Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

தகவல் அறியும் உரிமைச்சட்டம் சரியாக செயல்படுகிறதா?
ஆ.சு.மணியன்

தகவல்பெறும் உரிமைச்சட்டம் 2005 என்பதன் மூலம் தேவையான துறைகளில் கேள்விகள் கேட்க சில உரிமைகள் கிடைத்துள்ளன. தகவல்பெறும் உரிமைச்சட்டம் மூலம் பொது மக்களுக்குத் தகவல் வழங்குவதில் நாகாலாந்து இந்தியாவில் முதலிடம் பெறுகிறது என்று நாளிதழில் செய்திகள் வந்துள்ளன.

பொது விவகாரத்துறை நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்கள்: இணைய தளத்தில் தகவல் வழங்குவதில் நடுவணரசுத் துறைகள் முதலிடம் வகிக்கின்றன. நடுவணரசின் வணிகத்துறை அமைச்சகம், ஊராட்சித்துறை அமைச்சகம் 87மூ விழுக்காடு மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளன. நடுவணரசின் வீட்டு வசதித்துறையும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும் இணைய தளத்தில் எந்தத் தகவலும் வெளியிடாததால் கடைசி இடத்திற்கும் வெளியே நிற்கின்றன.

நடுவணரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்கள் மொத்தம் 53% விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளன. மாநில அரசுகளில் நாகாலந்து அரசு 62% விழுக்காடு மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தில்லி மாநில அரசு இரண்டாமிடத்தைப் (56%) பெற்றுள்ளது. 55% விழுக்காடு மதிப்பெண் பெற்று பீகார் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. 51% விழுக்காடு மதிப்பெண் பெற்று பஞ்சாப் நான்காமிடத்திற்கு வந்துள்ளது. 49மூ விழுக்காடு மதிப்பெண் பெற்று ஆந்திரா ஐந்தாமிடத்தை பிடித்துள்ளது. பதினைந்தாவது இடத்தில் கன்னடமுள்ளது. படித்தவர்கள் நிறைந்த கேரளா 6% விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளது.

ஒன்றிய ஆட்சி மாநிலங்கள் 46மூ விழுக்காடு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளன. மற்றவை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறவில்லை. தமிழகம் மேலே இடம் பிடிக்கவில்லை என்று வருந்த வேண்டாம். தகவல் பெறும் உரிமைச்சட்டத்தைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு ஒதுக்கித்தந்த தொகையை சிறிதும் செலவழிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக (2007,2008) திரும்பத் தந்து முதலிடம் பிடித்துள்ளது. மேலும் ஒரு வியக்கத்தக்க செயலையும் செய்துள்ளதாம். அதாவது 2008-ல் ஒரு வாரத்திற்குள் ஒரு வழக்கிற்கு முழுமையான தீர்வு காணப்பெற்றுள்ளது.

இதன் பின்னணியில் கண்ணுக்குத்தெரியாத கண்டுபிடிக்க முடியாத தவறுகளும் ஊழல்களும் நடைபெற வாய்ப்பு உண்டு. மேலும் தகவல் ஆணையத்திற்கு ஒரு வழக்கு எந்த நிலையில் செல்ல வேண்டும் என்ற சட்ட நடைமுறை முழுவதும் மீறப்பட்டுள்ளது. என்பதிலிருந்தும் மேலே
கண்டவை உண்மையென தெரிகிறது என்கின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் கிடப்பில் உள்ளதின் பின்னணி வரலாற்றை அறியும் போது திடுக்கிடச்செய்கிறது. இந்நிலையில் தகவல் ஆணையம் சென்றால் எதிர் காலத்தில் இன்று நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் காலியாக இருப்பதைப்போன்ற நிலை ஏற்பட தமிழ்நாடு வழிகாட்டியாக அமைந்து விட வாய்ப்புள்ளது. மக்களே உறங்கியது போதும் விழிப்புணர்வு பெறுங்கள்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com