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பயங்கரவாதிகள் ஒளரங்கசீப் எங்கு ஒன்னுக்கடித்தார், அக்பர் எங்கு காலைக் கடன் கழித்தார் என்று ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் சுஜாதா ஒரு புது ஆய்வை ஆனந்த விகடனில் எழுதினார்.

"யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாளதாசர் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்."(ஆனந்த விகடன் 17.4.05)

இது எவ்வளவு பெரிய பொய்யென்றும் புரட்டென்றும் இரண்டு வரலாற்றறிஞர்கள் அம்பலப்படுத்தினார்கள், அதற்கு நேரடியாக பதிலெழுதாமல் மழுப்பியதோடு அதற்குப் பிறகும் தன்னை திருத்திக்கொள்ளாத இந்துத்துவ பாசிச ஓநாய்தான் இந்த சுஜாதா. இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கிய இந்த இந்துமதவெறி பாசிசவாதிக்காக எந்த இஸ்லாமியராவது கண்ணீர் வடிக்க முடியுமா?

பெரியார் சிலை உடைக்கப்பட்டவுடன் ‘ஒன்னறையனா’ பூணூல் அறுக்கப்பட்டதற்காக துடித்தெழுந்த இந்த பார்ப்பன தேள், “தமிழ்நாட்டில் ‘பிராமணாளுக்கு’ உரிமையே இல்லை, இனி எல்லாம் கலிஃபோர்னியா போயிட வேண்டியதுதான்” என்று கதை எழுதியது, இந்த நாட்டின் உழைக்கும் மக்களை சூத்திரன் என்று அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் பூணூலுக்காக வக்காலத்து வாங்கிய இந்த வக்கிரம் பிடித்த ரங்கராஜ அய்யங்காருக்காக எந்த பெரியாரியவாதியாவது கண்ணீர் வடிக்க முடியுமா?

சுஜாதா போன்ற எழுத்து வியாபாரியை இழந்த துக்கத்தில் உயிர்மை பத்திரிக்கை நடத்திவரும் இஸ்லாமிய வீபிஷணன் மனுஷ்ய புத்திரன் வேண்டுமனால் விழுந்து விழுந்து அழலாம், யார் கண்டார் ஒருபக்கம் அவர் அகமகிழவும் செய்யலாம் இனி ராயல்டி தரும் சுமையில்லை என்று.

மணுஷ்ய புத்திரன் போன்ற இலக்கிய மாமாக்கள் காலம் முழுவதும் பார்ப்பனீய எழுத்தாளர்களுக்கு கால் கழுவிவிடுவதிலேயே இலக்கிய அனுபூதியை எய்திவிடுவார்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமி(எ)பசுவய்யர் செத்தவுடன் குடம் குடமாக அழுது ‘இழவு’ இலக்கியம் படைத்து அதையும் தமிழர்களின் தலையில் கட்டி காசு பார்த்தார்கள் இந்த இலக்கிய மாமாக்கள் இப்போது செத்திருப்பது அய்யங்கார், அய்யருக்கு வடித்த கண்ணீர் ஒரு மினி லாரி தேறுமென்றால், அய்யாங்காருக்கு வடிக்கப் போகும் கண்ணீர் நிச்சயம் ஒரு லாரியாவது தேறும், இந்த ஆணாதிக்க, பார்ப்பனீய வெறி பிடித்த சுஜாதாவை புனித பிம்பமாக்கி அடுத்த இழவு இலக்கியம் எழுதி தமிழர்களின் தலையில் கட்ட இலக்கிய மாமாக்களும், மற்றும் சில 'நல்லவர்களும்' தயாராகிக் கொண்டிருப்பார்கள் என்பதை தமிழ்மண சூழலில் இருந்தே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பசுவய்யருக்காக மோளாமல் மூணுநாளு கைவீங்க எழுதினாராம் ஜெயமோகன். அப்படியானால் நிச்சயம் அய்யங்காருக்காக பேளாமல் பத்துநாளாவது எழுதுவார், இவர்கள் மோளாமலும் பேளாமலும் நாறடிப்பதும் ஒப்பாரி வைப்பதும்தான் இலக்கியம். இந்த நாற்றம்பிடித்த ஒப்பாரி இலக்கியத்தை எழுதி இவர்கள் கல்லா கட்டிவிடுவார்கள், கூடவே சுஜாதா போன்ற கழிசடைக்கு புனித பிம்பம் கட்டி நமது தலையிலும் கட்டிவிடுவார்கள்

(நன்றி: www.tamilcircle.net)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com