Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
பிப்ரவரி 2008
நெரிசல்
- மயூரா ரத்தினசாமி

கவிதை வாசிக்க உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன்
சுக்கு காபி குடித்தாகிவிட்டது அல்லது குடிக்கப்போகிறோம்
நாற்காலியில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறீர்கள்
அறைக்கு வெளியே சாலையில் இருசக்கர வாகனமொன்று
கிரீச்சென்று பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்கிறது
நாயன்று வாகனத்தில் அடிபட்டு
ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் திசைநோக்கி ஓடுகிறது
அதன்கால் ஒடிந்திருக்கலாம்
உங்களில் ஒருவர் செல்பேசியை காதில் வைத்தபடி வெளியேறுகிறார்
நகரெங்கும் கைப்பேசிகளின் கிணுகிணுப்பு திடீரென அதிகமாகிவிட்டது
ஒலியெழுப்பியபடி வருகிறது ஆம்புலன்ஸ்
வாகனஓட்டி இறந்திருக்கலாம்
என் கால்கள் அத்திசை நோக்கி இழுபடத்துவங்குகிறது
நீங்கள் இன்னும் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறீர்கள்
மாமிசத் துணுக்குகளைத் தேடியலையும் கருப்புப் பறவைகள்
பெரியார்சிலை மீது எச்சமிட்டபடி பறக்கின்றன
ஆளுங்கட்சியின் அண்ணாசிலையை பராமரிக்க நிறுவனங்களிடையே போட்டி
போக்குவரத்து நெரிசலாகிவிட்டது
சாலையில் வாகனங்கள் தத்தமது பாதை கேட்டு பிளிறத்துவங்கிவிட்டன
காற்றொலிப்பான்களின் அலறல் படியேறிவந்து
உங்களுக்குப் பின்னால் காலியாக இருக்கும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொள்கின்றன
நெரிசல் அதிகமாகிவிட்டது
நீங்கள் மெல்ல நகர்ந்து நெரிசலைத் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்
குறுஞ்செய்தி ஒன்று உங்களை நள்ளிரவு விருந்துக்கு அழைக்கிறது
நெரிசல் இன்னும் இன்னும் அதிகமாகவே
நீங்கள் ஜன்னல் வழியாகக் குதித்து தப்பிக்கும் வேளையில்
நானும் கவிதை வாசித்தலை நிறுத்திவிட்டு குதிக்கவேண்டியதாயிற்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP