Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஜனவரி 2009

ஆக்கிரமிப்பாளன் புஷ்ஷூக்கு ஈராக்கில் செருப்ப்படி விடை

உலகையே அழிக்கவல்ல அணு ஆய்தங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து அம்மண்ணின் மக்களை வேட்டையாடிய அமெரிக்க வல்லரசின் அதிபர் ஜார்ஜ் புஷ்; தனது அதிபர் பதவியிலிருந்து விலகுவதையடுத்து அறிவிக்கப்படாமல் திடுதிப்பென்று ஈராக்கிற்கு 14-12-2008 அன்று பயணம் மேற்கொண்டார். தான் நட்டு வைத்த ஈராக் அதிபருடன் நின்றபடி பத்திரிக்கையாளர்கள் முன் உரையாற்றிக் கொண்டிருந்த போது புஷ்;_க்கு வரலாற்றில் எந்தவொரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஒரு ‘பரிசை’ ஈராக் மக்கள் அளித்தனர்.

புஷ்; பேசிக் கொண்டிருந்த போது திடீரென எழுந்த பத்திரிக்கையாளர் ஒருவர் “ஏ நாயே! ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி முத்தம் இதுதான்” என்றபடி ஒரு பாதணியையும் “ஈராக்கின் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் சார்பாக இது” என்றபடி இன்னொரு பாதணியையும், புஷ்;i‘ நோக்கி வீசினார். அவரது பெயர் முன்தாசிர் அல் சைதி. எகிப்து நாட்டைச் சேர;ந்த செய்தித் தொலைக்காட்சி நிருபர்.

உலகின் காவல்காரன் நான் தான் என்று மார்தட்டிய அமெரிக்க வல்லரசின் அதிபர் செருப்படியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கீழே குனிந்து கொண்டார். தலைகுனிந்தது புஷ்; மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்த்தனமும் தான். அரபுக் கலாச்சாரத்தில் செருப்படி வாங்குவது என்பது மிகவும் அவமானகரமானச் செயல் என்ற போதும் “முகமெல்லாம் மண் ஒட்டியும். மீசையில் மண் ஒட்டவில்லை” என்றபடி புஷ்; செய்தியாளர்களிடம் தனக்கு ஒன்றுமே நேரவில்லை என புன்னகைத்த போது உலகமே சிரித்தது.

கைது செய்யப்பட்ட அல் சைதி காவல்துறையினரால் தொடர்ந்து கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது கை மற்றும் விலா எலும்புகள் முறிந்தன. இந்நிலையில், அவரை விடுவிக்கக் கோரி ஈராக்கில் பெரும் போராட்டங்கள் எழுந்தன. அல் சைதி வேலை பார்த்த ‘பாக்தாத்தியா’ தொலைக்காட்சியின் இயக்குநர் முசிர் அல் கபாசியா, சைதியின் செயலுக்காக பெருமை கொள்வதாகவும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். அரபுத் தொலைக்காட்சிகள் பாதணி வீசப்பட்ட காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி மகிழ்ந்தன. லண்டனிலிருந்து வெளிவரும் ‘அல் குட்ஸ் அல் அரபி’ என்ற நாளிதழ் “போர் குற்றவாளி புஷ்;க்கு இது தான் சரியான பிரியாவிடை” என்று தனது முதல் பக்கத்தில் எழுதியது.

15-12-2008 அன்று பாக்தாத்தின் சதர் நகரத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அப்பேரணியில் அமெரிக்கக் கொடிகளும் புஷ்ஷின் உருவ பொம்மைகளும், படங்களும் எரிக்கப்பட்டன. நஜாப் நகரில் நடந்த போராட்டத்தின் போது அமெரிக்கப் படைகள் மீது செருப்புகள் வீசப்பட்டன. அமெரிக்க வழக்கறிஞர்கள் உட்பட சுமார் 200 வழக்கறிஞர்கள் அல் சைதியை விடுதலை செய்வதற்காக இலவசமாக வாதாட முன்வருவதாக அறிவித்தனர். ஈரானின் தலைநகர் டெக்ரானில் பத்திரிக்கையாளர்கள் புஷ்ஷின் உருவப்படம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தினர்.

ஈரானின் இஸ்ஃபாஹன் மாகாணத்தின் பல்கலைக்கழகத்தில் தொடங்கி அந்நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அல் சைதி வீசிய பாதணிக்கு(ஷ) இப்போது ஏலத்தில் எடுக்க உலகம் முழுதும் கடும் போட்டி நடக்கிறது. அந்த பாதணியை தயாரித்தது தாங்கள் தான் எனப் பலரும் போட்டிக் போட்டு அறிவிக்கின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com