Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLawGeneral
சட்டம்

வரதட்சணை ஏன்?

இன்று வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. மாமியார் எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது.

1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.