Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2009

ஈழத்தமிழரைக் காக்க ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் நேரில் மனு
கண.குறிஞ்சி

மக்கள் சிவில் உரிமைக்கழக தமிழ்நாடு கிளையின் சார்பாக அதன் தமிழகத் தலைவர் சுரேஷ், தமிழகத் தலைவர் சுரேஷ், தமிழகத் துணைத்தலைவர் கண. குறிஞ்சி, தமிழகச் செயலர் ச.பாலமுருகன், கோவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொன் சந்திரன், அபுபக்கர், சிவகங்கை வழக்குரைஞர் கிருஷ்ணன், ஊடக உதவியாளர் டி.எஸ்.எஸ். மணி ஆகியோர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அனைத்திந்தியத் தலைவர் மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் புதுதில்லி அலுவலகத்தில் மனித உரிமை ஆணையர் திரு நவநீதம்பிள்ளையை மார்ச்சு கடைசி வாரத்தில் நேரில் சந்தித்து ஈழத்தமிழரைக் காக்க மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் உள்ள கோரிக்கைகள் :

(அ) மனித உரிமை மீறலையும், இன அழிப்புப்போரையும் உடனடியாக நிறுத்தி, அரசியல் தீர்வு காண்பதற்கு ஏற்ற சுமுகமான சூழலை உருவாக்கவேண்டும் அல்லது பன்னாட்டுக் குற்றப்பிரிவின் (International Criminal Code) கீழ் பன்னாட்டு குற்ற வழக்கு மன்றத்தில் (International Criminal Court) இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசு மீது ஐ.நா.வின் செயலர் குற்றத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றம் இழைப்பவரே இலங்கை அரசாக இருப்பதாலும், அவ்வரசு இத்தகைய விண்ணப்பத்தை வைக்க முன்வராது என்பதாலும் இவ்வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

(ஆ) போர் நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலையத்தைக் கண்காணிக்க பன்னாட்டுக் கண்காணிப்புக் குழு ஒன்று உருவாக்கப் படவேண்டும்.

(இ) அல்லலுறும் மக்களுக்கு ஐ.நா. அமைப்புகளின் மூலம் மருத்துவ மற்றும் பிற தேவைகளை நேரடியாக வழங்கவேண்டும்.

(ஈ) இப்பொழுதுள்ள நிலையை உள்ளது உள்ளபடி செய்தியாக வெளிப்படுத்தக்கூடிய பக்கச்சார்பற்ற பன்னாட்டு ஊடகங்களை போர் நடைபெறுமிடத்திற்கு அழைத்துச் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

இம்மனுவில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் அகில இந்தியத்தலைவரும், புதுதில்லி உயர் நீதிமன்றத்தின் பணி நிறைவுபெற்ற நீதிபதியுமாகிய இராஜேந்திர சச்சார் அவர்களும், திரு கே.ஜி. கண்ணபிரான் அவர்களும் கையெழுத்திட்டனர். திரு. கண்ணபிரான் அவர்களைப் பற்றித்தாம் கேள்விப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் மனித உரிமைப்போரில் அவரது பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று எனவும் குறிப்பிட்டதோடு அம்மனு மீது தாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை உறுதி அளித்தார். இச்சந்திப்பும் ஆணையர் காட்டிய கரிசனமும் மிகுந்த நம்பிக்கையை ஊட்டுவதாக இருந்தது.

மக்க்கள் சிவில் உரிமைக் கழகம் தீர்Pர்மானம் மார்ச் 21ஃ22 ஆகிய நாட்களில் புதுதில்லியில் கூடிய மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் அகில இந்தியச் சிறப்புக் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து நான்கு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1. இலங்கைக் கடற்படையால் நானூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும், மீனவர்களின் மற்றைய சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளது. இத்தகைய இலங்கைக் கடற்படையின் மீது தமிழக அரசோ, இந்திய மைய அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய மீனவர்களின் வாழ்வு மற்றும் சொத்துக்களைப் பாதுக்காப்பதற்காகச் சட்டவழி முயற்சிகளை முனைப்புடன் மேற்கொள்வது என்று முடிவு செய்கிறது.

2. இலங்கையில் போரை நடத்துவதற்காக இந்தியா வழங்கிவரும் ஆய்தம், நிதி உள்ளிட்ட உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

3. அல்லலுறும் தமிழ் மக்களுக்கு முழு ஆதரவை நல்குவதோடு, போரை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும், சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் அமைதியான அரசியல் தீர்வு ஏற்படத்தக்க வகையில், ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் பியு+சிஎல் அகில இந்தியக் கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.

4. ஈழத்தமிழர்க்காதரவாக பேசுவோர் மீது தமிழக அரசு, தேசிய பாதுகாப்புச்சட்டம் (Nளுயு) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையைச் சாக்காக வைத்துக்கொண்டு, மக்களின் ஜனநாயகக் குரலை ஒடுக்கி வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட, எவ்வித அமைப்பையும் தடை செய்யக்கூடாது என்பது ம.சி.உ. கழகத்தின் நிலைபாடு. ஏனெனில் இத்தடை, தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் ஜனநாயகக் குரலை நசுக்குவதற்கான கருவியாகப் பயன்பட்டுவருவது ஏற்கத்தக்கதல்ல..!

------

தமிழக எல்லை தாண்டி இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மேற்கண்ட முயற்சிகளின் முக்கியமாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழக எல்லை தாண்டி பிற மாநிலங்கள் ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் எழுப்பாதது பெரும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ம.சி.உ.க. எடுத்துள்ள இம்முயற்சிகள் பாராட்டுக்குரியவை. மூத்த வழக்கறிஞர் கண்ணபிரான் பெரும் ஈடுபாட்டோடு நவநீதம்பிள்ளை அவர்களிடம் மனு அளிக்க வந்தது பாராட்டுக்குரியது. அதே போல் ம.சி.உ.க. முன்னாள் தலைவர் இராஜேந்திர சச்சார் அம்மனுவில் கையெழுத்திட்டிருப்பது சிறப்பு.

எல்லாவற்றிற்கும் மேலாக ம.சி.உ.க.வின் தமிழகத் தோழர்கள் எடுத்துக் கொண்ட முன்முயற்சி பாராட்டுக்குரியது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com