அறம் வெல்லும்
புவை சாரதி
புலிகளின் மீது தடையை நீக்கு
புதிய ஈழம் பிறக்கட்டும்!
கிளிநொச்சிப் பக்கம் வருகின்ற் சிங்கள
நரிகளின் உடல்கள் கிழியட்டும்!
வழிவழி வந்த மறத்தமிழ் இனத்தை
வாழ விடுங்கள் ஈழத்தில்
மொழிவழி வந்த தொப்புள் கொடியை
அறுப்பதை இன்றே நிறுத்துங்கள்!
பால்முகம் மாறா பச்சிளங் குழந்தையைக்
கொல்வதா உனது வீரம்!
வாள்முனைக் காட்டும் போர்முறை வேண்டாம்
வாய்மொழித் தீர்வே போதும்!
ஆளும் உரிமையை இழப்பது என்றால்
ஆயுள் எமக்கொரு தூசி!
வாழும் காலம் ஈழம் வெல்வோம்
உறுதிமொழியை வாசி....
முப்பது ஆண்டாய் நடக்கும் சண்டை
முடிவுதான் என்ன? கூறு
எப்போது இலங்கையில் அமைதி கிடைக்கும்!
என்றுதான் ஓயும் கண்ணீரு?
அரசியல் நாடகம் நாளும் நடக்குது
அழுகை இன்னும் ஓயலையே!
அரிசியும் பருப்பும் உணவாய் மாறிட
அடுப்பில் ”நெருப்பு’’ எரியலையே!
தரிசாய் தேசம் மாறு வதற்குள்
தமிழர் ”தேசியம்’’ புலராதோ!
தருமம் நீதி நிலைத்திட இங்கே
தனியொரு ”ஈழம்’’ மலராதோ!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|