Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

கீழைக் கடல்
தஞ்சை வாரகி

காக்கை நாயை சுட்டால் - தினம்
காக்கவரும் மிருகவதை சட்டம்!
தமிழனை சுட்டான் சுடுகின்றான்!
தமிழர்தம் வீரமிங்கே வீழ்ந்ததுகாண்!

உலகம் எல்லாம் பரவிக்கிடந்து - நீ
உலகம் உயரநல் உறுதிகொடுத்து
மொழிக்கு மூலம்தந்த தமிழ்
ஆழிப் பேரலையாய் ஆர்ப்பரிப்பது என்றோ!

இந்து, முகமதியர், கிருத்துவர்
என்றோர் பிரிவு இனியில்லை,
எல்லாம் தமிழே ! எங்கும் தமிழர்
என்றோர் உறவே நிலைஇங்கே!

தமிழன் தேசம் தமிழன் உடமை நாம்
தவறி எண்ணுவது தமிழர் மடமை!
மொழியின் ஆக்கம் விழியின் கூறு
எழுவாய் தமிழா இதுஉன்தேசம்!

தமிழனைசுட்டு தண்ணீரில் விட்டான் - நம்
கீழைக்கடல் முழுதும் ரத்தம்!
முடிவின்றி தொடரும் மூடர்செயல்
முடித்து மகிழ்வோம் வா தோழா!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.