Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

வி.பி.சிங். அவர்களுக்கு இரங்கல்

விசுவநாத் பிரதாப் சிங் 11 மாதம் மட்டுமே இந்தியாவின் பிரதமராக இருந்தார். (2.12.1989- 10.11.1990) அதுவும் ஒரு கூட்டணி ஆட்சியில்! அப்போது கால காலத்திற்கும் நினைவு கூரத்தக்க இரு செயல்களைச் செய்தார்.

v_p_singh
1. பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் 27விழுக்காடு வேலைவாய்ப்பு அளிக்கும் மண்டல் குழு பரிந்துரையைச் செயல்படுத்த ஆணையிட்டார்.

2. பாபர் மசூதியை இடிக்கும் நோக்குடன் பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டிக்கொண்டு அயோத்திக்குப் பயணம் செய்த பார்ப்பன ஆதிக்கவாதியான அத்வானியைத் தடுத்து நிறுத்தி காரில் கைது செய்ய வைத்தார். அப்போது அங்கு முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மனஉறுதியுடனும் தெளிவுடனும் கைது செய்தார்.

மேற்கண்ட இருநடவடிக்கைகளும் பார்ப்பன ஆதிக்க பா.ச.க.வுக்கு ஆத்திரமூட்டியது. அக்கட்சி வெளியில் இருந்து வி.பி.சிங்கை ஆதரித்து வந்தது. அந்த ஆதரவை அது விலக்கிக்கொண்டது. வி.பி.சிங் பெரும்பான்மை இழந்து பதவி விலகினார்.

குறிப்பாக, தமிழர்கள் மறக்கமுடியாத இரு நிகழ்வுகள்:

1. காவிரி ஆற்றுநீர்ச் சிக்கலுக்குத் தீர்ப்பாயம் அமைக்கும் சூழ்நிலை உச்ச நீதிமன்றத்தில் இருந்தபோது, கர்நாடகம் அதை எதிர்த்தது. வி.பி.சிங் தீர்ப்பாயம் அமைக்க இசைவளித்தார்.

2. இராசீவ்காந்தி அனுப்பிய இந்தியப்படை ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் ஆறாயிரம் பேரைக் கொன்றது. தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றது. அந்தப் படையைத் திருப்பி அழைத்தார். (அப்பொழுது இலங்கை ஆட்சியாளர்களே, இந்தியப் படையை வழியனுப்பி வைக்கும் முடிவில் இருந்தனர் என்ற சூழ்நிலையும் வி.பி.சிங்கிற்குக் கை கொடுத்தது)

குருதிப் புற்று நோய், சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் துன்புற்ற நிலையிலும் மதச் சார்பின்மை, சமூக நீதி, போன்ற தளங்களில் அவர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுவந்தார்.

27.11.2008 அன்று புதுதில்லியில் வி.பி.சிங் காலமானார். 25.6.1931-இல் அவர் பிறந்தார். தமிழர் கண்ணோட்டம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com