Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

நாளைய வரலாறு
கவித்துவன்

தென்திசைத் தீவில்
தமிழின உயிர்குடிக்கும்
இருட்டின் ஆர்ப்பாட்டம்

வன்னிக் காடுகளோ
வசந்தம் பரப்ப
தன்னுயிர் ஈந்து
செந்நீர் வடிக்கின்றன

இறுகிவிட்ட
இதயத்தோடும்
பெருகிவிட்ட
வெறிமுகத்தோடும்
இருண்டு இருண்டு -
தமிழ்
இனம் அழிக்கிறது
சிங்களம்

விடுதலை
உணர்வுகளோ
வெளிச்ச நம்பிக்கை
விதைகளை ஊன்றி
வேர்விட்டு நிற்கிறது

ஆதிக்கம் எப்போதும்
அன்பை அறிந்ததில்லை
கனிவைக் கண்டதில்லை
விடுதலை மகரந்தத்தை
ஒருபோதும் முகர்ந்ததில்லை!

அடக்குமுறை ஏவி
நடக்கும் ஆதிக்கம் - தான்
குந்திய இடத்திலேயே
குழிபறித்து வீழும்
சிங்களத்தின் இனவெறி
சீழ் பிடித்துச் சாகும்

ஈழ விடுதலையோ
ஆழ வேரூன்றும்
நாளைய வரலாற்றில்
சோலையாய்ப் புத்திருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.