Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
மே 2009
மஞ்சுளா கவிதை

வளர்ந்துகொண்டே இருக்கும்
என் உடல் தாண்டிய அழகொன்றை
சித்திரம் தீட்டமுடியாத துயரத்தில்
கண்ணுக்குள் கடல்நுரை பொங்க
தோற்றுப் போகிறது இயற்கை.
கடல் அழகல்ல வானம் அழகல்ல
காடு மலை மரம் மட்டை
எதுவும் அழகல்ல
தோற்ற இயற்கையின் பால்
ஒரு மாலைப்பொழுது வரை
பதிவு செய்யப்பட்ட
இயற்கையின் வெவ்வேறு மொழிகளை
பகலிடமே விட்டு விட்டு
கூடடைய வருகின்றன பறவைகள்
எல்லா வகையிலும் பேசப்பட்ட
அழகின் மொழி தோற்றுப்போய்
மீண்டும் என்னுடல் வரைய
மெருமிதம் கொண்டபடி
இரவு நகர்ந்துகொண்டே வருகிறது
பேசப்படாத என் உடல்மொழி நோக்கி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.