Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kavithacharan
Kavithaasaran Logo


ஆனைமுத்து நூல் நிதி ஏன்?

சங்கமித்ரா

தோழர்களே

ஆனைமுத்து ஜூன் 21இல் 81-அய்த் தாண்டுகிறார். 60 ஆண்டுகள் - தமிழ் - தமிழன் - தமிழ்நாடு சிக்கல்களுக்கு தீர்வு காண உழைத்திருக்கிறார். களப்பணி - பிரச்சாரம் - எழுதிக் குவித்தது - எல்லாம் காற்றில் கலந்த பேரோசையாக! இவர் எழுத்தில் நூலானது - 1980இல் - ஒரு சிறு பகுதி மட்டுமே!

பெரியாருக்கும் ஆலோசகர்: பலருக்குத் தெரியாது - தோழர் ஆனைமுத்து பெரியாருக்கும் ஆலோசகர் என்பது. இலக்கிய - சட்ட - வரலாற்றுச் செய்திகளில் நாள் தேதி இடம் - உட்பட நினைவில் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் இவர். புத்தமதத்துக்குப் போனாலும் - நாத்திகன் ஆனாலும் - இந்து இல்லை என்று எழுதிக் கொடுத்தாலும் நீங்கள் இந்துதான் - என்ற செய்தியை ஆதாரங்களுடன் - நீதிமன்ற தீர்ப்பு சான்றுகளுடன் பெரியார் முன் வைத்தார் ஆனைமுத்து. "தப்பு பண்ணிட்டேன்” என்று பெரியார் தலையில் அடித்துக் கொண்டார். அதுமுதல் ஆனைமுத்தை முதன்மை பிரச்சாரகர் ஆக்கினார், பெரியார்.

இலக்கியச் சுரங்கம்: தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் - ஆனைமுத்து. எந்த இலக்கியத்தில் - எந்தச்சொல் - எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்தவர். திருக்குறளில் பெரிய ஆராய்ச்சியே செய்து - அது ஒரு நீதி நூல் மட்டுமே - மனுநீதியிலும், அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கும் ஈவிரக்கமற்ற அரசக் கொடுங்கோன்மைக் கருத்துக்கள் - திருக்குறளில் இல்லை என்றவர் ஆனைமுத்து. மனு - கவுடில்யர்படி ஆண்டவர் வென்றார்கள். திருக்குறள்படி வாழ்ந்தவர்கள் - வீழ்ந்தார்கள். ஆட்சிக்கு வன்முறை அவசியம். இராணுவம் அவசியம். புத்தமத வீழ்ச்சிக்கு முதல் காரணம் - அசோகன் ராணுவத்தைக் கலைத்ததுதான் - என்பன போன்ற ஆனைமுத்து கருத்துகள் "அட்சரம் லட்சம்” பெறும்!

குடும்ப நிலைமை / பொருளியல்: மக்களுக்காகப் பாடுபடும் - தோழர் ஆனைமுத்துவின் பொருளியல் நிலை என்ன? குடும்ப நிலை என்ன? எங்கேயும் யாரிடமும் இவர் பேசாத செய்திகள் இவை. இருந்த 8 ஏக்கர் நிலத்தை - வந்த அந்நாள் (1950) ரூ.8000-10,000 பணத்தை - இயக்கம் வளர்த்ததிலும் பத்திரிகை நடத்தியதிலும் "பாழ் பண்ணியவர்” ஆனைமுத்து. ஒருபிடி நிலக்கடலையும் - இரண்டு பேரீச்சம்பழமும் இரவு உணவாகச் சாப்பிட்டு புத்தகம் - கட்சி அறிக்கை கட்டுகள் - இந்தக் கையில் 20 கிலோ - அந்தக் கையில் 20 கிலோவுடன் டெல்லி - மும்பை ரயில் மேம்பாலங்களில் இவர் ஏறும் காட்சி - துயரத்திலும் துயரம். அது அல்ல நம் கவலை! ஆனைமுத்துவின் சிந்தனை - எழுத்து - தன் வரலாறு - நூலாகாதது! பல ஆண்டுகளாக இவர் எழுதும் சிந்தனையாளன் Periyar Era - தலையங்கம் அனைத்தும் நூலாகத் தகுந்த - தமிழ்மக்கள் மேம்பாட்டு மாமருந்து. நூலாகவில்லை. அது நமக்கு இழப்பில்லையா? அதுவே நம் கவலை!

பெரியார் தமிழ்ப் பேரவை: எத்தனையோ பேரறிஞர்களின் சிந்தனைகள் - எழுத்துக்கள் - காற்றில் கலந்து மண்ணோடு மண்ணாகின - தமிழனின் பொறுப்பற்ற புறக்கணிப்பால்! ஆக்ஸ்போர்ட் படிப்பாளி - கம்யூனிசத் தந்தை - KTK தங்கமணியின் சிந்தனைகள் - தன் வரலாறு நூலானதா? தமிழை - புது பீடத்தில் ஏற்றிய பாவாணருக்குத் தன்வரலாறு இருக்கிறதா? சுர்ஜித் - நல்லகண்ணு - வரதராசன் என்று கம்யூனிசக் கனவில் தம் வாழ்வை அழித்த பேரறிஞர் - யாருக்கும் அவர் தம் சிந்தனைகள் நூலாக நாம் வழி செய்யவில்லையே! அதனால் பெரியார் தமிழ்ப் பேரவை களமிறங்கியிருக்கிறது - மக்களிடம் பணம் திரட்டி அறிஞர்களின் சிந்தனைகளை நூலாக்க! இதில் முதல் முயற்சி - உடன் இருப்பு - அருகாமை கருதி தோழர் ஆனைமுத்துவுக்கு. இந்த எம்பணி - எம் தொடர் திட்டத்தில் முதல்படி தான்!

கொடுங்கள் - கொடுங்கள் தோழர்களே! அள்ளிக் கொடுங்கள் - கொட்டிக் கொடுங்கள், ஒரு லட்சம் என்பது - இரண்டு லட்சமானால் - அது தமிழனின் பொறுப்புணர்வின் வெற்றி! அனைத்து நன்கொடைக்கும் முறையான ரசீது உண்டு. ஒரு பேரறிஞனை - அவர் வாழும் காலத்தில் பாராட்ட பணம் தாருங்கள்!

நன்கொடையை வே. ஆனைமுத்து, பா. இராமமூர்த்தி என்னும் இணை பெயரில் காசோலை வரைவோலைகளாக அனுப்ப வேண்டிய முகவரி:

சங்கமித்ரா, பெரியார் தமிழ்ப்பேரவை, ப.எண்.1/429, தென்பெரும் நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில், சென்னை - 600 048. பேசி : 9841359717



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP