Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
மார்ச் 2009

நெருப்பு ஊர்வலங்கள்
ஜே.தமிழ்ச்செல்வன்

அனுப்பு அனுப்பு!
ஆட்களும் ஆயுதங்களும்
அனுப்பு...

பார் பார்!
எம் ஈழம் பார்!!
எம் பச்சிளம் பெண்களின்
பாலியல் கொடுமையை!
பார்! அங்கே!

சர்வாதிகாரத்தின் தாண்டவத்தை
சர்வதேச சமூகமே பார்!...
எங்கள் குழந்தைகளின் நெஞ்சில்
குண்டுகள் பாய்ச்சி
நிமிர்ந்து நிற்கிறான் சிங்களன்
அங்கே வேலியே பயிரை
மேய்கிறது
வேடிக்கைப் பார்க்க
வெட்கமாயில்லை?

இங்கே
வியாதிக்காரர்களை
சுமப்பதற்கு வெட்கப்படுகிறது
பு+மி
அநியாயம் கண்டு
ஆத்திரம் கொண்டு
குமுறியெழ இவர்களென்ன
ஈரோட்டுக்காரரா? கியு+பாக்காரரா?
தன்மானம் தலைதூக்கியெழ....

உன் காலடியில் கிடக்க்ிறது புரட்சி
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காய் என்றானே!

சுடவில்லையா எங்கள்
முத்துக்குமார் நெருப்பு
விடுங்கள் விடுங்கள்
நஞ்சுண்ட நயவஞ்சகர்களை! இந்த
நடைபிணங்களை
நாளை வரலாறு காறித் துப்பட்டும்
ஆனால்...

ஒன்று மட்டும் நிச்சயம்
ஒருபோதும் வீழாது
தமிழீழம்!
வெல்லாது சிங்களம்!


Unable to connect to database! Please try again later.