Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை!

ஆல்பர்ட் விஸ்கான்சின்

சிலமாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவனின் உயிரைக் குடித்த "மேஜிக் பால்" தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை! எங்கு? இந்தியாவில் நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில்! அதனால்தான் நுகர்வோர் ஒரு "அரசன்"போல இங்கு பவனி வருகிற சூழல் உள்ளது.

சமீபத்தில் ஜப்பான், சீனா,தைவான், மலேசியாவில் தயாரான கேட் வே, ஃப்யூஜி அல்லது தோஷிபா மடிக்கணினி, அதாவது லேப்டாப் பயன்படுத்துகிறீர்களா? அதில், சோனி லேப்டாப் உலர் மின்கலம் அதாவது பாட்டரியை 75 டாலர் முதல் 200 டாலர் வரை செலவு செய்து அதற்குரிய பாட்டரியை வாங்கிப் பயன்படுத்துபவரா? இந்தச் செய்தி உங்களுக்காக.

உடனே சோனி டீலர் அல்லது இணையம் மூலம் உங்கள் பாட்டரிக்குப் பதிலாக புதிய பாட்டரி ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்கனவே வழங்கிய பாட்டரி சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்றும், லித்தியம் அயன் பாட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், அதில் சூடு ஏற்பட்டு மடிக்கணினிகள் பாழாகிப் போனது மட்டுமின்றி ஒரு சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் நுகர்வோரிடமிருந்து புகார்களைப் பெற்று அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்தது. இதில் புகாரளித்த நுகர்வோர் கூறியது முற்றிலும் உண்மை என்று அறிந்தது. இதனையடுத்து உடனடியாக இந்தபாட்டரிகளை விற்கக்கூடாது என்றும், போதிய மாற்றம் செய்யப்பட்ட தரமான பாட்டரிகளை நுகர்வோருக்கு வழங்கவேண்டும் என்றும் ஆணையம் உத்திரவிட்டது.

இதனையடுத்து சோனி நிறுவனம் அதன் தயாரிப்பான பாட்டரிகளை 340,000 அமெரிக்காவிலும், உலகின் பல்வேறு நாடுகளில் 3,080,000 பாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அருகிலுள்ள சோனி நிறுவன கிளைகள் அல்லது ஏஜென்சிகள் மூலமாக பழைய பாட்டரியைக் கொடுத்துவிட்டு புதிய பாட்டரிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சோனியின் தலைமை நிறுவனமான சோனி எனர்ஜி டிவைசஸ் கார்ப்,ஜப்பான் அறிவித்துள்ளது.

(http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml07/07011.html)

சிலமாதங்களுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவனின் உயிரைக் குடித்த "மேஜிக் பால்" குறித்த செய்தியை ஊடகங்களில் வாசித்தபோது அதிர்ந்துபோனேன். காரணம், ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரே, உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாமல் அறிக்கை கேட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார். மருத்துவத்துறையைச் சேர்ந்த உயர் பொறுப்பிலுள்ளவர் இந்த மேஜிக்பால் மிக ஆபத்தானது. குழந்தைகள் வாயில் போட்டு விழுங்கினால் தொண்டைக்குள் போகாமல் மூச்சுக்குழலில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், மேஜிக்பாலில் உள்ள இரசாயனப் பொருள் குழந்தைகளின் உள்ளுறுப்புகளை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்த நிலையில் அதே மேஜிக்பால் வேறு பெயெரெடுத்துப் பவனி வந்ததும் வாசகர்கள் பலர் அறிந்திருக்கக்கூடும்!

இந்த சைனா பால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபாதை முதல் சில்லறை அங்காடிகள், பல்பொருள் அங்காடி என்று எங்கும் விற்கப்படுகிறது. வண்ணவண்ண ஜெல்லி உருண்டைகள் கவர்ச்சிகரமாக இருப்பதால் சிறார்களை வசீகரப்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை. அதுவுமில்லாமல் வாயில் போட்டு எச்சிலில் ஊறவைத்ததும் அது உருவத்தில் பெரிதாகிவிடுவதால்,"யாருடைய மேஜிக் பால் சீக்கிரம் பெரிசாகுதுன்னு பாக்கலாமா என்ற போட்டி வேறு நடக்கிறது.
இந்த மேஜிக் பால் விசத்தன்மை வாய்ந்த வேதியியல் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் எச்சிலில் கரைந்து பல்வேறு தீங்குகளுக்கு உட்பட்டு உயிரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்த போதும், வெவ்வேறு பெயர்களில் பாலித்தீன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு சிறார்களின் விளையாட்டுப்பொருட்களாக வலம் வருவதை அரசால் தடை செய்ய இயலவில்லை.

இதற்குக் காரணம் குழந்தைகளுக்கு தீங்கிழழைக்கும் என்று தெரியவந்தால் உடனடியாக பாரபட்சமின்றி இத்தகைய
பொருட்களை திரும்பப்பெற வேண்டிய நுகர்வோர் நலத்துறையின் அலட்சியக் கண்காணிப்பும் அமல்படுத்த வேண்டிய அதிகாரத்தை பயன்படுத்த முனைப்பின்மையும்தான் காரணம்.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்குரிய பொருட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பெற்றோர்களின் புகார்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வக அறிக்கையின் பேரில் எந்தவித பாரபட்சமின்றி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்பை திரும்பப்பெற வைத்துள்ளது அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம்! திரும்பப் பெறப்பட்ட பொருட்கள் ஒன்றல்ல இரண்டல்ல ...பல்லாயிரம் பொருட்கள்! இல்லை...இல்லை இலட்சக்கணக்க்கில்! இதில் குழந்தைகள் பயன்படுத்தும், விளையாடும் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தரக் குறைபாட்டோடு தயாரித்தது என்று அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு சுமார் முப்பதுக்கும் மேலற்பட்ட நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்த குழந்தைகளுக்கான பொருட்களை திரும்பப் பெற வைத்தது.

அமெரிக்காவில் ஒவ்வொன்றிக்கும் (உ.தா. FDA) தரச் சான்றிதழ் பெற வேண்டும். அதுவும் அவ்வளவு எளிது கிடையாது. தரம் ஏற்புடையதாக இல்லையெனில்,காரில் இருந்து உணவு வரை உடனே சந்தையிலிருந்து 'Recall' செய்துவிடுவார்கள். இவ்வாறு நம் நாட்டில் வரும் நாள்தான் பொன்னாள்! இங்கு நுகர்வோரின் விழிப்புணர்வு, பொதுவான தர உணர்வுதான் Recall செய்வதற்கான அடிப்படை காரணங்கள்.

இந்தியாவிலும் தரக் கட்டுப்பாடு சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது. செயல்படுத்துவதில்தான் சிக்கலே! தரம் சரியில்லை என்று நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் உற்பத்தியாளர் இதனைச் சரிக்கட்ட இரண்டு வழி முறைகளைக் கையாள்வார். ஒன்று, தரம் சரியில்லை என்று சொன்ன அதிகாரிக்கு மேல் உள்ள அதிகாரியைக் கவனித்து தன்னால் உற்பத்தி செய்யப்பட்ட தரமற்ற பொருளைச் சந்தைப்படுத்திக் கொள்வார், தர முத்திரையோடு! இரண்டாவது, அரசியல்வாதிகளை வைத்து தனக்குச் சாதகம் செய்துகொள்ளுவது.

குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சந்தைக்கு வந்த விளையாட்டுப் பொருட்களை 2008ம் ஆண்டில் நுகர்வோர் துறை திரும்பப் பெற்றுக்கொள்ள வைத்துள்ளது. ஒவ்வொன்றையும் பட்டியலிட எனக்கு நேரமும் இல்லை; ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே, அதுபோல வாசகர்களுக்காக ஒரு சிலவற்றை இங்கு படங்களுடன் தருகிறேன். இதன் விபரமாவது:-

Bead Maze Toys
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: இமேஜி ப்ளே,கொலராடோ.
தீங்கு விபரம்: இதிலுள்ள மரங்களை இணைக்க மெட்டல் ஸ்குரு உள்ளது.
அசம்பாவிதம்/காயம் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: Imagi PLAY, (800) 882-0217 or (http:www.imagiplay.com/Recallweb)
தயாரிப்பு எண்ணிக்கை: 500 யூனிட்டுகள்

Dive Sticks
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: டார்கெட், மினியாபொலிஸ், மின்னசோட்டா.
தீங்கு விபரம்: இதன் வடிவமைப்பு குழந்தைகள் உடம்பில் எளிதில் காயமேற்படுத்தும்
அசம்பாவிதம்/காயம் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: Target, (800) 440-0680 or (http:www.target.com.)
தயாரிப்பு எண்ணிக்கை: 365,000 யூனிட்டுகள்

JA-RU Recalls Toy Trains
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: JA-RU Inc., of Jacksonville, Fla.
தீங்கு விபரம்: சிறுசிறு பகுதிகளாக கழற்றிப் பொருத்தக்கூடியதால் குழந்தைகள் வாயில் போட்டால் தொண்டையில் சிக்கும் வாய்ப்பிருப்பதால்
அசம்பாவிதம்/காயம்/புகார் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: JA-RU, (800) 231-3470
தயாரிப்பு எண்ணிக்கை: 18,000 யூனிட்டுகள்.

உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்:
தீங்கு விபரம்: சிறுசிறு பகுதிகளாக கழற்றிப் பொருத்தக்கூடியதால் குழந்தைகள் வாயில்போட்டால் தொண்டையில் சிக்கும் வாய்ப்பிருப்பதால்
அசம்பாவிதம்/காயம்/புகார் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: Earth Friendly, (888) 360-6292 or (http:www.earthfriendlyllc.com/recall.)
தயாரிப்பு எண்ணிக்கை: 1,000 யூனிட்டுகள்

Nerf Blasters
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: Hasbro Inc., of Pawtucket, R.I.
தீங்கு விபரம்: துப்பாக்கி புல்லட் போல சிறார் முகம்,கழுத்து,நெஞ்சு காயம்படநேரிடும்.
அசம்பாவிதம்/காயம்/புகார் : பெற்றோர்களிடமிருந்து 46 புகார்கள் 4 முதல்12 வயது சிறார்களுக்கு காயம் ஏற்பட்டதாக நுகர்வோர் துறை பெற்றுள்ளது.
நுகர்வோர் தொடர்புக்கு: Hasbro, (800) 245-0910 or (http:www.hasbro.com/nerf.)
தயாரிப்பு எண்ணிக்கை: 330,000 யூனிட்டுகள்

பொம்மைப் படகு
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: Buzz's Boatyard, of New Smyrna Beach, Fla
தீங்கு விபரம்: இதன் மீதுள்ள வண்ணப்பூச்சும்,காரீயம் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுக்கு அதிகமாகவும்,
அசம்பாவிதம்/காயம்/புகார் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: Buzz's Boatyard, of New Smyrna Beach, Fla
தயாரிப்பு எண்ணிக்கை: 2,000 யூனிட்டுகள்

Fisher-Price Pots & Pans Toys
உற்பத்தியாளர்/நிறுவனப் பெயர்: Fisher-Price
தீங்கு விபரம்: இந்த ஊதா பாட்&பேனில் உள்ள ஸ்க்ரூ கழன்று விடும் போது அதில் உள்ள சிறு உருண்டைகளை குழந்தைகள் வாயில்போட்டு தொண்டையில் சிக்கும் அபாயம் இருப்பதால்!
அசம்பாவிதம்/காயம்/புகார் : எதுவும் இல்லை
நுகர்வோர் தொடர்புக்கு: (http://www.cpsc.gov/cpscpub/prerel/prerel.html)
தயாரிப்பு எண்ணிக்கை: 15,000 யூனிட்டுகள்

மெர்ரி கோ ரவுண்டு எனப்படும் விளையாட்டு சாதனம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று 15,000 யூனிட்டுகளை திருப்பி பெறப்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனம் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 11,000 சிறார் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.

www.babystyle.com இ-ஸ்டைல் இன்க். நிறுவனத் தயாரிப்பான சமையலறை விளையாட்டு சாதனங்களை "பேபி ஸ்டைல்" மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 65 சிறார் கிச்சன் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.

கிட்ஸ் ஸ்டேசன் டாய்ஸ் இன்டர்னேசனல் லிட்., நிறுவனத் தயாரிப்பான விளையாட்டு செல்போன்கள் சாதனங்கள் பல்வேறு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஜுவனைல் ப்ராடக்ட் ஸ்டோர்களிலும்மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட பத்து இலட்சம் சிறார் செல் போன் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. (http:http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08290.html

மன்ஹாட்டன் க்ரூப் நிறுவனத் தயாரிப்பான டம்பிள் டவர் விளையாட்டு சாதனங்கள் பல்வேறு பல்பொருள் அங்காடிகள், ஆன்லைன் விற்பனை மற்றும் கேட்லாக் விற்பனை ஸ்டோர்களின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 7,000 சிறார் டம்பிள் டவர் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.

ஸாண்ட்டாஸ் டாய் கார்ப்., நிறுவனத் தயாரிப்பான வெஸ்டர்ன் ரைடர் புஷ் டாய்ஸ் விளையாட்டு சாதனங்கள் பல்வேறு தள்ளுபடி அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 9,000 சிறார் ரைடர் புஷ் டாய்ஸ் விளையாட்டு சாதனங்களில் உள்ள பொம்மைச் சட்டையில் உள்ள வர்ணத்தில் அளவுக்கதிகமான காரீயம் இருப்பதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. (http:http://http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08249.html

டாய்ஸ் அர் எஸ் இன்க்., (www.toysrus.com ) நிறுவனத் தயாரிப்பான Multi-Sided Activity Centers and Jungle Activity Centers விளையாட்டு கல்வி சாதனங்கள் அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 16,400 விளையாட்டு கல்வி சாதனங்களில் உள்ள நகரும் சிறு பொருட்கள் இருப்பதால் குழந்தைகள் விழுங்கிவிடக்கூடும் என்பதால் பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.

மெகா பிராண்ட்ஸ் அமெரிக்கா இன்க்., நிறுவனத் தயாரிப்பான உருவபொம்மை விளையாட்டுச் சாதனங்கள் வால்மார்ட், கேமார்ட்,டாய்ஸ் ஆர்.எஸ். மற்றும் பொம்மை விளையாட்டு அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 1.3 மில்லியன் விளையாட்டு சாதனங்களில் உள்ள நகரும் சிறு காந்தம் இருப்பதால் குழந்தைகள் விழுங்கிவிடக்கூடும் என்பதால் பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. (http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08223.html)

மெர்ச்சன்ட் மீடியா கார்ப்., நிறுவனத் தயாரிப்பான பசில்ஸ்(Toy Puzzle Vehicle Sets ) விளையாட்டுச் சாதனங்கள் ஆனலைன் மற்றும் டோல் ஃப்ரீ கேட்லாக் ஆடர்கள் மூலமும் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 1,98,000 செட்களும் அங்கீகரிக்கப்பட்ட அளவிர்கு மேல் காரீயம் கலந்திருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. (http://www.toysafetyrecalls.ca/childrens-toy-recalls.aspx?id=1794)

எலிகன்ட் பேபி அன்ட் பேபி நீட்ஸ் இன்க். நிறுவனத் தயாரிப்பான ஹார்ட் மற்றும் கார் ஸ்டெர்லிங் சில்வர் டீத்தர்ஸ் விளையாட்டுச் சாதனங்கள் குழந்தைகள் ஆடையங்காடிகள் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 200 செட்களும் குழந்தைகளின் பற்களைச் சேதப்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டு இது, குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. (http:http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08178.html)

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com