Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kanavu
Kanavu
மே 2009
பிரஜானந்த். வி.கே. கவிதைகள்

கருப்பு தேவதை சமீரா மக்மல்ஃப்

(சமீரா மக்மல்ஃப் - (Two Legged Horse: Iron 2008) சமீரா ஈரான் இயக்குனர் மக்மல்ஃப்ன் மகள். கொடிய சட்டங்களால் சூழப்பட்டிருந்த பள்ளியை வெறுத்து ஒதுக்கி திரைப்படத்துறையை தன் உயிர்மூச்சாக்கியவர். தனது பதினெட்டு வயதிலேயே ஆப்பிஸ், அட் பைவ் இன் தி ஆஃப்டர்னூன் போன்ற படங்களை எடுத்தவர். ப்ளாக் போர்ட்ஸ் எனும் இவரது படம் ஈரானின் பள்ளி ஆசிரியர்களின் வறுமையையும் அங்குள்ள வழிதவறிப்போன குழந்தைகளின் வாழ்வையும் நம்முன் வைக்கிறது. அடிமையைக் குதிரையாக்கி அவன்மீது பயணிக்கும் அதிகாரப் பேய்களைப் பற்றி தற்போது (2008) இவர் இயக்கிய டூ லெக் ஹோர்ஸ் பல திரைப்பட விழாக்களை அலங்கரித்திருக்கிறது.

பெண் சிலசமயம்
தன்னைப் பிணைத்திருக்கும்
மதச் சங்கிலியை அவிழ்த்தெறிந்து
நிஜ உலகின் மீது
நெருப்பாய் குதிக்கிறாள்
என் சமீரா
நீ அப்படிப்பட்டவள்

பர்தாவுக்கும்
படமெடுக்கத்தெரியுமென
உலகுக்குக்காட்டியவள்
கையெறி குண்டுகளால்
தகர்த்தெறிய முடியாத
தன்னம்பிக்கை கொண்டவள்
பொய்வெறி மனிதர்களின்
முகமூடியைக்கிழிக்க
பிறந்து வந்தவள்

உலக சினிமாவை
மனித சினிமாவாக்கியவள்
ஒவ்வொரு காட்சியிலும்
அடிமையின் குரலை
ஆணிதரமாய்
பதிவுசெய்தவள்

சட்டத்தால் சூழப்பட்ட
பள்ளியைத் துறந்து
சட்டையில்லாத மனிதனின்
சினிமா எடுத்தவள்!

கறுப்பு உடையணிந்து
வெள்ளைச் சினிமா
எடுத்தவள்

காலச் சங்கிலி தந்த தழும்புகளை
காலத்தைக் கொண்டே
ஆற்றியவள்
காலமாகவே
மாறியவள்!

அதிகாரக் குதிரையின்
இரு கால்களையும்
வெட்டியெறிந்தவள்

மனதின் கரும்பலகையில்
மனிதத்தின் பெயரை
எழுதிவைக்காமல்
செதுக்கி வைத்தவள்

பெண்தேசம் மிரட்சிக்கானதல்ல
புரட்சிக்கென்று சொன்ன
கறுப்பு தேவதை!

பெருமூச்சு: கிம் கி டுக்

கிம் கி டுக் Breath-Korea- 2008 கொரியத் திரைப்படங்களை உலக அரங்கில் பேசவைத்ததில் கிம் கி டுக்குக்கு முக்கியப் பங்கு உண்டு. தனது படங்களில் நிஜவாழ்வில் சாத்தியமற்ற ஒரு கதைக்கருவை எடுத்து அதற்கு உருக்கொடுத்து தன் முத்திரையை ஆழமாகப் பதிப்பது இவரது வழக்கம். இவரது முக்கியமான படங்கள் The Address Unknown, 3-iron, The Real Fiction, The Spring, Summer, Winter and Spring, Time. தற்போது இவர் எடுத்திருக்கும் படம் Breath. இந்தப் படம் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் கணவனை வெறுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதலைச் சொல்கிறது.

கிம் உனது உலகம்
மனிதர்களாலானது
எனினும் அம்மனிதர்கள்
சாதாரணவுலகத்தவரல்ல!

நிஜத்தில் சாத்தியமற்ற ஒன்றை
நிழலில் சாத்தியமாக்குகிறாய்
நிழலை நிஜமாக்கும் வித்தையை
உணர்வின் நிஜமாக்குகிறாய்!
புத்தகத்திலிருந்து
உயிர்த்தெழும் கருவை
உன் சித்தத்திலிருந்து
சினிமா ஆக்குகிறாய்!
கொரியாவிலிருந்து
மாயவிரல் நீட்டி
உலகத்திரையை
ஸ்பரிசித்தவன் நீ!

முகவரியற்றுப்
போவோர் பற்றி
நீ எடுத்த சினிமா
கொரியாவின்
முகவரியாயிற்று!

புத்தர் சிலைகூட
உடைபடலாம்
சினிமா புத்தனே
நீ உடைபடமாட்டாய்
சித்த நிலை கொண்ட
சினிமாப் பித்தனே
எந்த நிலையிலும் நீ
சிறைபட மாட்டாய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com