Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2009

சோனியாவின் ஊழல் உறவு க்வாட்ரோச்சி விடுதலை
செவ்வேள்

போபார்ஸ் பீரங்கி ஊழல் கும்பலில் மிஸ்டர் க்யு (Mr Q) என்ற குழூவுக்குறியால் அறியப்பட்ட ஒட்டாவியோ க்வாட்ராச்சிக்கு எதிரான பிடி ஆணையை கைவிட்டுள்ளது இந்திய அரசின் மத்தியப் புலனாய்வு நிறுவனம். 27.04.09 நாளிட்ட தமது கடிதத்தின் வழி க்வாட்ராச்சி;க்கு ஆதரவாக சி.பி.ஐ. செயல்பட்டுள்ளது.

போபார்ஸ் பீரங்கி ஊழலில் தேடப்படும் குற்றவாளியாக க்வாட்ராச்சியை மத்தியப் புலனாய்வு அமைப்பு அறிவித்தது. இத்தாலியைச் சேர்ந்த க்வாட்ராச்சி பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிவதால் அனைத்துலக காவல்துறையான இன்டர்போல் வழியாக உச்சபட்ச தேடுதல் அறிவிப்பான சிவப்பு அறிக்கையை இந்திய புலனாய்வுக் குழு அமைப்பு வெளியிட வைத்தது. இப்போது அந்த சிவப்பு அறிக்கையை கைவிடுமாறு இன்டர்போலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது சி.பி.ஐ. ராசீவ் காந்தி காலத்தில் தில்லி சனநாயக அரண்மனைக்கு மிக வேண்டியவராக ஒட்டாவியோ க்வாட்ராச்சி விளங்கினார்.

ஒருவகையில் இவர் சோனியாகாந்திக்கு உறவினர். போபார்ஸ் நிறுவனத்தில் ஹோவிட்சர் பீரங்கி வாங்கியதில் எந்க் குறிப்பான பங்கையும் வகிக்காத க்வாட்ராச்சியின் ஏ.இ. சர்வீசஸ் நிறுவனம் 73 லட்சம் டாலர் தொகையை தரகுத் தொகையாக பெற்றது. உண்மையில் ராசீவ் - சோனியா குடும்பத்திற்கு அவர் பினாமியாக செயல்பட்டிருக்கின்றார் என்பதே குற்றச்சாட்டு.. தொடக்கத்திலிரு;தே காங்கிரஸ் ஆட்சி இந்த விசாரணையை குழப்பிவிட்டு சீர்குலைப்பதில் முனைப்பாக இருந்தது. நரசிம்மராவ் ஆட்சி காலத்தில 1993இல் க்வாட்ராச்சி இந்தியாவை விட்டு தப்பிக்க விடப்பட்டார். ராசீவ் காந்தி மரணத்திற்கு பிறகு சோனியா காந்தி அரசியலில் குதித்து விட்டால் தமது பதவிக்கு ஆபத்து என்று கருதிய நரசிம்மராவ்
சோனியாவை சரிக்கட்டுவதற்காக குற்றவாளி க்வாட்ராச்சியை தப்பிக்க விட்டார்.

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தில்லியில் அமைந்ததிலிருந்தே க்வாட்ராச்சியை விசாரணையிலிருந்து தப்ப விடுவதற்கு அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சட்ட விரோத வழிகளில், க்வாட்ராச்சி சம்பாதித்து வங்கியில் போட்ட பணத்தை லண்டனில் இருந்த இரண்டு வங்கிகள் முடக்கி வைத்துள்ளன. மன்மோகன் சிங் ஆட்சி இந்த முடக்கத்தை நீக்கி விட்டது. இதனால் க்வாட்ராச்சி தனது லஞ்சப் பணத்தை எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.

போபார்ஸ் வழக்கில் தேடப்படுகிற குற்றவாளியாக க்வாட்ராச்சி அறிவிக்கப்பட்டபிறகு அர்ஜென்டினாவுடன் இந்தியா, குற்றவாளியை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதன்படி இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி அர்ஜென்டினாவிற்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார். அh;ஜென்டினாவில் காலடி எடுத்து வைத்தக் க்வட்ராச்சியை இவ்வொப்பந்தப்படி அர்ஜென்டினா அரசு கைது செய்தது. அவரை இந்தியாவிற்கு கொணர்வதற்கு அர்ஜென்டினா நீதிமனற்த்தில் சி.பி.ஐ. அளித்தக் கடிதம் வேண்டுமென்றே தவறாகத் தயாகிக்கப்பட்டது. எனவே அந்த வேண்டுகோள் கடிதம் அர்ஜென்டினா நீதிமன்றத்தில் ஏற்கப்படவில்லை. கையில் கிடைத்த க்வாட்ராச்சி இதன் காரணமாக 2007இல் தப்பித்துச் செல்ல விடப்பட்டார். ஆயுத பேர ஊழலில் முக்கிய கண்ணியாக செயல்பட்ட இந்தக் க்வட்ராச்சிக்கு ராசீவ் காந்திக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற ஐயமும் எழுப்பப்பட்டது.

சோனியாவின் தலையீட்டின் பேரில் தான் க்வாட்ராச்சி இவ்வாறு தப்பவிடப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ராசீவ் காந்திக் கொலையில் சந்தேகத்திற்குரியத் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காகவாவது க்வாட்ராச்சியை கைது செய்து இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த சோனியா முனைப்புக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாகவே சோனியா காந்தி நடந்து கொண்டுள்ளார். சோனியா காந்தியின் பழிவாங்கும் வெறிக்காக இந்தியப் படை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது.

சோனியா காந்திக்கு நெருக்கமானவர் என்பதற்காக இந்திய அரசின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பு க்வாட்ராச்சியை தப்ப வைத்துள்ளது. சி.பி.ஐ.யின் சுயேச்சை தன்மை இவ்வளவு தான்.

இந்திய இராணுவத்தைப் போலவே இந்திய புலனாய்வு அமைப்பும் ஆளும் குடும்பத்தின் கைப்பாவையாக அப்பட்டமாக மாற்றப்பட்டிருப்பது இது சனநாயக நாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமோ முடியாதோ அதற்குள் தனது ஊழல் உறவை காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேகத்தில் எழுந்த சோனியாவின் கைவரிசை இது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com