Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மே 2008

நாற்காலி மேடேறிப் பாயும் ‘தேசிய நீரோட்டம்'
புலவர் க.முருகேசன்

பதவிப் பெருமழையில்
தேசிய நீரேட்டம்
பெருக்கெடுத்தது
தேசத்தையே அடித்துச் செல்கிறது
அசோகச் சக்கரம்

ஆணைச் சக்கரமாய் வந்தது
வேடிக்கை மனிதர்களின்
கேளிக்கைப் பொருளானது
அது
சிங்கத்தின் காலடிவிட்டு
தேசத்தை ஆளவந்தது
தேசியக் கொடியில் குடியேறியது
சுழலும் சக்தியற்று
பதவிச் சுழலில்
சிக்கிக் கொண்டது
சனநாயகத்தைப் பிணமாக்கித்
தர்ப்பைப் புல்லில் கட்டிவிட்டனர்
இது
கங்கை நதிக் கலாச்சாரம்
காவிரி நீர் கானல் நீரானது
தேசிய நீர் மட்டும் தேங்காமல் ஓடுகிறது
ஏனெனில் அது
நாற்காலி மேடேறிப் பாய்கிறது.
அடிமைகொண்ட வெள்ளையன்
அணையைக் கட்டி நம்
வயிறைக் குளிர வைத்தான்
திமிராய்ப் பேசி
சொட்டு நீருமில்லை

உச்சநீதி மன்றம்
அச்சத்தில் அமிழ்ந்து போனது
எனினுமிங்கு
தேசிய நீரோட்டம்
தேங்காமல் ஓடுகிறது
பாலாறு என்றால்
நீரேது என்கிறான் தெலுங்கன்
வேறேதுவழி பாழாறுதான்
தேசிய நீரேறிப் பாயாதங்கு
ஒக்கேனக்கல் என்றோம்
உனக்கேது தண்ணீ என்கிறான்
கன்னடன்
என்னடா தேசமிது?
எங்கள் தேசம்
தமிழ்த் தேசம்
என்றெழுந்தால்
தமிழ்த் தேசிய நீரோட்டம்
தடைபடாமல் ஓடும்
தடம் மாறாமல்
ஆறுகள் ஓடிவரும்.


Unable to connect to database! Please try again later.