Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

கபடி கபடி...
முழுநிலவன்

கா’வன்னாவும் தி’னாவும்
கபடி விளையாட போனாங்களாம்

தமிழின பகையாளியெல்லாம்
எதிரணில ஏழுபேரா கூடிநிற்க
“காவன்னாவும் தினாவும்“
கோட்டக்கு வெளிலேயே
குதிச்சு குதிச்சு விளையாண்டாங்களாம்

நாள்போச்சு மாசம் போச்சு
வருடம் போச்சு வருடாவருடம்
இதே வேலையாப் போச்சுன்னு....

கூட்டத்துல ஆடத்தெரிஞ்ச மூனுபேரு
குதிச்சாங்களாம் களத்துல
கபடிகபடி- தமிழன் தமிழன்னு
தொடையத்தட்டி மணல கிளப்ப

இளந்தாரிங்க மீசைய முறுக்க
கிழங்கட்டையும் வேட்டிய முறுக்கி
பின்னால சொறுக
ஒற்றை முழக்கமாய் கேட்கிறது
கபடிகபடி- தமிழன் தமிழன்

காவன்னாவும் தினாவும்
கதிகலங்கி போயிட்டாங்களாம்
இவங்கள எப்படி பழிவாங்குறதுன்னு
கூடிக்கூடி பேசி
கூட்டுசதியொன்னு போட்டாங்களாம்

அதுப்படி
காவன்னாவுக்கு வேல
காட்டிக் கொடுக்கிறது
தினாவுக்கு வேல
கைது பன்னுறது

சட்டத்தின் உட்பிரிவும் அதன்
சந்து பொந்துகளும்
ஆடத்தெரிந்தோரை அடையாளம் காட்டியது....
இந்திய இறையாண்மைக்கு எதிராய்

தொன்று தொட்ட காலமாய்
சிறுகுறிப்பு வரையச்சொல்லி
சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்
கூனி குறுகி நிற்கிறது
மக்களாட்சி பற்றிய ஒரு கேள்வி!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.