பார்க்க! பக்கம் இருபத்தி நாலு
முழுநிலவன்
அசோக சக்கரத்தில்
பீரங்கிகள்
அனுப்பியபோது
இந்தியன் என
பீற்றிக்கொள்ளும்
எவன் முகத்திலும்
காந்தியும்
காரி உமிழவில்லை
அகிம்சை என்ற
சொல்லாடலும்
கூனிக் குறுகவில்லை
தமிழ் சொல்லகராதியின்
புதிய பதிப்புகள்
இந்தியன் என்ற
சொல்லுக்கும்
கொலைகாரன் என்ற
சொல்லுக்கும்
இணையான பொருளையே
எழுதி வைத்திருக்கிறது
பார்க்க!
பக்கம் இருபத்தி நாலு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|