Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

தேகவாதம் எனும் ஐம்புதக் கோட்பாடு
முனைவர் க.நெடுஞ்செழியன்

தமிழரின் மெய்யியல் காட்சிப் பொருளின் அடிப்படையில் உருவானது. அதாவது கண்ணுக்குப் புலனாகும் பொருள்களைப் பற்றிய அறிவு - பின்னர் அதைப்பற்றிய ஆய்வு எனத் தொடங்கியது. அதன் காரணமாகவே மெய்யியலைக் காட்சி’ என்றனர். திருக்குறள்,

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (1)

எனச் சுட்டுவதும், புறநானூற்றில்,

‘..... ...... .......... திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் (2)

எனவும்,

‘ஐய மறாஅர் கசபீண்டு காட்சி’ (3)

எனவும் குறிப்பதும் மெய்யியல் என்ற அடிப்படையிலேயாகும்.

எந்தப் பொருள் கண்ணுக்குப் புலனாகின்றதோ அந்தப் பொருளே உள் பொருளாகும். அதாவது தோற்றமுடைய பொருளையே காணமுடியும் என்பது அதன் கருத்து. அதன் காரணமாகவே மனித உடம்பை - காணத்தக்க உள்பொருள் - உண்மைப்பொருள் - எனும் அடிப்படையில் ‘மெய்’ என்றனர். மெய்யை - மனித உடம்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காரணத்தால் - அக்கோட்பாட்டை ‘மெய்யியல்’ என்றனர். அந்த வகையில் இந்திய மெய்யியல்களுக்கெல்லாம் மூல ஊற்றாக அமைந்த கோட்பாடு ‘தேக வாதம்’ எனப்பட்டது.

தேகம்
மனித உடம்பைத் தேகம் என்றனர் வடமொழியாளர். தமிழர் உருவாக்கிய ‘மெய்’யியல், அதன் காரணமாக வடமொழியாளர்களால் ‘தேக வாதம்’ என்றாயிற்று. இத் தேக வாதம் பற்றி ஆராய்ந்த தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா,

உபநிடதங்க்களும், பௌத்த்த பிடகங்க்களும் குறிப்ப்பிடும் “தேக வாதம்’ என்பது உண்மையில் உலகாய்த்தமேயாகும்.;. ஆனால் மாதவர் குறிப்ப்பிடும் தேக வாதம் அல்ல்ல நாம் குறிப்ப்பிடுவது. நாம் முன்ன்னர் கூறியதுபோல உலகாய்தமும் தனக்கென வரையறுக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டிருந்தது. உலகாய்தத்தின் நிலையையும் புரிந்துகொள்ளவேண்டுமெனில் சில வினாக்களை நாம் எழுப்பியாக வேண்டும். தொன்மையான இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் தேக வாதத்திற்கான சடங்கு முறைகள் இருந்ததாக எங்கேனும் நாம் கேள்வ்விப்பட்டிருக்கின்றோமா? நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆம். சில ஐயுறவான சடங்கு முறைகள் - வழக்க்காறுகள் தேக வாதத்த்தில் இடம் பெற்றுள்ளதை நாம் அறிந்துள்ளோம். அந்தச் சடங்குகள் யாவும் தந்திரத்திற்குரியன என்ப்பதையும் நாம் அறிவோம்.

தந்திரம் மிகவும் பழமையானது. அக்கோட்பாட்டை அறிந்த தகுதி வாய்ந்த அறிஞர்க்கள், அது வேதத்தைவிட மிகவும் தொன்மையானது என்பதை உறுதிசெய்துள்ளனர். தந்திரம் அதன் உள்ளடக்கத்திலும் வழக்காற்றிலும் வேதத்திற்கு மாறானது. அதன் தொடக்க நிலையில் வேதத்திற்கு எதிரானதாகவும் இருந்தது. மேலும் தந்திரம் என்பது அதன் தலையாய பண்புகளால் தேக வாதத்தின் முடிவாகக் கருதப்பட்டது. அதாவது காணப்படும் பொருண்மிய வடிவம் கொண்ட மனித உடலானது அண்டத்தின் நுண்ணிய வடிவமே என்பதை வற்புறுத்தியது தந்திரமாகும். (4)

என விளக்குவார்.

இதனால் தேக வாதம், உலகாய்தம் ஆகிய இரண்டும் ஒரு கோட்பாட்டின் இரு வடிவங்கள், இரண்டும் தந்திரத்தோடு நெருங்கிய உறவைக் கொண்டன. தந்திரம் உள்ளிட்ட இவை மூன்றும் சில சடங்கு முறைகளைத் தமக்கெனக் கொண்டிருந்தன எனும் உண்மைகள் புலனாகக் காணலாம். அத்துடன் மனித உடம்பிற்கும் அண்டத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பதை அக்கோட்பாடுகள் வற்புறுத்தி வந்ததும் தெளிவாகிறது.

அண்டமும் பிண்டமும்

இப்பேரண்டம் என்பது அணுக்களின் திரட்சியால் உருவானது. அணு ‘கரு’ நிலையில் ஏற்பட்ட சிதைவில் பெரிய அளவிலான வெப்பம் உருவானது. அதனை அடுத்து காற்று தோன்றியது. காற்று வெப்பத்தில் மோதியதால் தீயாகிய பூதம் தோன்றியது. தீயை அடுத்து மழை - பனி - தோன்றின. பின்னர் நிலமாகிய பூதம் தோன்றியது எனப் பரிபாடல் இப்பேரண்டத்தின் தோற்றத்தினை விவரிக்கும். இதன் அடிப்படையில்தான் தொல்காப்பியரும்,

நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம்............. (5)

எனக்கூறுவார். நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐந்து பூதங்களையும், ‘ஐம்பெரும் பூதங்கள்’ எனக்குறிக்கும் புறநானூறு.

இப்பூதக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதே எண்ணியம், உலகாய்தம் ஆகிய மெய்யியல்களாகும். எண்ணியம், இப் பேரண்டத்தை, அதன் கண் தோன்றியுள்ள பல்வேறு உயிர் உள்ள, உயிர் இல்லாப் பொருள்களின் தோற்ற ஒடுக்கங்களை விரிவாகப் பேசுகின்றது. முதலில் ‘மான்’ (மகத்து) என்னும் பெரியது தோன்றியது; ‘மான்’ என்பது அறிவைக் குறிப்பது. அவ் அறிவிலிருந்து ‘விசும்பு’ (வானம்) வெளிப்பட்டது. விசும்பிலிருந்து வளி பிறந்தது. வளியிலிருந்து தீ வெளிப்பட்டது. தீயிலிருந்து நீர் எழுந்தது. நீரிலிருந்து மண் பிறந்தது. வான், வளி, தீ, நீர், மண் ஆகிய ஐம்பூதத் திரட்சியின் வாயிலாக ‘உள்ளம்’ (மனம்) பிறந்தது; எனும் பொருளில் அமைந்த எண்ணியக் கருத்தை மணிமேகலை பின்வருமாறு விளக்கக் காணலாம்.

........... .......... ............ சித்தத்து
மானென் றுரைத்த்த புத்த்தி வெளிப்பட்டு
அதன்க்கண் ஆகாயம் வெளிப்பட்டு, அதன்க்கண்
வாயு வெளிப்பட்டு, அதன்க்கண் அங்கி
யானது வெளிப்பட்டு, அதன்க்கண் அப்பின்
தன்மை வெளிப்பட்டு, அதின்ம்மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு (6)

என்பது அதன் கூற்று. மேற்காட்டிய பாடற்பகுதியில் ‘ஐம்பூதங்களின் சேர்க்கையால் ‘மனம்’ வெளிப்பட்டது. எனும் பொருளில் அமைந்த ‘அவற்றின் கூட்டத்தின் - மனம் வெளிப்பட்டு’ எனும் பாடலடி உயிரின் தோற்றத்தை விளக்குவதாகும். மேலும், அணு - ஐம்பூதங்களாகப் பெற்ற வளர்ச்சி - இவ்வளர்ச்சியின் தொகை மாற்றங்கள் - அம்மாற்றங்களின் விளைவால் ஏற்பட்ட உயிர்த்தொகுதிகள் ஆகிய அனைத்துக் கூறுகளையும் எண்ணியக் கோட்பாடு விரிவாக ஆராய்ந்துள்ளது. இதனை,

.... அகம் என்னும் தமிழ்ச் சொல்லிற்கு “உள்ளம்” அல்லது ‘உயிர்’ என்னும் பொருள்கள் உண்டு......

அத்தகைய அகந்தையின் பிறப்போடு, விசும்பினால் செவியில் எழுகின்ற செவியொலியும், வளியினால் மாந்த்தரின் மெய்க்கு;குத் தோன்று;றும் ஊறு எனப்படும் தொடு உணர்வும், தீயினால் கண்ணு;ணுக்கு;குப் புலனாகும் ஒளியும்,;,;, நீரினால் நாவில் தோன்றும் சுவையும்; நிலத்த்தினால் மூக்க்கின் வழியாகய் நுகரப்பெறும் “நாற்றமும் ” முதலான புலனுணர்வுகள் எழுந்தன. சுருங்கச் சொல்லின், காது, மெய், கண், நாக்கு, மூக்கு முதலான புலனுறுப்பு;புகள் ஐந்து;தும் ஒலி, ஊறு, ஒளி, சுவை, நாற்ற்றம் எனப்n;பெறும் உணர்ச்ச்சிகள் ஐந்து;தும் தோன்ற்றின. அவற்று;றுடன் செயல்பாட்டிற்குரிய வாய் (மொழி), கைகள், கால்கள், எருவாய் (anus), குய்யம் (பெண் அல்லது ஆண் உறுப்பு), முதலான ஐவகை வினையுறுப்புகளும் பிறந்தன. (7)

என விளக்குவார் குணா.

இவ் ஐம்பூதக் கோட்பாட்டின் கூட்டுறவில் உயிர் எப்படித் தோற்றம் கொள்கிறது? எனும் கேள்விக்கு விடை தந்தவர்கள் உலகாய்தர்கள் ஆவர்.

‘... ஆத்திப் பூவும் கருப்புக் கட்டியும் இட்டு வேறுசில பொருட்களையும் அதனுடன் சேர்த்திடின் மதுவாகிய ‘பானம்’ பிறக்கின்றது. அதுபோன்றே நால்வகைத் தனிமங்களாலும் சிலவகை உறவுகளில் ஒன்றுபடத் தன்னுணர்வு பிறக்கின்றது. தனிமங்களின் கூட்டு அழிபடுகையில் அவையாவும் வெவ்வேறாகப் பிரிந்துவிடுகின்றன. பறையின் ஒலி பையப் பையத் தேய்ந்து இறுதியில் அழிவது போல, அவையாவும் மீண்டும் தத்தம் மூலப்பொருட்களுடன் கலந்து ஒன்றிவிடுகின்றன’. இக்கருத்தை,

தாதகிப் பூவும் கட்டியும் இட்டு,
மற்றும் கூட்ட, மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடு பூதத்து, உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வ் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் (8)

என விளக்கும் மணிமேகலை.

பூதங்கள் ஐந்து எனும் தமிழ் மரபுக்கு மாறாக, நான்கே பூதங்கள் எனக் கூறுவது வட மரபாகும். வெளியாகிய ஆகாயத்தைக் காண முடியாது என்பதால் வடமரபில் அதனை ஒரு பூதமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அனைத்துப் பூதங்களும் தோன்றவும், வளரவும் காரணமாக இருப்பது வெளியாகிய ஆகாயம் என்பதால் அதனையும் ஒரு பூதமாகத் தமிழ் மரபில், ஏற்றுக்கொண்டனர். அதனால் வானத்தையும் சேர்த்து ‘ஐம்பெரு பூதத் தியற்கை’ (9) என ஆராய்ந்தனர்.

இவ்வாறு அண்ட வெளியின் தோற்றத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களின் சேர்க்கை - உயிர்களின் - குறிப்பாக மாந்த இனத்தின் தோற்றத்திற்கும் காரணமாக இருப்பதால் ‘அண்டத்தையும் பிண்டத்தையும்’ அதாவது அண்ட வெளியையும் மாந்த உடலையும் ஒன்றெனக் கூறினர். அக்கருத்தின் அடிப்படையில் தோன்றியதே ‘அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்’ எனும் உலகுரை ஆகும்.

அண்டங்களின் தோற்றத் திற்கு அடிப்படையாக அமைந்த அணுக்கருவைப் ‘பரமாணு’ என்பர். இப் பரமாணுவை - தேக வாதத்தின் அடிப்படையில் உருவான தந்திர நூலார் ‘பக்தி’யின் வடிவமாகக் குறிப்பர். இதனை,

அண்டத்தி னுள்ளே அளப்ப்ரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்க்ளே (10)

எனத் திருமந்திரமும் குறிக்கும்.

‘அளத்தற்கு அரிய பொருளாய் அனைத்து அண்டங்களிலும் பரவி நிற்பவளும், உடம்பினுள்ளே தானே பரவெளியை அமைத்துள்ளவளும் ஆகிய சக்தியின் தன்மைகள் பலவற்றை ஓம குண்டத்தில், மந்திரம், கிரியை, பாவனைகளால் காண முற்படுகின்றனர். ஆயினும், உடம்பினுள்ளே அவள் பொருந்தி நிற்றலை அவர்கள் அறிந்தார்கள் இல்லை’ என்பது அப்பாடலின் பொருளாகும். தேக வாதம் வைதிகத்திற்கு எதிரானது என்பதை விளக்கும் சிறந்த சான்றாகவும் அப்பாடல் அமைந்துள்ளது. ‘உலகம் மாயை; வாழ்வும் ;மாயை; பிரம்மம் ஒன்றே நிலையானது’, எனக்கூறிய மாயாவாதிகளை மறுத்த பொருண்மியக் கோட்பாடாகவும் தேக வாதம் திகழ்ந்தது. இதனை,

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே (11)
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (12)

எனவரும் திருமந்திரப் பாடல்களால் தெளியலாம். அண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையே நிலவும் ஒற்றுமையைத் தந்திர நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன.

இதுபற்றி ஆராய்ந்த தி. கணேசர்,

எமது உடலில் உள்ள பொருள்கள் யாவும் பிரபஞ்சத்திலும் உள்ளன. தந்திரக் கோட்பாட்டின்படி உடலும், பிரபஞ்சமும் ஒரே தன்மையான பொருட்களைக் கொண்டு ஒரே தத்துவ அடிப்படையில் அமைக்கப் பெற்றதால் ஒரே சக்தி ஒரே விதத்த்தில் தொழிற்ப்பட வேண்டும்.. ஆகவே உடலிற் பொதிந்துள்ள சக்தியை முழுவதும் வெளிப்படுத்தி, எமது கட்டுப்பாட்டுக்குள் இயக்கு வித்தால்,;, இயற்கைச் சூழலின் ஆற்றலைப் பெருக்கி எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து எமக்கு வேண்டிய வகையில் தொழிற்ப்படுத்த்த முடியும்.;. மனித உடல் போன்ற்ற மிக நுட்ப்பமான பொறியினை ஒருவரும் உருவாக்கிவிட முடியாது.

பேரண்டமும் இதுபோன்ற நுட்பமானதொரு, பொறியே. இவை இரண்டிலும் பொதிந்துள்ள சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பும் உறவும் பிரமிக்கத் தக்கவை. இந்த்த உறவினைப் புரிந்து;து அதன் அடிப்ப்படையில் செயற்ப்பட்டு;டு அவ் ஆற்றல்களை எமக்கு அடிமையாக்குவதே தந்திர சாதனைகள் எனப்படும். இச்சாதனைகளுக்கான அடிப்படை நோக்கம் தேகவாதம் அல்லது உடலை வணங்குதல் (13)

எனப் பண்டோபாத்தியாயாவின் மேற்கோளைக் காட்டி விளக்குவார்.

பேரண்டத்திற்கும் மனித உடம்பிற்கும் இடையேயுள்ள ஒற்றுமைக் கூறுகளை விளக்கிய இவ் அறிவியல் இரு பெரும் கிளைகளாகக் கிளைத்தது. ஒன்று மருத்துவம் மற்றது வான் இயற்பியல். இவ் இருபெரும் அறிவியல் மரபுகளும் கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்ட பொருண்மைக் கோட்பாடுகளாகும்.

மருத்துவம்

உடம்பை மையமாகக் கொண்ட இவ் ஆராய்ச்சி மருத்துவத்தின் அடித்தளமாக அமைந்தது. உடம்பில் உள்ள மூன்று தாதுக்களில் (நாடிகளில்) ஏற்படும் முரண்பாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் நோய்களுக்கான காரணிகளாக அமைந்தன.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ண்ணிய மூன்று (14)

எனும் வள்ளுவர் கூற்றில் அவ்வுண்மையைக் காணலாம்.

தேக வாதம் எனும் கொள்கையே, உடற் கூறியல் (Anatomy) உடல் தொழிலியல் (Phsiology) மற்றும் வேதியியல், மருந்தியல் முதலானவை தோன்ற்றி வளர்வதற்கு வேண்டிய நிலைக்களனை அமைத்து கொடுத்தது. மூளையின் தொழிலை, ஓரளவு தெளிவாக அறிய முனைந்தவர்கள் தந்திரக்கோட்பாட்டினரேயாவர். இந்திய மருத்துவக் கலையின் அடிப்ப்படை நூல்களை ஆக்க்கிய சரகரும், சுசுருதரும் அறிவின் இருப்பிடம் - உணர்வின் மூலம் இருதயமே என நம்பினர். கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டிலும் இவ்வாறே கருதினார். ஆனால் தந்திர இலக்கியங்கள் உணர்வின் இருப்பிடம் மூளை என்க்கின்ற்ன. (15)

எனத் தேக வாதத்தின் அறிவு மரபை அடையாளம் காட்டுவார் தி. கணேசர். மேலும், இத்தேகவாதம் மருத்துவத் துறைக்கு எந்தெந்த வகையில் உதவியது என்பதையும் விரிவாக ஆய்ந்துரைக் கின்றார்.

உடல் மெய்யானது எனும் பொருள் முதல் வாதக் கண்ணோட்ட்டமே, உடல் பற்ற்றிய ஆராய்ச்சியில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டியது. மாறாக, ஆன்மீக வாதிகள், உயிர் ஆன்மா என்ப்பவற்ற்றின் மெய்ய்யியல் விசாரணையில் இறங்கியதால் உடலுக்கு முக்கியத்தும் அளிக்கத் தவறினர். அத்துடன் தந்த்திரமானது ஏலவே கூறியபடி மக்கள் கோட்பாடாக மலர்ந்ததால், சமுதாயத்தின் கீழ்ப்படியில் உள்ள்ள மக்க்களிடம் பரவிக்க்கிடந்த்தது. இறந்த்த உடலைத் தீண்டுவதோ ஆராய்வதோ இவர்களால் ஆபாசமாகக் கருதப்படவில்லை. தந்திரத்தில் கூறப்ப்படும் சவ சாதனை எனும் முறையும் உடலை ஆராய்வ்வதற்கு;கு உதவியது. உயர்மட்டத்தினர் இறந்த்த உடலைத் தீண்டுவதற்குத் மறுத்தமை மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகவே அமைந்த்தது. கல்கத்தா மருத்துவக்கல்லூரி தொடங்கப் பட்ட போது மாணவர்களைச் சேர்ப்பது பெரும்பாடாக இருந்ததென அறியும்போது இந்திய ஆன்மீக வாதத்தின் தாக்கம் தெளிவாகின்றது, (16)

என்பது அவரின் கூற்றாகும்.

உடலை மையமாக வைத்துத்தொடங்கிய இம் மருத்துவம் வைதிகர்களின் கருமக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். மனிதன் செய்யும் ‘பாவ - புண்ணியங்களுக்கு’ ஏற்பவே பிறவிகள் அமைகின்றன. அவரவர் துய்ப்பதற்குக் காரணமான நுகர்வுகளும் அமைகின்றன என்பது வைதிக நெறியாகும்.

மனிதன் தான் செய்த பாவங்களுக்குக் கழுவாய் தேடாமல் இறந்துவிட்டான் என்றால் அவன் ‘வீட்டுலகை எய்த முடியாது என்பதுடன் நரகத்திலும் உழல்வான்’ என்றும் கூறிய வைதிகம், ஒரு மனிதன் தான் செய்யும் கழுவாய்களைப் போக்க வேண்டுமெனில் பார்ப்பனர்கட்குத் ‘தானங்கள்’ செய்யவேண்டும் எனவும் வற்புறுத்தியது. முழுமையான மருத்துவ அறிவியல் நூலான சரக சம்கிதை, தன் கோட்பாட்டிற்கு மாறாகக் ‘கரும’க் கோட்பாட்டை வற்புறுத்தியுள்ளது அதற்கான சான்றாகும்.

ஜீவன் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ற பிறவிகளில் (உடல்களில்) உயிரைத் தானே புகுத்துகிறான்.;. வினைகளுக்கு ஏற்பத்தானே அச்செயலையும் புரிகின்றான். மற்றொருவர் அதைச் செய்ய முன்வருவதில்லை. தீவினை களைப் புரிவதில் சுதந்திர முள்ளவன் அவற்றிற்கான தீய பிறவிகளையும் தனக்குப் பிடிக்காவிடினும் தானே ஏற்கிறான். தான் செய்த வினைப்பயனை தான் தான் அனுபவிக்க்க வேண்டும்.. (17)

எனும் கூற்றில் அவ்வுண்மை யைத் தெளியலாம்.

இத்தகைய ‘கருமத்தை’த் தேகவாதிகள் ஏற்கவில்லை, என்பதுடன் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தனர். உடம்பைப் பேணவேண்டிய தேவையையும் வற்புறுத்தினர்!

உடலினை மெய் என ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டுத் தந்திரக்கோட்பாட்டினரான சித்தர்கள் தீராத நோய்கள் என எதுவும் இல்லை என்றும், மக்கள் மாறாத இளமையுடன் வாழமுடியும் எனவும் நம்பினர். கர்ம நோய்களைத் தீர்க்க முடியாது, அவற்றை அடைந்தோர், அந்நோய்களின் கொடுமையை அனுபவித்துத்தான் தீரவேண்டுமெனும் வைதிகர்களின் கொள்கையைச் சித்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் இவ்வுலகில் யாதொரு துன்பமும் இல்லாமல் இன்பத்துடன் வாழமுடியும், துன்பம் இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழியுண்டு என்பது சித்தர்களின் முடிவு’ (18) என்னும் தி. கணேசரின் கூற்று எண்ணத்தக்கது.

இச்சிந்தனைப் பின்புலத்தில் தான், மருத்துவர்களைப் பார்ப்பனர்களின் சட்ட நூல்கள் (தரும சாத்திரங்கள்) கண்டித்து ஒதுக்கியதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள முடியும். சட்ட நூல்கள் மருத்துவர்களை எப்படியெல்லாம் இழிவு செய்துள்ளன என்பதைப் பின்வருமாறு விளக்குவார் குணா.

சித்த மருத்துவம் அல்ல்லது ஆயுள் வேதம் பெற்ற வளர்ச்சி பார்ப்பனச் சிந்தனையாளர்களுக்குப் பெரும் உறுத்தலாகவே இருந்தது. அம்மருத்துவர்களின் சிந்தனையும் செயலும் நால்வண்ண வகுப்பினையுடன் உடன்படவில்லை என்பதே அதற்கான காரணம். அம் மருத்துவத்திற்கு இயல்பாய் அமைந்து நின்ற குடியாட்சி உணர்வே அத்தகைய எதிர்ப்ப்பிற்கு;குக் காரணம் எனலாம்.;. அதனைக் கருதியே பார்ப்ப்பனிய சமற்கிருத சட்ட நூல்கள், மருத்து;துவர்க்களைப் பொல்ல்லாதவர் களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் கருதின. மருத்துவன் அல்லது அறுவை ‘மருத்துவனிடமிருந்து பெறப்படு கின்ற உணவு இழிவானது; அதனை உயர் சாதியினர் ஏற்க்கக் கூடாது’ என ஆபச்தம்ப ( Apasthamba Sastra) சட்ட நூல் கூறுகிறது. மருத்துவனிடமிருந்து;து பெறுகின்ற உணவு வேசியிடமிருந்து பெறுகின்ற உணவுபோல் கேடானது என வசிட்டரின் அறநூலும் கூறுகின்ற்றது. மேற்சொன்ன சட்ட்ட நூல்க்கள் யாவும் மனு நூலுக்கு முந்தியவை. மருத்துவனிடமிருந்து பெற்ற உணவு சீழாகிய குருதியைவிட இழிவானது என மனு நூலும் கூறுகிறது. மருத்துவர்களைப் போன்ற தூய்மையற்றவர்கள் வேள்விச் சடங்குகளில் பங்கெடுப்பதால் அவ்வேள்வி யின் தூய்மையே கெட்டுவிடும் என அம் மனுநூல் கூறுகின்றது. மருத்துவம் செய்து;து பிழைக்கின்ற பார்ப்பனன் இருபிறப்பாளனாக இருக்கத் தகுதியற்றவன் என வசிட்டர் கூறுகின்றார். மருத்துவர்கள் நால்வண்ண ஒழுக்கம் குலைந்ததால் பார்ப்பனனுக்கும் வைசியப் பெண்ணு;ணுக்கும் பிறந்தவர்க்கள் என இழிவுபடுத்த்தியது. இந்நிலையைப் பார்ப்பனிய வரலாற்றின் வழிநெடுகிலும் பார்க்கலாம்.. (19)

என்பது அவரின் கூற்றாகும்.

உணவின் பிண்டம்

ஐம்பூதங்களின் கூட்டுறவால் ஆனதே இவ்வுடலும் உயிரும் என ஆய்ந்துணர்ந்த இவ் அறிவர்கள், அப்படி அமைந்த இவ் உடம்பை வளர்ப்பது உணவே என்றும் உரைத்தனர். அவ் உணவும் உழவன் மண்ணையும் - நீரையும் இணைத்து உருவாக்கிய உழைப்பின் விளைவு என்றும் விளக்கினர். சங்கப்புலவராகிய குடபுலவியனார்,

நீரின் றமையா யாக்கைக் கெல்ல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்ட்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே (20)

என விளக்குவார்.

பார்ப்பனியச் சட்ட நூல்களில் மருத்துவர்களைப் போலவே இழிவுக்குள்ளாக்கப்பட்டவர்கள் உழவர்களாவர். இவர்களை ‘நாலாஞ் சாதி’ என்றும் கடையர், கடைசியர் என்றும் அச்சட்ட நூல்கள் கூறி ஒதுக்கின. அப்படி வைதிகத்தால் ஒதுக்கப்பட்ட உழவர்களைத் தமிழ் மரபோ, உயிரையும் உடம்பையும் படைக்கின்ற படைப்புக் கடவுளாகச் சித்திரிக்கின்றது. இந்த அணுகு முறைதான் வைதிகத்தை எதிர்த்து நிற்கும் துணிவை - ஆற்றலைத் தமிழர்கள் கைக்கொள்ள காரணமுமாயிற்று.

மேலே காட்டிய குடபுலவியனார் பாடல் ஒரு பேருண்மையை விளக்குகின்றது. ஐம்பூதங்களினால் உருவானது இம் மானிட உடம்பு; அதனை வளர்ப்பது உணவு; அந்த உணவோ, நிலமும் நீரும் இணைந்த இணைப்பால் வருவது, என்பதே அப்பேருண்மையாகும். இதனால் நிலனும் நீரும் எவ்வளவு இன்றியமையாதன என்பதை உணரலாம். நிலமும் நீரும் உணவுப்பொருளை உருவாக்க மட்டுமா செய்கின்றன? மனிதனுக்கு வேண்டிய மருந்துப் பொருட்களையும் சேர்த்தல்லவா விளைவிக்கின்றன. அதனால் அவ்விரண்டின் தூய்மையும் கூட தனிக் கவனத்தைப் பெருகின்றன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் நீரும் நிலனும் வகிக்கும் பங்களிப்பை,

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண் (21)

எனக் குறிப்பார் வள்ளுவர்.

இந்த நான்குமே மருந்திற்கான மூலிகைகள் வளர்தற்கான நிலைக்களன்களாகவும் இருப்பன. மண்ணின் தன்மை பயிர்க்குளவாகுதலால் மூலிகைகளை விளைவிக்கும் இடம் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மருத்துவ முறைகள் தொடங்கியபோதே மண்-நீர் ஆகியவற்றின் தேர்வும் தொடங்கிவிட்டதைச் சரக சம்கிதை நன்கு உணர்த்துகின்றது.

..... நிலம் போன்ற ஐம்பெரும் பூதங்களிலும், குணங்களில் நான்கில் ஒருபகுதி அழிந்தது. அதனால் பயிர்களில் நைப்புத்தன்மை, தூய்மை, சுவை, வீரியம், விபாகம், பிரபாகம், குணம் இவற்றில் நான்கில் ஒருபங்கு குறைவுபட்டது. இவ்விதக் குறைபாடுகள் உள்ள உணவு வகைகளை உண்ட்டதினால் முன் காலத்தில் போலில்லாமல் மனிதர்க்களுடைய உடலில் வாதம் சடராக்கினி இவற்றின் குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாகக் காய்ச்சல் முதலான நோய்கள் தோன்ற்றின. ஆகவே மக்க்களுடைய ஆயுளும் முறையாகக் குறைவுபடத் தொடங்கியது. இவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் அறத்தின் நான்கில் ஒரு பகுதி குறைவுபட்டு ஐம்பெரும் பூதங்களிலும் ஒவ்வொரு பகுதி குறையத் தொடங்கியது. இவ்விதம் ஒவ்வொன்றின் ஒவ்வொரு பகுதியும் குறைபாடு அடைந்து உலகம் அழிகிறது (22)

என்பது அதன் கூற்றாகும்.

‘சுற்றுச் சூழல் மாசடைகின்றபோது உயிர் இனங்களும் பாதிப்பிற்குள்ளாகின்றன’ என விளக்குவதன் வாயிலாகச் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வின் தேவை விளக்கப்படுகிறது. நோய்களுக்கான காரணங்களை விளக்கும் சரக சம்கிதை,

கேடடைந்த காற்று
கேடடைந்த நீர்
கேடடைந்த நாடு
கேடடைந்த பருவம் (காலம்) எனப் பகுத்து விரிவாக ஆராய்ந்துள்ளது.

கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இந்நான்கின் மாறுபாடுதான் ஒரு நாடு அழிவடைவதற்குக் காரணம் எனச் சிறந்த மருத்துவர்கள் கருதுகின்றனர். இயற்கையான நிலைமையிலுள்ள காற்று, நீர், நிலம், காலம் இவை நாட்டிற்கு நன்மை பயப்பவை என அறிஞர்கள் கருதுகின்றனர். கேடடைந்த காற்று, நீர், நிலம், காலம் இவற்றால் நாட்டை அழிக்கக் கூடிய நோய்கள் தோன்றிடின் முறைப்படி சேகரித்து, வைத்திருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தினால் நோய்களின் பயம் ஏற்படாது.

நாடு, காலம், காற்று, நீர் இவை கேடடைவது நோய்கள் தோன்றுவதற்கு
முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. (23)

எனச் சூழலின் தூய்மையை வற்புறுத்துகின்றது. இப்பேரண்டம் ஐம்பூதங்களால் ஆனது; அதைப்போன்றே மனித இனமும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானது. ஐம்பூதங்களில் ஏற்படும் குற்றங்குறைகள் மனித இனத்தை மட்டுமின்றி இப்பூவுலகையே பாதிப்பிற்கு உள்ளாக்கிவிடுகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் வள்ளுவர்,

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (24)

எனக் கூறினாரோ என எண்ணத் தோன்றுகின்றது. ஓரறிவுயிரை முதலாகக் கொண்டு உருவான இந்த உயிரினத் தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டின் சூழலியலைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம்முன் உள்ளது. இதனை மறந்தால் எதிர்காலம் இருண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

இச்சூழலியல் பற்றிய அறிவியலே தமிழர் வகுத்த திணைக்கோட்பாடாக மலர்ச்சி பெற்றது. வான் இயற்பியலை முதல் பொருளாகவும், மனித இனப் பெருக்கத்திற்கான அடிப்படையாகிய இன்பியற் கோட்பாட்டை உரிப்பொருளாகவும் வகுத்தளித்த தமிழர், சூழலியலைக் கருப்பொருளாக வடிவமைத்தனர்.

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழி (25)

என்பது கருப்பொருள் இலக்கணம்.

தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை ஆகியவற்றுடன் மனிதனின் முயற்சி யோடும், கலையுணர்வோடும் இணைந்த உழைப்பு, அதாவது தொழில், பறை, யாழ் மற்றும் அவற்றுடன் இணைந்த பூ, நீர், ஆகியவற்றையும் கருப்பொருளாகக் கொண்டனர். இக் கருப்பொருள் பற்றிய சிந்தனை மரபே, இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கவேண்டிய எண்ணத்தை இவர்கட்கு ஊட்டியிருக்கவேண்டும். அந்த எண்ணத்தின் வெளிப்பாடுகள்தாம்,

நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே (26)

எனும் பாடலடிகள் என்பதை நாம் மனங்கொளவேண்டும். இத்தகு சிந்தனை மரபுதாம் திணைக்கோட்பாட்டினை உயிர்ம நேயத்தின் அடையாளமாக உயர்த்துகிறது, தமிழ் மரபின் பெருமைகளையும் பறை சாற்றுகிறது.

சான்றுகள் :

1. குறள் 352
2. புறம் 192
3. புறம் 214
4. தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா Lokayata -PP. 48, 49
5. தொல் - பொருள் - மரபியல் -91
6. மணிமேகலை - 27 : 206 - 212
7. குணா - தமிழர் மெய்யியல் ப.82.
8. மணிமேகலை - 27 : 264 - 268
9. புறம் 2
10. திருமந்திரம் பாடல் 1344
11. திருமந்திரம் பாடல் 708
12. திருமந்திரம் பாடல் 709
13. தி.கணேசர் தாந்தீரீகமும் மானுடத் தத்துவமும் ப-67
14. குறள் 941
15. தி.கணேசர் மேலது பக். 66, 67
16. தி.கணேசர் மேலது பக். 67
17. சரக சம்ஹிதை ப 613
18. தி.கணேசர் மேலது ப 67
19. குணா மேலது ப 288, 289
20. புறம் - 18
21. குறள் 742
22. சரக சம்கிதை ப 488
23. சரக சம்கிதை ப 489
24. குறள் 27
25. தொல் பொருள் அகத்திணை இயல் ப 418
26. நற்றிணை பாடல் 172



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com