Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜூன் 2009

கோவை ராமகிருட்டிணனுக்கு தே.பா.சட்டத்தில் சிறை

ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கை அரசு நடத்தும் போருக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவது தெரிந்ததே. ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு சேலம் - கோவை வழியாக கொச்சின் துறைமுகம் நோக்கி சென்ற இந்திய இராணுவ வாகனங்களை பெரியார் தி.க., ம.தி.மு.க., மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கோவை அருகே மறியல் செய்தார்கள் என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்து 40 பேரை சிறையில் வைத்துள்ளது.

பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை இராமகிருட்டிணன், மற்றும் தோழர்கள் பெரம்பலூர் இலக்குமணன்(பெ.தி.க.), கிரு‘;ணசாமி (ம.தி.மு.க.), வழக்கறிஞர் நீலவேந்தன்(ஆதித்தமிழர் பேரவை), வள்ளுவதாசன்(பு.இ.மு), பொன். சந்திரன்(பி.யூ.சி.எல்); உள்ளிட்ட 40 பேர் கோவை சிறையில் உள்ளனர். தோழர் கோவை இராமகிருட்டிணன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். இனப்படுகொலை செய்யச் சென்ற வாகனங்களை சனநாயக வழியில் தடுக்கச் சென்றோரை கொடிய சட்டப்பிரிவுகளின் கீழ் சிறை வைத்து தமிழ் இன உணர்வாளர்களை அச்சுறுத்துகிறது தி.மு.க. ஆட்சி. கோவை நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் பிணை மறுத்துள்ளது.

தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக த.தே.பொ.க. கொடி பறக்கிறது: மேநாளில் பெ.மணியரசன் உரை

இங்கு நாம் ஏற்றியுள்ள கொடி தமிழ்த்தேசியத்தின் அடையாளச் சின்னமாக வானில் பறக்கிறது. கொடியில் மூன்றில் இரண்டு பாகத்தில் சிவப்பு வண்ணம் உள்ளது. இந்தச் சிவப்பு, புரட்சியின் அடையாளம், ஈகத்தின் வெளிப்பாடு. நம் குருதியின் மறுபதிப்பு. எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பாகம் வௌ;ளைநிறம். அந்த வௌ;ளைப் பகுதியில் நம்முடைய தமிழ்த்தேசத்தின் வரைபடம் கருப்பு வண்ணத்தில் உள்ளது. கருப்பு வண்ணம் தமிழ் இனத்தின் நிறம். நமது தேசம், தமிழ்த்தேசம் ; இந்தியா நமது தேசமல்ல. திராவிடமும் நமது தேசமல்ல என்பதைக் குறிக்கிறது வரைபடம்.

வெள்ளைநிறப் பின்னணி, அமைதியின் மீது, உலகு தழுவிய சமாதானத்தின் மீது தமிழர்களுக்குள்ள நமக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது. அமையப்போகும் தமிழ்த்தேசக் குடியரசு உலக அமைதிக்குப் பாடுபடும் என்பதைக் குறிக்கிறது.

நம் தேசிய இனம் தமிழர்; நம் தேசியமொழி தமிழ்; நம்தேசம் தமிழ்த்தேசம்; இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பது நமது இலக்கு. இதுதான் தமிழ்த் தேசியத்தின் சாரம். இந்தக் கோட்பாட்டை விளக்குவது தான் நம்கொடி. தமிழ்த்தேசியத்தின் அடையாளச் சின்னம்தான் த.தே.பொ.க. கொடி.

(தஞ்சை நகரம் அண்ணா நகரில் 01.05.2009 அன்று மே நாள் கொடியேற்றி உரையாற்றியபோது தோழர் பெ.மணியரசன்..)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com