Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மார்ச் 2009

பிரபாகரன் இல்லாத தீர்வு : சோனியா அரசின் சதித்திட்டம்
கி.வெங்கட்ராமன்

மக்களின் உரிமை முழக்கங்களை தொடக்கத்தில் அடக்க முயலும் ஆளும் சக்திகள், அந்த முழக்கங்கள் மக்களின் ஆதரவு பெற்று வலுப்பெறும்போது அவற்றையே நீர்த்துப்போகச்செய்து, திசைத் திருப்பி மக்களைக் குழப்புவது வாடிக்கை. "சோசலிசம்’, 'புரட்சி’ போன்றவை செல்வாக்கு பெற்றபோது அவற்றை பொருளற்ற வகையில் நீர்த்துப்போகச் செய்து தமதாக்கிக்கொள்ள ஆளும் வர்க்கங்கள் முயன்றதை வரலாறு கண்டிருக்கிறது.

அடிப்படை இலக்குக் குறித்த முழக்கங்களையே திசைத் திருப்பிவிடும் ஆளும் வர்க்கங்கள் மக்களது உரிமைப் போராட்டங்களில் எழுப்பப்படும் இடைக்கால முழக்கங்களையும் திசைத்திருப்பிவிடுவது எளிதில் நடக்கிறது.

“ஈழத்தில் போர் நிறுத்தம்’’ என்ற தமிழக மக்களின் கோரிக்கை முழக்கத்தை முதலில் தில்லி ஆட்சியாளர்கள் வெளிப்படையாக நிராகரித்தார்கள். அனைத்துக்கட்சி கோரிக்கையை தொடர்ந்து தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி “போர்நிறுத்தம் கோரமாட்டோம்.’’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். நாடாளுமன்றத்திலும் இதையே அறிவித்தார். ஆனால் “போரை நிறுத்து’ என்ற முழக்கம் கட்சி வரம்புகளைக்கடந்து ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை முழக்கமாக வலுப்பெற்றது.

திரைத்துறையினர், சின்னத்திரையினர், வழக்குரைஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பலவகை உடல் உழைப்பாளர்கள், உடல் ஊனமுற்றோர், திருநங்கைகள்.... என அனைத்துத் தரப்பினரும் போர்நிறுத்தம் கோரிப் போராட்டங்கள் நடத்தினர். மாவீரன் முத்துக்குமார் தீக்குளிப்பு, தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தமிழ்நாட்டின் இளைஞர்களை பேரெழுச்சிகொள்ள வைத்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வழக்குரைஞர்கள் நடத்துகிற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், கொடும் அடக்கு முறைகளுக்கிடையே தொடர்கிறது.

இவ்வாறு போர் நிறுத்தக் கோரிக்கை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முழக்கமாக மாறிய பிறகு, உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, இந்த இன அழிப்புப்போரை வழி நடத்துவதே சோனியாகாந்தியின் இந்திய அரசுதான் என்ற உண்மை பாமரருக்கும் புரியத்தொடங்கியது. இந்திய அரசு கடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில் இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று இலங்கை அரசைத் தானும் கோருவதாக அறிவித்தது. ஆனால் ஷபோர் நிறுத்தம்’ என்ற தனது கோரிக்கையோடு கொலைக்காரத்தனமான நிபந்தனை ஒன்றையும் இணைத்தது.

ஆண்டுதோறும் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக தொடங்குவது வழமை. அக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றுகிற உரை என்பது இந்திய அமைச்சரவையின் கொள்கை அறிவிப்பாகும். இவ்வாறான கூட்டுக் கூட்டம் கடந்த பிப்ரவாி 12, 2009 அன்று நடைபெற்று அதில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அதில், பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்திய மறுநாள் இந்திய அரசு போர் நிறுத்தம் கோரிவிட்டதாக ஏடுகள் பலவும் தலைப்புச் செய்திகள் வெளியிட்டன.

முதலமைச்சர் கருணாநிதி வழக்கம்போல் தில்லி அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார். ஆனால் போர் நிறுத்தக் கோரிக்கையோடு விடுதலைப்புலிகள் ஆய்தங்களைக் கீழேபோட முன்வரவேண்டும் என்ற நிபந்தனையை சூழ்ச்சியாக இணைத்திருப்பதை இவர்கள் வெளிப்படுத்தத் தவறினார்கள். போர் நிறுத்தம் என்ற மக்கள் கோரிக்கையை ஏற்பதுபோல் நடித்து ராஜபக்சே விரும்பும் மோசமான நிபந்தனையை ஈழத்தமிழர்கள் மேல் திணிக்கிற சூழ்ச்சித் திட்டமே இது. ஈழத்தமிழர்களின் உயிரையும், மானத்தையும், உரிமையையும், பாதுகாப்பதற்கு உள்ள ஒரே அரண் விடுதலைப்புலிகளின் ஆய்தப் போராட்டம்தான். விடுதலைப்புலிகளை ஆய்தம் அற்றவர்களாக மாற்றிவிட்டால், அதன்பிறகு போர் நிறுத்தம் என்ற கோரிக்கையே பொருளற்றதாகிறது.

ஈழத்தமிழர்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான அமைதிப் போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசால் இரத்த வௌ;ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு, வேறு வழியே இல்லாமல் தொடங்கியதுதான் ஆய்தப் போராட்டம் என்ற வரலாறு இந்திய அரசுக்கு தெளிவாகத் தெரியும். ஆயினும் வேண்டுமென்றே -செயலுக்கு வரமுடியாத, இழிவுபடுத்தும் நிபந்தனையை இந்திய அரசு வலியுறுத்துகிறது. அயர்லாந்திலோ, பாலஸ்தீனத்திலோ, நேப்பாளத்திலோ வேறு எங்குமோ போர் நிறுத்தத்திற்கு இவ்வாறான நிபந்தனை விதிக்கப் பட்டதாக வரலாறு இல்லை. ஏனெனில் அரசு பயங்கரவாதத்திலிருந்து தம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஆய்தம் ஏந்திய விடுத லைப்படையானது.

அடிப்படை பிரச்சினை தீர்ந்து நீடித்த அமைதி நிலவ உறுதியான ஏற்பாடுகள் நிலைபெறும் வரை ஆயுதங்களைக் கீழேபோட முடியாது. எந்தவொரு மக்கள் படையும், எந்தவொரு தேசிய இன விடுதலைப்படையும் இவ்வாறான நிபந்தனையை ஏற்காது என்ற உண்மை இந்திய அரசுக்கும் தொியும். ஆயினும் மக்களின் போராட்டத்தை மதித்துத் தானும் போர் நிறுத்தம் கோரியதாகப் படம் காட்டிக்கொண்டு தனது ஆதிக்க நடவடிக்கையைத் தொடர்கிற சூழ்ச்சியே இது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட முன்வராததால்தான் போர் தொடர்கிறது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மக்களைக் குழப்பி பிளவு படுத்துவதற்கு இந்திய அரசு இவ்வாறு அறிவித்திருக்கிறது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத் திறப்பு விழாவில் (28-02-2009) பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தற்காலிக சண்டை ஓய்வு (Pause) கோரியதும் இவ்வாறானதே. உண்மையில் போரை நிறுத்தாமல் மக்களை சிங்கள அரசின் பாதுகாப்பு வளையம் என்ற சித்திரவதை முகாமிற்கு வரவழைக்கிற சூழ்ச்சி வலையே இது. தூத்துக்குடி விழாவிலும், அடுத்தநாள் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடத்திலும், பிரணாப் முகர்ஜி அறிவித்தது புதிய செய்தி அல்ல. ஏற்கெனவே 2009 சனவரி 28 அன்று இலங்கையில் ராஜபக்சேயை சந்தித்த பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் தொிவித்த செய்திகள்தான் இவை.

“ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளையும் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது நிகழவேண்டுமென்றால் ஸ்ரீலங்கா அரசு தன்னுடைய படை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆய்தங்களைக் கீழேபோடவும், பேச்சு வார்த்தை தொடங்கவும் இசைவு தெரிவிக்கவேண்டும்’’ என்றார். “23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பெற்றுள்ள படைவெற்றி வடக்கு மாகாணத்திலும், இலங்கைத் தீவு முழுவதிலும் இயல்பு நிலையை மீண்டும் கொணருவதில் புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை நான் வலியுறுத்துகிறேன். 1987-ல் கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு இசைய, செய்யப்பட்ட இலங்கை அரசமைப்புச் சட்ட 13-ஆவது திருத்தத்தின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று இலங்கை குடியரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சே எனக்கு உறுதியளித்தார். இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதையும் தாண்டி கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு உள்ள வாய்ப்புகளையும் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் உறுதியளித்தார்’’.

இலங்கை இனப் பிரச்சினை குறித்து 15-02-.2009 அன்று மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை குறித்து விரிவாகக் கூறினார்.

விடுதலைப்புலிகள் ஆய்தங்களைக் கைவிட இசைய வேண்டும் என்ற நிபந்தனையை மீண்டும் வலியுறுத்திய ப. சிதம்பரம் அங்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்கு தமிழர்களின் ஒரே பேராளராக (பிரதிநிதியாக) விடுதலைப்புலிகளை ஏற்க முடியாது என்றும் கூறினார். பிரதீபா பாட்டீல் அறிக்கை, பிரணாப் முகர்ஜி அறிக்கை, ப. சிதம்பரம் பேச்சு ஆகியவற்றைத் தொகுத்து உற்று நோக்கினால் இந்திய அரசின் சூழ்ச்சித்திட்டம் புரியும்.

தனி ஈழம் அல்ல்லாத தீரிர்வு;வு என்பது மட்டுமின்றி, புலிகள் அல்லாத தீர்வு என்பதும் இந்திய அரசின் திட்டமாக இருக்கிறது. எந்த்த சனநாயக நெறிமுறைகளுக்கும் உட்ப்படாத தனது புவிசார் அரசியல் ஆதிக்க நலனுக்காக இந்திய அரசு முன் வைக்கிற திட்டமே இது. ஏனெனில் தமிழீழத் தனி அரசு என்பதும், தமிழர்களின் ஒரே அரசியல் பேராளர் விடுதலைப்புலிகள்தான் என்பதும், சனநாயக வழியில் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை நிலவரம் ஆகும்.

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் ஒரே விழைவு தமிழீழத் தனி அரசுதான் என்றும், ஈழத்தமிழர்களின் ஒரே பேராளர் அமைப்பு பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள்தான் என்றும் அறிவித்து போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினர் தமிழீழப் பகுதியில் உள்ள 24 இடங்களில் 22 தொகுதிகளை வென்றனர். இது தமிழீழ மக்களின் கருத்து வாக்கெடுப்பாகவே கருதத் தக்கதாகும். இந்தத் தமிழ்த் தேசிய கூட்டணியில் ப்ளாட், டெலோ, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள்ளிட்ட அனைத்துத் தமிழீழ அமைப்புகளும் உறுப்பு வகிக்கின்றன. அவையெல்லாம் இணைந்து பெற்ற கருத்து வாக்கெடுப்புதான் இது.

ஆனால் ஈழத்தமிழர்களின் இந்த சனநாயக விருப்பத்தைப் புறந்தள்ளிவிட்டு, தனது ஆதிக்கத் திட்டத்தைத் திணிப்பதிலேயே இந்திய அரசு குறியாக இருக்கிறது. எப்போதுமே வல்லரசுகள் தமது புவிசார் அரசியல் ஆதிக்க நலனோடு குறிப்பிட்ட தேச மக்களின் சனநாயக விருப்பங்கள் முரண்படுமானால், மக்களின் சனநாயக விருப்பங்களை தூக்கியெறிந்துவிட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே முயலும் என்பது வரலாறு. மாசேதுங் இல்லாத சீனா, காஸ்ட்ரோ இல்லாத கியூபா, அராபத் இல்லாத பாலஸ்தீனம், சதாம் உசேன் இல்லாத ஈராக் என்று அமொிக்கா வலியுறுத்தியதையும் இப்போது ஹமாஸ் இல்லாத காஜா என்று வல்லரசுகள் வலியுறுத்தி வருவதையும் உலகம் பார்க்கிறது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை அமைப்புகளை புறந்தள்ளிவிட்டு தாங்கள் நட்டுவைக்கிற கையாட்கள் ஆட்சியை நிறுவுவதிலேயே ஆதிக்கவாதிகள் முனைப்பாக இருக்கிறார்கள். அதற்கேற்ப தேசியத் தாயகத்தை கூறு போடுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

எடுத்துக்காட்டாக அராஃபத் மறைவுக்குப்பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அப்பாஸ் முழுக்கமுழுக்க இஸ்ரேல்-அமெரிக்கக் கையாளாக மாறினார். ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் தேசியப் படையாக வடிவெடுத்தது. பாலஸ்தீன நிர்வாகத்திற்கு நடந்த தேர்தலிலும் ஹமாஸ் பெருவாரியான வெற்றியைப் பெற்றது.

ஆயினும் இந்த சனநாயக முடிவை வல்லரசுகள் ஏற்கவில்லை. வல்லரசுகளின் கையடக்க அமைப்பான ஐ.நா. மன்றமும் ஏற்கவில்லை. இஸ்ரேலின் உளவுப்படையான மோசாத்தும், அமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வும் அப்பாஸை கூர்தீட்டிவிட்டு ஹமாஸோடு மோத விட்டன. பல்வேறு அமைதி முயற்சிகள் தோற்றுப்போனதற்குப் பிறகு வேறு வழியின்றி பி.எல்.ஓ.வோடு ஹமாஸ் போரிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை சகோதரச் சண்டை என வல்லரசுகளின் ஊதுகுழல்கள் தூற்றின. மேற்குக் கரையில் அப்பாஸ் ஆட்சியும் காஜா பகுதியில் ஹமாஸின் ஆட்சியும் நடைபெறுகின்றன. ஹமாஸ் ஆட்சிக்கு எதிராக என்று சொல்லி காஜா பகுதியின் பாலஸ்தீன மக்களை இனக்கொலை புரிந்துவருகிறது இஸ்ரேல்-அமெரிக்க அச்சு அரசுகள்.

இதேபோல் இந்திய அரசு அதன் உளவு அமைப்பான ”ரா’ மூலம் போட்டிக் குழுக்களை கூர் தீட்டிவிட்டு விடுதலைப்புலிகளோடு மோதலை ஏற்படுத்தி தமிழீழ தேசியப் போராட்டத்தை சீர்குலைப்பதை தொடர் பணியாக செய்துவருகிறது. இதனை இந்திய அமைதிப்படையின் தலைமைத் தளபதியாக பணியாற்றிய ஹர்கிரத்சிங் தமது இலங்i;கையில் தலையீடு (Intervention in Sri Lanka) என்ற நூலில் எடுத்துக்கூறுகிறார்.

“எந்த அமைப்பு வலுவும், அரசியல் இலக்கும் இல்லாத டெலோ அமைப்பைத் தொடக்கத்தில் "ரா’ தேர்ந்தெடுத்தது. டெலோ குழுவில் பெரும் குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் இருந்தனர். அவர்களுக்கு ஈழம் தொடர்பான எந்தக் கருத்தியல் உறுதிப்பாடும் இல்லை. தனது கையடக்கமான அமைப்பாக அதனை ஷரா’ உருவாக்கியது. அதேபோல் இ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பையும் ஆயுதபாணியாக்கியது....................... 1986-ல் டெலோவை விடுதலைப்புலிகள் ஒடுக்கினர். இந்திய அரசின் வெளியுறவுத் துறையும் "ரா’வும் இணைந்து இ.பி.ஆர்.எல்.எஃப்.-ஐ வலுவுட்டின. 1990-ஆம் ஆண்டில் ஒருநாள் இதற்கு பொறுப்பான "ரா’ அதிகாரியை நான் சந்திக்க நேர்ந்தபோது இந்த உண்மையை அவர் உறுதிப்படுத்தினார். 1988-இல் இந்திய அமைதிப்படை தலைமைத் தளபதி கல்கத் இ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு ஏராளமான ஏ.கே. 47 துப்பாக்கிகளையும் பெரும் அளவிலான ஆய்தங்களையும் வாரி வழங்கினார். "ரா’ அமைப்பின் தூண்டுதலால் குழுச்சண்டைகள் தீவிரம் பெற்றன. விடுதலைப் புலிகளை ஒடுக்கி வைப்பது மைய நோக்கமாக இருந்தது’’ (மேற்படி நூல் பக்கம் 23,24)

இவ்வாறான சீர்குலைவு முயற்சிகள் மட்டுமின்றி, பேச்சு வார்த்தைக்கு வரும்போது பிரபாகரனைக் கொன்றுவிட வேண்டும் என்ற திட்டம், இந்திய அமைதிப் படையின் இன அழிப்பு அட்டூழியங்கள் உள்ளிட்ட அனைத்தும் பிரதமர் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டவை என ஹர்கிரத்சிங் எடுத்துக்கூறுகிறார். (மேற்படி நூல் பக்கம் 57 மற்றும் 124)

போட்டிக் குழுக்களை வைத்து சீர்குலைக்க இந்திய அரசு செய்த முயற்சிகளை பிரபாகரன் தலைமை வெற்றிகரமாக எதிர்கொண்டதற்குப் பிறகு விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலைத்தலைவரான மாத்தையாவை இந்திய அரசின் கையாளாக 'ரா’ மற்றும் இராணுவ உளவுப்பிரிவு ஆகியவை மாற்றின. இதன் காரணமாக தளபதி கிட்டுவைத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இழந்தது. பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கின. மிகப்பொிய இச்சிக்கலையும் பிரபாகரன் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

அண்மையில் இலங்கையின் உளவுப்பிரிவும் இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவும் இணைந்து துரோகி கருணாவை உருவாக்கின. இதனையும் பிரபாகரன் தலைமை வெற்றிகரமாக எதிர்கொண்டது. ஆயினும் பல்வேறு இழப்புகளை இயக்கம் சந்திக்க நேர்ந்தது.

இப்போது இந்திய அரசின் முழுத்துணையோடு சிங்கள அரசு தமிழ் இன அழிப்புப் போரை முழுவீச்சில் நடத்திவருகிறது. இன்றைய நிலையில் விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பகுதி சுருங்கி முல்லைத்தீவுக்குள் இருந்து கொண்டு போரை நடத்தும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலை பயன்படுத்தி பிரபாகரன் இல்லாத அல்லது அவரைப் பத்தோடு பதினொன்றாக சேர்த்துக் கொள்கிற-தமிழீழம் அல்லாத “தீர்வுத் திட்டம்’’ ஒன்றை ஈழத்தமிழர்கள் மீது திணிக்க இந்திய அரசு முனைந்துள்ளது. பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் அறிக்கைகள் சொல்கிற செய்தி இதுதான். இதைத்தான் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் விரும்புகிறார். “நம் நெஞ்சத்து அனலை தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீசச் செய்திருக்கிறது’’ என்று பிரணாப் முகர்ஜி அறிவிப்பை உச்சி மோந்து பாராட்டுகிறார் கருணாநிதி.

சோனியா அரசின் 'திணிப்புத் தீர்வை’ ஆதரிப்பதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் வேறுபாடில்லை. 'பிரபாகரன் சர்வாதிகாரி சகோதர இயக்கங்களை அழித்தவர் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்’ என்று கருணாநிதி திரும்பத்திரும்பக் குற்றம் சாற்றுகிறார். “பிரபாகரன் பயங்கரவாதி சிக்கலே அவர்தான். அவரை வைத்துக்கொண்டுத் தீர்வு காண முடியாது’ என்று நஞ்சு கக்குகிறார் ஜெயலலிதா. மயிலை மாங்கொல்லைப் பொதுக்கூட்டத்தில் ப. சிதம்பரமும் இதையேதான் இதம்பதமாகக் கூறினார்.

“வியப்பு’ என்னவென்றால் ஈழத் தமிழர்கள் மீதான போருக்கு எதிராக முழங்கும் மக்கள் கலை இலக்கியக் கழகமும் இதையேதான் கூறுகிறது.

“ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம். ஆனால் புலிகள் நடத்துகிற விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கமாட்டோம். ஏனென்றால் பிரபாகரன் ஃபாசிஸ்ட்’’ என்று ம.க.இ.க. கூறுகிறது. ஜெயலலிதா கூட “இலங்கை’’ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக கூறுகிறார்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போம், ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி எனக் கோரமாட்டோம் என்றால் என்ன பொருள்? கோட்பாட்டை ஆதரிப்போம்; ஆனால் அதன் செயல்பாட்டை ஆதரிக்கமாட்டோம் என்று கூறும் தன் முரண்பாடு இது. இந்தத் தன்முரண்பாட்டில் ஒரு நயவஞ்சகம் ஒளிந்துள்ளது.

மாசேதுங்கை ஒதுக்கிவிட்டு சீன விடுதலையை நினைத்துப் பார்ப்பது எவ்வாறு முடியாத செயலோ, காஸ்ட்ரோவை ஒதுக்கிவிட்டு கியூப விடுதலையைப் பேசுவது எவ்வளவு பெரியதவறோ அதே போலத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஈழச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதாகச் சொல்வதும் வஞ்சகமானது.

பல வெற்றி-தோல்விகள், சரிதவறுகளைக் கடந்து பல நிறை- குறைகளை செரித்து தமிழீழத்தின் வரலாற்று வழியில் படி மலர்ச்சி பெற்றதுதான் பிரபாகரன் தலைமை ஆகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உள்ள தலைமைதான் பிரபாகரன் தலைமை என்றாலும், உலக விடுதலை இயக்கங்கள், புரட்சி அமைப்புகள் எல்லாம் பாடம் படிக்கவேண்டிய பல சிறப்புகளைப் பெற்ற தலைமை ஆகும் இது. பிரபாகரனை ஒதுக்கிவிட்டு ஈழச்சிக்கலைத் தீர்க்கப்போவதாகக் கூறுவது தமிழீழ வரலாற்றையேப் புறக்கணிப்பதாகும்.

இதைத்தான் சோனியா தலைமை விரும்புகிறது. விடுதலைப் புலிகளை விட்டுவிட்டு சிங்கள அரசின் பாதுகாப்பு வளையத்திற்கு வருமாறு இந்திய அரசு அழைப்பதன் பின்னணி இதுதான். ஊர் துறந்து, வீடிழந்து உள்ள உள்நாட்டு அகதிகளின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகையாக ஈழத்தமிழர்களை மாற்றுகிற சதித்திட்டமே இது. தாயகம் என்று உரிமை கொண்டாட ஏதுமற்றவர்களாக ஈழத்தமிழர்களை இது மாற்றிவிடும். சொந்தப் பாதுகாப்பு அற்ற, சிங்கள வெறி அரசின் அடிமைக் கூட்டமாக ஈழத் தமிழர்களைத் தாழ்த்தி விடும் இன அழிப்புத் திட்டமே இது.

ஏப்ரல்-மே நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த இன அழிப்புத் தீர்வை செயல்படுத்தி விடவேண்டும் என்பதில் சோனியாகாந்தியின் இந்திய ஆட்சி தீவிரம் காட்டுகிறது. வடக்குகிழக்கு மாகாண சீரமைப்பு என்ற பெயரால் பல்லாயிரம்கோடி ரூபாயை இலங்கை அரசுக்கு கொட்டிக் கொடுப்பதிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்கி சிங்களக் குடியேற்றத்தை விரிவாக்குவதிலும் முனைப்பு காட்டிவருகிறது.

ஆயினும் இவர்கள் திட்டமிடுகிற வகையில் களத்தில் விடுதலைப்புலிகளை ஒழிக்க முடியாமல் இந்திய - சிங்களக் கூட்டணி திணறுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டு மக்களுக்கிடையே இந்தப் போரை நடத்துவது சோனியாவின் பழிவாங்கும் வெறி என்ற தெளிவு விரிவடைந்து வருகிறது. காஸ்ட்ரோ இல்லாத கியூபா, அராஃபத்தை நீக்கிய பாலஸ்தீனம், மாசேதுங் இல்லாத சீனா என்ற ஆதிக்கவாதிகளின் திட்டங்கள் தவிடுபொடியானதை வரலாறு கண்டு இருக்கிறது.

பிரபாகரன் இல்லாத - தமிழ் ஈழம் அல்லாத திணிப்பு தீர்வும் இதே கதியைத்தான் அடையப்போகிறது. அதற்குத் தமிழ்நாட்டில் ஆற்றவேண்டிய பணியைத் தமிழர்கள் நிறைவேற்றவேண்டும். வரலாறு விடுத்திருக்கிற அழைப்பு இது.

இந்திய அரசே,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீகீகீக்கு;கு!

சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவி, படைப்பயிற்சி, பண உதவி செய்ய்யாதே!

என்று போராடுவோம்.




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com