சிகிச்சை
- பாதசாரி
சார் கேள்விப்பட்டீங்களா
குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல கேரள ஜோதிடர்
சார் கேள்விப்பட்டீங்களா
காமத்திற்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல பாலியல் மனநல மருத்துவர்
சார் கேள்விப்பட்டீங்களா
வறுமைக்கு அடிமையானவர்களை
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
பிரபல அரசியல் பொருளாதார மேதை
சார் கேள்விப்பட்டீங்களா
மனிதனால் தாங்க முடியாத
துக்கம் என்று எதுவுமில்லையாம்
அவர்களுக்குத் தெரியாமலேயே
அதிலிருந்து விடுவிக்கிறாராம்
நவீன எழுத்துக் கலைஞர்
சார் கேள்விப்பட்டா சொல்லுங்க
எனக்கு அடிமையான என்னை
அதிலிருந்து எனக்கே தெரியாமல்
விடுவிக்கும் அவரை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|