Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
மே 2009
அட்சய பாத்திரம்
மயூரா ரத்தினசாமி

சாலையோரங்களில் பிளாட்பாரங்களில்
இளநீர் விற்கிறார்கள்
நுங்கும் கோசாப்பழமும்
முன்னொரு முன்னொரு காலத்தில்
பாட்டி வடை சுட்டு விற்றாள்
சமீபத்தில் அவளை நிலவுக்கு அனுப்பி வைத்தோம்.
டை கட்டிய ஒருவன்
கார் கழுவும் கையடக்கக் கருவியை
சாலையோரத்தில் விற்றுக்கொண்டிருந்தான் நேற்று.
மோட்டர் சைக்கிள் கார் சிம்கார்டு கடன் அட்டை
இட்லி தோசை பரோட்டா
எல்லாம் பிளாட்பாரத்திற்கு வந்தபின்னும்
வீடு பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

இரவை பகலென்றும்
விடியலை இரவென்றும் பழக்கப்பட்டுத்தப்பட்ட ஒருவன்
சத்தியத்தின் அடையாள அட்டையுடன்
பிளாட்பாரத்தில் கம்யூட்டர் விற்றுக்கொண்டிருக்கிறான்
இந்தியப் பகலின் வெம்மை தாங்காமல்
உருகி வழிகிறது அவன் உடல்.

வெறிச்சோடிய வீடுகள் அச்சமூட்டுவதாகவும்
நெரிசலான பிளாட்பாரம் பாதுகாப்பானதாகவும்
தோற்றம் கொள்ளத் துவங்கிவிட்டன.

உங்கள் வாயிற்படிக்கு அருகிலுள்ள கையகலப்பாத்தியில்
மொட்டைமாடி மண் தொட்டியில்
நீங்கள் வளர்க்கப்போவது
குரோட்டன்சா ரோஜாவா போன்சாயா
கத்தரியா வெண்டையா அவரையா
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

அல்லது

இரண்டு விரல்களில் ஒன்றைத் தொட்டு
தெரிவு செய்து கொள்ளுங்கள்
கொலையா? தற்கொலையா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.