Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
டிசம்பர் 2008

இன்னுமா உறக்கம்?
பரணிப்பாவலன்

ஆண்டாண் டாய்மலம் சுமக்கும் குமுகமாய்
ஆண்மை யில்லாக் காளை கூட்டமாய்
தூண்டா விளக்கின் திரியின் நூலாய்
தூங்கியே கிடக்கிறோம் சாய்கடை கழிவாய்
வேண்டா இந்தியம் வேர்விட் திராவிட
வேடன் முளைவிட்சொந்த நாட்டிலே
தீண்டாப் பொருளாய் போனான் தமிழன்
தீராத் துயரினில் வீழ்ந்தான் தோழன்
காந்திய எச்சியை கழக குச்சியை
கால்முதல் தலைவரை உணவாய் ஏற்றதால்
ஏந்திய பிணத்துடன் தெருவில் அலைகிறான்
ஏவிய கணையால் வெடித்துக் குலைகிறான்
யாரடா தமிழின விடுதலை முடக்க
யாத்த செம்படை அணியைத் தடுக்க
பாரடா புலிகளின் எழுச்சியை இதனைப்
பார்த்தே தமிழா உன்விலா நிமிர்த்தடா
கருவியைத் தூக்காது விடுதலை இல்லை
களப்பணி செய்யாது உயர்வு இல்லை
உருவியப் படைவாள் போருக்குப் போகாது
உலகில் நமக்கொரு நாடுபூப் பதில்லை
குருவியாய் பறந்து மடிந்தது போதும்
குளமாய் சுருங்கி வறண்டதும் போதும்
அருவியாய் எழுந்து வா வர் உன்றன்
அறம்பொருள் தழைக்க விழித்து வா வா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.